விவசாய தொழில்நுட்பம் - Page 13 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
Forum moderator: Jeniliya, Laya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பசுமை - இயற்கையின் கொடை » விவசாய தொழில்நுட்பம் » விவசாய தொழில்நுட்பம் (விவசாய தொழில்நுட்பம்)
விவசாய தொழில்நுட்பம்
JanviDate: Tuesday, 15 Sep 2015, 4:14 PM | Message # 121
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
மூன்று ஏக்கரில் கொய்யா..! மாதம் ரூ.25 ஆயிரம் வருமானம்..!

மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக முல்லை பெரியாறு மற்றும் வைகை அணைகள் உள்ளன. தண்ணீர் வந்தால்
இருபோக விவசாயம் நடக்கும். தண்ணீர் வராவிட்டால் நிலைமை தலைகீழ் தான்.
மதுரையை பொறுத்தமட்டில் கிணற்று பாசனம் மூலம் நெல், வாழை போன்ற பாரம்பரிய
விவசாயம் நடக்கிறது. "பாரம்பரிய விவசாயத்தில் எதிர்பார்த்த லாபத்தை
எதிர்பார்க்க இயலாது. "வந்தால் வரவு; போனால் செலவு' என்ற நிலையிலேயே நெல்,
வாழை சாகுபடியில் ஈடுபட முடியும்,' என்கின்றனர் அனுபவம் வாய்ந்த
விவசாயிகள். இந்த வரிசையில் மதுரை நெடுமதுரையை சேர்ந்த விவசாயி
மொக்கச்சாமி,60, விவசாயத்தில் புதுமையை புகுத்தி லாபம் ஈட்டி வருகிறார்.
மதுரையின் வறட்சி பகுதிகளில் நெடுமதுரை, வலையங்குளம், சோளங்குருணி, குரண்டி,
திருமங்கலம் பகுதிகள் முதலிடம் வகிக்கிறது. இவற்றில் 99 சதவீத விவசாயிகள்
கிணற்று பாசனம் மூலம் மல்லிகை விளைவிக்கின்றனர். தண்ணீர் பற்றாக்குறையால்
நெல், வாழை, மா போன்றவற்றை முற்றிலும் தவிர்த்துள்ளனர். துணிச்சல் மிக்க
மொக்கச்சாமி, மூன்று ஏக்கர் நிலத்தில் கொய்யாவை விளைவித்து விவசாயத்தை
லாபகரமாக மாற்றியுள்ளார். தவிர மா, தேக்கு தோட்டங்களையும் வைத்துள்ளார்.
மொக்கச்சாமி கூறியதாவது: ஒட்டு வகை, குட்டை ரகத்தை சேர்ந்த "லக்னோ 49' மற்றும் ஒட்டு
வகை, நெட்டை ரகத்தை சேர்ந்த "லக்னோ 47' ஆகிய கொய்யா நாற்றுகளை தேனி
மாவட்டம் பெரியகுளம் தனியார் பண்ணையில் இருந்து வாங்கினேன். முதலில் சோதனை
அடிப்படையில் வளர்த்தேன். மரத்தில் காய்கள் பூத்து குலுங்கின. அடுத்ததாக
மூன்று ஏக்கரில் கொய்யா தோட்டம் அமைத்தேன். மருந்து செலவு தவிர்த்து மாதம்
சராசரியாக 20 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைக்கிறது.
நெல், வாழை போல் அதிகபடியான பராமரிப்பு கொய்யாவில் இல்லை. அடிஉரம், மேல்உரம் மற்றும் பூ
பூக்கும்போது ஒருமுறை பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தால் போதுமானது.
போர்வெல் மூலம் கிணற்றிற்குள் தண்ணீர் பாய்ச்சி மீண்டும் மோட்டார் வைத்து
உறிஞ்சி தோட்டத்துக்கு பாய்ச்சுகிறேன். குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்கு
ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். செம்மண் நிலம் என்பதால் விளைச்சல்
அமோகமாக உள்ளது. நாள் ஒன்றுக்கு 60 முதல் 70 கிலோ காய்கள் கிடைக்கிறது.
முறையாக பராமரித்தால் பத்து முதல் 13 ஆண்டுகள் வரை பலன் கொடுக்கும்.
தோட்டத்துக்கே வந்து சீசனுக்கு ஏற்ப கிலோ 20 ரூபாய்க்கு வியாபாரிகள் வாங்கி
சென்று 40 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்கின்றனர். மதுரையின்
தெற்குப்பகுதியில் கொய்யா விவசாயத்தை லாபகரமாக நான் மட்டுமே
மாற்றியுள்ளேன். அடுத்ததாக சொட்டு நீர் பாசனம் மூலம், கொய்யா விவசாயத்தை
விரிவாக்கவுள்ளேன் என்றார். தொடர்புக்கு 95432 34975.
-- Thanks Dinamalar
 
JanviDate: Tuesday, 15 Sep 2015, 4:16 PM | Message # 122
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
ஏலத்தோட்டத்தில் காளான் விவசாயம்

ஏலச்செடிகளுடன் காளான் வளர்ப்பு என்ற கொள்கையை பரிசோதித்து வெற்றி பெற்றுள்ளார் மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி தாவரவியல் துறை பேராசிரியர்
முனைவர் ராஜேந்திரன். இது பற்றி அவர் கூறுகையில், ஏலத்தோட்டங்களில் நிலவும்
காலச் சூழ்நிலையையும் சீதோஷண நிலைகளைப் பயன்படுத்தி குடில்கள் அமைக்காமல்
இயற்கையில் ஏலச்செடிகளுடன் காளான் வளர்த்து ஏல விவசாயத்தை மிகவும்
லாபகரமாகவும், ஆர்கனிக் முறைக்கு மாற்றும் முயற்சி இது. இம்முறையை
பின்பற்றும் போது அது விவசாயிகளுக்கு பலவகை நன்மைகளை தருகிறது. குறைந்த
செலவில் அதிக வருமானம் பன்மடங்காக உயர்கிறது. காளான் அறுவடை செய்தப்பின்
கிடைக்கும் காளான் மைசீலியக் கழிவுகள் செடிகளுக்கு அடியில் இருக்கும் போது
அது அழுகல் நோயை உண்டாகக்கூடிய பித்தியம், மற்றும் ரைசோகாட்டலின் போன்ற
பூஞ்சைகளைக் கட்டுப்படுத்தி செடிகளை நோய் தாக்குதலிலிருந்து பாதுகாப்பதுடன்
அதிக அளவு மகசூலையும் கொடுக்கிறது.
பல்வேறுப்பட்ட இரசாயன உரங்கள் மற்றும் பூச்சி கொல்லிகை நீண்ட காலமாக பயன்படுத்தி வந்ததின் விளைவாக
மண்ணில் ஏற்பட்டுள்ள இரசாயன மாற்றத்தையும் மண்ணில் குவிந்துள்ள
பயன்படுத்திய இரசாயனங்களையும் உறிஞ்சி மண்ணின் தன்மையை தாவர
வளர்ச்சிக்கேற்ற வகையில் மாற்றுகிறது. அதேபோல் பல வீரியம் மிக்கப் பூசனக்
கொல்லிகளை ஏலச் செடிகளுக்கு பயன்படுத்துவதால் அது ஏலத்தோட்டங்களிலுள்ள
அனைத்து வகை நன்மை செய்யும் பூஞ்சைகளையும் அழித்து விடுவதால் மண்ணில்
நடைபெற வேண்டிய மினரல் (சத்துக்களின்) சுழற்சி தடைபட்டு மண்ணின் உயிர்தன்மை
இழந்து வருகிறது.
பேராசிரியரின் இப்புதுமை திட்டத்தை பயனாளிகளின் கைகளுக்கு கிடைக்கச் செய்யும் முயற்சிகளை மதுரையை மையமாகக் கொண்டு
செயல்படும் கிளீன் மற்றும் கிரீன் எண்விரான்மெண்ட் பவுண்டேசன் என்ற தொண்டு
நிறுவனம் செய்து வருகிறது. சோதனை முறையாக சுமார் ஒரு ஏக்கர் ஏலப்பயிருடன்
காளான் வளர்ப்பை கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் செய்து வருகிறது.
இம்முறை பற்றி பிற தகவல்களுக்கு 94863 26193 என்ற எண்ணில் தொடர்பு
கொள்ளலாம்.
- டாக்டர் கு.ராஜேந்திரன்,
பேராசிரியர் தாவரவியல் துறை,
சரஸ்வதி நாராயணன் கல்லூரி,
மதுரை.
 
JanviDate: Tuesday, 15 Sep 2015, 4:18 PM | Message # 123
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
கைநிறைய சம்பாதிக்க "கண்வலி' கிழங்கு சாகுபடி

விவசாயிகள் பலர் கஷ்டப்பட்டு உழைத்தும் பலன்கிடைக்காமல், விவசாயத்தையே கைவிடும் நிலைக்கு ஆளாகி வருகின்றனர். சிலர் வாங்கிய கடனை திருப்பி
தரமுடியாமல், தற்கொலை செய்யும் அளவுக்கு போய்விடுகின்றனர். சிலர் மட்டுமே,
எந்த பருவத்தில் எதைச் செய்தால் லாபம் ஈட்டமுடியும் என அறிந்து,
விவசாயத்தில் சாதனை புரிகின்றனர்.
அந்தவரிசையில், ஒட்டன்சத்திரம் விராலிக்கோட்டை விவசாயி டி.சின்னச்சாமி மருத்துவ குணமிக்க "கண்வலி' கிழங்கு
சாகுபடியில் ஆண்டுதோறும் ரூ.பல லட்சம் வருமானம் பார்க்கிறார்.
எப்படி சாதித்தார் அவர். இதோ கூறுகிறார்: கண்வலி கிழங்கு சாகுபடிக்கு ஏற்ற மாதம்
ஆடி, ஆவணி, புரட்டாசி தான். அந்த சமயத்தில் கிழங்குகளை நட்டால் தான் அடுத்த
அடுத்த ஆண்டுகளில் பலன் நன்றாக கிடைக்கும். நான் மூன்று ஏக்கரில் நடவு
செய்ய ஆந்திரா மாநிலத்தில் இருந்து ஒரு கிலோ ரூ.250 வீதம் 500 கிலோ
"கண்வலி' கிழங்குகள் வாங்கினேன்.
சாகுபடிக்கு, நிலத்தில் சிறிய குழிதோண்டி கிழங்குகளை வரிசையாக புதைக்க வேண்டும். கம்பி, பந்தல் அமைக்க
வேண்டும். நிறைய தண்ணீர் தேவை இல்லை. சொட்டுநீர் பாசனமுறை சிறந்தது.
மண்ணில் புதைத்த கிழங்குகள் 20 நாட்களில் துளிர்விட்டு, செடி பந்தலுக்கு
வந்துவிடும். நான்கு மாதங்களில் பூத்து, காய்க்க துவங்கும், கோவைப் பழம்
போல காய்கள் இருக்கும். அவற்றை பறித்து தட்டி விதைகளை எடுத்து நன்றாக
காயவைக்க வேண்டும். 500 கிலோ கிழங்கில் 300 கிலோ விதை கிடைக்கும்.
மருத்துவத்திற்காக கண்வலி கிழங்கு விதைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால்
திருப்பூர் மாவட்டம் மூலனூர் சந்தையில் ஒரு கிலோ ரூ.1200 முதல் ரூ.2000 வரை
விலைகிடைக்கும். தொடர்ந்து அடுத்த ஆண்டில் ஆண்டிற்கு 100கிலோ கூடுதல் என
மூன்று ஆண்டுகள் கண்வலி கிழங்கு செடி மூலம் ரூ.பல லட்சம் வருமானம்
ஈட்டலாம். ஒரு ஏக்கருக்கு கிழங்கு கொள்முதல் செலவு போக மருந்து, உரம்,
காய்பறிப்பு கூலி என ரூ.50 ஆயிரம் வரை செலவாகும்.
முதல் ஆண்டு ஓர் அளவிற்கு தான் லாபம் கிடைக்கும். அடுத்த இரண்டு ஆண்டுகளில் மருந்து,
உரமிட்டு கண்ணும் கருத்துமாக வளர்த்தால் ரூ.பல லட்சம் லாபம் ஈட்டலாம்.
கண்வலி கிழங்குக்கு கரிசல் மண் ஆகாது. கச்சமண், செம்மண், மலமண் ஏற்றது.
மேற்சொன்ன பருவத்தே கண்வலி கிழங்கு "கரெக்டா' சாகுபடி செய்தால் கைநிறைய
பணம் அள்ளலாம்,
என்றார். இவரை தொடர்பு கொள்ள 97867 99763.
-முருகன், பழநி.
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பசுமை - இயற்கையின் கொடை » விவசாய தொழில்நுட்பம் » விவசாய தொழில்நுட்பம் (விவசாய தொழில்நுட்பம்)
Search: