விகடன் பார்வை
|
|
Jeniliya | Date: Thursday, 20 Feb 2014, 1:48 PM | Message # 1 |
Private
Group: Moderators
Messages: 19
Status: Offline
|
நம்மை சுற்றி நடக்கும் பல விஷயங்களை இங்கு விகடனின் பார்வையில் பார்க்கலாம்.
|
|
| |
RAWALIKA | Date: Wednesday, 05 Mar 2014, 9:48 AM | Message # 11 |
![RAWALIKA](/avatar/06/041510.jpg) Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
| போதை பேஸ்ட்!சோழிங்கநல்லூர், சிறுசேரி ஆகிய இடங்களில் கட்டட வேலை செய்யும் வடநாட்டு இளைஞர்கள் தற்போது, பல்துலக்கப் பயன்படுத்தும் பேஸ்ட் போன்ற ஒரு போதை வஸ்துவைப் பதுக்கிவைத்துப் பயன்படுத்துகிறார்களாம். சத்தீஸ்கர், ஜார்கண்ட் மாநிலங்களில் ஒரு மரத்தில் இருந்து எடுக்கப்படும் பிசின் போன்ற பொருளை வைத்து இந்த போதை வஸ்துவைத் தயாரிக்கிறார்களாம். ரயில் பயணத்தின்போது போலீஸ் கண்ணில் மண்ணைத் தூவுவதற்காகவே பேஸ்ட் வடிவில் வடிவமைத்திருக்கின்றனர். இந்த பேஸ்டை விரலில் எடுத்து உருட்டிக்கொண்டேயிருந்தால், அதில் உள்ள நீர்ச்சத்து போய், திடமான பொருள் தேறுமாம். இதை உதட்டுக்கும் பல்லுக்கும் இடையில் வைத்துக்கொள்கிறார்களாம். அடுத்த அரை மணி நேரத்துக்கு மிருக வெறி தலைக்கேறுமாம். உமாமகேஸ்வரியை கொன்றவர்கள் இந்த பேஸ்டை வாயில் அடக்கியிருந்த சமயத்தில்தான், அவர் எதிர்பட்டிருக்கிறார். போதையின் வெறியில்தான் அவர்கள் இந்தக் கொடூரத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள். இதை வடநாட்டில் இருந்து வந்த கட்டடத் தொழிலாளர்களே போலீஸாரிடம் சொல்லியிருக்கிறார்கள்.எரிச்சலில் மூன்று மணி நேரம்!'ஐ.டி. பெண்கள் தங்களது பாதுகாப்பு குறித்து அதிக அக்கறையுடன் இருக்க வேண்டும்’ என்று சொல்கிறார் சென்னை மாநகர போலீஸ் கூடுதல் டெபுடி கமிஷனர் முரளி. ''ஈவ் டீஸிங், செக்ஸ் டார்ச்சர், செயின் பறிப்பு, வழிப்பறி கொள்ளை இவற்றையெல்லாம் பெண்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. குறிப்பாக, முன்பு நான் வேலைபார்த்த துரைப்பாக்கம் ஏரியாவில் ஐ.டி. நிறுவனங்கள் அதிகம். அங்கு பணிபுரியும் பெண்கள் இரவு நேரங்களில் பணியில் இருந்து வருவார்கள். அந்த மாதிரி சமயங்களில் அவர்கள் கையில் பெப்பர் ஸ்பிரே இருக்க வேண்டும் என்பதை நான் செயல்படுத்தினேன். அசாம் பக்கம் விளையும் காரமான மிளகாயின் தூளும் மிளகின் தூளும் கலந்த கலவைதான் அது. ஐ.டி. காரிடாரில் எக்கச்சக்க பெண்கள் ஹாஸ்டல்கள் இயங்குகின்றன. அங்கெல்லாம் நான் நேரில் போய் பெப்பர் ஸ்பிரேயைப் பயன்படுத்தும் முறையை சொல்லிக்கொடுத்தேன். இதை எதிரியின் முகத்தில்தான் அடிக்க வேண்டும் என்றில்லை. அவர்கள் வரும் திசையில் அடித்தாலே போதும். ஆறு அடி தூரம் வரை பீய்ச்சிக்கொண்டு அடிக்கும். மூன்று மணி நேரத்துக்கு கண்களைத் திறக்கவே முடியாது. எரிச்சலில் துடிப்பான். எதிரியை நிலைகுலையச் செய்ததும், அங்கிருந்து தப்ப வேண்டியதுதான்!''ஒரு கல்... ஒரு துப்பட்டா!''ஐ.டி. துறையில் பணிபுரியும் பெண்கள் தங்கள் வசம் உள்ள பேனா, நோட்புக், சாவிக்கொத்து, செல்போன், துப்பட்டா, கை வளையல் இவற்றை வைத்தே எதிரியை திணறடிக்க முடியும்'' என்கிறார் கராத்தே மற்றும் கோபுடோ முறைகளில் தற்காப்பு கலைகளைச் சென்னையில் பெண்களுக்குச் சொல்லித்தரும் ஏ.எஸ்.கிருஷ்ணமூர்த்தி.''இன்றைய பெற்றோர்கள் தங்களது பெண் பிள்ளைகளுக்குப் படிப்பை தருகிறார்கள். வசதி வாய்ப்பைத் தருகிறார்கள். இதெல்லாம் சரி. எதிர்பாராத சூழ்நிலையில் யாராவது அட்டாக் செய்ய வந்தால், அதைச் சமாளிக்கும் மனோபக்குவத்தை தருகிறார்களா என்றால், அதுதான் இல்லை. தற்காப்பு பாதுகாப்புப் பயிற்சியைக் கண்டிப்பாக பெண் பிள்ளைகளுக்கு சொல்லித்தர வேண்டும். அதுதான் அவர்களின் உயிரையும் உடமையையும் காக்கும்.எதிரிக்கும் பயம் உண்டு. உங்களைப் போன்ற பெண்கள் ஒரு நிமிஷம் பயப்படுவதை எதிரி கண்டால், அவன் தாறுமாறாகத் தாக்க ஆரம்பிப்பான். அதுவே, நீங்கள் தற்காப்புப் பயிற்சி தெரிந்தவர்போல் காட்டினால், ஒரு ஸ்டெப் பின்வாங்குவான். அதைப் பயன்படுத்தி அந்த சூழலை விட்டு தப்பிக்க வேண்டியதுதான்! உங்களுடைய கைப்பையில் கருங்கல் ஒன்றை எப்போதும் வைத்திருங்கள். எப்படியும் நீங்கள் துப்பட்டா அணிந்திருப்பீர்கள். நீங்கள் பணிக்கு போகிற வழியில் யாராவது வழிமறித்தால், மின்னல் வேகத்தில் உங்கள் கைப்பையில் இருக்கும் கல்லை எடுத்து துப்பட்டாவில் சுற்றி எதிரியை நோக்கி வீசுங்கள். அதைவிட பெரிய ஆயுதம் வேறு என்ன இருக்க முடியும்? அதேபோல, அவசர சூழ்நிலையைச் சமாளிக்க சாவிக்கொத்தை எடுத்து ஒவ்வொரு விரலிலும் மாட்டிக்கொண்டு ஓங்கி குத்தினால் எதிரியின் முகத்தைக் கிழித்துவிடும். எதுவுமே இல்லாவிட்டால்கூட, ஆள்காட்டி விரலையும், நடு விரலையும் மின்னல் வேகத்தில் எதிரியின் கண்களில் குத்தினால், அவன் அம்பேல்தான்.தன்னைக் காப்பாற்றிக்கொள்ள எதிரியை எந்த விதத்தில் தாக்கினாலும் அது தவறாகாது. ஒருவேளை, எதிரி இறந்தே போய்விட்டால்கூட, உங்களுக்கு சட்டப் பாதுகாப்பு உண்டு. இதை முதலில் புரிந்துகொண்டு குறைந்தபட்ச பாதுகாப்பு அம்சங்களை கற்றுக்கொள்ளுங்கள்'' என்று வழிகாட்டுகிறார்.ஒய்ஃப் டே!ஐ.டி. துறையில் பணிபுரியும் பலருக்கும் இருக்கும் முக்கியப் பிரச்னை மன உளைச்சல். அதை எப்படி சரி செய்வது? காம்கேர் சாஃப்ட்வேர் என்கிற நிறுவனத்தை நடத்தி வரும் கே.புவனேஸ்வரி வழிகாட்டுகிறார். ''அத்தனை வசதி வாய்ப்புகள் இருந்தும் இவர்கள் மனம் உற்சாகமாக இல்லை என்பதால்தான் ஸ்ட்ரெஸ் என்று சொல்லப்படும் மன உளைச்சல் உண்டாகிறது. இதை விரட்டும் ஆயுதம் அவர்கள் கைகளில்தான் உள்ளது.வேலை பிடிக்கவில்லை, ஸ்ட்ரெஸ், பிழிந்து எடுக்கிறார்கள் என்பதைப் போன்ற வார்த்தைகளுக்குக்கூட உங்கள் மனதில் இடம் கொடுக்காதீர்கள். கொஞ்சம் கொஞ்சமாக அவை உங்களை அரித்துத் தின்றுவிடும்.குறைந்தபட்சம் மூன்று வருடங்களாவது ஒரே நிறுவனத்தில் பணியாற்றும் மனப்பாங்கை வளர்த்துக்கொள்ளுங்கள்இரவு அலுவலகத்தில் இருந்து வந்ததும் வெதுவெதுப்பான வெந்நீரில் குளித்துவிட்டு, சாப்பிடும் வழக்கத்தை மேற்கொண்டு பாருங்கள். உடலும், மனமும் ரிலாக்ஸ் ஆவது உறுதி.இரவு எத்தனை மணிக்கு அலுவலகத்தில் இருந்து வந்தாலும், அடுத்த 1 மணி நேரத்துக்குள் தூங்குவதைப் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.அதுபோல வீட்டுக்கு வந்ததும் செருப்பை அல்லது ஷூவை வெளியே வைத்துவிட்டு வருவதைப்போல, மற்ற எல்லா நினைவுகளையும் வெளியே விட்டுவிட்டு வீட்டுக்குள் நுழைய வேண்டும். வீட்டையும் இரண்டாவது அலுவலகமாக மாற்றிக்கொள்ளக் கூடாது.இரவு 9 மணிக்கு மேல் வீடு திரும்பினால், மொபைல், லேப்டாப் ஆகியவற்றை தூர வைத்துவிடுங்கள்.கூடுமானவரை அலுவலகங்களில் இருந்து வீடு திரும்பும்போது குறைந்தபட்சம் சக ஊழியர் யாருடனாவது பேசிக்கொண்டே வீடு திரும்பலாம். அன்றைய தினம் அலுவலகத்தில் நடந்த மனதை நெருடும் விஷயங்களை பகிர்ந்துகொண்டாலே, பாதி ஸ்ட்ரெஸ் குறையும். தயவுசெய்து பர்சனல் விஷயங்களைத் தவிர்க்கவும்.ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் மது, சிகரெட்டுக்கு இணையாக போதை ஏற்றுபவை. அதில் உட்கார்ந்துவிட்டால் எழுவது என்பது மிகவும் கடினம். எனவே, கூடுமானவரை இரவு 9 மணிக்குப் பிறகு அவற்றில் நாட்டம் கொள்ள வேண்டாம்.தினமும் ஏதேனும் ஒரு புத்தகம் படிக்கலாம். அல்லது பிடித்த ஹாபியைச் செய்யலாம். பாடுவது, பாட்டு கேட்பது, எழுதுவது என்று எதையாவது ஒன்றை கட்டாயமாக்கிக்கொள்ளலாம். இதன் காரணமாக மனதில் ஒரு நிறைவு ஏற்படும். நல்ல தூக்கம் வரும்.வீட்டுக்கு வந்ததும் அம்மா, அப்பா, கணவன், மனைவி இவர்களில் ஒருவரிடமாவது மனம் விட்டுப் பேச வேண்டும். கடவுள் பக்தி இருந்தாலும், இல்லாவிட்டாலும் வாரம் ஒரு முறை கோயிலுக்குச் சென்றுவரலாம். அந்த அமைதி மனதில் மாற்றத்தை உண்டு செய்யும். வாரம் ஒரு சினிமா அல்லது பீச் எங்காவது செல்லலாம். எதுவாக இருந்தாலும் வீட்டு மனிதர்களுடன் செல்லவும். அலுவலக நண்பர்களைத் தவிர்த்துவிடவும்.மாதம் ஒருமுறை நம் விருந்தினர்கள் வீடுகளுக்குச் சென்றுவரலாம். அக்கா, சித்தி, பெரியப்பா, மாமா, மாமி என்று உறவு முறை சொல்லி அழைத்துப் பேசுவோம்.அதுபோல வார விடுமுறை நாட்களில் மாறுதலுக்காக வீட்டு வேலைகளைச் செய்யலாம். மனம் ஒன்றிச் செய்யும்போது மனதில் உங்களை அறியாமல் ஒரு நிறைவும் சந்தோஷமும் உண்டாகும்.எனக்குத் தெரிந்த சிறிய அளவில் பிசினஸ் செய்யும் ஒருவர் ஞாயிற்றுக்கிழமையை 'ஒய்ஃப் டே’ என்று சொல்லுவார். ஏனெனில், அன்று முழுவதும் அவர் வீட்டுக்காகவே தன் நேரத்தை செலவழிப்பார். இது நல்ல ஐடியாவாக இருக்கிறதல்லவா?இங்கு நான் சொன்ன அத்தனை விஷயங்களையும் நான் என் வாழ்க்கையில் பின்பற்றுகிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறேன். நீங்களும் முயற்சித்துப் பாருங்களேன். ஆரம்பத்தில் கஷ்டமாகத்தான் இருக்கும். பலன் கிடைக்கும்போது சந்தோஷம் பலமடங்காகும்.''- பாலகிஷன்படங்கள்: கே.ராஜசேகரன்மாடல்: வைஜெயந்தி,சென்சாய் ராஜேஷ்குமார்
|
|
| |
RAWALIKA | Date: Wednesday, 05 Mar 2014, 9:49 AM | Message # 12 |
![RAWALIKA](/avatar/06/041510.jpg) Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
| இதை நோட் பண்ணுங்க!ஃபேஸ்-புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் யாராவது மர்ம நபர்கள் பெண்களைப் பற்றி ஆபாச போட்டோவையோ செய்திகளையோ பரப்பினால், அதுபற்றி சென்னை சைபர் க்ரைம் போலீஸ் பிரிவுக்குத் தகவல் தெரிவிக்கலாம். வேப்பேரியில் உள்ள கமிஷனர் ஆபீஸில் உதவி கமிஷனர் ஜான்ரோஸ் தலைமையில் இந்தப் பிரிவு செயல்படுகிறது.இதன் போன் நம்பர்: 044 23452350.ஏதேனும் குற்றங்கள் என்றால், அவசர உதவி போன் எண் 100-க்கு தகவல் சொல்லலாம். அல்லது, எஸ்.எம்.எஸ். என்றால், 95000 99100 எண்ணுக்குத் தகவல் அனுப்பலாம்.ஐ.டி. நிறுவனங்கள் அதிகம் உள்ள ஏரியாக்களின் காவல் நிலைய போன் நம்பர்கள்.கேளம்பாக்கம்: 044 27474274.தாழம்பூர்: 044 274 35 301.நவீன கொத்தடிமைகள்! சாஃப்ட்வேர் கம்பெனிகளில் பெண்களுக்கு வாய்ப்புகளும் ஆபத்துகளும் அதிகம். பணியிடத்திலும் பணி முடிந்து திரும்பும்போதும் பல்வேறு சவால்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. ஐ.டி. துறையினர் சிலரிடம் பேசினோம்.அருணகிரி: ''ஐ.டி. கம்பெனிகளில் வேலைபார்க்கும் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து சமீபத்தில் சர்வே நடத்தினோம். இந்த சர்வே முடிவுகள் இன்னும் முழுமையாக வரவில்லை. வந்துள்ள முடிவுகளில் 90 சதவிகிதம் பேர் பாதுகாப்பு இல்லை என்றே தெரிவித்துள்ளனர். டியூட்டி நேரம் என்று எதுவும் ஐ.டி. கம்பெனிகளில் பின்பற்றப்படுவது இல்லை.''கேசவன்: ''சிறுசேரி சிப்காட்டில் பஸ்ஸுக்குக் காத்திருக்கக்கூட நிழற்குடை கிடையாது. ஆபீஸை விட்டு வெளியே வந்த பிறகு அவசரத்துக்கு ஒதுங்க ஒரு கழிவறை வசதி அந்தப் பகுதியில் இல்லை. தினமும் வேலை முடிந்து, ஆள் அரவமற்ற பகுதியில் நடந்து வரும்போது வழிப்பறி சம்பவங்கள் நடப்பது வாடிக்கையாகிவிட்டது. பெண்களை இரவு அதிக நேரம் பணியமர்த்துவதைத் தவிர்க்க வேண்டும். இதைக் காரணம் காட்டி அவர்களின் வேலைவாய்ப்பை பறிக்கக் கூடாது.''ஜிஜேந்திரன்: ''பெரும்பாலும் அமெரிக்கா, லண்டனை மையப்படுத்தியே ஐ.டி. நிறுவனங்களும், பி.பி.ஓ-க்களும் செயல்படுகின்றன. இதனால் இரவு நேரங்களில்தான் எங்களுக்கு அதிக வேலை. மேலும் ஐ.டி. நிறுவனங்களில்தான் போட்டுக் கொடுக்கும் பழக்கம் அதிகமாக உள்ளது. நண்பனாக இருந்தாலும் டீம் லீடரிடம் போட்டுக் கொடுக்க தவறுவதுஇல்லை. இதனால் மனம்விட்டுப் பேச முடியாமல் ஊழியர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர்.''- மகேஷ், சிபி
|
|
| |
RAWALIKA | Date: Thursday, 06 Mar 2014, 12:56 PM | Message # 13 |
![RAWALIKA](/avatar/06/041510.jpg) Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
| மீத்தேன் அரக்கன்! காவிரி டெல்டா பாலைவனமாகும் பயங்கரம் பாரதி தம்பிஓவியங்கள்: ஹாசிப்கான், படங்கள்:கே.குணசீலன்
பிரதமர் மன்மோகன்சிங் கடந்த ஆண்டு, 'விவசாயிகள், விவசாயத்தைக் கைவிட்டுவிட்டு வேறு வேலைகளுக்குச் செல்வதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்’ என்று சொன்னார். பொருளாதார மேதையின் அந்த வார்த்தைகளுக்கு ஆழமான பொருள் இருக்கிறது என்பது இப்போதுதான் புரிகிறது. மீத்தேன் வாயுத் திட்டம் என்ற பெயரில், வளம் மிகுந்த காவிரி டெல்டா படுகையை நரபலி கொடுத்து, சுமார் 50 லட்சம் உழவர்களை காவிரிப் படுகையில் இருந்து துரத்தியடித்து, தெற்கே ஒரு தார் பாலைவனத்தை உருவாக்கத் துடிக்கிறது மத்திய அரசு.கற்பனைக்கு அப்பாற்பட்ட பிரமாண்ட பரப்பளவில் அறிவிக்கப்பட்டுள்ள மீத்தேன் வாயுத் திட்டம், தமிழகத்தின் நெற்களஞ்சியத்தைக் காவு வாங்கக் காத்திருக்கிறது. தாழடி, குருவை, சம்பா என்று பட்டம் பார்த்து வெள்ளாமை செய்த உழவர்கள், இன்று இருக்கும் நிலம் பறிபோகுமோ, ஊரைவிட்டுத் துரத்தி அடிப்பார்களோ என்று பதைபதைத்துக் கிடக்கிறார்கள். திட்டத்தின் ஆரம்பகட்ட வேலைகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், டெல்டா பகுதி அடுத்த சில ஆண்டுகளுக்கான போராட்டக் களமாக மாறுவதற்கான அனைத்து அறிகுறிகளும் இப்போதே தென்படுகின்றன. மீத்தேன் வாயுத் திட்டம் என்பது என்ன?
மீத்தேன் வாயு என்பது எரிவாயு மற்றும் மின் உற்பத்திக்குப் பயன்படுகிறது. இது பல்வேறு வடிவங்களில் நமக்குக் கிடைக்கிறது. சாண எரிவாயுகூட மீத்தேன்தான். பூமிக்கு மேலே கழிவுப்பொருள்களில் இருந்து மீத்தேன் கிடைக்கிறது. பூமிக்கு அடியில் பாறைப் பரப்பில் மீத்தேன் இருக்கிறது. அப்படி நாகை, திருவாரூர், தஞ்சாவூர்... ஆகிய மாவட்டங்களின் நிலப்பகுதியின் கீழ் ஏராளமான மீத்தேன் வாயு உள்ளதாகவும், அதை எடுத்து மின் உற்பத்தி செய்யப்போவதாகவும் சொல்கிறது மத்திய அரசு. இதற்கான ஒப்பந்தம், ஹரியானாவில் பதிவுசெய்யப்பட்ட கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் (Great eastern energy corporation Ltd.) என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒப்பந்தம் என்றால் ஓரிரு ஆண்டுகளுக்கு அல்ல... அடுத்த 100ஆண்டுகளுக்கு!
பாகூர் தொடங்கி ராஜமன்னார்குடி வரையிலும் உள்ள 1,64,819 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்துவிரிய இருக்கும் திட்டம் இது. இந்த நிலப்பரப்பின் கீழே சுமார் 6.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள மீத்தேன் வாயு இருப்பதாக தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனம். இந்தத் தொகைக்காக இவ்வளவு பிரமாண்டமான நிலப்பரப்பைப் பலிகொடுக்கத் துணிவார்களா? இல்லை. அவர்களுக்கு வேறுவிதமான பிரமாண்ட நோக்கங்கள் இருக்கின்றன.காவிரிப் படுகையின் கீழே மாபெரும் நிலக்கரிச் சுரங்கத்தைக் கண்டறிந்துள்ளனர். முதல் 35 ஆண்டுகளுக்கு மட்டும்தான் மீத்தேன் வாயு. அதைத் தொடர்ந்து மீதம் உள்ள ஆண்டுகளுக்கு நிலக்கரியைத்தான் அகழ்ந்து எடுக்க இருக்கிறார்கள். இவை அனைத்தும் கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனத்தின் இணையதளத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால், செய்திகளில் மீத்தேன் மட்டுமே முன்னிலைப்படுத்தப்படுகிறது. இது ஏன் என்பதை விளக்குகிறார் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பைச் சேர்ந்த கும்பகோணம் இரணியன்.
''நிலக்கரிச் சுரங்கத்தின் பாறை இடுக்குகளில் உள்ள மீத்தேன் எரிவாயுவை எடுக்கவில்லை என்றால், தீ விபத்து ஏற்படுகிறது. இது நிலக்கரி அகழ்வைத் தாமதப்படுத்தி லாபத்தைக் குறைக்கிறது. இதை நிறுவனங்கள், தங்கள் சொந்த அனுபவத்தில் இருந்து உணர்ந்துள்ளன. ஆகவே, உள்ளே இருக்கும் மீத்தேன் எரிவாயுவை எடுத்தால்தான் தங்கு தடையின்றி நிலக்கரியை எடுக்க முடியும்.
இதில் என்ன பிரச்னையெனில், நாம் வயல்களில் போர்வெல் அமைப்பது போல மீத்தேன் எடுத்துவிட முடியாது. அதற்கு பூமிக்கும் கீழ் உள்ள பாறைப் பரப்பை உடைக்க வேண்டும். பூமியின் உள்ளே கிலோமீட்டர் கணக்கில் துளையிட்டு வேதிக் கரைசல்களை உயர் அழுத்தத்தில் செலுத்தி பாறைகளை உடைக்க வேண்டும். இதற்கு 'நீரியல் விரிசல் முறை’ (Hydraulic fracturing) என்று பெயர். இதற்கு முன்பாக அந்த இடத்தில் நிலத்தடி நீரை முற்றிலும் வெளியேற்றினால்தான் திட்டத்தையே செயல்படுத்த முடியும். நிலத்தடி நீரை வெளியேற்றிவிட்டால், அப்புறம் என்ன இருக்கிறது? 35 ஆண்டுகள் இவர்கள் மீத்தேன் எடுத்து முடிப்பதற்குள் இந்தப் பகுதியின் நிலத்தடி நீர்வளம் நாசமாக்கப்பட்டு பூமியின் கீழ் ரசாயனக் கழிவுகள் செலுத்தப்பட்டு, பூமியின் மேலே நிலம் நஞ்சாகிவிடும். மக்கள் வேறு வழியே இல்லாமல் நிலங்களைப் பாதி விலைக்கு விற்றுவிட்டு வெளியேறுவார்கள். பிறகு, பெரிய எதிர்ப்புகள் எதுவும் இல்லாமல் நிலக்கரிச் சுரங்கம் தோண்டுவார்கள். இதுதான் அவர்களின் திட்டம்!
உடனடித் திட்டம் மீத்தேன் என்பதால், அதன் பெயரை மட்டும் வெளியில் சொல்கின்றனர். நமக்கும் இதை நிறுத்தினாலே அதையும் நிறுத்தியது போலதான் என்பதால் மீத்தேன் குறித்து மக்களிடம் பிரசாரம் செய்கிறோம். ஆனால், இந்த அரசும் நிறுவனங்களும் பிணந்தின்னி கழுகுகளைப் போல காவிரிப் பாசனப் பகுதியில் இருக்கும் மதிப்பிட முடியாத பணமதிப்புக்கொண்ட நிலக்கரிக்காக வலம்வந்துகொண்டிருக்கின்றன. அவர்களின் நயவஞ்சகத்தையும், இந்தத் திட்டத்தின் பிரமாண்டத்தையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்!'' என்று ஆவேசமும் ஆற்றாமையுமாகப் பேசுகிறார் இரணியன்.
வெளிநாடுகளில் என்ன நடக்கிறது?
மீத்தேன் வாயு எடுக்கப்படும் உலகின் ஏனையப் பகுதிகளில் நிலவரம் என்ன என்று தேடிப்பார்த்தால், அதிர்ச்சியே மிஞ்சுகிறது! அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா... உள்ளிட்ட சில நாடுகளில் மீத்தேன் வாயு எடுக்கின்றனர். ஆனால், இந்த நாடுகள் அனைத்திலுமே மக்கள் அடர்த்தி குறைவு. மக்கள் வசிக்காத நிலப்பரப்பு அதிகம். ஆகவே, அப்படிப்பட்ட இடங்களில் அவர்கள் மீத்தேன் வாயுவை எடுக்கின்றனர். ஆனால், காவிரி டெல்டாவில் ஊரும் வயல்வெளியும் இணைந்தே இருக்கின்றன. தற்போது ஒப்பந்தம் பெற்றுள்ள கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனம், காவிரிப் படுகையை அமெரிக்காவின் பவுடர் ரிவர் பேசின் (Powder River Basin) என்ற பகுதியின் மீத்தேன் படுகையுடன் ஒப்பிட்டுள்ளது.
அங்கு என்ன நிலை என்று பார்த்தால், மீத்தேன் வாயுத் திட்டம் வந்த பிறகு நிலத்தடி நீர் அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்டது. நிலப்பகுதி, கடுமையான சூழல் கேடுகளுக்கு ஆளாகியுள்ளது. புதிய நோய்கள் மக்களைத் தாக்குகின்றன. வீட்டின் தண்ணீர்க் குழாயில் மீத்தேன் வாயுவும் சேர்ந்து வருகிறது. தண்ணீரைப் பற்றவைத்தால் எரிகிறது. ஏராளமான திடீர் தீ விபத்துகள் நடைபெற்றுள்ளன. இந்தத் திட்டத்தை உடனே நிறுத்த வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் போராடிவருகின்றனர்.
நம் ஊரைப் பொருத்தவரை ஏற்கெனவே நிலத்தரகர்கள் மூலமாக வேறு, வேறு பெயர்களில் வாங்கிய நிலங்களில் திடீர், திடீர் என வந்து குழாய் பதிக்கிறார்கள். 3 அடி விட்டம் உள்ள குழாயை 60 அடி ஆழத்துக்கும் சில இடங்களில் 500 அடி ஆழத்துக்கும் பதிக்கிறார்கள். வேதாரண்யம் அருகே 1,000 அடிக்கும் மேல் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதில் அடுத்தகட்டமாக என்ன செய்யப்போகிறார்கள் என்று தெரியவில்லை. எதுவும் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டு செய்யப்படுவது இல்லை என்பதால், அனைத்தும் மர்மம்தான். அதே நேரம் இந்தத் திட்டத்தின் அபாயம் குறித்த விழிப்பு உணர்வும் மக்களிடையே வேகவேகமாகப் பரவி வருகிறது.
|
|
| |
RAWALIKA | Date: Thursday, 06 Mar 2014, 1:00 PM | Message # 14 |
![RAWALIKA](/avatar/06/041510.jpg) Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
| குறிப்பாக, 'இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வார் உயிருடன் இருந்தபோது, தனது கடைசி நாட்களை மீத்தேன் திட்ட எதிர்ப்பில்தான் செலவிட்டார். பல ஊர்களில் அவரது தலைமையில், மக்கள் குழாய்களைப் பிடுங்கி எறிந்தனர். இப்போதும் அது தொடர்கிறது. ஆனால் அரசாங்கமோ, மிகவும் கள்ளத்தனமாக ஒ.என்.ஜி.சி-யின் (Oil and Natural Gas Corporation) பெயரால் குழாய் பதிக்கும் பணிகளை மேற்கொள்கிறது!
மீத்தேன் எதிர்ப்புத் திட்டக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மயிலாடுதுறை பேராசிரியர் ஜெயராமனிடன் பேசியபோது...
''நாகை மாவட்டம் நரிமணம் பகுதியில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் பெட்ரோலியம் எடுப்பது அனைவருக்கும் தெரியும். இப்போது பல இடங்களில் கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனத்துக்கான குழாய் பதிப்பு வேலைகள், ஓ.என்.ஜி.சி-யின் பெயரில் நடைபெறுகின்றன. நரசிங்கம்பேட்டை, திருநகரி என்று பல இடங்களில் இப்படிச் செய்கிறார்கள். இந்தத் திட்டத்தைப் பொறுத்தவரை ஓ.என்.ஜி.சி-யும், கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனமும் இணை செயற்பாட்டாளர்கள் (co-operators). ஆகவே, அவர்களுக்காக இவர்கள் ஆரம்பகட்டப் பணிகளைச் செய்து தருகின்றனர். அதனால் ஓ.என்.ஜி.சி. பெயரில் நடந்தாலும் அது மீத்தேன் திட்டத்துக்குத்தான் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்'' என்கிறார்.
ஏற்கெனவே மேற்கு வங்க மாநிலம் ராணிகஞ்ச் என்ற இடத்தில் நடைபெற்றுவரும் நிலக்கரி மற்றும் எரிவாயு அகழ்வுப் பணிகளில் ஓ.என்.ஜி.சி-யுடன், கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனமும் இணைந்துதான் செயல்பட்டு வருகிறது. அங்கு, மொத்தப் பணிகளில் 25 சதவிகிதத்தை கிரேட் ஈஸ்டர்ன் செய்கிறது. ஆனால், டெல்டா பகுதியில் பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி. செயல்பட்டு வருகிறது என்றபோதிலும், முழு திட்டமும் கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனத்துக்கே வழங்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் இந்தத் திட்டத்தை தற்போதைய நிலையில் 'மன்னார்குடி பிளாக்’ என்று அழைக்கிறது.
காவிரிக்கும் மீத்தேனுக்கும் என்ன தொடர்பு?
இந்தத் திட்டத்தின் வேறொரு கோணத்தை விவரிக்கிறார் தஞ்சாவூரைச் சேர்ந்த தாளாண்மை உழவர் இயக்கத்தின் தலைவர் திருநாவுக்கரசு.
''35 ஆண்டுகளில், 6.25 லட்சம் கோடி மதிப்புள்ள மீத்தேன் வாயுவை எடுக்க முடியும் என்கிறார்கள். ஆனால், ஒவ்வோர் ஆண்டும் இந்தப் பகுதியில் விளையும் நெல், உளுந்து, எள், பாசிப்பயறு, கடலை, கரும்பு, வாழை, கம்பு, சோளம் போன்ற பயிர்களின் பண மதிப்பைக் கணக்கிட்டால், அது எங்கேயோ இருக்கும். விவசாயத்தை நம்பி நடைபெறும் இதரத் தொழில்களையும், கால்நடைகளின் மதிப்பையும் சேர்த்துக் கணக்கிட்டால், 35 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 35 லட்சம் கோடி மதிப்புக்கு இங்கே விவசாயம் நடைபெறும். ஆகவே, லாபம் என்ற அடிப்படையில் பார்த்தாலும் இது மிகவும் முட்டாள்தனமான திட்டம்.
மேலும், இவர்கள் நிலத்தை சுமார் 6,000 மீட்டர் ஆழத்துக்கு அகழ்வு செய்ய அனுமதி பெற்றுள்ளனர். அதாவது பூமிக்கும் கீழே ஆறு கிலோமீட்டர் தூரத்துக்குத் துளை தோண்டி பாறைகளை உடைத்து, நிலத்தடி நீரை வெளியேற்றி மீத்தேன் எடுக்கப்போகின்றனர். அதன் பாதிப்பு யூகிக்க முடியாததாக இருக்கும். நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்தின் பாதிப்பு சேர்வராயன் மலை வரையிலும் இருப்பதாகச் சொல்கின்றனர். எனில், இவர்களின் அகழ்வுப் பணியால் தஞ்சாவூர் பெரிய கோயிலும், கங்கைகொண்ட சோழபுரமும் சரிந்துவிழும் வாய்ப்பு இருப்பதை முற்றிலும் மறுக்க முடியாது'' என்று அதிரவைக்கிறார்.
திருநாவுக்கரசு குறிப்பிடும் மற்றொரு கோணம் மிகவும் முக்கியமானது. இந்தியாவின் வெவ்வேறு பிராந்தியங்களின் நதிநீர் சிக்கல்கள் சட்டபூர்வமாகவோ, பேச்சுவார்த்தைகள் மூலமோ, வளர்ச்சித் திட்டங்கள் மூலமோ தீர்த்துவைக்கப்படுகின்றன. ஆனால், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக காவிரி நீர் பிரச்னை மட்டும் ஏன் தீராத சிக்கலாகப் 'பராமரிக்கப்படுகிறது’? காவிரிப் படுகையில் பெட்ரோலியப் பொருள்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டதற்கும், காவிரி நீர் கடைமடை வந்து சேராததற்கும் உள்ள இணைப்பு என்ன? 'இனிமேலும் விவசாயம் செய்து பிழைக்க முடியாது’ என இன்று உருவாகியுள்ள மனநிலை இயல்பானதா? விவசாயிகள் தாங்களாகவே விவசாயத்தைக் கைவிட்டு விலகிச் செல்லும் முடிவை எடுப்பதற்குப் பின்னால் அரசின் பாத்திரம் உண்டா, இல்லையா? இந்தக் கேள்விகள் முக்கியமானவை. இன்றைய சிக்கல்களை, ஒரு விரிந்த கோணத்தில் புரிந்துகொள்ள உதவுபவை. இப்போதைய நிலையில்கூட, நல்ல விலை கொடுத்தால் நிலத்தை விற்றுவிட பலர் தயாராக இருப்பதுதான் அவர்களின் பலம்!
தேர்தலுக்குப் பிறகு என்னவாகும்?
இந்தத் திட்டத்துக்காக, மூன்று மாவட்டங்களிலும் சேர்த்து சுமார் 2,000 இடங்களில் கிணறுகள் அமைத்து அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள இருக்கின்றனர். அதாவது, எந்தப் பக்கம் திரும்பினாலும் இந்தத் திட்டத்தின் செயல்பாடுகள் மட்டுமே நிறைந்திருக்கும். மீத்தேன் வாயுக் குழாய்கள் குறுக்கும் நெடுக்குமாக வயல்வெளிகளில் பாய்ந்தோடும். இதற்காக ஒவ்வோர் இடத்திலும் ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கர், ஐந்து ஏக்கர் என்று இடத்துக்குத் தகுந்தாற்போல நிலங்களை வாங்கியுள்ளனர். திட்டத்தின் செயல்பாடு தற்போது சற்றே மெதுவாக நடைபெற்று வருகிறது. ஆனால், இந்த மிதவேகம் தேர்தலுக்கானது. நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அரசின் அசுர பலத்துடன் திட்டம் செயல்படுத்தப்படும் வாய்ப்புகளே அதிகம்!
''அப்படித்தான் நாங்களும் யூகிக்கிறோம்'' என்ற பேராசிரியர் ஜெயராமன் இதன் அரசியல் கோணத்தை விளக்கினார்.
''இந்த மீத்தேன் வாயுத் திட்டத்துக்காக 2010-ல் கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது. 2011-ல் அப்போதைய மாநில தி.மு.க. அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 'மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அனுமதி உள்பட அனைத்து அனுமதிகளையும் பெற்று நாங்களே திட்டம் செயல்படுத்துவதை உறுதி செய்வோம்’ என்றது அந்த ஒப்பந்தம். அதன் பிறகு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார். திட்டத்துக்கு எதிர்ப்பு இருப்பதைப் பார்த்ததும் கடந்த ஆண்டு ஜூலை மாதம், ஒரு நிபுணர் குழுவை அமைத்து ஆராய்ந்து மூன்று மாதங்களில் அறிக்கை அளிப்பார்கள் என்று சொன்னார். அவர்கள் ஆராய்ந்தார்களா... இல்லையா? என்று தெரியாது. இன்னமும் அறிக்கை வரவில்லை. ஆனால், அந்த நிபுணர் குழுவில் எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளையும் இருக்கிறது. அமெரிக்கா, நைட்ரஜன் குண்டு தயாரிக்க வைத்திருந்த வேதிப்பொருள்களை நைட்ரேட் உப்பாக்கி இங்கு கொண்டுவந்து பசுமைப் புரட்சி என்ற பெயரில் மண்ணை மலடாக்கியவர் சுவாமிநாதன். ஆகவே, அறிக்கையின் முடிவு எப்படி இருக்கும் என்பதை இப்போதே கணிக்க முடிகிறது.
எங்களைப் பொறுத்தவரை அனைத்து அரசியல் கட்சிகளுமே மக்களுக்கு விரோதிகளாகத்தான் செயல்படுகின்றன. நீதிமன்றங்கள்கூட அரசின் கொள்கை முடிவுகளை எதிர்ப்பது இல்லை. இப்போது நாங்கள் நம்பியிருப்பது மாபெரும் மக்கள் சக்தியை மட்டும்தான். குழாய் அமைக்கப்படும் ஒவ்வோர் ஊரிலும் 2,000 பேர் திரண்டு அதைத் தடுத்து நிறுத்துவது மட்டுமே எங்கள் திட்டம். ஏனெனில், அரசாங்கமும் சட்டமும் அதிகாரபூர்வமாக எங்கள் வாழ்வாதாரத்தை அழிக்க முயற்சிக்கின்றன. அதைத் தட்டிக்கேட்பது எங்கள் கடமை!'' என்று நம்பிக்கைத் தெரிவிக்கிறார் அவர்.
கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனத்தின் அலுவலகம் எதுவும் தமிழ்நாட்டில் இல்லாத நிலையில் அவர்கள் தரப்பின் விளக்கம் பெறுவதற்காக மின்னஞ்சல் வழியே தொடர்புகொண்டோம். 'விரைவில் உங்களைத் தொடர்புகொள்கிறோம்’ என பதில் வந்த நிலையில், இந்த இதழ் அச்சுக்குச் செல்லும் வரையிலும் எந்தப் பதிலும் வரவில்லை.
கருணாநிதி, திருவாரூர்க்காரர். அ.தி.மு.க-வில் மன்னார்குடிக்காரர்களின் ஆதிக்கம்தான் இன்னும் இருக்கிறது. இருந்தாலும் என்ன... பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக்காடாகத் தங்கள் சொந்த ஊர்களைக்கூட திறந்துவிடுவதில் இவர்களுக்கு சிறு தயக்கமும் இல்லை. ஆனால், உழவர்களைப் பொறுத்தவரை இது 'வாழ்வா, சாவா?’ போராட்டம். இதில் விட்டுக்கொடுத்தால் அநாதைகளாகப் பஞ்சம் பிழைக்க ஊர், ஊராகத் திரியவேண்டி இருக்கும். வண்டல் மண்ணின் வாசம் நிறைந்த மருத நிலத்தின் உழவர்கள், தங்களின் பல்லாயிரம் ஆண்டு கால விவசாயப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியைத் தக்கவைக்க நடத்தப்போகும் இறுதிப் போர் இது!
|
|
| |
RAWALIKA | Date: Thursday, 06 Mar 2014, 1:02 PM | Message # 15 |
![RAWALIKA](/avatar/06/041510.jpg) Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
| கூடங்குளம் தரும் படிப்பினை!
சமகாலத்தில் இதே மின்சாரத்தை முன்வைத்து நாம் எதிர்கொள்ளும் பெரும் போராட்டங்களில் ஒன்று கூடங்குளம். ஆனால், கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக உண்ணாவிரதம் தொடர்ந்தாலும்கூட நோக்கத்தில் வெற்றி அடைய முடியவில்லை. மின் உற்பத்தியும் பகுதி அளவில் தொடங்கிவிட்டது. இந்த நிலையில் கூடங்குளம் போராட்டத்தில் இருந்து மீத்தேன் திட்ட எதிர்ப்புப் போராட்டக் குழுவினரும், டெல்டா பகுதி மக்களும் சில படிப்பினைகளைப் பெறவேண்டியது அவசியம்.
இதைப் பற்றி பேசிய பேராசிரியர் ஜெயராமன், ''மீத்தேன் திட்டத்தைப் பொறுத்தவரை, பரவலாக ஆயிரக்கணக்கான இடங்களில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தியாக வேண்டும். அந்தந்தப் பகுதி மக்களின் எழுச்சி இல்லாமல் இதை முறியடிக்க முடியாது. அதனால் மக்களிடம் இதுகுறித்த விழிப்பு உணர்வையும், இதன் அரசியல் நியாயத்தையும் எடுத்துச் செல்கிறோம். மேலும், போராட்டத்தை லாபகரமாக மாற்றவும் மக்கள் ஒற்றுமையைச் சிதைக்கவும் முயலும் என்.ஜி.ஓ. குழுக்களைத் தடுத்து நிறுத்துவதிலும் உறுதியாக இருக்கிறோம்!'' என்றார்.
கிராம மக்கள் செய்ய வேண்டியது என்ன?
மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு மற்றும் மேலும் பல அமைப்புகள் சார்பில் டெல்டா பகுதிக் கிராமங்களில் தொடர்ச்சியான விழிப்பு உணர்வுப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவர்கள்... கிராம மக்கள் செய்யவேண்டிய சில விஷயங்களைக் குறிப்பிடுகின்றனர்.
கிராமத்தினர் உடனடியாக ஒரு குழு அமைக்க வேண்டும். அவர்கள் உள்ளூரின் நில விற்பனையைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். கனரக இயந்திரங்கள் குழாய் அமைக்க வரும்போது, 'அவர்கள் யார்?’, 'நோக்கம் என்ன?’ என்று விசாரிக்க வேண்டும். ஒருவேளை, சரியான தகவல் தெரிவிக்காமல் குழாய் அமைத்தால், மக்களைத் திரட்டி முடக்க வேண்டும். கிராமசபா கூட்டத்தில், 'எங்கள் கிராம எல்லைக்குள் இந்தத் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம்’ என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இந்தத் திட்டத்தை தடுத்து நிறுத்துவோம் என்பதை ஒரு வாக்குறுதியாகக் கொடுத்து, ஓட்டு வாங்க நினைக்கும் அரசியல்வாதிகளைப் புறக்கணிக்க வேண்டும்!
|
|
| |
RAWALIKA | Date: Saturday, 08 Mar 2014, 7:52 PM | Message # 16 |
![RAWALIKA](/avatar/06/041510.jpg) Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
| திருமண வாழ்க்கை திருப்தியாக இருக்கிறதா..?
தமிழக பெண்களிடம் ஒரு அதிரடி சர்வே!
கட்டுரை : அவள் விகடன் டீம்படங்கள் : வீ.சிவக்குமார், தே.தீட்ஷித், ஜெ.பாரதி , எ.கிரேசன் எபினேசர், பா.வேலுமணி, கு.கார்முகில்வண்ணன்
'அவள் விகடன்' 400-வது இதழுக்காக, 'திருமண வாழ்க்கை எப்படி இருக்கிறது?' என்பது பற்றி தமிழகப் பெண்களிடம் ஒரு சர்வே செய்யலாம் என்று யோசித்த நாங்கள், 'சடசட’வென திட்டமிட்டு, 'பரபர’வென கேள்விகளைத் தயாரித்தோம். 'தமிழகம் முழுவதும் உள்ள பெண்களின் மன ஓட்டத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்' என்பதற்காக, சுமார் 1,000 பெண்களை நேரடியாக சந்தித்து, கேள்வித் தாள்களைக் கொடுத்து, பதில்களை வாங்குவது என்பதுதான் திட்டம்.பெண்களின் மனதை அத்தனை எளிதில் படித்துவிட முடியாது. குறிப்பாக, அவர்களுடைய மண வாழ்க்கை பற்றிய விஷயங்களை அவர்களுடைய மனதுக்கு நெருக்கமானவர்களால் மட்டுமே அறிந்துகொள்ள முடியும். அப்படிப்பட்ட அரிதான விஷயங்களை இந்த சர்வே மூலம் அவர்கள் எங்களோடு பகிர்ந்துகொண்டார்கள் என்பதை நினைக்கும்போது ஆச்சர்யமாக இருக்கிறது.
கிராமம், நகரம், மாநகரம் என மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்த சர்வேக்காக விகடன் குழும இதழ்களின் நிருபர்கள் மற்றும் மாணவப் பத்திரிகையாளர் படை... சென்னை, திருச்சி, கோவை, மதுரை, நெல்லை, விருதுநகர், ஈரோடு, கன்னியாகுமரி, தஞ்சாவூர், சேலம், காஞ்சிபுரம், கரூர், திண்டுக்கல், வேலூர், தூத்துக்குடி, கிருஷ்ணகிரி ஆகிய நகரங்கள் மற்றும் அவற்றின் கிராமங்களில் களமிறக்கி விடப்பட்டது. கேள்வித்தாள்களைக் கையில் வாங்கியதுமே... ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொருவித ரியாக்ஷன்தான்.
'என்னது... சர்வேயா...?' என்று விலகி ஓடியது வெகு சில பெண்களே..! 'சொல்லிட்டா போச்சு' என்று ஆச்சர்யத்தோடும், ஆவலோடும் வந்து நின்ற பெண்கள்தான் அதிகம். கேள்வித் தாளை வாங்கி, ஒவ்வொரு கேள்விக்கும் பதிலை ஃபில் செய்துகொண்டே வந்தவர்களில் பலர்... பதினோராவது கேள்விக்கு வந்ததும் 'ஷாக்' அடித்தாற்போல நிமிர்ந்து பார்த்து ஒருவித சங்கோஜத்துடன் நெளியவே...
'உங்களுடைய பெயர், முகவரி... என்று எதையும் தரத் தேவையில்லை. தயக்கமே இல்லாமல் டிக் அடிக்கலாம்' என்று எடுத்துக் கொடுக்க... அதன் பிறகே சின்னத் தயக்கத்துடன் கேள்விக்கு விடையளித்தார்கள்.
'தாம்பத்யம் பெரும்பாலும்... கணவரின் விருப்பம், இருவரின் விருப்பம், என் விருப்பம், கடமைக் காக’ என நான்கு பதில்களுடன் கூடிய கேள்வி தான் அது.
கன்னியாகுமரியில் நடந்த சர்வே அத்தனை சுவாரஸ்யம். சந்தோஷத்தோடு 'டிக்' அடித்துகொண்டே வந்த பெண்களில் சிலர், ஏழாவது கேள்வியைப் படித்ததும் (குழந்தைக்கு உணவு தருவது, தூங்க வைப்பது, படிக்க வைப்பது போன்றவற்றில் கணவரின் பங்கு? தினமும், நேரம் கிடைக்கும்போது, எப்போதாவது, பெரும்பாலும் இல்லை), வாய்விட்டு சிரித்தபடியே... ''உண்மையைச் சொல்லட்டுமா... 'கணவர் எங்களோட வேலைகள்ல பங்கெடுத்துகிட்டா நல்லா இருக்கும்'னு சுமையான பல தருணங்கள்ல யோசிச்சுருக்கோம். ஆனா, அறிவுக்கு தோணுற இந்த விஷயம்... மனசுக்கு தோணுறதில்லை. வழக்கமான பெண்கள் மனநிலைப்படி 'இதெல்லாம் நம்மோட வேலை... அவரை செய்ய விடக்கூடாது'னு நினைச்சு, நாங்களே இந்த வேலைகளை கொடுக்கறதில்லை. ஆனா, கணவரை விட்டுக்கொடுக்க முடியுமா சொல்லுங்க?'' என்றபடியே, 'நேரம் கிடைக்கும்போது' என்ற ஆப்ஷனை 'டிக்' செய்து அதிரவைத்தார்கள்.
ஒரு சில இடங்களில் கிடைத்த ரியாக்ஷன்கள் வேறுவிதமானவை. திருமணமானவர்கள், கணவனைப் பிரிந்தவர்கள் என்று இரண்டு தரப்பு பெண்களிடம் சர்வே எடுத்துக்கொண்டிருக்க, ''அட, எங்களுக்கும் கொடுங்க. கல்யாண லைஃப் எப்படி இருக்கும்னு அட்வான்ஸா நாங்க உங்களுக்கு சொல்லிடறோம்'' என்று கலாய்த்தபடியே வம்படி யாக சர்வே தாள்களை நம்மிடம் இருந்து பறித்த கல்லூரி மாணவிகள்... ஓவர் குறும்புதான். 'கணவரின் சம்பளத்தில் நீங் கள் விரும்பியதை வாங்க முடிகிறதா?' என்ற கேள்விக்கு 'ஆம்' என்று இந்த கேர்ள்ஸ் நிரப்பிக் கொடுத்தது காமெடியின் உச்சம்.
பின்குறிப்பு: இவர்களுடைய படிவங்களை கணக்கில் சேர்க்கவில்லை.
சேலத்தில் சர்வே ஷீட்டை வாங்கிய பெண்கள், கேள்விகளைப் படித்து தயக்கத்தோடு 'சார், ப்ளீஸ் மன்னிச்சுக்கோங்க' என்றபடியே மெதுவாக ஜகா வாங்கினார்கள். மிகவும் கஷ்டப்பட்டு பலரை சம்மதிக்க வைத்து சர்வேயை வாங்கவேண்டியதாக இருந்தது. சென்னையிலும் அதே நிலைதான். மெத்த படித்த வர்கள் நிரம்பிய ஏரியா, துணிச்சலோடு இருக்கும் பெண்கள் என்ற அடையாளப்படுத்தப்பட்டி ருக்கும் சென்னை பெண் கள்... 'தயங்கோ தயங்கு' என்று தயங்கினார்கள். சென்னையைப் பொறுத்த வரை, 'தாம்பத்யம் பெரும்பாலும்?' என்ற கேள்விக்கு 'இருவரின் விருப்பம்' என்ற ஆப்ஷனையே அதிகம் டிக் செய்தார்கள்.
'திருமணத்துக்கு முன்போலவே, தற்போதைய வாழ்வில் இயல்பாக இருக்க முடிகிறதா?' என்ற கேள்விக்கு 'இல்லை’ என்று நெற்றிப் பொட்டில் அடித்தாற் போல பதில் சொல்லி இருந்தார்கள் பல வாசகிகள். திருமணத்துக்குப் பிறகு சினிமா, கோயில், ஷாப்பிங் என்று மனைவிக்காக கிட்டத்தட்ட 50 சதவிகித கணவர்கள் நேரம் செலவழிப்பதில்லை என்கிற அதிர்ச்சியும் தாக்கியது இந்த சர்வேயில்!
அன்புக்குரிய வாசகிகளே... சர்வே முடிவுகள் ஏறக்குறைய இருந்தாலும், தாம்பத்ய வாழ்க்கை, திருமணத்துக்குப் பிந்தைய வாழ்க்கை என்று பலவற்றிலும் பெண்களின் எதிர்பார்ப்புகள் முழுமையாக நிறைவேறவில்லை என்பதையே காட்டுகின்றன!
இதைப் படிக்கும் ஆண்களே... உங்களுக்காகவும், உங்கள் குடும்பத்துக்காகவுமே ஓடோடிக் கொண்டிருக்கும் பெண்கள், உள்ளுக்குள் ளேயே வைத்து மறுகிக் கொண்டிருக்கும் பல விஷயங்கள்... இலைமறை காயாக இந்த சர்வே மூலமாக வெளிப்பட்டிருக்கிறது.
இதற்கான தீர்வு... உங்கள் கைகளில்தான்!
|
|
| |
RAWALIKA | Date: Tuesday, 11 Mar 2014, 8:57 AM | Message # 17 |
![RAWALIKA](/avatar/06/041510.jpg) Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
| காசு பார்க்கும் கருத்தரிப்பு மையங்கள்... சருகாகும் அப்பாவி பெண்கள்!
அதிர வைக்கும் ஸ்கேன் ரிப்போர்ட்சா.வடிவரசு, பொன்.விமலா, படம் : ப.சரவணகுமார்
''குழந்தை இல்லையா... இனி கவலை வேண்டாம்...'' என்று கூவி அழைக்கும் மருத்துவ நிகழ்ச்சிகள், பல தொலைக்காட்சிகளில் அரங்கேறிக் கொண்டுஇருக்கின்றன. பத்திரிகை முதல் இணையம் வரை இதற்கான விளம்பரங்களும் ஓயாமல் படபடத்தபடியே இருக்கின்றன. உச்சகட்டமாக, 60 வயதைத் தாண்டிய பாட்டி கர்ப்பமாக இருப்பது போலவும், அவர் சாலையைக் கடந்து செல்கையில் பலரும் அதை ஏதோ ஒரு அதிசய நிகழ்வாகப் பார்ப்பது போலவும் காட்சிஅளிக்கும் விளம்பரப் பதாகைகள் பலரின் கவனத்தையும் ஈர்க்கின்றன.
மாநகரங்கள்தான் என்றில்லை... தமிழகத்தின் சிறு நகரங்களில்கூட, டீக்கடை போல மலிந்து கிடக்கும் 'கருத்தரிப்பு மையங்கள்’ செய்யும் மருத்துவத்தில், சில பெண்களுக்கு குழந்தைகள் கிடைக்கின்றன. பலருக்கு உயிர் இழக்கும் அபாயமும் ஏற்படுகிறது. இது, இந்த வகை மையங்களின் மீது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த 'கருத்தரித்தல் மையங்களின்’ மருத்துவம் பற்றிய சீரியஸ் ஸ்கேன் ரிப்போர்ட் இது!
இயற்கை நிகழ்வை வலிந்து செயற்கையாக்கி..!
உடல்ரீதியாக சரியாக இருந்தும், சாதாரண சில காரணங்களால் கரு உருவாதல் தள்ளிப்போகும் தம்பதிகளைக்கூட, 'பேசாம ட்ரீட்மென்டுக்குப் போயிடலாம்...’ என்று மருத்துவமனைக்குப் படையெடுக்க வைத்துவிட்டன குழந்தையின்மை சிகிச்சை பற்றிய நிகழ்ச்சிகளும், விளம்பரங்களும். திருமணமானவர்களின் எதிர்பார்ப்பு, குழந்தையே என்பதைக் கருத்தில்கொண்டு, 'குழந்தையில்லை' என்பதை பெருங்குறையாக மிகைப்படுத்தி காசு பார்க்க நினைத்து, குழந்தை பிறப்பை பற்றிய ஆலோசனைகளையே அச்சுறுத்தலாக்கி விடுகிறார்கள் சில மருத்துவர்கள்.
திருமணம் ஆனவுடன் இயற்கையாக உடலுறவு வைத்துக்கொள்ளும் தம்பதிக்கு, குழந்தைப் பிறப்பில் பெரும்பாலும் சிக்கல்கள் இருப்பதில்லை. அதேசமயம் சிலருக்கு சிறு அளவில் ஏற்படும் சிக்கல்களைக்கூட பூதாகாரமாய் சித்திரித்துப் பெரிதுபடுத்தும் மருத்துவமனைகளும் தற்போது பரவலாகப் பெருகிக்கொண்டு வருவது உண்மை. விளைவு, இயற்கையாகவே நிகழ வாய்ப்புள்ள குழந்தைப்பேறு எனும் அந்த அற்புத நிகழ்வுக்கு, தேவையில்லாமல் பணத்தையும் நேரத்தையும் செலவழித்து, ஆரோக்கியத்தையும் கெடுத்துக்கொள் கிறார்கள் பலர்.
இப்படியெல்லாம்கூட நடக்கிறது!
சில மருத்துவமனைகள், குழந்தைப்பேறு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்திருக்கும் ஒரு பெண்ணின் மாதவிலக்கை, அந்தப் பெண்ணுக்கே தெரியாமல் சில மாத்திரைகள் கொடுத்து தள்ளிப்போடுகிறார்கள். அப்படி மாதவிலக்கு தள்ளிப் போனதை கர்ப்பம் என பொய்யாக தகவல் அளிக்க, சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு வாழ்வின் பயனை அடைந்துவிட்ட நெகிழ்ச்சி. பின்னர் சில தினங்களில் அந்தப் பெண்ணுக்கு மாதவிலக்கு ஏற்படும்போது, அதை கருக்கலைந்ததாக சொல்லிவிடுகிறார்கள். இருந்தாலும், இதுவரை கரு உருவாகாமலேயே இருந்த தன் வயிற்றில், இந்த மருத்துவமனைக்கு வந்த பின் கரு உருவாக்கம் நிகழ்ந்ததையே (?) பெரும் நம்பிக்கையாகக் கொண்டு, அவர்களின் நாடகம் அறியாமல் தொடர்ந்து அங்கேயே சிகிச்சையை (?) தொடரும் பரிதாபங்களும் நடக்கின்றன.
அதேமாதிரி விந்தணுவில் சிக்கல் இருக்கும் தம்பதியின் முறையான அனுமதியில்லாமல், தங்கள் மருத்துவமனைக்குப் பெயர் கிடைக்க வேண்டுமென்ற காரணத்தால், வேறு யாராவது ஒருவருடைய விந்தணுவை, 'கணவனின் விந்தணு' என பொய்யாகக் கூறி, அதை மனைவிக்கு புகுத்தி கருவுறச் செய்து காசு பார்க்கும் கீழ்த்தரமான மருத்துவமனைகள் இருப்பதாகவும், பெயர் வெளியிட விரும்பாத மருத்துவர்கள் அதிர்ச்சித் தகவல்களை அள்ளித் தெளிக்கிறார்கள்.
'குழந்தைப்பேறு என்பது சிக்கலான விஷயமா? அப்படி சிக்கல் இருக்கும்பட்சத்தில் அதற்கு லட்சக்கணக்கில் செலவு செய்தால் தான் தீர்வு கிடைக்குமா? குழந்தைப்பேறுக்காக எடுத்துக்கொள்ளும் சிகிச்சைகளின் ஆபத்து என்ன?’ என்பது உள்ளிட்ட அடுக்கடுக்கான கேள்விகளுடன் மருத்துவர்கள் சிலரை அணுகினோம்.
பெண்களைவிட, ஆண்களுக்கே பிரச்னை அதிகம்!
சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் பிரியதர்ஷினி, ''பொதுவாக குழந்தையின்மை என்ற பிரச்னை வரும்போது, காலங்காலமாக பெண்ணைத்தான் 'மலடி' என்று சொல்வார்கள். இப்போது குழந்தையின்மைக்கான காரணங்கள், பெண்ணைவிட ஆணுக்கே அதிகமாக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிலும் பெண்ணுக்கு இருக்கும் குறைபாட்டைத் தீர்ப்பதைவிட, ஆணுக்கான குறைபாட்டை தீர்ப்பதே அரிதாகவும் உள்ளது.
பெண்களைப் பொறுத்தவரை மாதவிடாய் ஒழுங்கின்மை, உடல் பருமன், ஹார்மோன் குறைபாடு, நீரிழிவு நோய், தரமில்லாத முதிர்ந்த கருமுட்டை, சுரப்பி கோளாறுகள் மாதிரியான காரணங்களால் கருத்தரிக்காமல் போகிறது. ஏற்கெனவே ஏதாவது அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதன் காரணமாகவும் கருத்தரிக்காமல் போக வாய்ப்பு உண்டு. இந்தக் குறைகளை ஆலோசனைகளாலும் மருந்துகளாலும் சரிசெய்யலாம். இறுதியாக, லேப்ராஸ்கோபி பரிசோதனையில் தொப்புளுக்கு அருகில் சிறு துளையிட்டு, டியூப் செலுத்தி, நீர்க்கட்டி, கருக்குழாய் அடைப்பு உள்ளிட்டவற்றை அறிந்து சிகிச்சை மேற்கொள்ளப்படும். ஆண்களைப் பொறுத்தவரை விந்தணு குறைபாடு, விறைப்புத்தன்மை குறைபாடு, தரமில்லாத, வீரியமில்லாத விந்தணுக்கள் ஆகிய காரணங்களால் மலட்டுத்தன்மை ஏற்படுகிறது.
இத்தகைய குறைகளையுடைய பெரும்பாலான தம்பதிகளுக்கு முறையான ஆலோசனைகள் கிடைத்தாலே, எந்தவிதமான மேல் சிகிச்சைக்கும் அவசியமின்றி குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது'' என்ற டாக்டர், ஒரு தம்பதி தங்களுக்கு குழந்தைஇல்லை என்பதற்காக எப்போது மருத்துவமனையை அணுக வேண்டும் என்பது பற்றியும் குறிப்பிட்டார்.
முதலில் ஆலோசனையே போதும்!
''திருமணமாகி குறைந்தபட்சம் ஒரு வருடம் ஆன கணவன், மனைவி இருவரும் சரியான தாம்பத்ய உறவில் இருந்தும் கருத்தரிக்க வில்லை என்றால், 30 வயதைக் கடந்த பின்னும் கருத்தரிக்கவில்லை என்றால், மருத்துவ ஆலோசனைக்குச் செல்லலாம். உடல் பருமன், நீரிழிவு உள்ளிட்ட சிக்கல் உள்ளவர்கள், ஒரு வருடம் வரை தாமதிக்காமல் உடனடியாக மருத்துவ ஆலோசனைக்குச் செல்லலாம். கவனிக்க, 'மருத்துவ ஆலோசனைக்குச் செல்லலாம்' என்றுதான் சொன்னேனே தவிர, எடுத்தவுடனேயே கருத்தரிப்பு மையங்களுக்கு அல்ல.
முதலில் உங்களுக்கு நன்கு பரிச்சயமான, நம்பகத்தன்மையுள்ள மருத்துவரை அல்லது உங்கள் குடும்பநல மருத்துவரை அணுகுங்கள். பெரும்பாலும் அது தீர்க்கக்கூடிய பிரச்னையாகவே இருக்கும். ஒருவேளை அந்த மருத்துவர், இயற்கையான குழந்தைப்பேறுக்கான வாய்ப்புகள் இல்லை என்பதை உறுதிபடுத்திக் கூறினால், அவரின் வழிகாட்டுதலோடு கருத் தரிப்பு மையங்களுக்குச் செல்லலாம். அதற்கு முன்னதாக சம்பந்தப்பட்ட மையங்களின் தரம் மற்றும் நம்பகத்தன்மை பற்றி நன்கு விசாரித்துக்கொள்வது நல்லது.
மருத்துவர்களை மாற்றாதீர்கள்..!
குழந்தையின்மைக்காக ஆறு மாத காலம் வரை குறிப்பிட்ட மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துவிட்டு, காத்திருக்கப் பொறுமையில்லாமலோ, விளம்பரத்தைப் பார்த்தோ வேறொரு மருத்துவமனைக்குத் தாவுவது தவறு. ஒரு மருத்துவர், தன்னிடம் வருபவரின் உடல் தன்மையை கொஞ்சம் கொஞ்சமாக புரிந்துகொண்டு சிகிச்சை அளிக்க, கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் தேவைப்படும். அதற்குள் அடுத்த மருத்துவமனையை அணுகி, மீண்டும் முதலில் இருந்து சிகிச்சையை ஆரம்பித்தால், அது உடல் நலத்தைதான் சீரழிக்கும்.
இன்னொரு பக்கம், பல மருத்துவமனைகள் விந்தணு குறைபாடு, கருக்குழாய் அடைப்பு என தம்பதிகளின் குறைகளையோ, அதற்கு தாங்கள் அளிக்கும் சிகிச்சைகளையோ வரைபடம் மூலம் வரைந்து, விரிவான விளக்கங்களை சம்பந்தப்பட்ட தம்பதிகளுக்குக் கொடுப்பதில்லை. பல தம்பதிகளும் கண்கட்டி வித்தையாக, தங்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றிய விழிப்பு உணர்வு இல்லாமல்தான் அதைத் தொடர்கிறார்கள். ஒருகட்டத்தில், அந்த மருத்துவமனையின் வெற்று வைத்தியத்தை உணர்ந்து, வேறு மருத்துவமனைக்கு மாறும்போது, அதுவரை தாங்கள் பெற்ற சிகிச்சைக்கான விரிவான அறிக்கையை சம்பந்தப்பட்ட மருத்துவமனையிடம் கேட்டுப் பெறுவதுமில்லை. மருத்துவ அறிக்கையை டிமாண்ட் செய்து பெறுவது அவசியம்'' என்று வலியுறுத்திய மருத்துவர் பிரியதர்ஷினி, தொடர்ந்தார்...
|
|
| |
RAWALIKA | Date: Tuesday, 11 Mar 2014, 8:57 AM | Message # 18 |
![RAWALIKA](/avatar/06/041510.jpg) Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
| புற்றுநோயை உண்டாக்கும் ஹார்மோன் ஊசி!
''பெண்ணின் கருமுட்டை உற்பத்தியைத் தூண்டுகிறேன் என்று அளவுக்கதிகமான ஹார்மோன் ஊசிகள் போடுவதும், மாத்திரைகள் எடுத்துக் கொள்வதும்... சினைப்பை புற்றுநோயை உருவாக்குவதற்கு வாய்ப்புகள் உண்டு. எனவே, முடிந்தவரை இதையெல்லாம் தவிர்ப்பதுதான் நல்லது. 'குழந்தை இல்லை என்பது ஒரு குறையே இல்லை' என்கிற மனநிலைக்கு வருவதுதான்... சம்பந்தபட்ட பெண்ணின் உடல்நிலைக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் இருக்கும் என்பதை சிந்தித்து உணரவேண்டும். சிகிச்சை மூலமாக குழந்தை பெற்றிருக்கும் தம்பதியருக்கும், இப்போது பரவலாக எழும் விந்தணு மாறுதல் பற்றிய விழிப்பு உணர்வு தேவை. அதாவது டெஸ்ட் டியூப் முறையில் கருத்தரித்தவர்கள், அந்தக் குழந்தை சம்பந்தப்பட்ட தம்பதியின் வாரிசுதானா என்பதை 'டி.என்.ஏ' (DNA) பரிசோதனை மூலம் தெரிந்துகொள்வது, தேவையற்ற சந்தேகம் எழுவதை ஆரம்பத்திலேயே தவிர்க்கும்'' என்று அழுத்தம் கொடுத்துச் சொன்னார் மருத்துவர் பிரியதர்ஷினி.
லட்சக்கணக்கில் பணம் கரைகிறது!
சென்னை, எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் சாதனாவிடம் பேசியபோது, ''கருத்தரிப்பு மையங்கள் என்பது இன்று பெரும்பாலும் காசு கொட்டும் தொழில் என்றாகிவிட்டது. குழந்தைப் பேறுக்காக, 'எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல டாக்டர்...’ என்று வந்து நிற்கும் தம்பதிகளின் பலவீனத்தையே பணமாக்குகிறார்கள் பலர். உதாரணமாக, தம்பதிகளில் ஆணின் விந்தணு தரமாக இருந்து, அதை பெண்ணின் கருப்பையில் செலுத்த முடியாதபட்சத்தில் ஐ.யூ.ஐ எனும் (Intra Uterine Insemination) சிகிச்சை முறைப்படி ஆணின் நகரக்கூடிய தரமான விந்தணுவை எடுத்து, அதை சுத்தப்படுத்தி, பெண்ணின் கருப்பைக்குள் செலுத்துவார்கள். இதற்கு ஆகும் செலவு 4 முதல் 5 ஆயிரம் ரூபாய் மட்டுமே. ஆனால், இதற்கு லட்சக்கணக்கில் கட்டணம் கறக்கிறார்கள் பல மருத்துவமனைகளில். இதுவே ஆண், பெண் இருவரும் குழந்தை பாக்கியம் பெற முடியாதபட்சத்தில்... ஆணின் விந்தணுவையும், பெண்ணின் கருமுட்டையையும் 'டெஸ்ட் டியூப் பேபி’ முறையில் இணைக்கும் கரு உருவாக்கத்துக்கு ஆகும் செலவு 1.5 லட்சம் ரூபாய். இதற்கு 3 லட்சம் ப்ளஸ் வாங்குவதும் நிகழ்கிறது'' என்று கவலை பொங்கச் சொன்ன சாதனா, தொடர்ந்து பேசினார்...
சாமியாரைத் தேடாதீர்கள்!
''ஆணின் விந்தணு சரியாக உற்பத்தியாகவில்லை, உற்பத்தியாகும் விந்தணு வெளிவர பாதையில்லை, அப்படியே பாதையிருந்தும் வெளிவரும் விந்தணு தரமாகவும், நகரக்கூடிய தன்மையுடனும் இல்லை, அது கருமுட்டையைச் சேர வாய்ப்பே இல்லை என்றெல்லாம் மருத்துவப் பரிசோதனையில் உறுதியானால், அந்த ஆணால் குழந்தை பாக்கியம் பெற முடியாது. அதேபோல கருக்குழாய் பாதிப்புடனோ, கருப்பை பாதிக்கப்பட்டோ அல்லது சுருங்கியோ, கருமுட்டை உருவாகும் சாத்தியம் இல்லாமலோ அல்லது உருவாகும் கருமுட்டை தரமற்றதாகவோ, விந்தணுவை ஏற்று கருவை உற்பத்திச் செய்யும் திறன் இல்லாமலோ இருக்கும் பெண்களாலும் குழந்தை பாக்கியம் பெற இயலாது.இப்படிப்பட்ட குறைபாடு உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள், 'குழந்தை பாக்கியம் பெறமுடியாது' என்று மருத்துவர் சொல்லும்பட்சத்தில், 'வேற டாக்டர், அந்த சாமியார்’ என்று மேலும் நேரத்தையும், பணத்தையும் வீணாக்காமல், அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தயாராக வேண்டும். அதாவது, டெஸ்ட் டியூப் பேபி, வாடகைத் தாய் முறை, கருமுட்டை மற்றும் விந்தணு தானம் போன்றவற்றில் குழந்தை பாக்கியம் பெற முயற்சிக்கலாம்'' என்று சொன்ன டாக்டர், இயல்பாகவே கருத்தரிக்க வாய்ப்புள்ள நாட்கள் பற்றி, டிப்ஸும் தந்தார் (கீழே காணலாம்).
செயற்கை கருத்தரிப்பு மையங்களின் செயல்பாடுகள், பாதிக்கப்பட்ட பெண்களின் அழுகுரல்கள், வாடகைத்தாய், மூலிகைக் குழந்தைகள், சித்த மருத்துவத்தின் மூலம் தீர்வு, குழந்தையின்மை காரணமாக எதிர்கொள்ளும் சமூகத் தாக்குதலுக்கான எதிர்தாக்குதல், மனநல ஆலோசனை... அனைத்தையும்அடுத்த இதழில் பார்ப்போம்...
இயற்கையாக கருத்தரிக்க டாக்டர் சாதனா சொல்லும் டிப்ஸ்!
''கருமுட்டையின் ஆயுட்காலம் 24 மணி நேரம், உயிரணுவின் ஆயுட்காலம் 48 - 72 மணி நேரம். இந்த நேரத்தில் இரண்டும் கலந்தால் குழந்தை பிறக்க அதிக வாய்ப்பு உண்டு. கர்ப்பம் தரிக்க, காலண்டர் முறை, வெப்ப முறை, சளிச் சுரப்புமுறை ஆகிய மூன்றையும் பின்பற்றலாம்.காலண்டர் முறையில், 28 நாட்கள் சீரான மாதவிலக்கு சுழற்சி உள்ளவர்கள், மாதவிலக்கான நாளில் இருந்து சுமார் 14 முதல் 16-ம் நாளுக்குள் கருமுட்டை வெளியாகும்போது உறவுகொண்டால் கருத்தரிக்க வாய்ப்புள்ளது. வெப்ப முறையில், உடலின் வெப்ப நிலையை தெர்மாமீட்டர் கொண்டு தொடர்ந்து கவனித்து வந்து, உடல் வெப்ப நிலை அதிகமாக இருக்கும் நாளில் கருமுட்டை வெளியாவதை யூகித்து, உறவு கொள்ளலாம்.
கருமுட்டை வெளியாகும் நாளில் உயிரணு நீந்திச் செல்ல ஏதுவாக கருப்பை வாயைச் சுற்றி சளிச்சுரப்பு உருவாவதை கவனித்தும் உறவு கொள்ளலாம்.''
|
|
| |
vaideesh | Date: Tuesday, 11 Mar 2014, 10:43 PM | Message # 19 |
Lieutenant colonel
Group: *Checked*
Messages: 135
Status: Offline
| Dear Rawalika, Some news are really shocking!thanks for sharing!
|
|
| |
RAWALIKA | Date: Tuesday, 25 Mar 2014, 2:22 PM | Message # 20 |
![RAWALIKA](/avatar/06/041510.jpg) Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
| கருத்தரிப்பு சிகிச்சை... பலன் என்ன? Thanks - Vikatan
காசு பார்க்கும் கருத்தரிப்பு மையங்கள்... சருகாகும் அப்பாவி பெண்கள்!சென்ற இதழ் தொடர்ச்சி...
கோவிந்த் பழனிச்சாமி, பொன்.விமலா, எம்.கார்த்தி
'காசு பார்க்கும் கருத்தரிப்பு மையங்கள்... சருகாகும் அப்பாவிப் பெண்கள்!’ என்ற தலைப்பில் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் பற்றிய அதிர வைக்கும் ஸ்கேன் ரிப்போர்ட் பற்றிய முதல் பாகம், கடந்த இதழில் இடம்பெற்றது.
இரண்டாம் பாகம் இதோ...
'குழந்தையின் பிஞ்சுக் கால்கள், நம் நெஞ்சில் முட்டி மோதாதா...?' என்று, குழந்தையில்லாதோருக்கு ஏற்படும் ஏக்கமே... காசு பார்க்கும் கருத்தரிப்பு மையங்களின் முதலீடாகிப் போனதுதான் கொடுமை. குழந்தைக்கு ஆசைப்பட்டு, பணம் முதல், உயிர் வரை இழந்த 'கேஸ் ஹிஸ்டரி’... இங்கே ஏராளம். ஒவ்வொரு கதையுமே நெஞ்சை பதைபதைக்க வைக்கும் ரகம்தான்!
ராஜபாளையம் நகரிலிருந்து தென்காசி செல்லும் சாலையில் உள்ள 'அசோக் மருத்துவமனை’யின் டாக்டர் உமாமகேஸ்வரி மீது, 2013-ம் ஆண்டு, செயற்கை கருவூட்டல் மோசடி தொடர்பான குற்றவழக்கு பதிவானது. மம்சாபுரத்தைச் சேர்ந்த 38 வயது தாமரைச்செல்வி கொடுத்த புகாரின் பேரில், இ.பி.கோ-406 (நம்பிக்கை மோசடி), இ.பி.கோ-420 (ஏமாற்றுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ், டாக்டர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பிறகு, முன்ஜாமீன் பெற்றுக்கொண்டுவிட்டார் டாக்டர். இப்போதும் இந்த வழக்கு மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் நடக்கிறது.
படிக்காமலே மருத்துவம்!
'என்னுடைய புகைப்படத்தை வெளியிட வேண்டாம்' என்ற வேண்டுகோளுடன் நம்மிடம் பேசிய தாமரைச்செல்வி, ''திருமணமாகி பல ஆண்டுகளாக குழந்தைகள் இல்லை. அந்த மருத்துவமனையின் விளம்பரத்தைப் பார்த்துதான் டாக்டர் உமாமகேஸ்வரியிடம் சென்றோம். எங்களைப் பரிசோதித்தவர், 'நீங்கள் குழந்தை பெறத் தகுதியானவர்தான். ஆனால், அதற்கு என் மருத்துவமனையில் மூன்று மாதங்கள் தங்கியிருக்க வேண்டும், கரு உண்டானதும் வீட்டுக்குச் செல்லலாம்’ என்றார். ஒப்புக்கொண்டோம். முதலில் ஆபரேஷன் மூலம் கருமுட்டை எடுக்க வேண்டும் என்று சொல்லி, ஒரு லட்ச ரூபாய் வாங்கினார். பிறகு, வாரம்தோறும் 10 ஆயிரம் ரூபாய்க்கு ஏதேதோ ஊசிகள் போட்டார். பின்னர், எனது கருமுட்டையில், செயற்கை முறையில் கணவரின் விந்தணுவை செலுத்த வேண்டும் என்று ஒன்றரை லட்சம் வாங்கினார்.
மூன்று மாதங்கள் மருத்துவமனையில் தங்கியும், மாதவிடாய் நிற்கவில்லை. டாக்டரிடம் கேட்டதற்கு, 'நீங்கள் கருத்தரித்திருக்கிறீர்கள், மாதவிடாய்க் கும் இதற்கும் சம்பந்தம் இல்லை’ என்று சமாளித்தார். 'அப்படியென்றால் கருவுற்றிருப்பதற்கான மருத்துவ ஆதாரங்களைக் காட்டுங்கள்’ என்று என் கணவர் மணிவண்ணன் கேட்க, 'இஷ்டம் இருந்தால் இருங்கள்... இல்லை என்றால் போங்கள்’ என்று கடுப்பாகச் சொல்லிவிட்டார்.
ஒருகட்டத்தில் சந்தேகமடைந்த என் கணவர், வேறு மருத்துவமனையில் என்னை பரிசோதித்தபோது, நான் கர்ப்பமாகவில்லை என்ற உண்மை தெரிந்தது. மேலும், செயற்கை கருவூட்டல் சிகிச்சை பற்றிய படிப்போ, பட்டமோ பெறாமல் என்னைப் போல் நிறைய பேரை ஏமாற்றி, ஏகப்பட்ட பணத்தை உமாமகேஸ்வரி வசூலித்திருப்பதும் தெரிந்தது. இதையடுத்துதான் போலீஸில் புகார் செய்தும் பலனில்லை. பிறகு, உயர் நீதிமன்றக் கிளை மூலமாகத்தான் வழக்குப் பதிவுசெய்ய வைத்தோம்'' என்றவர்...
கொஞ்சம்கூட இரக்கமே இல்லையா?!
''என் போன்றோரின் ஏக்கமே... 'நமக்கும் ஒரு வாரிசு வாய்க்காதா?' என்பதுதான். இப்படி பரிதாப ஜீவன்களாக இருக்கும் எங்களைப் போன்றவர்களிடம் துளியும் இரக்கம் இல்லாமல் பணம் பார்ப்பது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டிருக்கும் இதுபோன்ற டாக்டர்களை என்னவென்று சொல்ல?'' என்றார் விரக்தியாக!
இதே, டாக்டர் மீது குற்றம்சாட்டும் பெண்களில் மற்றொருவர், சிவகாசி, திருத்தங்கல் மாரியப்பனின் மனைவி ராணி. திருமணமாகி 15 ஆண்டுகள் ஆன நிலையில், உமாமகேஸ்வரியின் மருத்துவமனையில் இவரும் மூன்று மாதங்கள் தங்கியிருந்திருக்கிறார். தாமரைச்செல்விக்கு நடந்த அதே பாணியிலான சிகிச்சைகளும் (!) செலவுகளும் கிட்டத்தட்ட நடந்தேறி இருக்கின்றன. ஆனால், பலன் பூஜ்யமே!
''ஏற்கெனவே குழந்தை இல்லாமல் கடும் மன உளைச்சலில் இருக்கும் எங்களிடமிருந்து, இப்படி பணம் பறித்து, இன்னும் எங்கள் துன்பத்தைக் கூட்டுவது, ஒரு மருத்துவருக்கு அழகா?'' என்று ஆதங்கக் கண்ணீருடன் கேட்கிறார் ராணி.
''கருத்தரிப்பு மையத்தை மூடிவிட்டேன்!''
டாக்டர் உமாமகேஸ்வரி தரப்பை அறிய, மருத்துவமனை தேடிச் சென்றோம். மறுநாள் அழைப்பதாகக் கூறி நம்மை அனுப்பிவைத்தார். மறுநாள் போனில் அழைத்தவர், ''வழக்கு நிலுவையில் இருக்கிறது. இப்போது அதைப் பற்றி நான் பேசக்கூடாது. நான் நடத்தி வந்த 'கற்பக விருட்சம் செயற்கை கருத்தரிப்பு மைய’த்தை மூடிவிட்டேன்'' என்றார், படபடப்பாக.
''நீங்கள், எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றுள்ளீர்கள். ஆனால், செயற்கை கருவூட்டல் தொடர்பாக படித்து ஏதேனும் பட்டம் பெற்றிருக்கிறீர்களா?'' என்றதும்,
''அமெரிக்காவில் படித்திருக்கிறேன். விருதுநகர், ராஜபாளையம், அருப்புக்கோட்டையில் பலருக்கு செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தை பாக்கியம் கிடைத்திருக்கிறது'' என்றவர், ''இன்னொரு நாள் 'ஃப்ரீயாக’ பேசுகிறேன்'' என்று போனை கட் செய்தார்.
இது ஒரு சாம்பிள்தான். தமிழகம் முழுக்க செயல்படும் எண்ணற்ற கருத்தரிப்பு மையங்கள் பலவற்றிலிருந்தும் இத்தகைய புலம்பல்கள் எதிரொலித்தபடிதான் இருக்கின்றன. என்ன... அவையெல்லாம் காவல் நிலையம், நீதிமன்றம் என்று மீடியாக்களில் இடம்பெறாமல், அப்படி அப்படியே அமுங்கிக்கொண்டிருக்கின்றன! 'இதெல்லாம் வெளியில் தெரிந்தால் கேவலம்’ என்கிற காரணத்துக்காகவே பலரும் மறைத்து விடுகிறார்கள். இதன் காரணமாக பல பெண்களின் வாழ்க்கை, சருகாகிக்கொண்டிருக்கிறது.
ஆம்... சிகிச்சை என்கிற பெயரில் மாதம்தோறும் நடத்தப்படும் மருத்துவ பரிசோதனைகள், தினம்தோறும் தரப்படும் மருந்துகள், தேவையற்ற சிகிச்சைகள்... போன்றவற்றின் எதிர்விளைவாக, பல பெண்கள் கிட்டத்தட்ட நடைபிணங்களாகவே வாழக்கூடிய சூழலுக்குத் தள்ளப்படுவது... கொடுமையிலும் கொடுமை!
குழந்தை பெற்றுக்கொள்ள வேறு என்னதான் வழி..?
கருத்தரிப்பு மையங்கள் எப்படி செயல்பாடுகின்றன என்பதைத் தெரிந்துகொள்வது... மேற்கொண்டு இத்தகைய சிகிச்சையை எடுத்துக்கொள்ள நினைப்பவர்களுக்கு ஒரு வழிகாட்டியாகவோ... பாடமாகவோ இருக்கும். அதைப் பற்றி இங்கே பேசுகிறார்... மகளிர் மருத்துவத்தில் சிறப்பிடம் பெற்றிருப்பவரும், நிறைய தம்பதியருக்கு சிகிச்சை அளித்து குழந்தைபெறும் உடல் கூறை ஏற்படுத்திக் கொடுத்திருப்பவருமான கோவையின் பிரபல மகப்பேறு மருத்துவ நிபுணர் டாக்டர் மிருதுபாஷினி.
''எடுத்ததுமே சோதனைக் குழாய் குழந்தை... அது, இது என்றெல்லாம் செல்வது தவறு. 'குழந்தையில்லை' என்று வரும் கணவன் - மனைவி இருவரையும் முதலில் துல்லியமாக பரிசோதனை செய்து, சரியான சிகிச்சை அளித்தாலே... மலட்டுத்தன்மையை நீக்கி, கிட்டத்தட்ட 85 சதவிகிதம் பேருக்கு தீர்வு கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இது, வெறும் 50 ரூபாய் விலையுள்ள மருந்தின் மூலமும் நடக்கலாம், 50 ஆயிரம் ரூபாய் மருந்திலும் கிடைக்கலாம். அடுத்ததாக... ஆணின் விந்தணுக்களின் டி.என்.ஏ-க் களைக்கூட துல்லியமாக கண்டறிந்து, அதிலுள்ள குறைகளின் அடிப்படையில் மருந்துகள் கொடுத்து, 'கவுன்ட்’களை அதிகரித்து, இயற்கையாகக் குழந்தை பெறும் தகுதியை ஏற்படுத்திக் கொடுப்பதுதான் உண்மையான மருத்துவம். இதற்கான உபகரணம் மட்டும் 4 கோடி ரூபாய் விலையாகிறது. இந்த வசதி இல்லாத மருத்துவர்களில் சிலர், குழந்தை இல்லாத தம்பதியருக்கு கருத்தரித்தலுக்கான ஆலோசனையைச் சொல்லி, லட்சக்கணக்கில் கட்டணம் பெற்றுக்கொள்கிறார்கள்.
|
|
| |