laks | Date: Wednesday, 07 May 2014, 8:19 PM | Message # 41 |
Lieutenant
Group: Users
Messages: 40
Status: Offline
| rawa recipes lam supera irukkuthupa.
|
|
| |
RAWALIKA | Date: Thursday, 08 May 2014, 2:19 PM | Message # 42 |
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
| இன்றைய சமையல்! - 14
வெஜிடபிள் கட்லெட்
செஃப் தாமு, படம் : எம்.உசேன்
''இது சம்மர் நேரம்... பிள்ளைகள் அதிகமாக வீட்டில் இருக்கும் நேரமும் கூட! எனவே, அவர்களுக்காக ஹெல்தி ஸ்நாக்ஸ் அயிட்டமான வெஜிடபிள் கட்லெட் எப்படி செய்வது என்பது பற்றி இந்த முறை சொல்கிறேன். நான் பார்த்த பெரும்பாலான வீடுகளில் கட்லெட் செய்வது என்பது சற்று சிரமமான விஷயமாகவே இருக் கிறது. அதைப் பற்றி கீழே சொல்கிறேன்'' என்றபடி ரெசி பியை நமக்கு அளித்தார், செஃப் தாமு. வழக்கம்போல அதை சூப்பராக செய்துகாட்டி னார் சென்னையைச் சேர்ந்த இல்லத்தரசி அஞ்சனா ராவ்.
தேவையானவை: உருளைக்கிழங்கு - 200 கிராம், கேரட் - 100 கிராம், பீன்ஸ் - 50 கிராம், வேகவைத்த சென்னா - ஒரு கைப்பிடி அளவு, சின்ன வெங்காயம் - ஒரு கைப்பிடி அளவு, பச்சை மிளகாய் - ஒன்று, மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், பிரெட் க்ரம்ஸ் - 150 கிராம், மைதா - ஒரு கைப்பிடி அளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து பத்து நிமிடம் ஆறவிடுங்கள். சூடு ஆறியதும் தோலை உரித்து, கைகளால் நன்றாக மையாக மசித்துக்கொள்ளுங்கள். அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும், இரண்டு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய வெங்காயம், கேரட், பீன்ஸ், பச்சை மிளகாய் எல்லாவற்றையும் சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளுங்கள். வதக்கிய காய்கறிகளை மசித்த உருளைக் கிழங்குடன் சேர்த்து பிசைந்து வையுங்கள்.
இனி, வேகவைத்த சென்னாவை மிக்ஸியில் போட்டு மையாக அரைத்து எடுத்து, உருளைக் கலவையோடு சேர்த்து உருண்டையாக உருட்டி வையுங்கள். இப்போது மைதா, உப்பு, மிளகுத்தூள் மூன்றையும் லேசாக தண்ணீர் சேர்த்து, திக்கான பேஸ்ட் பதத்துக்கு கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். உருட்டிய உருண்டைகளை மைதா பேஸ்ட்டில் முக்கி எடுத்து, அப்படியே பிரெட் க்ரம்ஸில் போட்டு புரட்டி, அதன் பிறகு நீங்கள் விரும்பிய வடிவத்துக்கு ஷேப் செய்துகொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் ஷேப் செய்த வடிவத்தைப் போட்டு பொரித்தெடுத்தால், சுவையான கட்லெட் ரெடியாகிவிடும்.
சென்னாவில் புரோட்டீனும், காய்கறியில் வைட்டமின்களும், உருளையில் மாவுச்சத்தும் இருப்பதால் குழந்தைகளுக்கு அருமையான ஸ்நாக்ஸ் இது.
பின்குறிப்பு: உருளையை வேகவைத்ததும் நேரடியாக குழாய் தண்ணீரில் காட்டி உரிக்காதீர்கள். அப்படி செய்தால், உருளை தண்ணீர் பட்டு 'சொதசொத’ என்றாகிவிடும். அதில் செய்யப்படும் கட்லெட் க்ரிஸ்பியாக வராது. மேலே சொன்ன முறைகளை ஃபாலோ செய்தாலே அருமையான, க்ரிஸ்பியான கட்லெட் கிடைத்துவிடும்.
கமகமக்கும்...
|
|
| |
RAWALIKA | Date: Thursday, 08 May 2014, 2:23 PM | Message # 43 |
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
| இன்றைய சமையல்! - 15
சம்மரை சமாளிக்கலாம்... வாங்க!
'செஃப்’ தாமு, படங்கள் : எம்.உசேன்
''கோடைகாலத்தில் மிகப்பெரிய பிரச்னை... தாகம், நாவறட்சி! அதற்கு நிவாரணமாக குடும்பத்தினருக்கு செயற்கை பானங்களைக் கொடுப்பதற்கு பதிலாக.... சிம்பிளாக செய்யக்கூடிய, ஹெல்தியான இயற்கை பானங்களை எப்படி செய்து தருவது என்று சொல்கிறேன். நான் சொல்கிற இந்த பானங்களை எல்லாம் தயாரித்த உடனேயே அருந்தக் கொடுங்கள். அதிக நேரம் வெளியிலோ அல்லது ஃப்ரிட்ஜிலோ வைத்திருக்க வேண்டாம். இந்த ஜூஸ்களை குடித்தவுடன் உங்கள் குழந்தைகள் 'வீ வாண்ட் டிரிங்ஸ் அகெய்ன்'' என்று உற்சாகக் கூச்சலிடுவார்கள்'' என்று செஃப் தாமு அக்கறையுடன் கொடுத்த குறிப்புகளை, ஆவலுடன் கேட்டுக்கொண்டு, அவற்றை அசத்தலாக செய்து காட்டுகிறார், சென்னையைச் சேர்ந்த இல்லத்தரசி அஞ்சனா ராவ்.
தாளிச்ச மோர்
தேவையானவை: தயிர் - ஒரு கப், ஐஸ் வாட்டர் - தேவையான அளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிதளவு, பச்சை மிளகாய் - ஒன்று, பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை: தயிரை மண் சட்டியில் விட்டு, ஐஸ் வாட்டர் ஊற்றி நன்கு கடைந்து, உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு, அடுப்பில் வாணலியை வைத்து, சூடானதும் எண்ணெய் ஊற்றி... கடுகு, காய்ந்த மிளகாய் கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய் பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து, அதனை அப்படியே மோரில் சேர்த்துவிட்டால்... வெயிலுக்கு இதமான தாளிச்ச மோர் ரெடி!
கேரட் ஆரஞ்சு ஜூஸ்
தேவையானவை: கேரட், ஆரஞ்சுப்பழம் - தலா ஒன்று, தேன் - ஒன்றரை டீஸ்பூன், புதினா - 5 இலைகள், ஐஸ் கட்டிகள் - சிறிதளவு.
செய்முறை: கேரட் மற்றும் ஆரஞ்சு பழத்தை தோல் நீக்கி சதைப்பற்றை மிக்ஸியில் போட்டு அரைத்து இறுத்து ஜூஸ் எடுத்துக்கொள்ளுங்கள். இதை ஒரு கிளாஸில் ஊற்றி... தேன், பொடியாக நறுக்கிய புதினா இலைகள், ஐஸ்கட்டிகள் சேர்த்தால்... அட்ட காசமான சுவையில் ஜூஸ் ரெடி.
குழந்தைகள் பெரும்பாலும் கேரட் ஜூஸை விரும்ப மாட்டார்கள். அவர்களுக்கு இப்படிக் கொடுத்தால் 'மடமட’வென்று குடித்து விட்டு, 'ஒன்ஸ்மோர்’ கேட்பார்கள்.
தர்பூசணி ஜூஸ்
தேவையானவை: தர்பூசணி சாறு - ஒரு கிளாஸ் (விதைகளை நீக்கி அதன் சதைப் பகுதியை மட்டும் மிக்ஸியில் போட்டு ஜூஸ் எடுத்துக்கொள்ளுங்கள்), எலுமிச்சை - ஒரு மூடி, புதினா - 5 இலைகள், ஐஸ் கட்டிகள் - சிறிதளவு, தேன் - ஒரு டீஸ்பூன், சர்க்கரை - 4 டேபிள் ஸ்பூன், பச்சை கலர் ஃபுட் கலர் - சிறிதளவு, இஞ்சிச்சாறு - 2 டீஸ்பூன்.
செய்முறை: தர்பூசணி சாறுடன் எலுமிச்சைச் சாறு, இஞ்சிச்சாறு, தேன், நறுக்கிய புதினா இலைகள், ஐஸ் கட்டிகள் சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ளுங்கள். பிறகு, ஒரு தட்டில் சர்க்கரையைப் பரப்பி அதில் பச்சை கலர் ஃபுட் கலரை சேர்த்துக் கிளறினால், சர்க்கரை பச்சை நிறத்தில் மாறிவிடும். இனி, ஜூஸ் கிளாஸை எடுத்து அதன் வாய்ப்பகுதியில் சிறிது தண்ணீர் தடவி, அப்படியே சர்க்கரை பரப்பிய தட்டில் கவிழ்த்து வைத்தால், கிளாஸின் வாய்ப்பகுதியில் பச்சை நிற சர்க்கரை ஒட்டிக் கொள்ளும். இந்த கிளாஸில் ரெடி செய்த ஜூஸை ஊற்றி, குழந்தைகளிடம் கொடுத்தால் நிமிடத்தில் காலியாகிவிடும்.
வசந்த நீர்
தேவையானவை: இளநீர் காய்கள் - 2 (காய்களில் உள்ள தண்ணீரை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளுங்கள். இளநீர் வழுக்கையை பொடியாக நறுக்கிக்கொள் ளுங்கள்), தேன் - ஒரு டீஸ்பூன், எலு மிச்சைச் சாறு - அரை டீஸ்பூன், துளசி இலை - 5, ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு.
செய்முறை: வாய் அகன்ற ஒரு சட்டியில் ஐஸ் கட்டிகளைப் போட்டுவிடுங்கள். இப்போது அதன் உள்ளே இன்னொரு சிறிய பாத்திரத்தை வைத்து அத்தனையையும் கலந்துவிட்டால் அற்புத மான வசந்த நீர் தயார் (இளநீரோடு ஐஸ்கட்டிகளை கலந்தால் 'சொதசொத’ என்றாகிவிடும் என்பதால்தான் இந்த ஏற்பாடு). தேவைப்படும்போது கிளாஸில் வசந்த நீரை ஊற்றிக் கொடுக்கலாம்.
முலாம்பழ டிலைட்
தேவையானவை: முலாம் பழம் - ஒன்று, நாட்டுச்சர்க்கரை - 3 டீஸ்பூன், இஞ்சிச் சாறு - 2 டீஸ்பூன், வெனிலா எசன்ஸ் - ஒரு துளி, ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு.
செய்முறை: முலாம் பழத்தை தோல் சீவி, பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு கப்பில் நறுக்கிய முலாம் பழத்தைப் போட்டு, மேலே கொடுக்கப்பட்டுள்ள மற்ற அனைத்துப் பொருட்களையும் சேர்த்துக் கலந்தால்... சத்தான முலாம்பழ டிலைட் ரெடி!
|
|
| |
shan | Date: Thursday, 08 May 2014, 2:33 PM | Message # 44 |
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| ஹாய் ரவளி , கட்லெட் & ஜூஸ் சூப்பர் ரெசிபி . இன்று நான் கட்லெட் ட்ரை பண்றேன் ....... இதுவரை நான் சென்னா சேர்த்ததில்லை .....
|
|
| |
TamilMadhura | Date: Sunday, 15 Jun 2014, 2:21 AM | Message # 45 |
Lieutenant
Group: Checked
Messages: 58
Status: Offline
| ரவளிகா... சூப்பர் சமையல் குறிப்புக்கள். பீட்ரூட் உசிலி, வரகரிசி (எங்கே தேடுவேன் இதை எங்கே தேடுவேன்) பொங்கல் எல்லாம் கலக்கல். எனக்கும் தினமும் மெனு போடுவதற்குள் போதும் போதும்னு ஆகிடும்.
தமிழ் மதுரா
|
|
| |