சுவாரஸ்யமான /வியப்பூட்டும் ஆச்சர்யமிக்க தகவல்கள் - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
  • Page 1 of 1
  • 1
Forum moderator: Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பயனுள்ள தகவல்கள் » நிகழ்வுகள் » சுவாரஸ்யமான /வியப்பூட்டும் ஆச்சர்யமிக்க தகவல்கள் (சுவாரஸ்யமான /வியப்பூட்டும் ஆச்சர்யமிக்க தகவல்கள்)
சுவாரஸ்யமான /வியப்பூட்டும் ஆச்சர்யமிக்க தகவல்கள்
LayaDate: Friday, 14 Feb 2014, 9:58 PM | Message # 1
Lieutenant
Group: Moderators
Messages: 72
Status: Offline
சுவாரஸ்யமான /வியப்பூட்டும் ஆச்சர்யமிக்க தகவல்கள் பற்றிய பார்வை
 
NathasaaDate: Tuesday, 22 Apr 2014, 10:45 AM | Message # 2
Major general
Group: *Checked*
Messages: 360
Status: Offline
==> ரத்தத்தை உறிஞ்சும் அட்டை பூச்சிகளால் உயிர் பிழைத்த பெண்.....

அமெரிக்காவில் ரத்தத்தை உறிஞ்சும் அட்டைப்பூச்சிகளின் உதவியுடன் இளம் பெண்ணின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ரோத் தீவுகளை சேர்ந்த 19 வயது பெண்ணின் இடது காதை நாய் கடித்து குதறியது.

உடனடியாக குறித்த பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்ததும், அவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி முறையில் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது.

அறுவை சிகிச்சை முடிந்த பின்னரும், தையல் போட்ட பகுதிக்கு ரத்த ஓட்டம் செல்லவில்லை, இதனை தொடர்ந்து மிக மெல்ல ரத்த குழாய்கள் பொருத்தப்பட்டது.

அதிலிருந்து தையல் போட்ட பகுதிகளுக்கு மட்டும் ரத்த ஓட்டம் சென்றது, உடலின் மற்ற பகுதிக்கு செல்லவில்லை.

எனவே புதுவிதமான ஐடியாவை யோசித்த மருத்துவர்கள் ரத்தத்தை உறிஞ்சும் அட்டை பூச்சிகளை அப்பகுதியில் உலவவிட்டனர்.

பூச்சிகள் ரத்தத்தை உறிஞ்சும் போது உடலின் மற்ற பகுதிகளுக்கு சுலபமாக ரத்தம் பாய்ந்தது.

தொடர்ந்து நிலைமை சீராகவே, பூச்சிகளை நீக்கினர், அட்டை பூச்சிகளின் உதவியுடன் இளம்பெண்ணின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.


Message edited by Nathasaa - Tuesday, 22 Apr 2014, 10:46 AM
 
NathasaaDate: Tuesday, 22 Apr 2014, 10:52 AM | Message # 3
Major general
Group: *Checked*
Messages: 360
Status: Offline
==> 70வருடங்களாக இணைபிரியாமல் வாழ்ந்த தம்பதிகள் 15 மணிநேர இடைவெளியில் உயிர்விட்ட துயர சம்பவம்




அமெரிக்காவில் 70 வருடங்களாக ஒற்றுமையாக வாழ்ந்த ஒரு தம்பதியினர் அடுத்தடுத்து 15 மணிநேரத்தில் மரணம் அடைந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள Nashport என்ற நகரில் 92 வயது Helen Felumlee என்ற பெண்ணும் அவருடைய கணவர் 91 வயது Kenneth Felumlee என்பவரும் அடுத்தடுத்து 15 மணி நேரத்தில் இயற்கை மரணம் அடைந்தனர்.

இவர்களுக்கு 8 குழந்தைகள் உள்ளனர்.
தங்கள் பெற்றோர் திருமணம் ஆனதில் இருந்து இதுவரை காலை உணவை ஒன்றாக சாப்பிட்டு வந்தவர்கள் என்றும், அவர்கள் இருவரது மரணம் தங்களை அதிர்ச்சியுற செய்துள்ளது என்றும் அவரது மூத்த மகன் கூறியுள்ளார்.

கடந்த 1944ஆம் ஆண்டு இந்த தம்பதியினர்களுக்கு திருமணம் நடந்தது.
திருமணம் ஆகி 70 வருட தாம்பத்ய வாழ்க்கையில் இவர்கள் இருவரும் ஒருநாள் கூட பிரிந்திருந்தது இல்லையாம்.
எவ்வளவு அவசரமான வேலை இருந்தாலும், தினமும் ஒன்றாகவே பிரேக்பாஸ்ட் சாப்பிட்டுவிட்டுத்தான் வெளியே செல்வார்களாம். ஒற்றுமையின் அடையாளமாக இருந்த அபூர்வ தம்பதிகளில் முதல் நாள் இரவு மனைவியும், மறுநாள் காலையில் கணவரும் உயிரிழந்துள்ளனர்.

இருவரது இறுதிச்சடங்கையும் ஒரே இடத்தில் நடத்திய இவரது வாரிசுகள், சாவிலும் இணைபிரியாத தங்கள் பெற்றோர்களை ஒரே இடத்தில் புதைத்துள்ளனர். இந்த அபூர்வ சோக சம்பவம் அந்த பகுதியில் இருப்பவர்களை வியப்பையும் வருத்தத்தையும் அளித்துள்ளது.

 
NathasaaDate: Tuesday, 22 Apr 2014, 11:07 AM | Message # 4
Major general
Group: *Checked*
Messages: 360
Status: Offline
==> தங்கத்தால் ஜொலிக்கும் சறுக்குப் பலகை......



நியூயோர்க் நகரிலுள்ள கடை ஒன்றிற்காக மத்தியூ விலட் எனும் கலைஞர் ஒருவர் தங்க முலாம் பூசப்பட்ட சறுக்கு பலகையொன்றை வடிவமைத்துள்ளார்.

15000 டொலர்கள் செலவில் வடிவமைக்கப்பட்ட இப்பலகையானது மற்ற பலகையை விட 80 சதவீதம் அதிக பாரமானதாக காணப்படுகிறது.

தங்க முலாமிடப்பட்டுள்ள போதிலும் இந்த சறுக்குப் பலகையின் அனைத்து பாகங்களும் முற்றிலும் இயங்கக்கூடியதாக உள்ளது என மத்தியூ விலட் கூறுகிறார்.

'நான் எனது வாழ்க்கை முழுவதும் ஸ்கேட்போர்ட்டை பயன்படுத்தியுள்ளேன். அதனால் இவ்வாறானதொரு பொருளை தயாரிப்பது சிரமமாக இருக்கவில்லை.

எனினும் இத்திட்டத்தை நாம் இரகசியமாக வைத்திருந்தோம் தற்போது இதற்கு அதிக வரவேற்பு கிடைத்தள்ளது.' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.



 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பயனுள்ள தகவல்கள் » நிகழ்வுகள் » சுவாரஸ்யமான /வியப்பூட்டும் ஆச்சர்யமிக்க தகவல்கள் (சுவாரஸ்யமான /வியப்பூட்டும் ஆச்சர்யமிக்க தகவல்கள்)
  • Page 1 of 1
  • 1
Search: