குழந்தைக்கு தந்தையே இயற்கை காப்பாளர் - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
  • Page 1 of 1
  • 1
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » சட்டம் அறிவோம் » சட்டமும் சந்தேகங்களும் » குழந்தைக்கு தந்தையே இயற்கை காப்பாளர் (Dinamalar - - அட்வகேட் ஹன்ஸா)
குழந்தைக்கு தந்தையே இயற்கை காப்பாளர்
RAWALIKADate: Monday, 27 Oct 2014, 6:50 PM | Message # 1
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
அந்த அம்மா என் அலுவலகத்திற்கு கவலையோடு வந்திருந்தார்,.
அவரின் மகளுக்கு ஒரு குழந்தை. குழந்தை பிறந்ததிலிருந்தே, மருமகன் மகளைப் பார்க்கவும் வரவில்லை. ஃபோனில் அவ்வப்போது பேசியதோடு சரி.
ஒவ்வொரு முறையும் எதாவது காரணம் சொல்கிறார் மருமகன்.
மகளுக்கும், பேரக்குழந்தைக்கும் இவர்கள்தான் படியளக்கிறார்கள்.
"மக டைவர்ஸ் வாங்கி கொடுத்திடுன்றா, சட்டத்தில குழந்தைக்கு கார்டியன் அப்பாதான்னு இருக்காமே. அப்ப குழந்தை ..? அதான் கவலையா இருக்கு.” என்றார்.

தந்தையே குழந்தையின் இயற்கைக் காப்பாளர் என்கிறது.Hindu Minority and Guardianship Act, 1956ன் பிரிவு 6.

இதே கேள்வியோடும் குழப்பத்தோடும் பலர்.
Hindu Minority and Guardianship Act, 1956 -ன் பிரிவு 6 . Natural guardians of a Hindu minor.- The natural guardians of a Hindu, minor, in respect of the minor's person as well as in respect of the minor's property (excluding his or her undivided interest in joint family property), are- (a) in the case of a boy or an unmarried girl-the father, and after him, the mother: provided that the custody of a minor who has not completed the age of five years shall ordinarily be with the mother; (b) in the case of an illegitimate boy or an illegitimate unmarried girl-the mother, and after her, the father; © in the case of a married girl-the husband; Provided that no person shall be entitled to act as the natural guardian of a minor under the provisions of this section- (a) if he has ceased to be a Hindu, or 
(b) if he has completely and finally renounced the world by becoming a hermit (vanaprastha) or an ascetic (yati or sanyasi) Explanation.- In this section, the expressions 'father' and 'mother' do not include a step-father and a step-mother. 

என்றே சொல்கிறது. அதாவது,
18வயது நிரம்பாத ஒரு நபர், அந்த மைனரின் சொத்தைப் பொறுத்து, கார்டியனாக இயற்கைக் காப்பாளராக அப்பாவே இருப்பார். அவர் இல்லாவிட்டால்தான் அதன் பிறகு அம்மா.
கேட்பதற்கு இது ஆணுக்கு மரியாதை தந்து பெண்ணை கீழிறக்குவதுபோல இருக்கிறது அதாவது அப்பா இல்லாவிட்டால்தான் அம்மா என்பது போல பெண்ணை இரண்டாம்பட்சமாக வைக்கிறது போல தோற்றம் காட்டுகிறது. அல்லவா?

கீதா ஹரிஹரன் (Ms. Githa Hariharan & Anr vs Reserve Bank Of India & Anr on 17 February, 1999 )தம்பதிக்கு ஒரு குழந்தை. இருவரும் கூட்டாக 9% ரிலீஃப் பாண்ட் வாங்குகிறார்கள் குழந்தை பெயரில். காலம் செல்கிறது.

இப்போது கணவன் மனைவிக்குள் பிணக்கு. பிரிகிறார்கள்.
இப்போது பணத்தை யாரிடம் கொடுப்பது என வங்கிக்கு கேள்வி.
கணவன் ””Hindu Minority and Guardianship Act, 1956 -ன் பிரிவு 6ன் படி தானே அந்த குழந்தைக்கு கார்டியன் எனவும். அதனால் அந்த குழந்தை குறித்த எந்த முடிவுமே தன்னைக் கலந்தாலோசித்தபின்னே எடுக்க வேண்டும் என்றும்..”” சொல்கிறார்.
மனைவியோ ””குழ்ந்தைக்கு கார்டியனாக தன்னையே நியமிக்க வேண்டும்” என்றும், வாதாடினார்.

Hindu Minority and Guardianship Act, 1956 -ன் பிரிவு 6 தந்தையே முதல் நிலை காப்பாளர் எனச் சொல்லி இருப்பது என்பது, இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஆர்டிகில் 13 மற்றும் ஆர்டிகில்14க்கு எதிரானது என்றும்(அவை பால் இன பாகுபாடு கூடாது என சொல்லும் ஆர்டிகில்கள்) அதே போல, The guardians and wards Act, 1890ன் 
பிரிவு 19 (b) யும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது எனவும் வாதாடப்பட்டது.
19. Guardian not to be appointed by the court in certain cases 
Nothing in this Chapter shall authorise the court to appoint or declare a guardian of the property of a minor whose property is under the superintendence of a Court of Wards or to appoint or declare a guardian of the person- 
(a) of a minor who is married female and whose husband is not, in the opinion of court, unfit to be guardian of her person; or 
(b) 15[* * *] of a minor whose father is living and is not in the opinion of the court, unfit to be guardian of the person of the minor; or 
© of a minor whose property is under the superintendence of a Court of Wards competent to appoint a guardian of the person of the minor.

இதற்கு அந்த வழக்கில் ஒரு அருமையான தீர்ப்பும், விளக்கமும் அளிக்கப்பட்டது. அதாவது,

மேற் கூறிய சட்டங்கள் அரசியலமைப்பிற்கு எதிரானவை அல்ல.
ஏனெனில், Hindu Minority and Guardianship Act, 1956 ன்படி,

தந்தையே முதல் நிலைக் காப்பாளர் அவர் இல்லாவிட்டால் தாய் காப்பாளர் ஆகிறார். இதன் பொருள் தந்தை இறந்துவிட்டால் என்பது அல்ல. அவர் உயிரோடு இருந்தாலும், குழந்தைக்கான பொறுப்பை நிறைவேற்றாத பட்சத்தில், தாய் முதல் நிலைக் காப்பாளர் ஆகிறார்.

பிரிவி 6 ல் குறிப்பிடப்பட்டிருக்கும் "இல்லையெனில்” என்பதன் பொருள் தந்தை இறந்துவிட்டால் என்பதல்ல. பொறுப்பை நிறைவேற்றாதவருமே அப்படிக் குறிப்பிடப்படலாம்.

தந்தையே முதல் நிலை காப்பாளர் என்பது பெண்ணை அவமதிக்கும் செயல் அல்ல. குழந்தைக்குறித்த பொறுப்பின் அளவில் தந்தைக்கே முதலிடம். அதாவது குழந்தைக்கான கடமையில் தந்தைக்கே முதல் இடம். (இந்த முதலிடம் கொடுக்கப்படாவிட்டால் பொறுப்பை தட்டிக்கழித்துவிட முடியும் என்பதால் என நாம் புரிந்து கொள்ளலாம்)

பிரிவு 6 ந் நேரடி பொருள் எடுக்காமல், அதன் நோக்கமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். அதன் படி, அதற்கு முன்பு வரை இருந்த மனுஸ்ம்ருதி போன்ற ஹிந்து வழக்கப்படி, சராசரி குடும்பத்தில் பெற்றோர் இருவருக்குமே குழந்தைகள் மீது கடமை உரிமை உண்டு. ஆனால், அப்படி அல்லாமல், இருவரில் ஒருவரோடு மட்டுமே குழந்தை இருக்க வேண்டிய கட்டாயம் வருமேயானல் இருவருக்கும் பொறுப்பு உண்டு எனச் சொல்லி நீதிமன்றம் நழுவ இயலாது. குழந்தைக்கு பொறுப்பாக பதில் சொல்ல வேண்டிய கடமை இந்த சமூகத்திற்கு உள்ளது. அதை, நீதிமன்றம் செய்தாக வேண்டும். தாய், தந்தை இருவரில் ஒருவரை குறிப்ப்ட்டேயாக வேண்டிய கட்டாயம் நீதிமன்றத்திற்கு உண்டு. அதனால், பொறுப்பு எனும் அளவில் தந்தையே முதல் காப்பாளராகிறார்.
அதாவது இன்றைய தேதியில் அதே சட்டப்பிரிவின்படி, தந்தையே குழந்தைக்கு பொறுப்பாகிறார். அதாவது காப்பாளர் ஆகிறார். பொறுப்பு எனும் பதமே காப்பாளர் என குறிப்பிடப்படுகிறது அல்லவா?

வெளியிலிருந்து பார்க்க ஆணை உய்ர்த்துவது போலவும், பெண்ணை இரண்டாம்பட்சமாகவும் கருதுவது போலவும் சட்டப்பிரிவு இருப்பது போலத் தோன்றினாலும், உண்மை அது அல்ல அன்றோ?
சட்டம் பாகுபாடு பார்ப்பதில்லை என்பது தெளிவாகிறதுதானே?

- அட்வகேட் ஹன்ஸா
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » சட்டம் அறிவோம் » சட்டமும் சந்தேகங்களும் » குழந்தைக்கு தந்தையே இயற்கை காப்பாளர் (Dinamalar - - அட்வகேட் ஹன்ஸா)
  • Page 1 of 1
  • 1
Search: