ஆன்மீகம் செய்திகள்
|
|
tulips | Date: Thursday, 01 May 2014, 8:27 PM | Message # 1 |
Lieutenant colonel
Group: *Checked*
Messages: 116
Status: Offline
| அனுபவமே உயர்ந்தது-புத்தர் பார்வையற்ற இளைஞன் ஒருவனை சிலர் புத்தரிடம் அழைத்து வந்தனர். அவர்கள் “இந்த இளைஞன் வெளிச்சத்தை பற்றி எவ்வளவு சொன்னாலும் நம்ப மறுக்கிறான்” என்று கூறினர். அப்போது பார்வையற்ற இளைஞன் “வெளிச்சத்தை நான் தொட்டு பார்க்க வேண்டும். சுவைத்து பார்க்க வேண்டும். அதன் வாசனையையோ அல்லது ஓசையையோ நான் உணர வேண்டும். இவை எதுவும் இல்லாத வெளிச்சம் என்ற ஒன்று இருப்பதை நான் எப்படி ஒப்புக் கொள்ள முடியும்?” என்றான்.அவனுடன் வந்தவர்கள் புத்தரிடம், “நீங்கள் தான் வெளிச்சம் உண்டு என்பதை அவன் நம்பும்படி செய்ய வேண்டும்” என்று கூறினர். அதற்கு புத்தர், “அவன் உணர முடியாத ஒன்றை அவனை நம்ப வைக்கும் செயலை நான் செய்ய மாட்டேன். இப்போது அவனுக்கு தேவை பார்வை. வெளிச்சம் பற்றிய விளக்கமல்ல. அவனுக்கு பார்வை வந்து விட்டால், விளக்கம் தேவைபடாது. அவனைத் தகுந்த மருத்துவரிடம் அழைத்துச் சென்று பார்வை கிடைக்கச் செய்யுங்கள்” என்று கூறி அனுப்பினார்.புத்தர் கூறியதை ஏற்று பார்வையற்ற இளைஞனை மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். சிகிச்சை முலம் அவனுக்கு பார்வையும் கிடைத்தது. உடனே அந்த இளைஞன் புத்தரிடம் ஓடி வந்து, “வெளிச்சம் இருக்கிறது” என்று கூறினான். உடனே, புத்தர், “வெளிச்சம் இருக்கிறது என்று அவர்கள் கூறிய போது ஏன் நம்ப மறுத்து விட்டாய்?” என்று கேட்டார்.அதற்கு அந்த இளைஞன், “கண் தெரியாத என்னால், எவ்வாறு வெளிச்சத்தை உணர முடியும்? அவர்கள் சொன்னதை அப்படியே நான் ஏற்றுக் கொண்டிருந்தால், இன்னும் நான் கண் தெரியாதவனாகவே இருந்திருப்பேன்” என்றான்.அனுபவத்தால் உணர வேண்டிய ஒன்றை ஆயிரம் தத்துவ ஞானிகளாலும் உணரவைக்க முடியாது என்பதை புத்தர் இந்த நிகழ்ச்சியின் முலம் சீடர்களுக்கு புரிய வைத்தார்.
|
|
| |
tulips | Date: Thursday, 01 May 2014, 8:29 PM | Message # 2 |
Lieutenant colonel
Group: *Checked*
Messages: 116
Status: Offline
| முள்ளும் குறடும்! இதிகாசம் மற்றும் புராணங்களில், தெய்வமே மனிதர்களுக்கு உதவி செய்து, துயரத்தில் இருந்து காப்பாற்றியதாக படித்திருப்போம் அல்லது கேட்டிருப்போம். ‘அதெல்லாம் அந்தக் காலம்; இப்ப அதெல்லாம் நடக்காது; இது கலிகாலம்’ என்ற எதிர்மறையான புலம்பலும் உண்டு. தெய்வத்திற்கு, காலக் கணக்கோ எல்லையோ கிடையாது. தெய்வம் என்றும் நின்று அருள் புரியும். கலியுகத்தில், அதுவும், இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மகான் ஒருவருக்காக, முருகப் பெருமான் நடத்திய அருளாடல் இது. இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் பாம்பன் ஸ்வாமிகள். இவர், கனவிலும், நனவிலும் முருகனைத் தரிசித்தவர். ஒரு நாள் அவர், தென்னந்தோப்பிற்குள் நடந்து கொண்டிருந்தார். கடும் வெயில், தலைக்கு மேலே சூரியன் சுட்டது. தரையோ, கீழிருந்து கால்களைத் தாக்கியது. கடும் வெயிலில் நடந்து கொண்டிருந்த பாம்பன் சுவாமிகளின் காலில், முள் தைத்து விட்டது. சுவாமிகள் அப்படியே தரையில் உட்கார்ந்து விட்டார். உடனே, தரையில் இருந்த கொதிப்பும் அவரைத் துன்புறுத்தியது. முள் குத்திய காலைத் தூக்கி, தொடையின் மீது மல்லாத்தி வைத்து, முள்ளைப் பிடுங்க முயற்சித்தார். ஆழமாகவும், முழுமையாகவும் பதிந்திருந்த முள்ளை, பிடுங்க முடியவில்லை. கையால் அசைக்க அசைக்க, ரத்தம் வந்து, வலி தான் அதிகமாயிற்றே தவிர, முள்ளை எடுக்க முடியவில்லை. ‘முருகா இந்த முள்ளைப் பிடுங்கும் போதே, இவ்வளவு வலிக்கிறதே… உடம்பில் இருந்து, உயிரைப் பிடுங்கும் போது, எவ்வளவு வலி இருக்கும்…’ என்று, கண்ணீர் சிந்தினார் பாம்பன் சுவாமிகள். கண்ணீர் முள்ளின் மீது விழுந்தது. அதன் காரணமாக, முள், சற்று நெகிழ்ந்து கொடுத்தது. முள்ளைப் பிடுங்கி எறிந்து விட்டு, சுவாமிகள் திரும்பி விட்டார். இந்த விஷயத்தை சுவாமிகள், யாரிடமும் சொல்லவில்லை. ஆனால், அடியார் மனம் வருந்த, ஆறுமுகன் பொறுப்பாரா! அன்றிரவே, தச்சு வேலை செய்யும் ஒருவர் கனவில், கந்தக் கடவுள் தோன்றி, ‘என் அடிமையான அந்த இளைஞனுக்கு, நீ ஒரு பாதக்குறடு (மரத்தாலான பாதுகைகள்)செய்து கொடு…’ என்று, கட்டளையிட்டார். மறுநாள், தச்சு வேலை செய்பவர், முருகப் பெருமானின் உத்தரவுப்படியே பாதக்குறடுகள் செய்து வந்து, பாம்பன் சுவாமிகளிடம் தந்து, முருகப் பெருமானின் உத்தரவையும் கூறினார். பாம்பன் சுவாமிகளுக்கு மெய் சிலிர்த்தது; அவர், முருகனின் கருணையை எண்ணி உருகினார். அடியார்கள் மனம் வருந்த, ஆண்டவன் பொறுக்க மாட்டார் என்பதை, விளக்கும் நிகழ்ச்சி இது.
|
|
| |
tulips | Date: Thursday, 01 May 2014, 8:32 PM | Message # 3 |
Lieutenant colonel
Group: *Checked*
Messages: 116
Status: Offline
| காரணமில்லாமல் காரியமில்லை! காரணமில்லாமல் காரியமில்லை. காரணமும், காரியமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை மட்டுமல்ல; ஒன்றுக்குள் ஒன்று இணைந்திருப்பவை. இதுகுறித்து, பகவான் கண்ணன் பகவத் கீதையில் கூறும் போது, ‘நானே காரணமாகவும், காரியமுமாய் இருக்கிறேன்…’ என்கிறார். மனித வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு விஷயமும், ஏதாவது ஒரு காரணத்தை முன்னிட்டே இறைவனால் நடத்தப்படுகின்றன. பஞ்ச பாண்டவர்கள் வனவாச காலத்தில் இருந்த போது, நடந்த ஒரு சம்பவம்… பதினாயிரம் யானை பலம் கொண்டவன் பீமன். அவன் ஒரு நாள் காட்டிற்கு வேட்டையாட சென்றான். அவன் கண்களில் பட்ட மிருகங்கள் எல்லாம் காலனை அடைந்தன. பார்வையில் படாத மிருகங்களோ பயந்து ஓடின. அப்போது வழியில் எதிர்பட்ட ஒரு பெரிய மலைப் பாம்பு, பீமனை பிடித்து கொண்டது. அதனிடமிருந்து விடுபட, பீமன் எவ்வளவோ முயற்சி செய்தும் விடுபட முடியவில்லை. அயர்ந்து போன பீமன். ‘பாம்பே… உன்னிடம் தோற்றுப்போன எனக்கு, மனிதர்களின் உடல் பலம் நிலையற்றது என்பது புரிந்து விட்டது. இதை எனக்கு உணர்த்திய நீ யார்…’ எனக் கேட்டான். ‘பீமா, உன் முன்னோர்களில் ஒருவனான நகுஷன் என்பவனே நான். அகஸ்திய முனிவரை அவமானப்படுத்தினேன். அவர், ‘பாம்பாக போ…’ என, சாபம் கொடுத்து விட்டார். ‘அவரிடம் சாப விமோசனம் கேட்ட போது, ‘எவன் ஒருவன், ஆத்மா எது, ஆத்மா இல்லாதது எது என்பதன் வேறுபாடு குறித்த, உன் கேள்விகளுக்கு பதில் கூறுவானோ, அப்போது உனக்கு சாப விமோசனம் கிடைக்கும்…’ என்று, கூறினார்…’ என்றது. அந்த நேரத்தில், பீமனைக் காணாததால், தேடி வந்த தர்மர், பாம்பு, பீமனை பற்றியிருப்பதை கண்டு, விடுவிக்க முயன்றார். ஆனால், பாம்பு, தன் பிடியை விலக்கிக் கொள்ளாமல், தன்னைப் பற்றிய தகவல்களைக் கூறி, ‘என் கேள்விகளுக்கு நீ பதில் கூறினால், உன் தம்பியை விட்டு விடுவேன்…’ என்றது. தர்மர் அதற்கு ஒப்புக் கொண்டார். பாம்பு கேள்வி மேல் கேள்வியாகத் தொடுக்க, தர்மர் அனைத்திற்கும் பதில் கூறினார். பாம்பு சாப விமோசனம் பெற்று, நகுஷனாக மாறி, சொர்க்கத்தை அடைந்தது. பீமனுடன் திரும்பினார் தர்மர். பலசாலியான பீமன், பாம்பால் பிடிக்கப் பட்டதும், தர்மர் அங்கு வந்ததும், அதன் விளைவாய், நகுஷன் சாப விமோசனம் பெற்றதும், இவையெல்லாம் காரணமில்லாமல் நடக்கவில்லை. முன்னோர்களுக்கும் நற்கதி அளிக்கக்கூடிய அளவிற்கு, தர்மருக்கு ஆற்றல் இருந்தது. ஒரு செயல் ஏன் நடந்தது என்பது தெரியாவிட்டாலும், நல்வழியில் நடப்பது, நமக்கு மட்டுமல்ல, நம் முன்னோர்களுக்கும் நற்கதி அளிக்கும் என்பதே, இச்சம்பவம் விளக்கும் நீதி!
|
|
| |
tulips | Date: Tuesday, 06 May 2014, 9:30 AM | Message # 4 |
Lieutenant colonel
Group: *Checked*
Messages: 116
Status: Offline
| இடி இடிக்கும் போது அர்ஜுனா.. அர்ஜுனா என்பது ஏன் தெரியுமா?நம் ஊரில் மழை பெய்யும் போது இடி இடித்தால் போதும். அர்ஜுனா...அர்ஜுனா என்பார்கள் பெரியவர்கள். உடனே, நம் வீட்டு இளசுகள், நீ அர்ஜுனான்னு சொன்னவுடனே, அவன் வில்லையும் அம்பையும் எடுத்துகிட்டு வந்து, இடி சத்தமே இல்லாம பண்ணிட போறானாக்கும் என்று கேலி செய்வார்கள். இடிதாங்கி கண்டுபுடிச்சு எத்தனையோ வருஷமாகியும், அதை பில்டிங் மேலே வைக்காம இன்னமும் அர்ஜுனான்னு புலம்பிகிட்டு இருக்கியே! என்று இடியிலிருந்து தப்பும் அறிவியல் உபகரணம் பற்றியும் எடுத்துச் சொல்வார்கள். உண்மையில், உண்மையான அறிவியல் காரணம் என்ன தெரியுமா?இடி பலமாக இடிக்கும் போது, சிலரது காது அடைத்து ஙொய்ங் என்று சத்தம் வரும். இதிலிருந்து தப்ப அர்ஜுனா என்றால் போதும். காது அடைக்காது. அர் என்று சொல்லும் போது, நாக்கு மடிந்து மேல் தாடையைத் தொடும். ஜு என்னும் போது வாய் குவிந்து காற்று வெளியேறும். னா என்னும் போது, வாய் முழுமையாகத் திறந்து காற்று வெளியே போகும். இப்படி காற்று வெளியேறுவதால் காது அடைக்காது. அதற்குத்தான் அர்ஜுனா வை நம்மவர்கள் துணைக்கு அழைத்தார்கள். அர்ஜுனன் கிருஷ்ண பக்தன் என்பதால், அவன் பெயரை உச்சரிப்பது மனதுக்கு பலம் என்ற ஆன்மிக காரணத்துடன், காது அடைத்து விடக்கூடாது என்ற அறிவியல் காரணமும் இதில் புதைந்து கிடக்கிறது.
|
|
| |
tulips | Date: Tuesday, 06 May 2014, 9:37 AM | Message # 5 |
Lieutenant colonel
Group: *Checked*
Messages: 116
Status: Offline
| கருணையின் வடிவமே
ஒரு சமயம், காஞ்சி மகாபெரியவர், சிவகங்கை மாவட்டம் இளையாத்தங்குடியில் சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டிக்க முகாமிட்டிருந்தார். ஒருநாள் இரவில், தேவகோட்டையில் இருந்து, ஒரு பஸ் நிறைய மக்கள் அவ்வூருக்கு வந்தார்கள். ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாய் ஏகமாய் சத்தம் கேட்க, பெரியவர் அங்கிருந்த கஜானா ராமச்சந்திர அய்யரை அழைத்து, ""வெளியே நிறைய பேர் வந்திருக்கிறார்கள் போல் தெரிகிறது. யாரென்று பார்த்து வா...'' என்றவர், அவரை நிறுத்தி, ""அவர்களெல்லாம் சாப்பிட்டு விட்டார்களா என்று விசாரித்து வா,'' என்றார். அவரும் விசாரித்து வந்தார். ""சுவாமி! அவர்கள் தேவகோட்டையில் இருந்து வருகிறார்களாம். அவர்கள் வந்த பஸ், வழியில் ரிப்பேராகி விட்டதால், தாமதமாக வந்திருக்கிறார்கள். யாரும் சாப்பிடவில்லையாம்,'' என்றார். ""ராமச்சந்திரா! வெளியே பூஜைக்கட்டில் மேலூர் மாமா படுத்திருப்பார். அவர் பக்கத்தில் கட்டுப்பெட்டி சாவி கிடக்கும். நீ சந்தடி செய்யாமல் அதை எடுத்துப்போய் பெட்டியைத் திறந்து, அதிலுள்ள பழங்கள் எல்லாவற்றையும் எடுத்துப் போய், அவர்களிடம் கொடு. நாளை அபிஷேகத்திற்காக தயிர், பால் வைத்திருப்பார். எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு போய், அவர்களை சாப்பிட வை. பிறகு, சந்தடி செய்யாமல், சாவியை இருந்த இடத்திலேயே வைத்து விடு,'' என்று சொல்லி விட்டு உறங்கச் சென்று விட்டார். மறுநாள் விடிந்தது. மேலூர் ராமச்சந்திர அய்யர் கட்டுப்பெட்டியை திறந்தார். உள்ளே பழம், தயிர், பால் எதுவும் இல்லை. அவருக்கு கோபம் வந்து விட்டது. ""எந்த திருட்டுப்பயலோ, ராத்திரி மறுசாவி போட்டு பெட்டியைத் திறந்து, பழங்களை எடுத்துப் போயிருக்கிறான்,'' என்று மிகவும் சத்தமாகக் கத்தினார். அப்போது, பக்கத்து ரூமில் தான் பெரியவர் இருந்தார். அவர் அங்கிருந்து வந்து, ""அய்யர்வாள்! நான் தான் கஜானா ராமச்சந்திரன் என்ற திருடனுக்கு உடந்தையாக இருந்து, அவனைத் திருடச் சொன்னேன்,'' என்றார். அய்யர் அலறாத குறை தான். ""பெரியவா! மன்னிச்சுடுங்கோ'' என்று அவரது பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார். பூஜைக்கான பொருள் என்றாலும், அவசரம் கருதி, அது மக்களின் பசி தீர்க்க உதவுமானால், அதற்கே முதலிடம் என்ற கொள்கையுடைய மகாசுவாமிகள், கருணாமூர்த்தியாக நம் கண்முன் இன்றும் காட்சி தருகிறார்.
|
|
| |
ram2858 | Date: Tuesday, 06 May 2014, 9:45 AM | Message # 6 |
Sergeant
Group: *Checked*
Messages: 30
Status: Offline
| http://www.visvacomplex.com/main.html
Message edited by ram2858 - Tuesday, 06 May 2014, 9:46 AM |
|
| |
Sara3917 | Date: Saturday, 18 Nov 2017, 2:37 PM | Message # 7 |
Private
Group: Users
Messages: 1
Status: Offline
| நண்பர்களே வரும் 2017-ம் ஆண்டு டிசம்பர் 19ம் நாள் சனிபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்கிறார். அதையொட்டி நடைபெறும் சனிப்பெயர்ச்சி பலன்கள் இங்கே படித்து பயன் பெறவும் சனிப் பெயர்ச்சி பலன்கள்
|
|
| |