KV's தகவல் பெட்டகம் - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
Forum moderator: Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பயனுள்ள தகவல்கள் » பயனுள்ள தகவல்கள் » KV's தகவல் பெட்டகம் (KV's தகவல் பெட்டகம்)
KV's தகவல் பெட்டகம்
LayaDate: Sunday, 02 Feb 2014, 1:27 PM | Message # 1
Lieutenant
Group: Moderators
Messages: 72
Status: Offline
KV's தகவல் பெட்டகம்

KV. சுரேஷ் அவர்கள் நம்முடன் பகிரும் பயனுள்ள தகவல்களை இங்கு படித்து அறிந்துக்கொள்ளவும்
 
kvsureshDate: Sunday, 02 Feb 2014, 1:48 PM | Message # 2
Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
Hi Admin,
Thanks ma, others can also join with me to share the useful infos.


Regards and Thanks

Kothai Suresh
 
kvsureshDate: Monday, 03 Feb 2014, 2:16 PM | Message # 3
Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
கடந்த 10 ஆண்டுகளில் இட்லி, தோசை மாவை விலைக்கு விற்கும் பழக்கம் விரிவடைந்துக்கொண்டே போகிறது. இட்லி, தோசை மாவு விற்கப்படுவதால் ஒரு புறம் பெண்களின் வேலைச்சுமைகுறைகிறது. மறுபுறம் வீட்டில் இருந்தபடியே பணம் ஈட்டும் தொழிலாக மாவு விற்பனைநடைபெறுகிறது.மேலும் சிறிய மளிகைக்கடை முதல் பெரிய ஷாப்பிங் மால் வரை இட்லி, தோசைமாவு பாக்கெட்டுகளில் கிடைக்கிறது. இந்த மாவு ஒரு உயிர்கொல்லி  ஸ்லோ பாய்ஸன் என்பது ஏனோபலருக்கும் தெரிவதில்லை.இதன் பின் விளைவுகளை சற்று அலசிப் பார்த்தால் நம் உதிரமும் உறைந்துபோகும் அளவிற்கு அதிபயங்கரமான விளைவுகள் தெரிய வருகின்றது!

Regards and Thanks

Kothai Suresh
 
kvsureshDate: Monday, 03 Feb 2014, 2:17 PM | Message # 4
Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
1. நீங்கள் வாங்கும் எந்த ஒருவெட் ஃப்ளோர்-Wet Flour (ஈர பத தோசை மாவிற்கும்)  எஸ் -ISI சான்றிதல் கிடையாது. எனவே,இது எந்த ஒரு ஆராய்ச்சி கூடத்திலும் பரிசோதனை செய்த பின் விற்பனைக்கு வருவதில்லை! 2. இந்தமாவு சில மட்டமான அரிசியும் உளுந்தும் முக்கியமாக மாவில்,நாம் புண்ணுக்கு பயன்படுத்தும் போரிக்பவுடர் மற்றும் ஆரோட் மாவு, ஆகியவற்றைக் கலப்பதால் மாவில் புளிப்பு வாசைனை ஒருபோதும்வராது. அது போக மாவும் பொங்கி நிறைய வரும் என்பதால் இதைச் செய்கின்றனர். நாம் நம் வீட்டில்அரைத்த மாவை இரண்டு நாள் வைத்து மூன்றாவது நாள் முகர்ந்து பார்த்தால் புளிப்பு வாசைனை வரும்தோசையும் புளிக்கும். ஏன் என்றால்? மாவு பக்குவமாவதும் தயிர் உறைவதும் ஒரு நல்லபேக்டீரியாவின் செயலாகும். இதை தவிர்ப்பதற்காகத் தான் கடையில் வாங்கும் மாவுக்கு 6 நாள்கியாரன்டியும் தந்து ஒரு வாசனையும்வராமல் இருக்க,நம் உடலில் ஏற்படும் காயத்திற்கும்,புண்ணிற்கும்,கேரம் போர்ட் விளையாட பயன்படுத்தும் Boric Acid, ஆரோட் மாவு போன்றவற்றைக் கலந்துவிற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.

Regards and Thanks

Kothai Suresh
 
kvsureshDate: Monday, 03 Feb 2014, 2:17 PM | Message # 5
Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
3. முக்கியமாக இந்த கிரைண்டர்கள் கமர்ஷியல் ரகம் இல்லை.அதாவது ஒரு நாளைக்கு 3 – 6 மணி நேரம் அரைக்க வேண்டிய இவைகள் 12- 18 மணி நேரம்தொடர்ந்து ஓட்டுவதால் அந்த கல் கொஞ்சம் கொஞ்சமாக தேய்மானம் ஏற்பட்டு மாவுடன் கலந்துவிடுகின்றது. இந்த சிறு கருங்கற்களின் துகள்களால் தான் சமீப காலமாக நிறைய பேருக்கு சிறு நீரகத்தில்கல் உண்டாகின்றது.ஒரு நல்ல கல்லின் ஆயுள் 12 மணி நேரம் அரைத்தால் வெறும் 6 மாதம் தான்.அதையேக் கொத்தி போட்டாலும் அடுத்த மூன்று மாதங்கள் வரை தான் அதனைப் பயன்படுத்த முடியும்.

Regards and Thanks

Kothai Suresh
 
kvsureshDate: Monday, 03 Feb 2014, 2:20 PM | Message # 6
Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
4.சமையல் செய்யும் ஆட்கள் கை அடிக்கடி அலம்ப வேண்டும். நகங்கள் வளர்க்கவே கூடாது! ஆனால்இது போன்ற சுத்தத்தை இவர்கள் பேணுவதில்ல!. ஒவ்வொரு நகத்தின் இடுக்கிலும் உள்ள கிருமிகள்இந்த மாவில்கெட்ட பேக்டிரியாக்கள் மற்றும், கிருமிகளை உருவாக்கி நம் உடலின் எதிர்ப்பு சக்தியைக்வெகுவாகக் குறைத்து வாந்தி,பேதி,போன்ற நோய்கள் வரக் காரணமாகின்றது 5. கிரைண்ட்ரை நம்தாய்க்குலங்கள் பயன்படுத்த தயங்குவது ஏன் எனில் அதைச் சுத்தம் செய்வது கடினம். ஒவ்வொருமுறையும் குழவிக்கல்லைத் தூக்கி மாட்டுவதும் சிரமம்.பெரிய குடும்பமென்றால் இது சாத்தியம்.

Regards and Thanks

Kothai Suresh
 
kvsureshDate: Monday, 03 Feb 2014, 2:28 PM | Message # 7
Major general
Group: Checked
Messages: 358
Status: Offline

எனவே தாம்,சிறு குடும்பங்கள் கடை மாவை வங்கிப் பயன்படுத்தி வருகின்றனர். மாறாக விற்பனைக்காகஉற்பத்தி செய்பவர்கள் கிரைண்டரை ஒவ்வொரு மாவு முடிந்ததும் கழுவுவதில்லை. எனவே அதில் கிருமி அதிகரித்து கொண்டேச் செல்கிறது. இவர்கள் கமர்ஷியலாகபயன்படுத்த ஒவ்வொரு முறையும் வெந்நீர் (Hot Water) உற்றி தான் சுத்தம் செய்ய வேண்டும் ஆனால் அவ்வாறு செய்வதில்லை. வாரத்திற்கு ஒரு முறை கழுவினாலேஅதிகம். எலிகள் மற்றும் பூச்சிகள் அந்த மீத மாவை ருசித்து அந்த மிஷினின் சுத்ததன்மை போக்கி விடுகின்றது. 6. என்னதான் நல்ல அரிசி உளுந்து போட்டாலும் நல்லதண்ணீரை ஊற்றி தான் மாவு அரைக்க வேண்டும். இவர்கள். பயன்படுத்துவதோ உவர்தன்மையைக் கொண்ட கிணத்தடி தண்ணீர் மற்றும் உப்புதண்ணிர்.எனவே உப்புபோட வேண்டிய வேலையும் இவர்களுக்கில்லை.


Regards and Thanks

Kothai Suresh
 
kvsureshDate: Monday, 03 Feb 2014, 2:29 PM | Message # 8
Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
7. நம் முன்னோர்கள் இட்லிக்கு மாவு அரைக்கும்போது ஒரு கை வெந்தயத்தை போட்டு அரைப்பார்கள். வெந்தயம் ஒருஇயற்கையான நோய் நிவாரணி( ஆண்டி பயாடிக்) இது, உடம்பு உஷ்னம், வாய் நாற்றம், குடல் புண்(அல்சர்) போன்ற நோய்களைத் தடுக்கும் ஆற்றல் உள்ளது. கடைமாவில் யாரும் வெந்தயத்தை சேர்ப்பதில்லை! 8. கிரைண்டரில் மாவு தள்ளிவிடும் ஃபைபர் பிளாஸ்டிக்கை ஆறு மாதத்திற்கு அல்லது வருடத்திற்கு ஒரு முறையேனும்மாற்ற வேண்டும். இவர்கள் அதை இற்று அறுந்து போகும் வரை பயன்படுத்துவதால் அந்த பிளாஸ்டிக் கொஞ்சங்கொஞ்சமாக தேய்ந்து மாவில் கலக்கும் அபாயம் உள்ளது!

Regards and Thanks

Kothai Suresh
 
kvsureshDate: Monday, 03 Feb 2014, 2:30 PM | Message # 9
Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
9. அரைக்கும்போது சத்தம் வராமல் இருப்பதற்காவும், மாவைக் கையால் தள்ளி விடாமல் அரைப்பதற்காகவும் ஓடும் கிரைண்டருக்கு மத்தியில் குழவியை இணைக்கும்செயின் ஒன்று இருக்கும், அந்த செயினை இவர்கள் கழற்றி விட்டு வேறு ஒரு கார்பன் பெல்ட்டை மாட்டி இருப்பர்கள் அந்த பெல்ட்டில் தண்ணீர் பட்டு பட்டுநாளடைவில் அதன் துகள்களும் இந்த மாவில்தான் கலக்கும். 10. இந்த மாவை அரைத்துக் கடைகளுக்கு பிளாஸ்டிக் பேக் மூலம் விநியோகம் செய்கின்றனர். நமது தமிழ்நாட்டின் கிளைமேட்படி இதை ஃப்ரீஜரில் தான் வைக்க வேண்டும் அப்பொழுது தான் மாவில் உருவாகும் பாக்டீரியாவின் உற்பத்தியை கட்டுபடுத்த முடியும், ஆனால்நமதூரில் எல்லாக் கடைகளில் குளிரூட்டும் பெட்டி (ஃப்ரிட்ஜ்ரேட்டர்) இருப்பதில்லை.தற்போது நிகழும் எட்டு மணி நேர மின்தடை காரணமாக மாவு உப்புசம் அடைந்துகெட்டுப்போகும் வாய்ப்பு தான் அதிகம்! மேலும், பால், தயிறு, முட்டை, காய்கறி, மாட்டிறைச்சிகளில் கானப்படும் ஈகோலி (E-COLI) எனப்படும் ஒருவகைபாக்டீரியாவானது,( – 24 )மைனஸ் 24 டிகிரிக்கு கீழே இருந்தால் தான் கொஞ்சமாவது கட்டுபடும் அவ்வகை பாக்ட்டீரியாக்கள் மாவுகளில் உருவாகி சிலருக்குசாப்பிட்டவுடன் ஃபுட் பாயிஸன் என்றும், சிலருக்கு ஸ்லோ பாய்ஸனாக உடலில் கலந்து உயிரையேக் கொல்லும் அபாயமும் உள்ளது.

Regards and Thanks

Kothai Suresh
 
kvsureshDate: Monday, 03 Feb 2014, 2:32 PM | Message # 10
Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
இது ஒர் அங்கிகரிக்கபட்ட தொழில்அல்ல! எனவே தாம் சென்னை மாநகராட்சி கடைகள்,மற்றும் மாவுஅரைக்கும் இடங்களில் பரவலாக சோதனை (ரெய்டு) நடத்தி தரம் குன்றிய மாவுகளைக்கைப்பற்றி,அபராதமும் விதித்து வருகின்றது .எனவே,நமக்கு நன்கு தெரிந்த கலப்படம் செய்யாத நேர்மையானவர்கள் அரைத்து விற்பனை செய்யும்இட்லி,தோசைமாவுகளமட்டும் வாங்குவதோடு,முன்,பின் தெரியாதவர்கள் தயாரித்து கடைகளில் விற்கும் மாவுகளை முற்றிலுமாகத் தவிர்ப்பது நலம்.

Regards and Thanks

Kothai Suresh
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பயனுள்ள தகவல்கள் » பயனுள்ள தகவல்கள் » KV's தகவல் பெட்டகம் (KV's தகவல் பெட்டகம்)
Search: