கணைய அழற்சி - அறிகுறிகளை அறிவோம்! - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
  • Page 1 of 1
  • 1
Forum moderator: Laya, Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » ஆயுர் ஆரோக்கியம் » ஆரோக்கியம் » கணைய அழற்சி - அறிகுறிகளை அறிவோம்! (நன்றி - டாக்டர் விகடன்)
கணைய அழற்சி - அறிகுறிகளை அறிவோம்!
RAWALIKADate: Thursday, 16 Oct 2014, 9:48 AM | Message # 1
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
கணைய அழற்சி - அறிகுறிகளை அறிவோம்!

நன்றி - விகடன்

பா.பிரவீன் குமார்


கணையம் என்ற பெயரைக் கேட்டாலே, ''கணையமா... அது எங்கே இருக்கு?'' என்றுதான்
யோசிப்போம். செரிமான மண்டலத்தின் மிக முக்கியமான உறுப்பு கணையம். இது
பாதிக்கப்பட்ட பின்னரே, பலரும் இதன் அபாயத்தை உணர்கிறோம்.

உணவு செரிமான மண்டலத்தில், இரைப்பைக்குக் கீழே அமைந்திருக்கும் வால் போன்ற ஓர் உறுப்பு, கணையம். இதில்தான் உணவு
செரிமானத்துக்குத் தேவையான  என்சைம்கள் இன்சுலின் ஆகியவை  சுரக்கின்றன.  செரிமானத்தின்போது, கணையத்தில் இருந்து சுரக்கப்படும்
என்சைம், கணைய நாளம் வழியாக முன் சிறுகுடலில் போய் கலக்கிறது. இந்த என்சைம்
அங்கே செரிவுற்றதாக மாறி உணவுப் பொருள் செரிக்க உதவுகிறது. நோய்த்தொற்று
உள்ளிட்ட காரணங்களால் கணையம் வீக்கம் அடைவதையே கணைய அழற்சி என்கிறோம்.

கணைய அழற்சியின்போது, இந்த என்சைம், கணையத்தில் தேங்கி இருக்கும்போது, செரிவுற்றதாக மாறுவதால், கணைய செல்கள் அரிக்கப்படுகின்றன.
கணையத்தில் ஏற்படக்கூடிய பாதிப்பை, உடனடி பாதிப்பு, நீண்ட நாள் பாதிப்பு
என்று பிரிக்கலாம். சாதாரண பாதிப்பு என்றால் மருந்து மாத்திரைகள் மூலம்
சரிப்படுத்திவிடலாம். மிகமோசமான நிலையில் இருந்தால், அது உயிருக்கே ஆபத்தை
ஏற்படுத்திவிடக்கூடும்.


உடனடி பாதிப்புக்கான அறிகுறிகள்

  மார்புக்குக் கீழ், வயிற்றின் மேல் பகுதியில் வலி ஏற்பட்டு முதுகு வரை பரவுதல்

  சாப்பிட்ட பிறகு மேல் வயிற்று வலி அதிகரிப்பு
  காய்ச்சல்
  குமட்டல், வாந்தி

  வயிற்றைத் தொட்டால் கடுமையாக வலிக்கும்
  படுத்தால் வயிற்று வலி அதிகரிக்கும். முன்பக்கம் சாய்ந்தால் வலி குறையும்.


அழற்சிக்கான காரணங்கள்

  மது, சிகரெட், போதைப் பொருள் உபயோகிப்பது
  கிருமித் தொற்று
  பித்தப்பை கல்
  விபத்தினால் வயிற்றில் காயம் ஏற்படுவது
  சில வகை மருந்துகள் தரும் பக்க விளைவு


  கணையத்தில் நீர்க்கட்டி
  மரபியல்
  விஷக் கடி

  ரத்தத்தில் டிரைகிளசரைட் அளவு அதிகரிப்பு
  கணையப் புற்றுநோய்




அழற்சி தீவிரமடைவதன் அறிகுறிகள்

  கடுமையான மேல் வயிற்று வலி
  உடல் எடையைக் குறைக்க முயற்சிக் காமலே எடைகுறைதல்
  எண்ணெய்  பசையுடனும் நாற்றத்துடனும் மலம் வெளியேறுதல்

டாக்டரை எப்போது பார்க்க வேண்டும்?


மேல் வயிற்றில் வலி வந்தால், உடனடியாக டாக்டரை அணுகி ஆலோசனை பெறுங்கள். வலி தீவிரம் ஆகும் வரை காத்திருக்க வேண்டாம்.


Message edited by RAWALIKA - Thursday, 16 Oct 2014, 9:51 AM
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » ஆயுர் ஆரோக்கியம் » ஆரோக்கியம் » கணைய அழற்சி - அறிகுறிகளை அறிவோம்! (நன்றி - டாக்டர் விகடன்)
  • Page 1 of 1
  • 1
Search: