உலகளாவிய படங்கள் - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
  • Page 1 of 1
  • 1
Forum moderator: Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » மனதிற்கு பிடித்த பொழுதுபோக்கு » சினிமா » உலகளாவிய படங்கள் (படங்களை பற்றிய உங்கள் கருத்துக்களை பகிரவும்.)
உலகளாவிய படங்கள்
JeniliyaDate: Monday, 03 Feb 2014, 1:07 PM | Message # 1
Private
Group: Moderators
Messages: 19
Status: Offline
படங்களை பற்றிய உங்கள் கருத்துக்களை பகிரவும்.
 
SSDate: Monday, 03 Feb 2014, 11:31 PM | Message # 2
Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
Rush - (2013)

Niki Lauda மற்றும் James Hunt என்ற கார் ரேஸ் வீரர்களின் கதை. Grand Prix என்ற போட்டியில் எப்படி இருவரும் போட்டி போட்டு உலக சாம்பியன் பட்டதை வெல்கின்றனர் என்பதே கதை.

Niki Lauda ஆஸ்திரிய வீரர். இயல்பிலேயே ரேஸ் கார்களின் மேல் நாட்டம் கொண்டு, தானே வண்டியை வடிவமைக்கிறார், அதனால் வெற்றியும் பெறுகிறார். இவர் தான் இந்த படத்தை விவரிப்பது போல உள்ளது படம். பணக்கார வணிக குடும்பத்தில் பிறந்து ரேசிங்கிற்கு வருகிறார். 1970களில் இவர் தான் சாம்பியன்.

James Hunt -இவர் தான் Niki Laudaவின் ஒரே போட்டியாளர். இவர் ஒரு சோக்கு பேர்விழி. எதில் ஒன்றுமே ஒரு தடவை முதலில் செய்துவிட்டால் அதற்கு மேல் அவருக்கு ஆர்வம் இருந்ததில்லை. முதலில் இவருக்கும் Niki Laudaவிற்கும் ஒத்தே போனதில்லை. ஆனால் அவர்களது பழக்கத்தில் இருவருக்கும் ஒருவர் மேல் நல்ல மரியாதை வந்து விடுகிறது. சோக்கு பேர்விழியாய்  இருந்தாலும் சில நல்ல குணங்களை கொண்டவர் James Hunt. படத்தில் சில இடத்தில் இது நன்றாகவே தெரியும்.

Grand Prix  எவ்வளவு ஆபத்தாக இருக்க முடியும் அதனால் எவ்வளவு உயிர்கள் மடிகின்றனர் என்பதை படத்தில் காண முடியும்.

சில பல சீன்களை தவிர்த்து பார்த்தால் ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி இருக்கும்.

பி.கு. குழந்தைகளுடன் பார்க்க முடியாது. அவ்வளவு பச்சை பல  இடத்தில்.


Message edited by SS - Monday, 03 Feb 2014, 11:33 PM
 
SSDate: Monday, 03 Feb 2014, 11:42 PM | Message # 3
Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
Frozen(2013)

குழந்தைகளுக்காக Disney நிறுவிய மற்றுமொரு கற்பனை கதை.

இரு சகோதரிகள் Elsa மற்றும் Anna. இதில் பெரியவளுக்கு ஒரு அதிசயம் உண்டு, அவளால் பனியினை உண்டு பண்ண முடியும். சிறு வயதில் இருவரும் அப்படி பனி செய்து விளையாடும் பொழுது  அவள் இளையவளை பனி தாக்கி உறைய செய்து விடுகிறாள். அப்படி செய்யும் பொது trolls என்ற உயிரினம் அவளை காப்பாற்றுகிறது. அதனால் பெற்றவர்கள் இரு குழந்தைகளை ஒன்றாக இருக்க விடாமல் செய்து வளர்கின்றனர்.

பெரியவர்கள் ஆகும் போது, அவர்கள் இருவரின் பெற்றோர்கள் இறந்து விடுகின்றனர். இரு சகோதரிகளும் சந்திப்பது பெரியவளின் முடிசூட்டு விழாவின் பொழுது தான். அப்படி அவர்கள் சந்திக்கும் பொது எதிர்பாரா விதமாக, பெரியவள் ஒரு பனி புயலையே நாட்டில் கொண்டு வந்து விடுகிறாள், அதற்கு பிறகு அவள் நாட்டை விட்டே சென்று விடுகிறாள்.

சகோதரிகள் ஒன்று சேர்ந்தார்களா? நாடு திரும்ப நல்ல நிலைமைக்கு வந்ததா என்பதை படத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் கட்டி போட்டு விடுகிறது இந்த படம், அப்படி ஒரு மாய உலகத்தை காட்டுகின்றனர். Olaf என்கின்ற பனிமனிதனை அனைவரும் விரும்புகின்றனர்.

ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி வருகிறது.


Message edited by SS - Tuesday, 04 Feb 2014, 8:02 AM
 
shanDate: Thursday, 06 Feb 2014, 9:12 PM | Message # 4
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
hai ss,
nice reviews........... punk
 
SSDate: Friday, 07 Feb 2014, 11:17 PM | Message # 5
Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
Argo (2012) 

1979ல் நடந்த ஈரானிய கலவரத்தின்  போது நடந்த ஒரு சம்பவத்தை பற்றிய படம் தான் ARGO.ஈரானில் உள்ள அமெரிக்க தூதரகத்தை மக்கள் சூழ்ந்து அதிகாரிகளை வெளியே வர விடாமல் செய்கின்றனர். அதில் ஒரு 6 அதிகாரிகள் மாட்டி கொண்டு Canada நாட்டின் தூதரக அதிகாரி வீட்டில் தஞ்சம் புகுகின்றனர். அவர்களை அமெரிக்க எப்படி அதில் இருந்து விடுவித்தது என்பதை விறுவிறுப்பாக சொல்லுகிறது இந்த படம். முதலில் கொஞ்சம்  போர் அடிப்பது போல இருந்தாலும் கடைசி நாற்பத்தி ஐந்து நிமிடங்கள் நல்ல விறுவிறுப்பபாக செல்லும் இந்த படம்.
சில வன்முறை காட்சிகள் இருப்பதால் குழந்தைகளோடு பார்பதற்கு யோசிக்கவும்.


Message edited by SS - Saturday, 08 Feb 2014, 0:08 AM
 
shanDate: Saturday, 08 Feb 2014, 8:15 AM | Message # 6
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
விமர்சனத்திற்கு நன்றி ss
 
NathasaaDate: Tuesday, 11 Feb 2014, 3:46 PM | Message # 7
Major general
Group: *Checked*
Messages: 360
Status: Offline
Hi SS
many thanx for the sharing
nice review
 
SSDate: Sunday, 09 Mar 2014, 10:51 PM | Message # 8
Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
Captain Philips - 2013

ஒரு அமெரிக்க சரக்கு கப்பல் ஓமானிலிர்ந்து ஆப்ரிக்காவின் கென்யாவிற்கு பயணமாகிறது. அந்த கப்பலின் கேப்டன் தான் பிலிப்ஸ். அப்படி அது செல்லும் போதும் சோமாலியா வழியாக செல்கிறது. அங்கே சோமாலியா நாட்டின் கடற்கொள்ளையர்களால் கப்பலுக்கு அபாயம் வருகிறது. அதனை எப்படி இந்த கேப்டன் எதிர்கொள்கிறார்? அவரால் முறியடிக்க முடிந்ததா என்பதே இந்த படம்.

2008 ஆம் ஆண்டில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை படமாக எடுத்துள்ளனர். மிகவும் அருமையாக இருக்கும் படம். அவ்வளவு பெரிய சரக்கு கப்பலில் எவ்வளவு ஆபத்துகள் உள்ளன என்று தெரிகிறது.

குழந்தைகளுடன் பார்க்க வேண்டாம். நிறைய வன்முறை காட்சிகள் உள்ளன.

http://en.wikipedia.org/wiki/Richard_Phillips_%28merchant_mariner%29


Message edited by SS - Monday, 10 Mar 2014, 1:07 AM
 
SSDate: Friday, 21 Mar 2014, 0:23 AM | Message # 9
Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
Unstoppable - 2010

வடஅமெரிக்காவில் நடந்த ஒரு ரயில் விபத்தை பற்றிய படம் தான் இது. ஒரு பெரிய சரக்கு ரயில் மெயின் லைனில் கொண்டு வரும் ஊழியர் அவரது கவன குறைவால் மற்றும் சோம்பேறித்தனத்தால் அந்த ரயில் ஆள் இல்லாமல் அதிவேகமாக ஓடுகிறது. அப்படி செல்லும் ரயில் வழியில் குழந்தைகளை சுற்றுலாக்கு ஏற்றி செல்லும் ரயிலையும்  மற்றும் இன்னொரு சரக்கு ரயிலையும் எதிர்கொள்ளும். அதனை எப்படி நிறுத்துகிறார்கள் என்பதே இந்த விறுவிறுப்பான படம்.
குடும்பத்துடன் உட்கார்ந்து பார்க்கலாம்.
உண்மை சம்பவத்தை கொண்டு எடுக்க பட்ட படம் இது.. அந்த சம்பவத்தை பற்றி அரிய இதோ..
http://en.wikipedia.org/wiki/CSX_8888_incident
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » மனதிற்கு பிடித்த பொழுதுபோக்கு » சினிமா » உலகளாவிய படங்கள் (படங்களை பற்றிய உங்கள் கருத்துக்களை பகிரவும்.)
  • Page 1 of 1
  • 1
Search: