கணிணி - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
  • Page 1 of 1
  • 1
Forum moderator: Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பயனுள்ள தகவல்கள் » தகவல் தொழில்நுட்பம் » கணிணி (கணிணி)
கணிணி
LayaDate: Friday, 14 Feb 2014, 9:51 PM | Message # 1
Lieutenant
Group: Moderators
Messages: 72
Status: Offline
கணிணி தொடர்பான தகவல்களை பகிருமிடம்
 
NathasaaDate: Sunday, 16 Feb 2014, 5:35 PM | Message # 2
Major general
Group: *Checked*
Messages: 360
Status: Offline
என்னை பற்றி சொல்கிறேன்! கேளுங்கள்

கணனி இல்லை என்றால் உலகமே இயங்காது என்ற நிலைக்கு வந்துவிட்டோம் என்று சொன்னால் அது மிகையல்ல…

உலகத்தின் ஒவ்வொருஅசைவுகளை கைக்குள் அடக்கி விடலாம்…எந்த மூலையில் நடக்கும் விடயங்களும் மிக எளிதாக மக்களை சென்றடைந்து விடுகிறது.

அதிவேகமாவும்,தொழில்நுட்பத்தின் பின்னாலும் ஓடிக் கொண்டிருக்கிறோம்.

இந்த கணனியை பற்றிஎன்ன தெரியும்? மிக சிம்பிளாக கணனியின் பாகங்களும் அதன் செயல்பாடுகளையும் பற்றி அறிந்து கொள்ளலாம்.



கணனி



கணனி என்பது எண்முதலான தகவல்களை பெற்றுக் கொண்டு, அதனை முறையாக செயல்படுத்தி கொடுக்கும் கருவியே ஆகும்


இதன் முக்கிய பாகங்கள்






உள்ளீட்டு கருவி- Inputdevice


நாம் கொடுக்கும்தரவு மற்றும் கட்டுப்பாட்டு சமிக்ஞைகளை கணனிக்கு வழங்குவதற்கு பயன்படுத்தப்படும் ஒரு
உபகரணம் ஆகும்.உதாரணத்திற்கு-கீபோர்ட், மவுஸ், ஸ்கேனர், கமெரா


வெளியீட்டு சாதனம்- Outputdevice




கணனியின் உள்ளேசெயல்படுத்தப்பட்ட தரவுகள் மற்றும் செய்திகளை வெளியிட பயன்படுத்தப்படும் சாதனம் ஆகும்.உதாரணத்திற்கு-மானிட்டர், ஸ்பீக்கர், ஹெட்போன்


Message edited by Nathasaa - Sunday, 16 Feb 2014, 5:39 PM
 
NathasaaDate: Sunday, 16 Feb 2014, 5:41 PM | Message # 3
Major general
Group: *Checked*
Messages: 360
Status: Offline
Central Processing Unit(CPU)




இதை கணனியின் மூளைஎன்று சொன்னால் அது மிகையாகாது, இது Assembly Language-ஐ கொண்டு இயங்குகிறது, ஒரு கணனியின் அனைத்து செயல்களையும் இதுவே தீர்மானிக்கிறது.

நாம் உள்ளீட்டுகருவியின் மூலம் கொடுக்கும் தரவுகளை ஏற்றுக் கொண்டு அதனை செயல்படுத்தி வெளியீட்டு கருவியின் மூலம் நமக்கு தருகிறது



நினைவகம்- Memory




இதில் இரண்டு வகைகள்உள்ளன.

Random AccessMemory (RAM) - இது ஒரு தற்காலிக Memory ஆகும். ஒரு கணனி இயங்கும்போது, அதன் தகவல்களைதற்காலிகமாக சேமிக்க இது பயன்படுகிறது.

Read OnlyMemory (ROM) - இது ஒரு நிரந்தரவகை Memory ஆகும். கணனியின் முக்கியமான தகவல்களைநிரந்தரமாக சேமிக்க இது பயன்படுகிறது


Message edited by Nathasaa - Sunday, 16 Feb 2014, 5:43 PM
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பயனுள்ள தகவல்கள் » தகவல் தொழில்நுட்பம் » கணிணி (கணிணி)
  • Page 1 of 1
  • 1
Search: