வாய்ப் புண்ணைத் தவிர்க்க வாய்ப்பு உண்டு! - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
  • Page 1 of 1
  • 1
Forum moderator: Laya, Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » ஆயுர் ஆரோக்கியம் » ஆரோக்கியம் » வாய்ப் புண்ணைத் தவிர்க்க வாய்ப்பு உண்டு!
வாய்ப் புண்ணைத் தவிர்க்க வாய்ப்பு உண்டு!
RAWALIKADate: Monday, 22 Sep 2014, 8:42 PM | Message # 1
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
வாய்ப் புண்ணைத் தவிர்க்க வாய்ப்பு உண்டு!


நன்றி - டாக்டர் விகடன் 

டாக்டர் க.செந்தாமரைச் செல்வி

உலகத்தில் ஐந்தில் ஒருவர் வாய்ப் புண்ணால் அவதிப்படுகிறார் என்கிறது புள்ளிவிவரம்.
aphthous stomatitis என மருத்துவரீதியாகக் குறிக்கப்படும் வாய்ப் புண்
பற்றிய சந்தேகங்களுக்குப் பதில் காண்போமா?


வாய்ப்புண் ஏற்படக் காரணம் என்ன?

வாயின் உட்புறம் மற்றும் வெளிப்புறப் பகுதிகளில் உள்ள திசுத் தோல் பாதிப்படைந்து காயம் ஏற்படந்தைத்தான் வாய்ப்புண் என்கிறோம்.
உதடு, நாக்கு, கன்னங்களின் உட்புறம் மற்றும் தொண்டைப் பகுதியில் வாய்ப்புண்
வரலாம். இதனால், ஏற்படும் வலி காரணமாக பேசவோ, உணவு உட்கொள்ளவோ சிரமமாக
இ்ருக்கும்.

பித்தம் அதிகரித்தால், வாய்ப்புண் வரும் என்கிறது சித்த மருத்துவம். ஜீரணக் கோளாறு, உடல் சூடு, மன அழுத்தம், இரும்புச் சத்து
மற்றும் வைட்டமின் சி, பி12 மற்றும் ஃபோலிக் அமிலம் போன்ற உயிர்ச்சத்துக்
குறைவு, உணவு மற்றும் மருந்துகள் ஒவ்வாமை, புகை, மதுப்பழக்கம், ஹார்மோன்
மாறுபாடு, பற்கள் மற்றும் வாய் சுத்தமின்மை, ஹெர்ப்பெஸ் (Herpes) வைரஸ்
மற்றும் பாரம்பரியம் காரணமாகவும் வாய்ப்புண் வரலாம். வாய்ப்புண்கள் 7 முதல்
10 நாட்களில் குணமாகிவிடும். நீண்ட நாட்கள் ஆறாத புண்கள், புற்றுநோயாகவும்
மாறலாம்.

வாய்ப்புண் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

  மலச்சிக்கல் மற்றும் ஜீரணக் கோளாறு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  உடல் குளிர்ச்சியாக இருக்க, அதிக அளவு தண்ணீர், இளநீர் மற்றும் பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.  

  பற்கள் மற்றும் வாயினை சுத்தமாகப் பராமரிக்க வேண்டும்.

  மன அழுத்தம் ஏற்படாதவாறு தியானம் மற்றும் யோகா் பயிற்சி செய்ய வேண்டும்.

வாய்ப்புண் வந்தால் என்ன செய்ய வேண்டும்?

  நெல்லி இலைகளை வேகவைத்த நீரில் அடிக்கடி வாய் கொப்பளித்து வர, வாய்ப்புண் ஆறும்.   

   கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சேர்ந்த திரிபலா சூரணத்தினால் வாய்
கொப்பளிக்க புண் ஆறும். இதனை உள்ளுக்கும் சாப்பிட்டு வரலாம்.
  மணத்தக்காளி இலையினை வாயில் போட்டு மென்று சிறிது நேரம் வாயில் வைத்திருந்து விழுங்கலாம். முற்றின தேங்காயையும் உபயோகிக்கலாம்.
  பாலில் சிறிது தேன் கலந்து அருந்த, வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாகும்.

  வாய்ப்புண் மீது தேன் அல்லது பசு வெண்ணெய் தடவிவர, நல்ல பலன் கிடைக்கும். 

   மாசிக்காயை பாலில் அரைத்து தேனில் குழைத்துத் தடவலாம்.  

  பச்சரிசி, பயத்தம் பருப்பு, 1 ஸ்பூன் வெந்தயம், உரித்த 1 முழுப்பூண்டு இவற்றை குக்கரில் வைத்து வெந்தவுடன், கெட்டியான தேங்காய்ப் பால் கலந்து சாப்பிட்டால் சரியாகும்.

  மணத்தக்காளிக் கீரை, அகத்திக் கீரையை தேங்காய் சேர்த்து பொரியலாகச் செய்து சாப்பிடலாம்.  

  மணத்தக்காளிக் கீரை, வெங்காயம், தக்காளி, மிளகு, சீரகம், உப்பு சேர்த்துக்
கொதிக்க வைத்துச்சாறாகக் குடிக்க வாய்ப்புண், வயிற்றுப்புண் மற்றும்
வாயுத் தொல்லையும் நீங்கும்.

  ஒரு துண்டு கடுக்காயை வாயில் அடக்கிவைத்திருக்க, வாய்ப்புண் ஆறும்.

  காலையில் வெறும் வயிற்றில் சிறுதுண்டு மஞ்சள் சாப்பிட்டு வந்தால்,
வாய்ப்புண் குணமாகும். மஞ்சள் தூளை தேனில் குழைத்துப் புண்ணின் மீதும்
தடவலாம்.

  துளசி இலையினை வாயிலிட்டு வாய்ப்புண் பகுதியில் படும்படி மென்று, மென்றதை விழுங்கிவிட வேண்டும்.

  புதினா இலைச்சாறு தடவினால், எரிச்சல், வலி குணமாகும்.
  துவர்ப்புத்தன்மை கொண்ட வாழைப்பூ வாய்ப்புண்ணுக்கு நல்லது. இதனை வேகவைத்து சூப் செய்து குடிக்கலாம்.  நன்கு பழுத்த நாவல் பழத்தை உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால், வாய்ப்புண் குணமாகும்.

லதானந்த்
 
nishanthiyoganitechDate: Wednesday, 22 Nov 2017, 3:37 PM | Message # 2
Private
Group: Users
Messages: 1
Status: Offline
பயனுள்ள தகவல். வாய்ப்புண்ணைக் குணப்படுத்தும் அபூர்வ மருத்துவ குணமுடைய நெல்லிக்காய்!
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » ஆயுர் ஆரோக்கியம் » ஆரோக்கியம் » வாய்ப் புண்ணைத் தவிர்க்க வாய்ப்பு உண்டு!
  • Page 1 of 1
  • 1
Search: