குழந்தை ஆரோக்கிய டிப்ஸ்! - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
  • Page 1 of 1
  • 1
Forum moderator: Laya, Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » ஆயுர் ஆரோக்கியம் » ஆரோக்கியம் » குழந்தை ஆரோக்கிய டிப்ஸ்!
குழந்தை ஆரோக்கிய டிப்ஸ்!
RAWALIKADate: Tuesday, 18 Nov 2014, 2:38 PM | Message # 1
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
குழந்தை ஆரோக்கிய டிப்ஸ்!

நன்றி அவள் விகடன்


கு
ழந்தைகளுக்கு வாய்ப்புண் வந்தால் மாசிக்காயை அரைத்து, தாய்ப்பால் அல்லது தண்ணீர் சேர்த்துப் பூசி வந்தால் குணமாகும்.

குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்பட்டால், காய்ந்த  திராட்சைப் பழத்தை பசும்பால் அல்லது தண்ணீரில் ஊறவையுங்கள். அரை மணி நேரத்துக்குப் பிறகு பழத்தைப் பிழிந்து அதன் சாற்றை மட்டும் குடிக்க கொடுத்தால், மலம் தாராளமாக போக ஆரம்பிக்கும்.

குழந்தைகள் சிலநேரம் உணவு ஜீரணமாகாமல் அவதிப்படுவார்கள். அப்படிப்பட்ட நேரங்களில், நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் சதக்குப்பையை தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி, சர்க்கரை சேர்த்துக் கொடுத்தால் பிரச்னை சரியாகும்.



சிறுநீர் கழிக்க குழந்தைகள் சிரமப்பட்டால்... வெள்ளரி விதைகளை நீர் விட்டு அரைத்து அடிவயிற்றில் பற்று போட்டால் அடுத்த சில நிமிடங்களில் சிரமமின்றி சிறுநீர் கழியும். மேலும் சுடுநீரை பாட்டிலில் நிரப்பி வயிற்றில் ஒத்தடம் கொடுத்தாலும் பலன் கிடைக்கும்.



குழந்தைகள் சிலநேரங்களில் காரணமில்லாமல் அழும். அது வயிற்று வலியாகவும் இருக்க வாய்ப்புள்ளது. அந்த மாதிரி நேரங்களில் நாலைந்து புதினா இலைகளை எடுத்து வாணலியில் வெறுமனே (எண்ணெய் ஊற்றாமல்) வதக்கி, அதில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவைத்து, பாதியாக வற்றியதும் ஒரு பாலாடை அளவு குடிக்க கொடுத்தால் வயிறுவலியாக இருக்கும்பட்சத்தில் அது சரியாகிவிடும். வயிற்றுவலி
மட்டுமல்ல... விடாமல் தொடர்ந்து மலம் போனாலும் இதே வைத்தியம் பலன் தரும். இதை குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் (அளவைக்கூட்டி) பின்பற்றலாம்.



ழைக்காலத்தில், குழந்தைகளுக்கு ஜலதோஷம், சளி பிரச்னைகள் வந்து அடிக்கடி தொல்லை கொடுக்கும். மூக்கடைப்பு, ஜலதோஷம், சளி வந்தால்... நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கக்கூடிய ஜாதிக்காயை நீர் விட்டு அரைத்து கரண்டியில் வைத்து சூடுபடுத்த வேண்டும். பிறகு இளம்சூட்டோடு மூக்கின்மேல் பற்று போட்டால் மூக்கு வடிதல் நிற்பதோடு அடைப்பு விலகும். தூதுவேளை இலை 3, சின்ன வெங்காயம் குருத்து ஒன்று, சிறிதளவு கல் உப்பு சேர்த்து நசுக்கி, அதன் சாற்றை குடிக்க கொடுத்தால் சளி விலகும்.



Message edited by RAWALIKA - Tuesday, 18 Nov 2014, 2:40 PM
 
NathasaaDate: Saturday, 22 Nov 2014, 9:56 AM | Message # 2
Major general
Group: *Checked*
Messages: 360
Status: Offline
Indeed !!!
thnx
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » ஆயுர் ஆரோக்கியம் » ஆரோக்கியம் » குழந்தை ஆரோக்கிய டிப்ஸ்!
  • Page 1 of 1
  • 1
Search: