தமிழ்நாடு அரசின் வேளாண் துறையின் மானிய உதவித் திட்டங்கள் - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
  • Page 1 of 1
  • 1
Forum moderator: Jeniliya, Laya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பசுமை - இயற்கையின் கொடை » விவசாய தொழில்நுட்பம் » தமிழ்நாடு அரசின் வேளாண் துறையின் மானிய உதவித் திட்டங்கள் (தமிழ்நாடு அரசின் வேளாண் துறையின் மானிய உதவித் திட்டங்கள்)
தமிழ்நாடு அரசின் வேளாண் துறையின் மானிய உதவித் திட்டங்கள்
JanviDate: Tuesday, 15 Sep 2015, 4:25 PM | Message # 1
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
தமிழ்நாடு அரசின் வேளாண் பொறியியல் துறையின் மானிய உதவித் திட்டங்கள்

தமிழ்நாடு வேளாண்மை பொறியியல் துறையின் சீர்மிகு திட்டங்களாவன:

சிறுபாசனத் திட்டம் :
சென்னை, நீலகிரி, கன்னியாகுமரி தவிர 29 மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. குழாய் கிணறுகள் அமைத்தல், திறந்தவெளிக்
கிணறுகள் அமைத்தல், வறண்ட கிணறுகளில் போர் போடுதல் போன்ற பணிகளுக்கு
உதவுகிறது. பெர்கூசன் துளைக்கருவி, பாறை தகர்க்கும் கருவி, நீர்துளைக்
கருவி போன்ற பலவகைக் கருவிகளைக் குறைந்த வாடகைக்குத் தருகிறது.

நில மேம்பாட்டுத் திட்டம் :
சென்னை, கன்னியாகுமரி நீங்கலாக 30 மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. நிலம் சமன்படுத்துதல், வடிவமைத்தல், விவசாய
உற்பத்தித் திறன் அதிகரித்தல், பண்ணை சக்தியை உருவாக்குதல், உழுதல்,
பரம்படித்தல் கருவிகள் மூலம் அறுவடை செய்ய விவசாயிகளுக்கு குறைந்த
வாடகையில் கருவிகள் வழங்குதல். புல்டோசர், டிராக்டர், அறுவடை,
நாற்றுநடுதல், மண் அள்ளும் கருவிகள் குறைந்த வாடகைக்கு வழங்கப்படும்.

தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாடு திட்டம் :
திருந்திய தரிசு நில மேம்பாட்டு திட்டத்தில் நிலமற்ற ஏழை விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு அரசு தரிசு
நிலம் வழங்குதல். வேளாண்மை பயிர் தொகுப்பு நில மேம்பாட்டு மானியத்தொகை
வழங்கப்படும்.

ஏக்கருக்கு :
நில சீரமைப்புக்கு தொகை ரூ.3,400, ஆழ்துளைக் கிணறு அமைக்க ரூ.8,900, சொட்டு நீர் / உரப்பாசனம் ரூ.32,000, சமுதாய
நாற்றங்கால் அமைப்பு ரூ.2,000, விதைகள் மற்றும் கன்றுகள் ரூ.2,000,
நீர்க்கரைசல் உரங்கள் ரூ.6,000, பயிர் பாதுகாப்பு மருந்துகள் ரூ.2,000.

முதல் திட்டத்திற்கு :
மாவட்ட பொறியாளர் / மண்டல தலைமை பொறியாளர் /அல்லது வேளாண்மை பொறியியல் துறை, தமிழ்நாடு அரசு, அண்ணாசாலை, நந்தனம், சென்னை-35.
அலைபேசி: 044- 2436 2686.

இரண்டாம் திட்டத்திற்கு :
மாவட்ட ஆட்சியர், மாவட்ட இணை இயக்குனர் (வேளாண் மற்றும் மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை).

- ஜி.சந்திரகாந்தா
தொழில் முனைவோரின் ஆலோசகர்,
93807 55629, 99624 76415
 
JanviDate: Tuesday, 15 Sep 2015, 4:29 PM | Message # 2
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
double post

Message edited by Janvi - Tuesday, 15 Sep 2015, 4:30 PM
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பசுமை - இயற்கையின் கொடை » விவசாய தொழில்நுட்பம் » தமிழ்நாடு அரசின் வேளாண் துறையின் மானிய உதவித் திட்டங்கள் (தமிழ்நாடு அரசின் வேளாண் துறையின் மானிய உதவித் திட்டங்கள்)
  • Page 1 of 1
  • 1
Search: