இன்றைய பெண்கள் புதுமை பெண்களா இல்லை கனவு உலகின் பதுமைகளா - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
  • Page 1 of 1
  • 1
Forum moderator: Jeniliya  
இன்றைய பெண்கள் புதுமை பெண்களா இல்லை கனவு உலகின் பதுமைகளா
SSDate: Thursday, 26 Jun 2014, 0:13 AM | Message # 1
Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
இன்றைய நம் இளம் பெண்களுக்கு திருமணம் குறித்து என்ன எதிர்பார்ப்பு உள்ளது மேலும் அந்த எதிர்பார்ப்பை அவர்களால் நியாய படுத்த முடிகிறதா ?  அதே போல பிள்ளையை பெற்ற மாமியார்கள் தனக்கு வரும் மருமகளை பற்றிய அவர்களது கருத்து என்ன என்று கடந்த 15ம் தேதி நீயா நானா நிகழ்ச்சியில் இடம் பெற்றது.

நீயா நானா - 06/15/14

நீங்களும் இதனை காணுங்கள். திரு கோபிநாத் நல்ல விதமாக இதனை நடத்தி உள்ளார். அவர் கூறும் கருத்துக்கள் நிறைய இடத்தில அருமையாக உள்ளன.

நம் இளம் சமுதாயம் விளம்பரங்களையும், திரைப்படங்களையும் , இன்றைய கால கட்டத்தில் வரும் கதைகளையும் படித்து நன்றாக கெட்டு போய் உள்ளார்கள். அவர்களது கனவை நியாய படுத்த முடியவில்லை அவர்களால். அக்காவின் வாழ்க்கையோ தோழியின் வாழ்க்கையையோ பார்த்து பயந்து மாமியார்களே வேண்டாம் என்னும் நிலைக்கு வந்துள்ளனர். இதில் வருத்தம் என்னவென்றால் இப்படியே சென்றால் நம் பெண்கள் திருமண பந்தத்தையே வெறுத்து விடுவார்கள்.

அதே போல மாமியார்களின் எதிர்பார்ப்பும் இந்த கால கட்டத்திலும் மாறவில்லை என்பதே வருத்த தக்க ஒரு விஷயம். இருபத்தியோராம் நூற்றாண்டில் உள்ளோம், ஆனாலும் பெண்களின் எதிர்பார்ப்புகள் தீரவில்லை. Autocracy முறையிலேயே இன்றைய மாமியார்களும் தங்களது மருமகளை நடத்த விரும்பும் நிலை வருத்ததக்கது. அழுது ஆர்ப்பாட்டம் செய்வது வாழ்க்கை அல்ல.

பெண்களே நிதானமாக நிதர்சனமாக யோசியுங்கள். பெரியவர்கள் வீட்டில் சிறியவர்களுக்கு சிறந்த எடுத்துகாட்டாக இருக்க வேண்டும். அவர்களை வழி நடத்த வேண்டும், Demand  Respect என்றில்லாமல் command Respect வேண்டும் [தன்னை மதிக்கும்படி நடக்க வேண்டும்]. இளைய சமுதாய பெண்கள் திருமணம் பற்றிய நிதர்சனம் உணர வேண்டும் இல்லையேல் திருமணத்திற்கு பிறகு இவர்களது கனவு போல வாழ்க்கை இல்லாமல் போகும் நிலையில் நம் நாட்டில் விவாகரத்து % உயர்த்திவிடும்.

இதனை பற்றிய உங்களது கருத்துக்களை இங்கே பகிரலாம்.

பி.கு : நான் இங்கே எழுதியது  எல்லோருக்கும் பொருந்துவது அல்ல, சில exceptions இரண்டு இடத்திலும் உண்டு [இளம் பெண்களிடமும் மாமியார்களிடமும்].அவர்களை பற்றிய கருத்துக்கள் அல்ல இவை. எல்லோருக்கும் சொல்வது என்று நினைத்து மனவருத்தம் கொள்ள வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்.


Message edited by SS - Thursday, 26 Jun 2014, 0:25 AM
 
ThenuDate: Friday, 27 Jun 2014, 4:34 AM | Message # 2
Lieutenant
Group: Users
Messages: 45
Status: Offline
இந்த  குறிப்பிட்ட  "நீயா நானா"  நிகழ்ச்சி  நானும்  பார்த்தேன் SS... 

இளம் பெண்களை குறை சொல்வதா... அல்லது மாமியார்களை  குறை சொல்வதா என்றே தெரியவில்லை... என்னை  பொறுத்தவரை  இரண்டு பக்கமுமே தவறு இருக்குன்னு நினைக்கிறேன்...

இளம் பெண்கள்...,  தனிக்குடித்தனம் செல்ல விரும்புவதும், அதிலும் அவர்களின் அம்மா வீட்டுக்கு பக்கத்துலேயே போக விரும்புவதும்  சரியோ  தவறோ ..., அதற்கு  அவர்கள் சொன்ன காரணம்  ஓகே ... தங்களை பெற்றவர்களுக்கு உதவி செய்ய நினைப்பது  சரிதானே...

அம்மாக்கள் side பார்க்கும்போது -- அவர்கள் இத்தனை நாள் பெற்று வளர்த்த மகனை பிரித்து தனியே  கூட்டி போவது கொடுமை...  

பெண்கள்  பெற்றோருக்கு ஹெல்ப் பண்ணனும்னு பேசும்போது ... ஒரு அம்மா ..."ஏன் மா பண்ணனும்... என்ன அவசியம்" னு  கேட்டதும்  தப்பு... 

பெண்கள் தங்கள்  வாழ்க்கை..வீடு... கணவன் ... பிள்ளைகள்  எல்லாம் எப்படி இருக்க வேண்டும்னு  பேசியது  எல்லாம்  மீடியாக்கள்  மூலம் கட்டிய  கனவுக்கோட்டை... இதெல்லாம்  நிஜத்தில் நடக்குமா என்பதை யோசிக்க மறந்தனர்...!!
 
  • Page 1 of 1
  • 1
Search: