நடிகை சரிதா வழக்கும், சட்ட விளக்கமும் - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
  • Page 1 of 1
  • 1
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » சட்டம் அறிவோம் » சட்டமும் சந்தேகங்களும் » நடிகை சரிதா வழக்கும், சட்ட விளக்கமும் (Dinamalar- அட்வகேட் ஹன்ஸா)
நடிகை சரிதா வழக்கும், சட்ட விளக்கமும்
RAWALIKADate: Monday, 27 Oct 2014, 6:56 PM | Message # 1
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
நடிகை சரிதா வழக்கும், சட்ட விளக்கமும்


பிரபல திரைப்பட நடிகை சரிதா அவர்களின் வழக்கு இது…

ஒரு சட்டப் பிரிவே அரசியலமைப்பற்றது என வாதிடப்பட்டு பின் அந்த சட்டப் பிரிவிற்கு நல்ல விளக்கம் கிடைக்கச் செய்த பிரபல வழக்கு இது.

இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு 9 -ன் திருமணமான தம்பதியரில் ஒருவர் மற்றவருடன் சேர்ந்திருந்து குடித்தனம் நடத்தத் தவறுகையில், மற்றவர் அவரைத் தன்னோடு வந்திருந்து குடித்தனம் நடத்தச் சொல்லுமாறு நீதிமன்றத்தின் மூலம் கேட்டுக்கொள்வதே ஆகும். அதாவது தாம்பத்திய உறவு உரிமைகளை மீண்டும் கோரல் (அல்லது) தாம்பத்திய உரிமைகளை மீட்டளித்தல் (Restitution of Conjugal Rights) என்பார்கள் இதை.

(9. Restitution of conjugal rights.- When either the husband or the wife has, without reasonable excuse, withdrawn from the society of the other, the aggrieved party may apply, by petition to the district court, for restitution of conjugal rights and the court, on being satisfied of the truth of the statements made in such petition and that there is no legal ground why the application should not be granted, may decree restitution of conjugal rights accordingly.

Explanation- Where a question arises whether there has been reasonable excuse for withdrawal from the society, the burden of proving reasonable excuse shall be on the person who has withdrawn from the society.)

திரைப்பட நடிகை சரிதா திரை உலகில் நுழைவதற்கு முன்பே வெங்கட சுப்பையா என்பவரைத் திருமணம் செய்திருந்தார். அதன் பின் சரிதா தமிழ்த் திரையுலகில் அவருக்கென்றொரு இடம் பிடித்து மிகவும் பிஸியான நடிகையாகிப்போனார்.

இதன் காரணமாக அவர் தன் கணவர் இருக்கும் ஊருக்குப் போவதும், அவருடன் இணைந்து குடித்தனம் நடத்துவதும் குறைந்து போனது.

இன்னிலையில் சரிதாவின் கணவர் வெங்கட சுப்பையா, தன் மனைவியை தன்னோடு வந்து குடித்தனம் நடத்தக் கோரி இந்து திருமணச்சட்டம் பிரிவு9ன் கீழ், நெல்லூர் மாவட்ட நீதிமன்றத்தில் மனுச்செய்தார். அவர் கோரியபடி அந்நீதிமன்றமும், வழக்கை விசாரித்து, சரிதாவுடனான தாம்பத்திய உறவு உரிமைகளை மீட்டளிப்பதற்கான தீர்ப்பாணையைப் பிறப்பித்தது.

இந்த தீர்ப்பாணையை எதிர்த்து சரிதா ஹைதராபாத்தில் உள்ள உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

அந்த முறையீட்டில் தாம்பத்திய உரிமைகளை மீட்டளிப்பதற்கு வகை செய்யும் இந்து திருமணச்சட்டத்தின் பிரிவு 9 இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21 வது ஷரத்தின் கீழான சுதந்திரத்தையும் (அந்தரங்க உரிமையை உள்ளடக்கிய தனி நபர் சுதந்திர உரிமை {Right to liberty which includes right to privacy}) மற்றும் ஷரத்து 14ன் கீழான சமத்துவ உரிமையையும் மீறுவதாக உள்ளது என்றும், அதனால் இந்து திருமணச்சட்டத்தின் பிரிவான 9(தாம்பத்திய உரிமைகளை மீட்டளிக்கக்கோருதல்) அரசியலமைப்பற்றது என்றும் வாதிட்டார்.

(Art. 21. Protection of life and personal liberty. சொல்வதென்னவென்றால்..

—No person shall be deprived of his life or personal liberty except according to procedure established by law. (அந்தரங்க உரிமையை உள்ளடக்கிய தனிநபர் சுதந்திர உரிமை)

Art.14. Equality before law.—The State shall not deny to any person equality before the law or the equal protection of the laws within the territory of India.)

1.அவரின் கூற்றுப்படி, “குழந்தைப் பிறப்பிற்காக தனது உடல் எங்கே எவ்வாறு பயன்படுத்தப்படவேணும் என தேர்ந்தெடுக்கும் உரிமை அந்தரங்க உரிமை. இது ஷரத்து 21ன் படி வழங்கப்பட்ட ஒன்று. எனவே இதற்கு எதிராக வலுக்கட்டாயமாக திருமண உரிமை மீட்டளிப்பதாகச் சொல்லும் பிரிவு 9 அமைகிறது.

2. ஆர்டிகில் 14 சமத்துவ உர்மையைக் குறிப்பிடுகிறது,. ஆனால் இந்த பிரிவு 9 சமநிலையில் இல்லாத இருவரை சமமாக பாவிக்கக்கட்டாயப் படுத்துகிறது. எனவே ஆர்ட் 14க்கும் எதிராகவே இந்து திருமணச்சட்டம் பிரிவு 9 அமைகிறது.

இவையே சரிதா வாதத்தின் அடிப்படை.

இந்த இரு வாதங்களின் அடிப்படையில், இந்து திருமணச்சட்டத்தின் பிரிவு 9 அரசியலமைப்பற்றது (unconstitutional) என்றும், குழந்தைப் பேற்றிற்காக ஒரு மனைவி அவளுடைய விருப்பத்திற்கு மாறாக கணவனுடன் உடலுறவு கொள்ள வறுபுறுத்துவதன் வாயிலாக இந்தப் பிரிவு unconstitutional ஆகிறது என்று கூறி அந்தப் பிரிவை நீக்கறவு(Strusk - down) செய்தார்.

அத்தோடு வெங்கட சுப்பையா அவர்களின் தாம்பத்திய உரிமைகளை மீட்டளிக்கக்கோரும் மனுவையும் தள்ளூபடி செய்தார்.

(அதன் பிறகு அவர்கள் விவாகரத்து செய்து கொண்டனர்)

இதனை அடுத்து Smt. Harvinder Kaur Vs Harmander Singh இவ்வழக்கிலும் பிரிவு 9ன் படி திருமண உறவை மீட்டளிக்கக்கோரி கணவரால் மனு கொடுக்கப்பட்டிருந்தது.
அவரின் மனைவி தனது எதிர் மனுவில் முந்தைய சரிதா வழக்கை உதாரணமாகக் கூறி பிரிவு 9 அரசியலமைப்பற்றது என வாதிட்டிருந்தார்.
ஆனால், ஆந்திர பிரதேச உயர்நீதி மன்றம் கூறிய கருத்தை, இந்த வழக்கில் டெல்லி உயர்நீதி மன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை.
பிரிவு 9. அரசியலமைப்பற்றது அல்ல என அந்நீதிமன்றம் கூறியது.திருமணம் என்பதில் பாலுறவு என்பது ஒரு கூறு மட்டுமே. திருமண உரிமையை மீட்டளித்தல் என்பது தம்பதியர் இருவரும் உடனுறைந்து வாழ வேண்டும் என்பதே அதன் நோக்கம்.
தீர்வழி வழங்கப்பட்ட பிறகும் தம்பதியர் சேர்ந்து வாழவில்லை அல்லது வாழ முயற்சிக்கவில்லை எனில் அதே சட்டத்தின் பிரிவு 13 (1-A) (ii) கீழ் மண முறிவு பெற விண்ணப்பிக்கலாமே?
இப்படி சட்டத்தில் வகை செய்யப்பட்டிருக்கும் போது, ஒரு குறுகிய கண்ணோட்டட்தில் பார்ப்பது சரியல்ல என்றும் பிரிவு 9 அரசியலமைப்புக்குட்பட்டதே என்றும், கணவனின் அம்மனுவிற்கு எதிராக மனைவி சரியான காரணம் காட்டத்தவறுகையில் திருமண உறவை மீட்டளிக்கக்கோரும் அந்த உரிமை மனு செய்தவருக்கு அளிக்கப்படும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஆக, சரிதாவின் வழக்கின் மூலம், பிரிவு 9 அரசியலமைப்புக்குட்பட்டதே என்று, முடிவாகி, அந்த தீர்வழி இன்றும் கடைபிடிக்கப்படுகிறது.
இந்த இரண்டு வழக்குகள் தொடர்பான சட்ட ஷரத்துகளின் இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளன...
http://www.indiankanoon.org/doc/1987982/

http://indiankanoon.org/doc/191703/

- ஹன்ஸா, அட்வகேட்
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » சட்டம் அறிவோம் » சட்டமும் சந்தேகங்களும் » நடிகை சரிதா வழக்கும், சட்ட விளக்கமும் (Dinamalar- அட்வகேட் ஹன்ஸா)
  • Page 1 of 1
  • 1
Search: