ரதசப்தமி! - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
  • Page 1 of 1
  • 1
Forum moderator: Laya, Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » ஆன்மீகம் / நல்வழி » ஆன்மிகம் » ரதசப்தமி! (ராஜயோகம் தரும் ரதசப்தமி!)
ரதசப்தமி!
PattuDate: Wednesday, 05 Feb 2014, 5:39 PM | Message # 1
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
பிரத்யட்ச தெய்வம் என்று
கொண்டாடப்படும் சூரியனின் வட
திசைப்
பயணம்,
தை
முதல்
நாள்
தொடங்குகிறது என்று
சொன்னாலும், அந்தப்
பயணம்
தைமாதம் ‘சப்தமி’
நாளில்தான் ஆரம்பமாகிறது.

திருப்பத்தில் ஓடிவரும் ஏழுபேரும் ஒரே
நேர்க்கோட்டில் வருவது
தாமதப்படும் என்பதை
விளையாட்டுப் போட்டியில் நாம்
பார்த்திருக்கிறோம். அதுபோல
ஏழு
குதிரைகளும் ஒரு
சேரத்
திரும்பி, பயணம்
தொடங்கும் நாள்
தை
மாத
சப்தமி.

சூரியனின் ஒற்றைச் சக்கர
ரதத்தின் உத்தராயணப் பயணம்
அப்போதுதான் ஆரம்பிக்கிறது. அதனால்,
‘ரத
சப்தமி’
என்று
கொண்டாடப்படுகிறது இந்தத்
திருநாள்.

இந்த
நாளில்,
எருக்க
இலைகளை
தலையில் வைத்தபடி கிழக்கு நோக்கி
நீராட
வேண்டும் என்கிறது சாஸ்திரம். இதனால்,
சூரியனின் கிரணங்கள் எருக்க
இலையின் வழியே
நம்
உடலில்
படிந்து, நோய்களை குணப்படுத்துகின்றன என்று
வரையறுக்கிறார்கள்.

திருமங்கலக்குடியின் தலவிருட்சமும், சூரியனார் கோயிலின் தல
விருட்சமும் எருக்குதான். ‘எருக்கு இலையில் தயிர்
சாதத்தை வைத்து
உண்டால், எருக்கின் அணுவளவு சத்து
உணவில்
கலந்து,
உடலில்
சேர்கிறது. அதனால்,
தொழுநோய் குணமாகும் என்கிறது திருமங்கலக்குடி தல
புராணம்.

ஜோதிட
சாஸ்திரம், ‘ஆரோக்கியம் தருபவன் சூரியன்’ என்று
சொல்கிறது. அதர்வண
வேதம்,
‘சூரியனை வழிபடுவதால், உடல்
நலம்
சிறக்கும்’ என்று
குறிப்பிடுகிறது.
 


Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Wednesday, 05 Feb 2014, 5:40 PM | Message # 2
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
இந்த நாளில்,வீட்டு
வாசலிலும், பூஜை
அறையிலும் தேர்க்
கோலமிட்டு சூரியனை வழிபடுவது விசேஷமானது. இந்த
நாளில்
விரதம்
இருப்பதும் சூரியனுக்கு சர்க்கரைப் பொங்கல் வடை,
இனிப்பு வகைகள்
நிவேதனம் செய்வதும் சிறப்பானது.

சூரியனின் ஏழு
குதிரைகளைப் போல்,
ஏழு
மலைகளின் மீது
கோயில்
கொண்டதால், திருமலை-திருப்பதியில் ‘ரத
சப்தமி’
விழா
கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த
ஒருநாளில் மட்டும், காலை
4.30 மணி
முதல்
11.30 மணிக்குள், ஏழு
வாகனங்களில் பவனி
வருகிறார் திருமலையப்பன்.

பத்துநாள் விழாக்களை ‘பிரம்மோற்சவம்’ என்பார்கள். அந்த
நாளில்,
தினமும் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி
உலா
வருவார். இந்த
ரத
சப்தமி
சமயத்தில், ‘ஒரே
நாளில்
ஏழு
வாகன
உலா’
என்பதால், ‘அர்த்த
பிரம்
மோத்ஸவம் என்றும் இதைக்
குறிப்பிடுகிறார்கள்.

திருமலை, ஏழுமலைகளை கொண்டது என்றால், ஸ்ரீரங்கம் ஏழு
பிராகாரங்களைக் கொண்டது. இங்கும் ‘நம்பெருமாள்’ ரத
சப்தமியை விமரிசையாகக் கொண்டாடுகிறார். தை
மாதத்தில், சூரியனை விஷ்ணு
என்ற
சொல்லால் குறிப்பதால், பெருமாள் கோயில்களில் இந்த
விழா,
சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது போலும்.

சூரியனை வழிபட்டு, விசேஷ
பலன்களைப் பெறவும், புதிய
செயல்களைத் தொடங்கவும், இந்த
நாள்
மிகச்
சிறப்பானது. இந்த
நாளில்,
விரதம்
மேற்கொள்வது, தடைகளைப் போக்கி,
காரியங்களை கைகூடச் செய்யவல்லது.
 பிதுர் லோகத்துக்கு அதிபதியாகவும், ஆத்மகாரகனாகவும் விளங்கும் சூரியனுக்கான இந்த
விரதம்,
உடல்
நலம்,
மன
நலம்,
நற்குணப் பெருக்கம், செல்வ
வளம்,
காரிய
வெற்றி
ஆகியவற்றைத் தரவல்லது.

குறிப்பாக, அதிகாலையில் எழுந்து, சூரியனை வழிபட்டு, இந்த
விரதத்தை முறையாகப் பின்பற்றத் தொடங்கினால், வெற்றிகளின் அணிவகுப்பாக வாழ்க்கை அமையும்.




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Wednesday, 05 Feb 2014, 5:41 PM | Message # 3
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
உலகிற்கு
ஒளி தரும் சூரிய பகவானுக்கு
உரிய விரதங்களில் மிக முக்கியதானது ரத
சப்தமி. தை மாத வளர்பிறையில்
ஏழாவது நாள் இந்த விரதம்
அனுஷ்டிக்கப்படுகிறது.

 காஷ்யப மகரிஷியின் மனைவி
அதிதி கர்ப்பமாக இருந்த நேரத்தில் கணவருக்கு
உணவு பரிமாறிக்கொண்டிருந்தாள் அந்த நேரத்தில் ஒரு
அந்தணர் வந்து உணவு கேட்டார்.
கணவருக்கு பரிமாறியபின்னர் மெதுவாக நடந்து அந்தணருக்கு
உணவு எடுத்து வந்தாள் அதிதி.

இதனால்
கோபம் கொண்ட அந்தணர், தர்மத்தை
புறக்கணித்துவிட்டு கர்ப்பத்தை பாதுகாப்பதற்காக மெதுவாக நடந்து வந்த
அந்த கர்ப்பம் கலைந்து போகட்டும் என்று
சாபம் இட்டார். அழிவில்லாத குழந்தை அந்தணரின் சாபம்
கேட்டு அதிர்ச்சியடைந்த அதிதி தன் கணவரிடம்
நடந்தவற்றை விளக்கினாள்.

இதைக்கேட்ட
காஷ்யப முனிவர், கவலைப்படாதே அமிர்தம் நிறைந்த உலகில் இருந்து
என்றைக்கும் அழிவில்லாத மகன் நமக்கு கிடைப்பான்
என்று வாக்களித்தார். அதன்படி ஒளி பொருந்திய
புத்திரன் ஒருவன் அவர்களுக்கு கிடைத்தான்.
அவனே உலகைக் காக்கும் சூரியன்.

ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் சூரியன்
உலா வருவதால் திதிகளில் ஏழாவது நாள் சப்தமி
விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Wednesday, 05 Feb 2014, 5:42 PM | Message # 4
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
செல்வம்
பெருகும் இந்த விரதம் எளிமையானது.

ஏழு எருக்கம் இலைகளை தலையில் ஒன்று,
கண்களில் இரண்டு, தோள்பட்டைகளில் இரண்டு,
கால்களில் இரண்டை வைத்து நீராடவேண்டும்.
தலையில் வைக்கும் இலையில், பெண்கள் மஞ்சள் பொடி
மற்றும் அட்சதையும், ஆண்கள் அட்சதை மட்டும்
வைத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு
செய்வது ஆரோக்கியத்தையும், செல்வ வளத்தையும் தரும்.
ரதசப்தமி நாளில் செய்யப்படும் தர்மத்திற்கு
பலமடங்கு புண்ணியம் உண்டு. இந்த நாளில்
தொடங்கும் தொழில் பெருகும். பெண்கள்
உயர்நிலையை அடைவர்.

கணவனை இழந்தவர்கள் இந்த விரதம் அனுஷ்டித்தால்
அடுத்து வரும் பிறவிகளில் இந்த
நிலை ஏற்படாது என்கின்றன புராணங்கள். இந்த நாள் தியானம்,
யோகா செய்ய சிறந்தது. சூரிய
உதயத்தின் போது குளித்து விரதம்
அனுஷ்டித்தால் செல்வந்தர் ஆக உயர்வார்கள் என்கின்றது
புராணம்.




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Wednesday, 05 Feb 2014, 5:43 PM | Message # 5
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
எருக்க
இலை ஏன்?

மகாபாரதப்
போரில் வீழ்த்தப் பட்ட பீஷ்மர் நினைத்த
நேரத்தில் உயிர் விடலாம் என்ற
வரத்தினால் உத்தராயனத்தில் உயிர் விடவேண்டி அம்புப்
படுக்கையில் படுத்திருக்கிறார். காலம் போய்க்கொண்டே இருக்கிறது
பீஷ்மரின் உயிர் பிரியவில்லை.

அப்பொழுது அவரைப் பார்க்க வந்த
வேத வியாசரிடம், நான் என்ன பாவம்
செய்தேன்? ஏன் இன்னும் என்
உயிர் போகவில்லை?" என்று மனம் வருந்தினார்
பீஷ்மர். அதற்கு வியாசர், "பீஷ்மா,ஒருவர், தன் மனம்,
மொழி, மெய்யால் தீமை புரியாவிட்டாலும், பிறர்
செய்யும் தீமைகளைத் தடுக்காமல் இருந்ததும், இருப்பதும் கூடப் பாவம் தான்,
அதற்கான தண்டனையை அனுபவித்தே தீரவேண்டும் என்று கூறினார்.

உடனே பீஷ்மருக்கு, சபை
நடுவே பாஞ்சலியின் உடைகளை களைந்து துச்சாதனன்
அவமானம் செய்தபோது அதை தடுக்காமல் இருந்தது
மிகப்பெரிய தவறு செய்தது நினைவிற்கு
வந்தது. இதற்கு விமோசனம் இல்லையா
என்று கேட்டதற்கு, வியாசர், எப்பொழுது உன் பாவத்தை உணர்ந்தாயோ,
அப்போது அகன்று விட்டாலும் அனைத்தையும்
கண்டும் காணமல் இருந்த கண்கள்,
செவி, வாய், தோள், கைகள்,
புத்தி உள்ள தலை ஆகியவை
தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றார் வியாசர்.

உடனே சூரியனின் நெருப்பைக் கொண்டு தன்னைப் சுட்டுப்
பொசுக்குமாறு வேண்டுகிறார் பீஷ்மர்.
பீஷ்மரிடம்
எருக்க இலை ஒன்றைக் கொண்டு
வந்து காட்டினார் வியாசர். ''இதன்
பெயர் அர்க்க பத்ரம். அர்க்கன்
என்றால் சூரியன். இதில்
சூரியனின் சாரம் உள்ளது. அதனால்தான்
சந்திரனை முடியில் சூடும் சிவபெருமான் சூரியனாக எருக்க இலையையும் தரிக்கிறார்.

பீஷ்மா! நீஒரு நைஷ்டிக பிரம்மச்சாரி. பிரம்மச்சரியத்தின் உருவமான கணேசனுக்கும் உகந்தது, இந்த
எருக்கஞ்செடி. இதன்
மூலமே உன் பாவத்தைத் துடைத்து விடுகிறேன்'' என்று
பரிவுடன் கூறிய வியாசர், பீஷ்மரின்
அங்கங்களை எருக்க இலையால் அலங்கரித்தார்.

உடனே சிறிது சிறிதாக
அமைதியடைந்த பீஷ்மர் ஏகாதசி அன்று
உயிர்நீத்தார். புண்ணியம் கிடைக்கும் பீஷ்மருக்கு யாரும் இல்லாததால் நீத்தார்
கடன் செய்வது குறித்து வியாசரிடம்
வேண்டுகிறார் தர்மர்.

அதற்கு
பதிலளித்த வியாசர், கவலைப்படாதே தர்மா, சூரியனுக்காக எருக்க
இலை சூடி விரதம் இருக்கும்
ரதசப்தமி நாளில் பாரத தேசமே
பீஷ்மருக்காக நீர்கடன் அளிக்கும் என்று கூறினார்.

ரத சப்தமி நாளில்
எருக்க இலைகளை வைத்துக்கொண்டு குளிக்கும்
மக்கள் தங்கள் பாவங்களில் இருந்து
விடுவித்துக்கொள்வதோடு, பீஷ்மருக்கு நீர்கடன் அளித்த புண்ணியம் கிடைக்கும்
என்று அருளினார்.





Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ


Message edited by Pattu - Wednesday, 05 Feb 2014, 5:43 PM
 
PattuDate: Wednesday, 05 Feb 2014, 6:14 PM | Message # 6
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
கண்களால் காணக்கூடிய கடவுளாக விளங்குகிறார் சூரிய பகவான்.
சூரிய விரதங்களில் சிறப்பாகத் திகழ்வதுவே ரத சப்தமி!

புண்ணிய தினத்தை எதிர்நோக்கிய பீஷ்மர் முக்தி பெற்றதும், திருஅண்ணாமலை சேஷாத்திரி சுவாமிகள், ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஆகிய இரு மகான்கள் அவதரித்ததும் இச்சுபதினமே.

சூரிய தேவனை வணங்குவதால் மனத்தெளிவும், உடல் புத்துணர்ச்சியும், தேக நிறமும், கண் ஒளியும் சிறப்புறுகின்றன.

ரத சப்தமியான இந்நன்னாளில் வாசலில் தேர்க்கோலத்தில் சூரியன் எழுந்தருளுவதும் மாக்கோலம் போடுவதும், ஆதித்ய ஹ்ருதயம், சூரிய அஷ்டோத்திரம் படிப்பதும் மிக நல்லது. ஆரோக்யம் நிலைக்கும்

 ரத சப்தமி (தை மாத அமாவாசைக்குப் பிறகு சுக்ல பட்ச சப்தமி அன்று வருகிறது) அன்று காலையில், ஏழு எருக்கு இலைகள்,  அட்சதை இவற்றை தலையில் வைத்துக்கொண்டு சூரிய பகவானை தியானம் செய்துகொண்டு கீழ்காணும் ஸ்லோகத்தைச் சொல்லி ஸ்நானம் செய்ய வேண்டும்.

 ""யத்யத் கர்மக்ருதம் பாபம் மயாஸப்தஸன் ஜன்மஸன்
 தன்மே ரோகம் சசோகம் ச மாகரீ ஹந்து சப்தமீ''

 - நான் ஏழு ஜன்மங்களில் என்ன பாபம் செய்திருந்தாலும் அதனால் ஏற்பட்ட விளைவுகளை இந்த ரத சப்தமி ஸ்நானம் நீக்கட்டும் என்பது இதன் பொருள்.

 பிறகு அர்க்யம் கொடுத்து, ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் சூரியனின் கோலத்தை வரைந்து பூஜை செய்தால் சகல பாபங்கள் அகன்று ஆரோக்யம் நிலைக்கும்.



Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
RAWALIKADate: Wednesday, 05 Feb 2014, 8:53 PM | Message # 7
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
migavum arumaiyaana thagaval
 
NathasaaDate: Wednesday, 05 Feb 2014, 10:30 PM | Message # 8
Major general
Group: *Checked*
Messages: 360
Status: Offline
Hi Maamy
ungal pakirvin moolam ratha sapthami patri arinthu kolla mudinthathu....
 
kvsureshDate: Thursday, 06 Feb 2014, 1:24 PM | Message # 9
Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
Hi pattu,
nice info, romba nandri.


Regards and Thanks

Kothai Suresh
 
tulipsDate: Thursday, 06 Feb 2014, 2:56 PM | Message # 10
Lieutenant colonel
Group: *Checked*
Messages: 116
Status: Offline
hi pattu,

neenga thantha thagavaluku mikka nandri
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » ஆன்மீகம் / நல்வழி » ஆன்மிகம் » ரதசப்தமி! (ராஜயோகம் தரும் ரதசப்தமி!)
  • Page 1 of 1
  • 1
Search: