மூலிகை வனம் - வீட்டுக்கொரு வைத்தியர்... - Page 2 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
  • Page 2 of 2
  • «
  • 1
  • 2
Forum moderator: Laya, Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » ஆயுர் ஆரோக்கியம் » ஆரோக்கியம் » மூலிகை வனம் - வீட்டுக்கொரு வைத்தியர்... (நன்றி விகடன்)
மூலிகை வனம் - வீட்டுக்கொரு வைத்தியர்...
RAWALIKADate: Saturday, 11 Oct 2014, 7:34 PM | Message # 11
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
மூலிகை வனம் - வீட்டுக்கொரு வைத்தியர்...
 

நன்றி - விகடன்மாயம் செய்யும் கீழாநெல்லி... இது, மஞ்சள் காமாலைக்கு மட்டுமல்ல!
ரா.கு. கனல் அரசு படங்கள்: வீ. சக்தி அருணகிரி தீர்வு  

மனிதனுக்கு ஏற்படும் பிணிகளை நீக்கும் அருமருந்துகளான மூலிகைகள், இயற்கையின் ஏற்பாட்டில், தேவையுள்ள பகுதிகளில், தேவையான மூலிகை
என்கிற வகையில் தானாகவே விளைந்து கொண்டிருக்கின்றன. இதையெல்லாம் சரியாகக்
கண்டுபிடித்து உண்டு, தங்களுக்கு ஏற்படும் நோய்களைத் தீர்த்துக் கொள்ளும்
வித்தையை, ஒவ்வொரு உயிரினத்துக்கும் இயற்கையே கடத்தி வைத்திருக்கிறது.
ஆனால், வியாபார நோக்கோடு, இதையெல்லாம் திட்டமிட்டு மறக்கடித்து விட்டனர்...
கடந்த இருபது, முப்பது ஆண்டுகளில்..! அத்தகைய மூலிகைகளை மீண்டும் கையில்
எடுக்கவும்... அவை பற்றிய புரிதலை உண்டாக்கவுமே...'மூலிகை வனம்’ எனும்
இப்பகுதி இங்கே விரிகிறது.

பட்டிதொட்டி மட்டுமல்லாமல், சென்னை போன்ற பெருநகரங்களிலும் தெருக்களில், சாலையோரங்களில் எளிதாகக் கிடைக்கும்
மூலிகைகள் ஏராளம் உள்ளன. அவற்றில் முதன்மையானது கீழாநெல்லி. அம்மா
மதுக்கடையில் (டாஸ்மாக்) மதுபானம் அருந்தி, கல்லீரல் கெட்டுபோனால், அம்மா
மருந்தகங்களில் மானிய விலையில் மருந்துகள் கிடைக்கும். ஆனால், கல்லீரல்
பிரச்னைகளை எளிதாகத் தீர்க்கும் கீழாநெல்லி போன்ற மூலிகை மருந்துகள்...?
இவையெல்லாம் இலவசமாகவே கிடைக்குமாறு வீதியெங்கும் விளைய வைத்திருக்கிறது
இயற்கை.

கீழாநெல்லி என்றாலே மஞ்சள் காமாலையைக் குணப்படுத்தும் மூலிகை என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால், மஞ்சள்
காமாலையுடன் நின்று விடவில்லை இதன் சேவை. கிட்டத்தட்ட 2,000 ஆண்டுகளுக்கும்
மேலாக ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்பட்டு வரும் கீழாநெல்லியை இன்னமும்
ஆய்வு செய்துகொண்டே இருக்கிறார்கள் விஞ்ஞானிகள். பைல் நிரூலின், நார்
செக்குரினின், நிர் பைலின், தேலிக் அமிலம், எல்லாஜிக் அமிலம், ஹேலிக்
அமிலம் போன்ற 50-க்கும் மேற்பட்ட மூலக்கூறுகள் இதில் இருப்பதைப் பார்த்து
ஆச்சர்யத்தில் வாயடைத்துக் கிடக்கிறார்கள். சாதாரண களைச்செடியாக குப்பையில்
வளரும் ஒரு சின்னஞ்சிறிய செடிக்குள், இத்தனை மருத்துவ குணங்களா எனக்
கொண்டாடுகிறது உலகம். ஆனால், 'உள்ளூர் மாடு விலை போகாது’ என்பதுபோல
அருகிலிருக்கும் அற்புதத்தை நாம் அவ்வளவாகக் கண்டுகொள்வதே இல்லை.இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் வளரும் இதன் இலைகளின் அடிக்காம்பில் வரிசையாக காய்கள் காய்ப்பதால், கீழ்க்காய்நெல்லி என
அழைக்கப்பட்டது. பேச்சு வழக்கில் கீழாநெல்லி, கீழ்வாய் நெல்லி, கீட்கா
நெல்லி என அழைக்கப்படும் கீழாநெல்லியின் மருத்துவக் குணங்களைக் கேட்டால்
மலைத்துப் போவீர்கள்.

கீழா நெல்லிக் குணந்தான் கேளாய் மது மேகந்
தாழாக்கா மாலைகளைச் சண்ணுந்தாதேனழலுந்
தொக்கினனலுந் தொலைக்குந் தொன்மேகம் போக்கிவிடுத்
தக்கவிர ணங்கெடுக்குந் தான் - என்கிறது குணபாடம்.

கீழாநெல்லி, கண் சம்பந்தமான நோய்கள், சர்க்கரை வியாதி, நாள்பட்ட மேகப்புண் ஆகியவற்றைப் போக்கும் என்பதுதான் இப்பாடலின் சுருக்கமான
பொருள். கீழாநெல்லி இலையுடன் சிறிது மஞ்சளைச் சேர்த்து அரைத்து உடலில்
தேய்த்து, பதினைந்து நிமிடங்கள் ஊறவிட்டு, குளித்தால்... தோல் நோய்கள்
குணமாகும். கீழாநெல்லிச் செடியை நன்றாக அரைத்து சொறி, சிரங்கு, படைகளில்
பற்றுப்போட்டால் உடனே குணமாகும். கீழாநெல்லிச் செடியை நன்றாக மென்று
பல்துலக்கி வந்தால் பல்வலி குணமாகும். மேலும் செடியை நன்றாக மென்று
ஈறுகளில் சாறு நன்றாகப் படிய வைத்திருந்தால்... ஈறு நோய்கள் குணமாகும்.கீழாநெல்லி செடியுடன் கரிசலாங்கண்ணி இலையை சமஅளவு எடுத்து பால்விட்டு அரைத்து, நெல்லிக்காய் அளவு பாலுடன் காலை, மாலை இருவேளை
உட்கொண்டு வந்தால், ரத்தசோகை, ரத்தக்குறைவு நோய் நீங்கும். கல்லீரல்
தொடர்பான நோய்களும் குணமாகும். கல்லீரல் பிரச்னைக்கு லட்சங்களில் பணத்தைச்
செலவழித்து பெறும் வைத்தியத்தை, இலவசமாகவேத் தருகிறது கீழாநெல்லி.
இன்றைக்கு மனிதர்களுக்குள்ள மற்றொரு பெரிய நோயான நீரிழிவு நோய்க்கும்
தீர்வைச் சொல்கிறது இந்த சிறியச் செடி. இதை அரைத்து, பாலுடன் கலந்து
தொடர்ந்து உட்கொண்டு வந்தால், ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்.
இதுமட்டுமா குடல்புண், தொண்டை நோய்கள், வயிற்றுப் பிரச்னைகள், அதிக உஷ்ணம்,
கண்நோய்கள், மாதவிடாய்ப் பிரச்னைகள், பசியின்மை, தீராத அழுகிய புண்கள்,
வீக்கம் என எத்தனையோ பிரச்னைகளைத் தீர்த்து வைக்கிறது கீழாநெல்லி.கீழாநெல்லி பொடி, நெல்லிக்காய் பொடி, கரிசலாங்கண்ணி பொடி ஆகிய மூன்றையும் சமஅளவு எடுத்து. தேனில் குழைத்து உண்டு வந்தால்...
அடிக்கடி வரும் சளித்தொல்லை குறையும், ரத்த சோகை மாறும், உடலில் நோய்
எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
கீழாநெல்லி புற்றுநோய்க்கு எதிராகச் செயல்படுவதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மஞ்சள் காமாலை நோய்க்கு கீழாநெல்லியைவிட கைகண்ட
மருந்து இல்லை என்றே சொல்லலாம். இதை ஆங்கில மருத்துவர்களும்
ஒப்புக்கொள்கிறார்கள். நவீன மருத்துவ வசதிகள் இல்லாத அந்தக் காலத்திலேயே
கண்களில் உள்ள வெண்கரு, மஞ்சளாக மாறுவதை வைத்து மஞ்சள் காமாலையைக்
கண்டுபிடித்த முன்னோர்கள், கீழாநெல்லியையும் ஆட்டுப்பாலையும் மட்டுமே
கொண்டு, அந்தக் காலத்தில் உயிர்க்கொல்லி நோயான மஞ்சள் காமாலையில் இருந்து
காத்துக்கொண்டார்கள்.கீழாநெல்லிச் செடி, கரிசலாங்கண்ணி இலை, தும்பை இலை, சீரகம், பொன்னாங்கண்ணி ஆகியவற்றை சமஅளவு எடுத்து, காய்ச்சிய
பசும்பால்விட்டு அரைத்து, கோலிக்குண்டு அளவு காலை, மாலை இருவேளையும்
பாலுடன் குடிக்கக் கொடுத்தால் ஏழு நாட்களில் மஞ்சள் காமாலை குணமாகும்.
இரண்டு கீழாநெல்லிச் செடி, நான்கு ஏலக்காய் அரிசி, ஒரு காசு எடை
மஞ்சள்தூள், ஒரு சின்ன வெங்காயம் ஆகியவற்றை பால்விட்டு அரைத்து... காலை,
மாலை இருவேளையும் பாலுடன் குடிக்கக் கொடுத்தாலும் மஞ்சள் காமாலை குணமாகும்.
அதே நேரத்தில் கிராமப்புறங்களில் இன்றைக்கும் கீழாநெல்லிச் செடியுடன்,
வெள்ளாட்டு பால்விட்டு அரைத்து, காலையில் வெறும்வயிற்றில் நெல்லிக்காய்
அளவு, ஆட்டுப்பாலுடன் உட்கொண்டு, மஞ்சள் காமாலையில் இருந்து
குணமாகிறார்கள்.இந்த மூன்று முறைகளில் எந்த முறை உங்களுக்கு எளிதாக இருக்கிறதோ அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். கீழாநெல்லி பொடி, சூரணம் ஆகியவை
சித்தமருந்து கடைகளிலும், காதி கடைகளிலும் கிடைக் கின்றன.மனிதகுலம் நோயின்றி வாழ்வதற்காகவே நம் காலடியில் கிடக்கும் கீழாநெல்லிக்கு இனியாவது மரியாதை செய்வோம். அனைத்து வீடுகளிலும்
வளர்ப்போம்.
- வலம் வருவோம்...

பித்தப்பைக் கல்லைத் தடுக்கும்!



கீழாநெல்லியின் மருத்துவக் குணங்கள் பற்றிப் பேசும் தேனி மாவட்டம் உத்தமப்பாளையம்,
சித்தமருத்துவர் அமுதா, ''இதன் தாவரவியல் பெயர் 'ஃபிலாந்தஸ் அம்ரஸ்’ அல்லது
'நிரூரி’ (Phyllanthus amrus or Niruri). கீழா நெல்லியைப் பொறுத்தவரை
மஞ்சள் காமாலைக்கான மருந்துனுதான் பொதுவா நினைக்கிறாங்க. ஆனா, இது அருமையான
கிருமிநாசினி. இந்த இலைகளைக் காய வெச்சு தயாரிச்ச கஷாயத்தை புண்களை கழுவப்
பயன்படுத்தலாம். இது துவர்ப்பு சுவைகொண்ட மூலிகைங்கிறதால, பித்தப்பையில
கல் உற்பத்தி ஆகிறதைத் தடுக்கும். கல்லீரல் தொடர்பான பிரச்னைகளுக்கும்
கீழாநெல்லி நல்ல மருந்து'' என்கிறார்.
 
RAWALIKADate: Saturday, 11 Oct 2014, 7:37 PM | Message # 12
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
மூலிகை வனம் - வீட்டுக்கொரு வைத்தியர்...
துத்தி மூலத்துக்கு கத்தி..!


நன்றி - விகடன்

ரா.கு. கனல் அரசு படங்கள்: வீ. சக்தி அருணகிரி

மனிதனுக்கு ஏற்படும் பிணிகளை நீக்கும் அருமருந்துகளான மூலிகைகள், இயற்கையின்
ஏற்பாட்டில், தேவையுள்ள பகுதிகளில், தேவையான மூலிகை என்கிற வகையில் தானாகவே
விளைந்து கொண்டிருக்கின்றன. இதையெல்லாம் சரியாகக் கண்டுபிடித்து உண்டு,
தங்களுக்கு ஏற்படும் நோய்களைத் தீர்த்துக் கொள்ளும் வித்தையை, ஒவ்வொரு
உயிரினத்துக்கும் இயற்கையே கடத்தி வைத்திருக்கிறது. ஆனால், வியாபார
நோக்கோடு, இதையெல்லாம் திட்டமிட்டு மறக்கடித்து விட்டனர்...கடந்த இருபது,
முப்பது ஆண்டுகளில்! அத்தகைய மூலிகைகளை மீண்டும் கையில் எடுக்கவும்... அவை
பற்றிய புரிதலை உண்டாக்கவுமே...’மூலிகை வனம்' எனும் இப்பகுதி இங்கே
விரிகிறது.

மூலிகைகள் என்றாலே, கிடைப்பதற்கரிய ஒரு பொருள் என்கிற எண்ணம்தான் அநேகரிடம் இருக்கிறது. ஆனால், அது தவறான கருத்து. உண்மையில்,
நம் கண் முன்னால், கைக்கெட்டும் தூரத்தில், கடந்து போகும் பாதையில்
வீதியெங்கும் வியாபித்திருக்கின்றன, மூலிகைகள். அவற்றில், குறிப்பிடத்தக்க
மூலிகை, துத்தி. தமிழகத்தில் இது இல்லாத இடமே இல்லை. நிஜக்காடுகள்
இருக்கும் கிராமங்கள் தொடங்கி, கான்கிரீட் காடுகளாக மாறிவிட்ட சென்னை போன்ற
பெருநகரங்களிலும்கூட முளைத்துக் கிடக்கிறது துத்தி. இதன் மருத்துவப்
பலன்களைக் கேட்டால் மலைத்துப் போவீர்கள்.



இதய வடிவ இலைகள், மஞ்சள் நிறப் பூக்கள், தோடு வடிவ காய்கள் ஆகியவற்றைக் கொண்டது, துத்தி. இதன் இலைகளில் மென்மையான சுனை
இருக்கும். இது உடலில் பட்டால் அரிக்கும். இது விதை மூலம் இனப்பெருக்கம்
செய்யும் தாவரம். தெருவோரங்கள், தரிசு நிலங்கள், சுடுகாடுகள்... என அனைத்து
இடங்களிலும் பார்க்கலாம். கிலோ கணக்கான காய்கறிகள், இறைச்சிகளில் உள்ள
சத்துக்களை சில இலைகளில் அடக்கி வைத்திருக்கும் கீரைகள், இயற்கை மனித
இனத்துக்கு அளித்த மகத்தான கொடைகளில் ஒன்று. தினமும் உணவில் கீரைகளை
சேர்த்துக் கொள்பவர்களை அணுக அஞ்சுகின்றன, பிணிகள். அந்த வகையில்
துத்திக்கீரை அதிக மருத்துவ குணம் வாய்ந்தது. உடல் புண்களை ஆற்றி, மலத்தை
இளக்கி, உடலைத் தேற்றும் அதிசய மூலிகை, துத்தி.

'துத்தி மலரை நிதம் துய்க்கின்ற பேர்களுக்கு
மெத்த விந்து வும்பெருகும் மெய்குளிரும்சத்தியமே
வாயால் விழுமிரத்த மாறு மிருமலறுந்
தேயாமதி முகத்தாய் செப்பு’  என்கிறது குணபாடம்.
'துத்திப் பூவை தினமும் உட்கொண்டு வந்தால் ரத்தவாந்தி, காசநோய் நீங்கும். விந்து அதிகமாக உற்பத்தியாகும். உடல் குளிர்ச்சியடையும்’
என்பது இச்செய்யுளின் சுருக்கமான பொருள். பசும்பாலில் ஒரு கைப்பிடி
துத்திப் பூவைப் போட்டு வேகவைத்து குழையும் பதத்தில் கடைந்து... சிறிது
நாட்டுச் சர்க்கரை சேர்த்து உண்டு வந்தால், உடல் சூடு தணியும். விந்து
கட்டும். ரத்தக் காசம் குணமாகும். துத்திப் பூவுடன் சுவைக்காக துவரம்
பருப்பைச் சேர்த்து வேகவைத்தும் சாப்பிடலாம்.

துத்தி இருக்க, துன்பம் எதற்கு..?


அவசர யுகத்தில் உள்ளங்கைக்குள் உலகம் சுருங்கிய பிறகு... விஞ்ஞானத்தின் உதவியால், அலைச்சல் குறைந்து, அமர்ந்த இடத்திலேயே
அனைத்துப் பணிகளையும் செய்து கொள்கிறோம். 'நடக்க நடக்க நோய் தள்ளிப்
போகிறது’ என்பது மூத்தோர் மொழி. ஆனால், நடை குறைந்து, இருக்கையிலேயே அதிக
நேரம் இருப்பதால், முக்கால்வாசி பேருக்கு மூலநோய் பாதிப்பு ஏற்படுகிறது.
அப்படி மூலத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஆயிரக்கணக்கான
மருத்துவமனைகள் இருக்கின்றன. அனைத்துப் பேருந்து நிலையங்களிலும்
மூலத்துக்கு சிகிச்சையளிப்பதாகச் சொல்லும் மஞ்சள் நிற விளம்பரச்
சுவரொட்டிகளைப் பார்க்கலாம். இப்படிப்பட்ட மருத்துவமனைகளில் ஆயிரக்கணக்கில்
பணத்தை வாங்கிக்கொண்டு மூலத்துக்கு சிகிச்சை அளிக்கிறார்கள். இன்னும்
பெரிய மருத்துவமனைகளிலோ, 'அறுவை சிகிச்சை இல்லாமல், எண்டாஸ்கோபி மூலமாக
மூலத்தை குணமாக்குகிறோம்’ எனச் சொல்லி பல ஆயிரங்களைக் கறக்கிறார்கள்.
உண்மையில் மூலத்துக்கு அறுவை சிகிச்சையும் தேவையில்லை. எண்டாஸ்கோபியும்
தேவையில்லை. மூலத்தை அறுவை சிகிச்சை செய்ய, இயற்கை அனுப்பி வைத்துள்ள
மருத்துவன்தான் துத்தி. அதனால்தான் 'துத்தி, மூலத்துக்கு கத்தி’ எனச்
சொல்லி வைத்தனர், முன்னோர்.

மூலத்துக்கு முற்றுப்புள்ளி!

துத்தி இலையை சிறிது விளக்கெண்ணெய் விட்டு கை பொறுக்கும் சூட்டில் வதக்கி... வாழை இலையில் வைத்து, ஆசன வாயில் துணியைக்
கொண்டு கோவணம் போலக் கட்டிக்கொள்ள வேண்டும். இரவு படுக்கைக்குப் போகும்
முன்பாக இப்படி ஓரிரு நாட்கள் செய்து வந்தால், கடுப்பு நீங்கிவிடும்.
சிறிது சிறிதாக மூலமும் குணமாகிவிடும். சூட்டுக்கட்டிகளில் இதைக்
கட்டினால், கட்டிகள் உடையும். இதை செய்வது சிரமம் என நினைப்பவர்கள், இரண்டு
கை அளவுக்கு துத்தி இலைகளைப் பறித்து, தண்ணீரில் கழுவி, சிறிதாக நறுக்கி,
சிறிது மஞ்சள்தூள், 10 சின்ன வெங்காயத்தை அரிந்து போட்டு வதக்கி, சிறிது
மிளகுத்தூள், உப்பு சேர்த்துக்கொள்ள வேண்டும். தொடர்ந்து 10 நாட்களுக்கு இதை உண்டு வந்தால், மூலநோய் குணமாகும். இலையை பருப்புடன் சேர்த்து வேக வைத்து, சாதத்துடன் கலந்து உண்டால், மலம்
இலகுவாகப் போகும்.




உடல் வலி போகும்!

துத்தி இலையை நீரில் போட்டு வேகவைத்து, அந்த நீரில் துணியை முக்கி ஒத்தடம் கொடுத்தால், உடல் வலி நீங்கும். இந்த இலையை
வதக்கியோ, பொடி செய்தோ அடிக்கடி உண்டு வந்தால், வாயு தொடர்பான நோய்கள்
நீங்கும். துத்திப் பூவை உலர்த்தி பொடி செய்து அதனுடன் சமஅளவு சர்க்கரை
சேர்த்து, கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். இதில், ஒரு தேக்கரண்டி எடுத்து,
பசும்பாலில் கலந்து தினமும் குடித்து வந்தால், 'நுரையீரல் கபம், இருமல்,
இரைப்பு, காசநோய், ரத்த வாந்தி ஆகியவை குணமாகும்’ என்கிறது, சித்த
மருத்துவம்.

முறிந்த எலும்புகளை இணைக்கும் இலை!

துத்தி இலைகளை அரைத்து, முறிவு கண்ட இடத்தில் கனமாகப் பூசி, துணியைச் சுற்றி, மூங்கில் தப்பைகளை வைத்து கட்டினால், முறிந்த
எலும்புகள் கூடும். கால்நடைகள் கீழே விழுந்து, எலும்பு முறிவு
ஏற்பட்டாலும், இதே முறையைக் கையாளலாம். விதையை லேசாக வறுத்து பொடி செய்து,
கருப்பட்டி அல்லது நாட்டுச் சர்க்கரை கலந்து காலை, மாலை இருவேளைகளும்
உண்டால், சர்க்கரை நோய் காரணமாக ஆறாத புண்கள், அழுகியத் தோல்கள் குணமாகும்.
பெரு வியாதி என்று பயத்தோடு பார்க்கப்படும் குஷ்ட நோயும் குறையும்.விலையில்லாமல் வியாதிகளைக் குணமாக்கும் துத்தி, இனி, ஒவ்வொரு வீட்டிலும் வளரட்டும்!
 
RAWALIKADate: Saturday, 11 Oct 2014, 7:40 PM | Message # 13
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
மூலிகை வனம் - நோய்களை விரட்டும் நொச்சி! 


ரா.கு. கனல் அரசு படங்கள்: வீ. சக்தி அருணகிரி
வீட்டுக்கொரு வைத்தியர்...
 

பிணிகளை நீக்கும் அருமருந்துகளான மூலிகைகள், இயற்கையின் ஏற்பாட்டில், தேவையுள்ள பகுதிகளில், தேவையான மூலிகை என்கிற
வகையில், தானாகவே விளைந்து கொண்டிருக்கின்றன. இதையெல்லாம் சரியாகக்
கண்டுபிடித்து உண்டு, தங்களுக்கு ஏற்படும் நோய்களைத் தீர்த்துக் கொள்ளும்
வித்தையை, ஒவ்வொரு உயிரினத்துக்கும் இயற்கையே கடத்தி வைத்திருக்கிறது.
ஆனால், வியாபார நோக்கோடு, இதையெல்லாம் திட்டமிட்டு மறக்கடித்து விட்டனர்...
அத்தகைய மூலிகைகளை மீண்டும் கையில் எடுக்கவும்... அவை பற்றிய புரிதலை
உண்டாக்கவுமே... 'மூலிகை வனம்’ எனும் இப்பகுதி இங்கே விரிகிறது.

மருத்துவமனைகளே இல்லாத அந்தக் காலம் முதல், அதிநவீன மருத்துவ வசதிகள் கிடைக்கும் இந்தக் காலம் வரை... மனிதனின் பிணிகளைக்
களைவதில் முக்கிய இடம் வகிக்கும் மூலிகைகளில் ஒன்று நொச்சி. அனைத்துப்
பகுதிகளிலும் தானாகவே விளைந்து கிடக்கும் நொச்சி... காய்ச்சல், தலை வலி
உள்ளிட்ட பல நோய்களுக்கு மிகச்சிறந்த நிவாரணி.

நொச்சி, சிறு மரவகையைச் சேர்ந்தத் தாவரம். வறட்சியையும் தாங்கி வளரக்கூடியது. மூன்று முதல் 5 கூட்டு இலைகளைக் கொண்டது.
வெண்நொச்சி, கருநொச்சி, நீர்நொச்சி எனப் பல ரகங்கள் இருந்தாலும்
வெண்நொச்சிதான் பெரும்பாலான இடங்களில் வளர்கிறது. கருநொச்சி அதிக மருத்துவ
குணம் வாய்ந்தது. 'விடெக்ஸ் நெகுண்டோ’ (Vitex Negundo) என்ற தாவரவியல்
பெயர் கொண்ட நொச்சியின் இலை, பட்டை, வேர் என அனைத்தும் மருத்துவக் குணம்
வாய்ந்தவை. இவை, வயிற்றில் உள்ள புழுவை வெளியேற்றும், கோழையை அகற்றும்,
உடலைத் தேற்றும், வலிகளைப் போக்கும், வியர்வையை உண்டாக்கி, காய்ச்சலைக்
குணமாக்கும். இதனாலேய இதை 'தெய்வீக மூலிகை’ என கொண்டாடுகிறார்கள், சித்த
மருத்துவர்கள்.



கொசுவை ஒழிக்கும்!

உலகின் முதல் பூச்சிக்கொல்லி கண்டுபிடிக்கப்பட்டதே, கொசுக்களை ஒழிப்பதற்காகத்தான். ஆனால், கடந்த 70 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான
ஆராய்ச்சியாளர்கள், கோடிக்கணக்கான பணத்தைச் செலவழித்து, இரவு, பகலாக
உழைத்து புதுப்புது மருந்து களைக் கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
அத்தனைக்கும் 'அல்வா’ கொடுத்துவிட்டு முன்னைவிட வீரியமாக வலம் வருகின்றன,
கொசுக்கள். ஆனால், கொசுக்களை ஒழிப்பதற்கான தீர்வை தன்னுள் வைத்திருக்கும்
நொச்சியின் மீது இப்போதுதான் பலரின் கவனம் திரும்பியிருக்கிறது. நொச்சி
இலையின் புகைக்கு கொசுக்கள் வராது, தற்போது, 'கொசுக்களை விரட்டியடிக்க
நொச்சிச் செடிகளை வளருங்கள்' என்றபடி மாநகர மக்களுக்கு, சென்னை மாநகராட்சி
நொச்சிச் செடிகளை வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது!

போலியோ குணமாகும்!

'நொச்சி இலை ஒரு கைப்பிடி, மூக்கிரட்டை வேர் அரை கைப்பிடி, காக்கரட்டான் வேர் அரை கைப்பிடி ஆகியவற்றை ஒன்றாக இடித்து, ஒரு
லிட்டர் நீர்விட்டு, ஒரு சுக்கு, தலா ஒரு ஸ்பூன் மிளகு, சீரகம் ஆகியவற்றைப்
போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி, வடிகட்டி காலை, மாலை இரண்டுவேளை என ஒரு
வாரம் கொடுத்து வந்தால், ஆரம்ப நிலையில் உள்ள இளம்பிள்ளைவாதம் (போலியோ)
குணமாகும். ஆஸ்துமா, மூச்சுத்திணறலால் அவதிப்படுபவர்கள், இரண்டு நொச்சி
இலையுடன் நாலு மிளகு, ஒரு லவங்கம், 4 வெள்ளைப்பூண்டுப் பல் ஆகியவற்றை
வாயில் போட்டு மென்று விழுங்கினால், சரியாகும். இடுப்புவலி, மூட்டுவலி,
வீக்கம் போன்றவற்றுக்கு... ஒரு ஸ்பூன் நொச்சி இலைச் சாறுடன், ஒரு கிராம்
மிளகுத்தூள் இட்டு, சிறிது நெய் சேர்த்து காலை, மாலை இருவேளைகள் உண்டு,
வேலிப்பருத்தி இலையை வதக்கி ஒத்தடம் கொடுத்தால் குணமாகும்' என்கிறது, சித்த
மருத்துவம்.

கழுத்து வாதம் போக்கும்!

''தலைபாரம், தலையில் நீர்கோத்தல், சளி, காய்ச்சல் போன்ற நோய்களுக்கு, நொச்சி இலையில் ஆவி பிடிக்கும் பழக்கம் இன்றைக்கும்
கிராமங்களில் நடைமுறையில் இருக்கிறது. நொச்சி இலையை பானையில் நன்றாக
வேகவிட்டு இறக்கி, அந்த பானையில் சூடான செங்கல் துண்டுகள் அல்லது
வெங்கிச்சான் கல்லைப் போட்டு, உடல் முழுவதும் கனமான போர்வையால் மூடி, ஆவி
பிடித்தால், இரண்டு நிமிடங்களில் உடலில் உள்ள துர்நீர் அனைத்தும் வியர்வை
யாக வெளியேறும். நொச்சி இலையைப் பறித்து, பருத்தித் துணியில் கட்டி தலையணை
யாகப் பயன்படுத்தினால் மண்டையிடி, கழுத்து வீக்கம், கழுத்து வாதம், ஜன்னி,
நரம்பு வலி, மூக்கடைப்பு குணமாகும். உடலில் தோன்றும் கட்டிகள் மீது நொச்சி
இலைச் சாறை பற்று போட்டால், கட்டிகள் கரைந்துவிடும். நொச்சி இலைகளை அரைத்து
மூட்டுவீக்கத்தின் மீது கட்டினால் வீக்கம் குறையும்'' என்கிறார்கள், சித்த
மருத்துவர்கள்.
தானியங்களைப் பாதுகாக்கும்!

நொச்சி வேரை தண்ணீரில் இட்டு காய்ச்சி, காலையில் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி குடித்து வந்தால், வயிற்றில் உள்ள புழுக்கள்
வெளியேறும். வேர் பட்டையைக் காய வைத்து இடித்துப் பொடியாக்கி... ஒரு
சிட்டிகைப் பொடியை தேனில் குழைத்து, வாரம் இரு முறை காலையில் உட்கொண்டால்,
நரம்பு வலி, வாதப்பிடிப்பு குணமாகும். தானியங்களைச் சேமித்து வைக்கும்
பாத்திரங் களில் நொச்சி இலையைப் போட்டு வைத்தால் பூச்சிகள் வராது. அனைத்து
வீடுகளிலும் இருக்க வேண்டிய அற்புத மூலிகையான நொச்சியை, நெஞ்சில்
இருத்துவோம்.
 
RAWALIKADate: Saturday, 11 Oct 2014, 7:44 PM | Message # 14
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
மூலிகை வனம் - நோய்களை எட்ட விரட்டும் எருக்கு..! 


ரா.கு. கனல் அரசு படங்கள்: வீ. சக்தி அருணகிரி தீர்வு

மனிதனுக்கு ஏற்படும் பிணிகளை நீக்கும் அருமருந்துகளான மூலிகைகள், இயற்கையின் ஏற்பாட்டில், தேவையுள்ள பகுதிகளில், தேவையான மூலிகை
என்கிற வகையில் தானாகவே விளைந்து கொண்டிருக்கின்றன. இதையெல்லாம் சரியாகக்
கண்டுபிடித்து உண்டு, தங்களுக்கு ஏற்படும் நோய்களைத் தீர்த்துக் கொள்ளும்
வித்தையை, ஒவ்வொரு உயிரினத்துக்கும் இயற்கையே கடத்தி வைத்திருக்கிறது.
ஆனால், வியாபார நோக்கோடு, இதையெல் லாம் திட்டமிட்டு மறக்கடித்து
விட்டனர்... கடந்த இருபது, முப்பது ஆண்டுகளில்! அத்தகைய மூலிகைகளை மீண்டும்
கையில் எடுக்கவும்... அவை பற்றிய புரிதலை உண்டாக்கவுமே...’ மூலிகை வனம்’
எனும் இப்பகுதி இங்கே விரிகிறது.

12 ஆண்டுகள் நீரில்லாமல் வாழும்!

'தெய்வீக மூலிகை’ எனப் போற்றப்படும் எருக்கு, வளமற்ற நிலங்கள், பராமரிக்கப்படாத வயல்கள், சாலையோரங்கள், சுடுகாடு... என எங்கும்
விளையும். பன்னிரண்டு ஆண்டுகள் வரை மழையே இல்லாவிட்டாலும்கூட உயிர்வாழும்
ஆற்றல் கொண்டது. அகன்ற எதிரடுக்கில் அமைந்த இலைகளைக் கொண்ட, நேராக வளரும்
பாலுள்ள குத்துச்செடி. ஒழுங்கற்ற அரைக்கோள வடிவில் உள்ள இதன் காய்க்குள்
உள்ள பஞ்சில் விதைகள் இருக்கும். முற்றிய காய்கள் வெடித்து காற்றில்
பறக்கும்போது, பஞ்சுகள் ஆங்காங்கு விழுந்து மட்கி... அதனுள் உள்ள விதைகள்
மண்ணில் பதிந்து முளைத்து செடியாகும். மனிதர்கள், பறவைகள், விலங்குகள் என
யாருடைய தயவும் இல்லாமல் தன் இனத்தை தானே உற்பத்தி செய்து கொள்கிறது,
எருக்கு.



இத்தனை சிறப்பு வாய்ந்த எருக்கை நாம் கொண்டாட தவறிவிட்டோம். விநாயகர் சதுர்த்தி தினத்தைத் தவிர, மற்ற நாட்களில்
எருக்கின் அருகேகூட செல்லத் தயங்குகிறோம். உண்மையில் நம்முடைய பலவிதமான
நோய்களுக்கான தீர்வை தன்னுள் வைத்துக் கொண்டிருக்கும் இந்த எளிய செடியின்
மருத்துவ குணங்களைத் தெரிந்துக் கொண்டால், ஆச்சரியத்தில் விழிகளை
விரிப்பீர்கள்.

''எருக்கம்பால் கட்டிகளையே கரைக்கும்
வாயுவைத் திறக்கறவே கொன்றுவிடும் தீர  செருக்கான
சந்நிவலி தீர்க்கும் சார்ந்த பல செந்தூரம்
உண்ணமுடியுமென ஓது''
என்கிறது, சித்தர்பாடல்.

ஆதிமனிதனின் கயிறு!



எருக்கின் இலை, பூ, பட்டை, வேர் என அனைத்திலும் மருத்துவக் குணங்கள் கொட்டிக்
கிடக்கின்றன. ஆடு, மாடு மேய்ப்பவர்கள் காலில் முள் தைத்தால், எருக்கு இலையை
உடைத்து அதன் பாலை முள் தைத்த இடத்தில் பூசிக்கொள்வார்கள். இதனால் வலி
குறைவதுடன், அந்த இடம் பழுத்து, முள் வெளியே வந்துவிடும். இதை இன்றைக்கும்
கிராமங்களில் பார்க்கலாம். அதனால்தான் 'ஏழைக்கு வைத்தியம் எருக்கு’ என்று
சொல்லி வைத்திருக்கிறார்கள். தென்னைநார்க் கயிறு, ட்வைய்ன் நூல், நைலான்
கயிறு, இரும்பு ரோப் என கயிறுகளின் பல பரிமாணங்களை இன்றைக்குப்
பயன்படுத்துகிறோம். ஆனால், ஆதிமனிதனுக்கு கயிறாகப் பயன்பட்டவை, எருக்கு
நார்களும், சில கொடி வகைகளும்தான். எருக்கு நார் மிகவும் வலுவானது.
வில்லின் நாண், மீன் வலை, முருக்கு நூல் என எருக்கு நாரை பலவிதமாகப்
பயன்படுத்தியிருக்கிறார்கள், பண்டைத் தமிழர்கள். இலவம்பஞ்சு தலையணை
கிடைக்காதவர்களுக்கு, எருக்குக் காயிலுள்ள பஞ்சுதான் தலையணையாக
இருந்திருக்கிறது.

விஷக்கடிக்கு மருந்து!

இதன் இலை, விஷமுறிவுக்குப் பயன்படுகிறது. பாம்பு கடித்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சையாக எருக்கு இலையை அரைத்து... புன்னைக்
காய் அளவு (கோலிகுண்டு அளவு) உள்ளுக்குக் கொடுத்தால், விஷம் இறங்கும்.
அடுத்து, மருத்துவரிடம் கொண்டு செல்லலாம். தேள் கடித்தால், இதே இலையை
அரைத்து சுண்டைக்காய் அளவு கொடுத்து, கடிவாயிலும் வைத்து கட்டினால் விஷம்
இறங்கும். மூன்று துளி எருக்கன் இலைச் சாறு, பத்து துளி தேன் கலந்து
கொடுத்தால், வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியே வந்துவிடும். குதிகால் வலி
இருந்தால், சூடான செங்கல் மீது, பழுத்த எருக்கு இலையை வைத்து அதன்மீது
குதிகாலை வைத்து வைத்து எடுத்தால், வலி குறையும். எருக்கு இலையை நெருப்பில்
வாட்டி பொறுக்கும் சூட்டில், உடம்பில் உள்ள கட்டிகள் மீது வைத்து
கட்டினால், கட்டிகள் உடையும். இலையை எரித்து, புகையை வாய்வழியாக
சுவாசித்தால், மார்பு சளி வெளியேறும்.

ஆஸ்துமாவை விரட்டும் வெள்ளெருக்கு!

எருக்கன் பூவைக் காய வைத்துப் பொடியாக்கிக் கொள்ள வேண்டும். இந்தப் பொடியில் 200 கிராம் எடுத்து, சிறிது சர்க்கரை சேர்த்து
இரண்டு வேளை சாப் பிட்டு வந்தால், பால்வினை நோய், தொழு நோய் குணமாகும்.
வேரை கரியாக்கி, விளக்கெண்ணெய் கலந்து மேற்பூச்சாகப் பயன்படுத்தினால்
கரப்பான், பால்வினை நோய்ப் புண்கள், ஆறாத காயங்கள் ஆறும். இதன் பால்...
பொடுகு, படை, மூட்டுவலி, மூட்டுவீக்கம், மூலநோய்க்கு சிறந்த நிவாரணி
என்கிறது சித்த மருத்துவம்.



கத்திரிப்பூ நிறப் பூக்களைக் கொண்ட எருக்குதான் பெரும்பாலான இடங்களில் இருக்கும். ஆனால், வெள்ளை நிறப் பூக்களை உடைய
எருக்கு அரிதாக காணப்படும். இதை வெள்ளெருக்கு என்பார்கள். இதுதான்
பிள்ளையாருக்கு உகந்ததாக கருதப்படுகிறது. இந்த எருக்கின் வேர்களில்
பிள்ளையார் உருவங்களைச் செதுக்கி வழிபடுவார்கள். இந்த வெள்ளை எருக்கின்
பூக்கள் ஆஸ்துமாவை விரட்டும் அருமருந்து. வெள்ளெருக்குப் பூக்களின்
நடுநரம்பை நீக்கிவிட்டு, இதழ்களை மட்டும் எடுத்துக் கொள்ளவேண்டும். இதற்கு
சம அளவு மிளகு, கிராம்பு சேர்த்து மை போல அரைத்து, மிளகு அளவுக்கான
மாத்திரைகளாக உருட்டி, நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டும். மூச்சிரைப்பு
அதிகமாகும்போது, இதில் ஒரு உருண்டையை வாயில் போட்டு நீர் அருந்தினால், உடனே
இரைப்பு தணியும்.

'10கிராம் இஞ்சி,  வெள்ளெருக்குப் பூக்கள், 6 மிளகு ஆகியவற்றை நசுக்கி, அரை லிட்டர் தண்ணீரில் போட்டு, கால் லிட்டராகும் வரை சுண்டக் காய்ச்சி
தினமும் இரண்டுவேளை குடித்து வந்தால், இரைப்பு குறையும்’ என்கிறார்கள்,
சித்த மருத்துவர்கள்.
 

- வலம் வருவோம்...
 
P_SakthiDate: Tuesday, 14 Oct 2014, 4:21 PM | Message # 15
Major general
Group: *Checked*
Messages: 374
Status: Offline
Viji,
 
Manythanks for the very useful info.
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » ஆயுர் ஆரோக்கியம் » ஆரோக்கியம் » மூலிகை வனம் - வீட்டுக்கொரு வைத்தியர்... (நன்றி விகடன்)
  • Page 2 of 2
  • «
  • 1
  • 2
Search: