செவிப் பிரச்னைக்கு செவி சாய்ப்போம்! - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
  • Page 1 of 1
  • 1
Forum moderator: Laya, Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » ஆயுர் ஆரோக்கியம் » ஆரோக்கியம் » செவிப் பிரச்னைக்கு செவி சாய்ப்போம்! (நன்றி- டாக்டர் விகடன்)
செவிப் பிரச்னைக்கு செவி சாய்ப்போம்!
RAWALIKADate: Monday, 22 Sep 2014, 8:49 PM | Message # 1
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
செவிப் பிரச்னைக்கு செவி சாய்ப்போம்!


நன்றி- டாக்டர் விகடன்

டாக்டர்.ரவி ராமலிங்கம்

ஒலி மாசு, அதீத இரைச்சல் ஒருபக்கம் இருக்க, பஞ்சால் காதுகுடைவது, எப்போதும்
ஹெட்போன் மாட்டிகொண்டு பாட்டு கேட்பது போன்ற செயல்களால் நம் கேட்கும் திறனை
நாமே கெடுத்துக் கொள்கிறோம். காது கேட்கும் திறனில் ஏன் குறைபாடுகள் ஏற்படுகின்றன, அதற்கான தீர்வுகள் என்ன?


ஐம்புலன்களில் வித்தியாசமானது காது. தூங்கச் செல்லும் போது ஐம்புலன்கள் ஒவ்வொன்றாக ஓய்வுபெறும். அதில், கடைசியாக ஓய்வுக்குச்
சென்று, முதலில் விழிப்பு அடைவது காதுதான். இப்படி, பின் தூங்கி முன் எழும்
உறுப்பான காதைக் கவனமாகப் பாதுகாக்க வேண்டும். காது குடைவது, அதிக
சத்தத்தை உள்வாங்குவது இவை இரண்டுமே காதில் ஏற்படும் பிரச்னைகளுக்கு மிக
முக்கியமான காரணிகள்.காதுக்குள் இருக்கும் சவ்வு அடர்த்தி குறைவாகவும், மென்மையானதாகவும் இருக்கும். காதில் மஞ்சள் நிறத்தில் சுரக்கும் மெழுகு
போன்ற திரவம்தான் காது சவ்வுகளைப் பாதுகாக்கும் அரண். காதைக் குடையும்போது
இந்தத் திரவம் வெளியே வந்துவிடும். இதை அழுக்கு என நினைத்து, மேலும்
குடையும்போது அந்த திரவம்  கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறுகிறது. காது மடல்களில்
அழுக்கு சேரவிடாமல் இருக்க, தினமும் குளித்ததும், தூய்மையான உலர் துண்டால்
ஒற்றி எடுத்தாலே போதும். இதை விட்டுவிட்டு, காது குடைகிறேன் என்று சுத்தப்
பேர்வழிகள் காதையே கெடுத்துவிடுவார்கள்.காதின் உட்புறம் உள்ள தோல் உரிவது சகஜமானது தான். ஆனால் காது குடையும்போது காது ஜவ்வில் இந்தத் துகள்கள் சென்று ஒட்டிக்கொண்டு
காதில் அரிப்பை ஏற்படுத்தும். அரிப்பு ஏற்படுவதால் குடைகிறோமா அல்லது காது
குடைவதால் அரிப்பு ஏற்படுகிறதா எனத் தெரியாமல் ஒரு கட்டத்தில் செவித்திறன்
குறைந்துபோகிறது.



காதில் அரிப்பு ஏற்படும் போது, காதைக் குடையாமல் இருந்தாலே போதும்.
பொறுத்துக்கொள்ள முடியாத அளவுக்கு அரிப்பு ஏற்பட்டால், மருத்துவமனையை அணுக
வேண்டியதுதான். பொதுவாக மனிதன் 120 டெசிபில் (DB) அளவைத் தாண்டி சத்தத்தை
உள்வாங்கும் போது, கேட்கும் திறன் மெள்ள மெள்ளக் குறையும். 20 ஹெர்ட்ஸ்
முதல் 20,000 ஹெர்ட்ஸ் அதிர்வெண் களைத்தான் நம்மால் கேட்க முடியும். இந்த
அளவை த் தாண்டும்போது, காதில் உள்ள மென்மையான ஜவ்வு கிழிந்துவிடும்.  
வாகன இரைச்சல், தியேட்டர் சத்தம், வெடிச் சத்தம், கூச்சல் போன்றவை காது கேட்கும் திறனைப் பாதிக்கும் புறக்காரணிகள்.  

ஹெட்போன் மூலமாக பாட்டு கேட்கும்போது, சத்தம் எந்த அளவில் கேட்க வேண்டும் என்பதற்கு வரைமுறை இருக்கிறது. நீங்கள் ஹெட்போன்
மாட்டியிருக்கும்போது வெளியே யாராவது பேசினாலும், அது உங்கள் காதில்
விழவேண்டும். இல்லையெனில் நீங்கள் உங்கள் காது கேட்கும் திறனை
இழக்கப்போகீறீர்கள் என்பது நிதர்சனம்.



ரயில், பேருந்து போன்றவற்றில் செல்லும்போது வெளியே இருக்கும் இரைச்சல் காரணமாக ஒலியின் அளவைக் கூட்டிவைத்துக் கேட்பதும்,
ஹெட்போனில் இசையைக் கேட்டுக்கொண்டே  தூங்குவதும் விரைவில் காதுகேட்கும்
திறனை மங்கச்செய்யும்.அதிபட்ச இரைச்சலைக் கேட்கும்போது காதில் உள்ள
நரம்புகள் செயலிழக்கும். முதலில் இடது காதில் பிரச்னை வரும். பிறகு இரண்டு
காதுகளும் கேட்கும் திறனை இழந்துவிடும். ஒரு முறை காது கேட்கும் திறனை
இழந்துவிட்டால், அறுவைசிகிச்சை மூலமாகக்கூட பழைய நிலைக்குக் கொண்டுவருவது
கடினமே. காது கேட்கும் கருவி ஒன்றைத் தவிர வேறு வழி இல்லை. எனவே, இசையை
ரசிக்கிறேன் என்று சத்தமாக வைத்து கேட்டு இருக்கும் செவித்திறனை
இழந்துவிடாதீர்கள்!

காதில் விழுந்துச்சா?

பு.விவேக் ஆனந்த்
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » ஆயுர் ஆரோக்கியம் » ஆரோக்கியம் » செவிப் பிரச்னைக்கு செவி சாய்ப்போம்! (நன்றி- டாக்டர் விகடன்)
  • Page 1 of 1
  • 1
Search: