RAWALIKA | Date: Tuesday, 08 Dec 2015, 12:28 PM | Message # 1 |
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
| வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிலிண்டர்களை வழங்க இண்டேன் சிறப்பு முகாம்!
Thanks - Vikatan
சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிலிண்டர்களை வழங்க இண்டேன் நிறுவனம் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்துள்ளது. இதன் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் வெள்ளத்தால் சூழப்பட்டு தீவுபோல் காட்சியளிக்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், இண்டேன் நிறுவன வாடிக்கையாளர்கள் LPG சிலிண்டர்களை பெறும் வகையில், சென்னை மற்றும் புறநகரில் 5 இடங்களில், சிறப்பு முகாம்களை நடத்துகிறது.
அதன்படி, அனைத்து இண்டேன் வாடிக்கையாளர்களும் காலி சிலிண்டர்களை அளித்து, புதிய சிலிண்டர்களை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சிறப்பு முகாம்கள் இன்றும், நாளையும் காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முகாம் நடைபெறும் இடங்கள்:
1. பட்டம்மாள் கேஸ் ஏஜென்ஸி: மேற்கு தாம்பரம், முடிச்சூர் சிவன் கோயில் அருகில்.
2. ஸ்ரீ செல்லா கேஸ் ஏஜென்ஸி - கிழக்கு தாம்பரம், சேலையூர் காவல் நிலையம் எதிரில்.
3. ஸ்ரீ அபிராம் இண்டேன்: சோழிங்கநல்லூர், ஆவின் பூத் அருகில்.
4. சுபம் கேஸ் ஏஜென்ஸி: மணலி நியூ டவுண், ஸ்டேட் வங்கி எதிர்புறம்.
5. பிரசன்னா கேஸ்: வடக்கு கொரட்டூர், ஆர்சிட் ஸ்பிரிங் அபார்ட்மெண்ட் அருகில்.
|
|
| |