இணைய குற்றங்கள் - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
  • Page 1 of 1
  • 1
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » சட்டம் அறிவோம் » சட்டமும் சந்தேகங்களும் » இணைய குற்றங்கள் (Dinamalar- ஹன்ஸா, அட்வகேட்)
இணைய குற்றங்கள்
RAWALIKADate: Monday, 27 Oct 2014, 6:59 PM | Message # 1
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
இணைய குற்றங்கள்


1.குறுந்தகவல்களை மொத்தமாக பலருக்கு ஒரே சமயத்தில் அனுப்ப, இலவச எஸ் எம் எஸ் சேவை தரும் தளங்கள் உள்ளன. அவற்றில் நம் எண்ணைப் பதிந்துவிட்டால், அவர்கள் ஒரு பாஸ்வேர்டு தருவார்கள்.

அதன் பின் கம்ப்யூட்டரில் அந்த தளத்தில் பாஸ்வேர்டை உள்ளிடுவதன் மூலம், தகவலை அனைவருக்கும் ஒரே சமயத்தில் அனுப்பலாம்.

சரி இதில் ஒரு முடிச்சு உள்ளது. அதாவது, உங்கள் செல்ஃபோன் ஐந்து நிமிடங்கள் என்னிடம் இருந்தால், உங்கள் மொபைல் எண்ணை அந்த தளத்தில் பதிந்துவிட்டு, உங்கள் மொபைலுக்க்கு அவர்கள் அனுப்பும் பாஸ்வேர்டை குறித்துக் கொண்டுவிட்டு, பின் உங்கள் மொபைலில் உள்ள அந்த பாஸ்வேர்டை அழித்துவிட்டு, உங்களிடம் உங்கள் மொபைலைத் திருப்பித்தந்துவிட்டால் உங்களுக்கு ஏதும் வித்தியாசம் தெரியாது.

இப்போது உங்கள் மொபைலில் இருந்து வருவது போல யாருக்கு வேண்டுமானாலும் என்ன தகவல் வேண்டுமானாலும் அனுப்பலாம் அல்லவா?

2. இதே போலத்தான் ஈ-மெயில் பாஸ்வேர்டு தொலைந்து/மறந்துவிட்டால், நம் தொலைபேசி எண்ணை கன்ஃபர்ம் செய்ததும் அந்த எண்ணுக்கு ஒரு கோட் எண் அனுப்புவார்கள். அதை உள்ளிட்டு புது பாஸ்வேர்டு அமைக்க முடியும். இதை நம் மொபைலை சில நிமிடங்கள் கடன் வாங்குவதன் மூலமும் நம் பாஸ்வேர்டை களவாட முடியும் அல்லவா?

** மொபைலை யாரிடமும் பகிந்து கொள்ளாதிருத்தல்தான் ஒரே வழி. 

3. நாம் அனுப்பும் ஒரு ஈ-மெயிலை அவர் படித்துவிட்டாரா இல்லையா என செக் செய்ய நாம் அனுப்பும் மெயிலோடு ஒரு ஒற்றை (SPY) அனுப்ப முடியும். இதை, நீங்கள் அனுப்பிய மெயிலை படித்துவிட்டு அதன் படி நடக்காமல் அல்லது நடக்கப்பிடிக்காமல் "இன்னும் படிக்கவில்லை” என ஏய்க்கும் நபர்களைக் கண்காணிக்கப் பயன்படுத்த முடியும்.

SPYPIG போன்ற தளங்கள் இதற்கு உதவுகிறது.

நாம் அனுப்பிய அந்த ஒற்றுத்தகவலானது அந்த நபர் அந்த மெயிலை படிக்க திறந்ததும், நமக்கு தகவல் தரும். 

அந்த ஒற்று, அனுப்பப்பட்டுள்ளது எனும் தகவலை அந்த நபரிடமிருந்து மறைத்தும் அனுப்ப இயலும்.

**சரி. இதே போல ஒற்றை உங்கள் பாஸ் உங்களைக் கண்காணிக்க மறைவாக அனுப்பி இருக்கிறாரா? என நீங்கள் அறிந்து கொள்ள, 

எந்த மெயில் அப்படி இருக்க வாய்ப்புள்ளது என நீங்கள் நினைக்கிறீர்களோ அந்த மெயிலின் டெக்ஸ்டை காபி செய்யுங்கள். அப்படி காபி செய்கையில், காபியான பகுதி எழுத்துக்கள் நீல நிறமாகும். ஆனால், ஒரு இடத்தில் மட்டும் எழுத்துக்கள் ஏதும் இல்லாமலேயே அந்த இடம் நீல நிறமாக இருக்கும். அப்படி ஆனால் அந்த இடத்தில் ஒற்று(குகஙு) இருக்கிறது என அறியலாம்.

4. மெயிலில் புகைப்படங்களை பகிர்வது உண்டு. ஆனால், அந்த புகைப்படங்கள் தரவிறக்கம் செய்யப்பட்டு, தவறாக உபயோகிக்கப்படலாம் என நினைத்தால், அந்த படங்களை வாட்டர் மார்க் செய்து அனுப்பலாம். வாட்டர் மார்க் செய்வதை பல இணைய தளங்கள் இலவசமாக செய்ய உதவுகின்றன.

**ஆனால், அந்த வாட்டர்மார்க்கையும் உடைக்க சில மென்பொருட்கள் சந்தையில் உள்ளன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். சுலபத்தில் நம் புகைப்படங்கள தரவிறக்க்கம் செய்யப்படுவதை மட்டுமே நம்மால் தவிர்க்க முடிய்ம்.

5. மெயிலில் உள்ள தகவல்கள் யாருக்கு அனுப்பப்படுகிறதோ அவர் ஒரு முறை மட்டுமே அதை பார்க்க முடியும் அதன் பின் அந்த தகவல் காணாமல் போய்விடுவது போல அல்லது அந்த தகவல் குறிப்பிட்ட நேரம் வரைதான் காணக்கிடைக்கும் என்பது போல செட் செய்ய முடியும்.

இதை எப்படி தவறாகப் பயன்படுத்துகிறார்கள்..?

ஒரு முறை ஒரு தகவலைச் சொல்லிவிட்டு, பின் அதை மறுக்க இதைப் பயன்படுத்தலாம் அல்லவா?

** இதற்கு, உங்களிடம் தகவல் சொல்பவர், தகவலை சொல்ல வெவ்வேறு மீடியாக்களைப் பயன்படுத்துகிறார் எனில் கவனம். அதாவது, முதலில் ஒன்றை மெயிலில் சொல்லிவிட்டு, அதன் பின் அதை மறுத்து மொபைலில் வேறொன்று சொல்கிறார் எனில், உடனேயே, "இன்ன தேதியில் நீங்கள் சொன்னபடி..” என்கிற மாதிரி உங்களுக்க்கு ஆதரவான சாட்சி ஒன்றை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

6. நீங்கள் தொடர்ந்து எந்த மாதிரியான தகவல் பக்கங்களைப் பார்வையிடுகிறீர்கள் என உங்கள் சர்ச் எஞ்சின் பட்டியலிட்டு வைத்திருக்கும். உதாரணமாக நீங்கள் வேலை வாய்ப்புச் செய்திகளை அதிகம் தேடுகிறீர்கள் எனில், அது குறித்த தகவல்களாக உங்களுக்கு அதிகம் அளிக்கவே இந்த ஏற்பாடு. சரி. இந்த ஏற்பாடு எப்படி தவறாக உபயோகிக்கப்படுகிறது?

"உங்கள் துறையில் இதோ வேலை வாய்ப்பு” என உங்கள் பேஜில் ஒரு லின்க் வந்து போகும். சரியென அதை பார்க்க க்ளிக் செய்வீர்கள். அத்தோடு, உங்கள் தகவல்கள் அனைத்தும் களவாகும். 

** இதற்கு என்ன செய்யலாம்..? நம் பேஜில் அது போல ஒரு லின்க் வந்தால் அந்த லின்க்கை அப்படியே க்ளிக் செய்யாமல், அதை மறுபடி டைப் செய்து அந்த ஒரிஜினல் பக்கத்தில் போய் தகவல்களைப் பெறலாம்.

7. எனக்கு அடிக்கடி ஒரு டயலாக் பாப் அப் ஆகும். அதாவது, ”” நிறுவனத்தின் செக்யுரிடியைப் பயன்படுத்துங்கள் என. தினம் ஒரு ஐந்தாறு முறையாவது வரும். அந்த நிறுவனப் பெயர் நம் மனதில் பதிந்து விடும். 

திடீரென ஒரு நாள் ”அவசர தகவல்; உங்கள் கம்ப்யூட்டரின் பாதுகாப்பு கேள்விக் குறியாகியுள்ளது.” என மொட்டையாக ஒரு வாசகம் இடம் பெறும். யாரிடமிருந்து வருகிறது எனும் தகவல்கூட இல்லாமல். செக் செய்து பார்த்தால் நம் கம்யூட்டரில் பிரச்சினை ஏதும் வந்திருக்காது. 

ஆனால், அதை செக் செய்யும் முன் சட்டென பயந்து என்ன செய்வோம். ? ..தினம் பார்க்க்கும் பழகிய அந்த செக்யுரிடி நிறுவனத்தின் இலவச பாதுகாப்பை கோருவோம். அதுதானே அந்த விளம்பரத்தின் நோக்கம்.? (சில சமயங்களில் இலவசமாக உள்ள அந்த மென்பொருள் அப்க்ரேட் எனும் பெயரில் சந்தா வசூலிக்கும்)

8. ஃபேஸ்புக் போன்ற தளங்களைப் பார்த்துக் கொண்டே உங்கள் மற்ற அலுவல்களைப் பார்க்கும் பழக்கம் இருந்தால் அதை முதலில் மாற்றிக் கொள்ளுங்கள். ஏனெனில், நான்கைந்து பக்க்கங்களைத் திறந்து வைத்திருக்கையில் அவற்றில் ஏதேனும் ஒன்று ஸ்பை சைட்டாக இருக்கக்கூடும்.

உதாரணமாக, நீங்கள் உங்கள் பேங்க் அகவுண்டை திறந்து வைத்திருக்கிறீர்கள். உங்கள் அலுவல் கோப்பையும்,. இத்தோடு ஃபேஸ்புக் போன்ற தளங்களையும் திறந்து வைத்திருக்கிறீர்கள். 

இடையில் உங்கள் அலுவலக்க கோப்பை பார்க்கிறீர்கள். அந்த நேரத்தில், பேஸ்புக் அகவுன்ட் இருக்கும் பக்கத்தின் தலைப்பு பேன்க் பேஜாக (க்லோனின் சைட்) மாறும். 

இப்போது நீங்கள் பேன்க் அகவுண்ட் பக்கத்தை பார்வையிட வருவீர்கள். வழக்கம் போல அந்த க்ளோனிங் பேஜில் உங்கள் ஐடி பாஸ்வேர்ட் கேட்கும். ஏற்கனவே நீங்கள் கொடுத்திருந்தாலும் இப்போது மறுபடி கொடுப்பீர்கள். (ஏனெனில் உங்கள் கவனம்தான் வேறு தளங்களில் இருக்கிறதே?) 

** பல பேஜ்களை ஒரே சமயத்தில் திறந்து வைக்காதீர்கள். ஒரு தளத்தில் ஐடி பாஸ்வேர்ட் கொடுத்தால், மறுபடி அந்த தளம் அவற்றைக் கேட்டால் அந்த பேஜையே க்ளோஸ் செய்துவிட்டு மறுபடி அந்த அட்ரசுக்குப் போய் ஐடி பாஸ்வேர்டு கொடுங்கள்.

9. ஃபேஸ்புக் போன்ற தளங்களில், உங்கள் படம் பெயரில் ஒரு அகவுண்ட் ஓபன் செய்துவிட்டு, நீங்கள் சொல்வது போல ஒரு கருத்தை தகவலை பரப்ப முடியும். அப்படி நடப்பது உங்களுக்குத் தெரியும் வரை இது தொடரும். ஆனால், அதுவரை ..?

**அப்படி உங்களுக்கு யாரேனும் செய்வதாகத் தெரிந்தால், அந்த பேஜின் லின்க் அட்ரசை காபி பேஸ்ட் செய்து கொள்ளவும்.(அப்படியே மறு முறை டைப் செய்யாமல், கட் அண்ட் பேஸ்ட் செய்யவும்). கட் அண்ட் பேஸ்ட் செய்தால், அதன் பின் காவல் துறையில் புகாரளித்தால் ஓரளவுக்கு கண்டு பிடிக்க முடியும்.

10. இன்று சந்தையில் பல ரிமோட் அட்மினிஸ்ட்ரேஷன் டுல்ஸ் கிடைக்கிறது. இதை உங்கள் லேப்டாப்/மொபைலில் இன்ஸ்டால் செய்வதன் மூலம், அதை இயக்கவோ, அதில் நடப்பவற்றை வேவு பார்க்கவோ முடியும்.

மேற்கூறிய தகவல்கள் அனைத்தும், பைக்கில் செல்கையில் ஹெல்மெட் அணிய வேண்டும் எனச் சொல்வது போலத்தான். ஒரு பாதுகாப்பு கவசம். பயப்படுத்தவோ, குறை சொல்லவோ அல்ல. ஏனெனில், இணையத்தின் பயன் அளப்பறியது.

- சு ஹன்ஸா
 
MeenatchiDate: Wednesday, 12 Nov 2014, 4:25 AM | Message # 2
Colonel
Group: Checked
Messages: 249
Status: Offline
hi vjij,
  thks for useful info...


Meenatchi .S
 
NathasaaDate: Thursday, 13 Nov 2014, 5:46 PM | Message # 3
Major general
Group: *Checked*
Messages: 360
Status: Offline
Indeed.!!!
thπQ for the valid shariπg viji sis
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » சட்டம் அறிவோம் » சட்டமும் சந்தேகங்களும் » இணைய குற்றங்கள் (Dinamalar- ஹன்ஸா, அட்வகேட்)
  • Page 1 of 1
  • 1
Search: