வீட்டு தோட்டம் / மாடி தோட்டம் - Page 10 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
  • Page 10 of 10
  • «
  • 1
  • 2
  • 8
  • 9
  • 10
Forum moderator: Jeniliya, Laya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பசுமை - இயற்கையின் கொடை » வீட்டு தோட்டம் / மாடி தோட்டம் » வீட்டு தோட்டம் / மாடி தோட்டம் (வீட்டு தோட்டம் / மாடி தோட்டம்)
வீட்டு தோட்டம் / மாடி தோட்டம்
JanviDate: Wednesday, 17 Jun 2015, 5:59 PM | Message # 91
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
பழத்தோட்டமான செம்மண் தரிசு நிலம்



கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் குரியன்ஜோசப், 50. பி.ஏ., பட்டதாரியான இவர், தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு முன் 35 ஏக்கர் செம்மண் தரிசு நிலத்தை வாங்கினார். மெயின் ரோட்டில் இருந்து இங்கு செல்லவே 5 கி.மீ., நடக்க வேண்டும். மலையடிவாரத்தின் முதல் நிலம் இதுதான். ரசாயன கலப்பு இல்லாமல், இயற்கை முறையில் பழங்கள் சாகுபடி செய்து உலக மார்க்கெட்டில் விற்பனை செய்வதே இவரது லட்சியம். இதற்காகவே இவர், ரசாயனம் எந்த வகையிலும் எட்டிப்பார்க்காத நிலத்தை தேர்வு செய்தார். அந்த நிலம் கடினமான கற்கள் நிறைந்த செம்மண் பூமியாக இருந்தது. அதனை பற்றி கவலைப்படவில்லை.
எளிதாக கிடைத்த சான்று: அங்கு ""ஹார்வஸ்ட் பிரஷ்'' என பெயரிட்டு பழப்பண்ணை அமைத்தார். முதலில் மாதுளை கன்றுகளை வளர்த்தார். உரமிட இப்பகுதியில் உள்ள இலை, தழைகளை மட்டும் பயன்படுத்தினார். மாடுகளின் சாணத்தை மட்டுமே உரமாக இட்டார். மாடுகளுக்கு வழங்கும் உணவில் கூட ரசாயனம் கலந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்ததால் இவரது பழ உற்பத்திக்கு உலகளவிலான "ஆர்கானிக் சான்று' எளிதாக கிடைத்து விட்டது. ஐ.எஸ்.ஓ., சான்றும் கிடைத்து விட்டது. இதனால் அடுத்து பப்பாளி, மா, பலா, திராட்சை, முருங்கை, சப்போட்டா, எலுமிச்சை, தென்னை சாகுபடி செய்தார்.
குவியும் ஆர்டர்கள்: எல்லாவற்றிற்குமே சொட்டுநீர் பாசன முறையில் நீர்ப் பாசனம் செய்தார். அதேபோல் வளமான, மாசற்ற இயற்கை கொடுத்த வரத்தால் விளைச்சல் நன்றாக உள்ளது. பழங்களின் நிறமும் சுவையும் உலகில் முன்னணி இடத்திற்கு போட்டியிடும் திறனை பெற்று விட்டன. எனவே உலகில் பல்வேறு நாடுகளில் இருந்தும் இவரிடம் பழங்கள் வாங்க ஆர்டர்கள் குவிந்தன.
அழகிய பண்ணை: வெளிநாடுகளில் இருந்து இவரது பண்ணைக்கு நேரடியாக ஆய்வாளர்கள் வரத்தொடங்கினர். இதனால் பண்ணையை அழகுற அமைத்தார். "ஹார்வஸ்ட் பிரஷ்' என்ற பெயருக்கு ஏற்ப பண்ணையில் இயற்கை உரம் தயாரிப்பது, தங்கும் குடில்கள், பணியாளர்கள் குடில்கள், விருந்தினர் குடில்கள், வாத்து, நாட்டுக்கோழி, நவீன மாட்டுப்பண்ணை, நேர்த்தியான ரோடுகள், மாட்டு வண்டி என எல்லாமே கேரள ஸ்டைலில் வடிவமைத்தார்.
இன்று தென்மாநிலங்களில் முன்னணி சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு இங்கிருந்து பழங்கள் பேக்கிங் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றன. வெளிநாடுகளுக்கும் பழங்கள் செல்கின்றன.
மாதுளை தேன்: இங்கு மற்றொரு சிறப்பம்சம் மாதுளை தேன். நிலத்தில் 90 சதவீதம் மாதுளை சாகுபடி செய்திருப்பதால், நூற்றுக்கணக்கான தேன்பெட்டிகள் வைத்து மாதுளை தேன் சேகரிக்கிறார். இயற்கையாக விளைந்த மாதுளை என்பதாலும், மாதுளை தேன் என்பதாலும் உலக மார்க்கெட்டில் தனி மவுசு உள்ளது. இதனால் அடுத்த பல ஆண்டுகளுக்கு கூட மாதுளை தேனுக்கு முன்பதிவு உள்ளது. கேட்ட பணம் கொடுத்து முன் பதிவு செய்துள்ளது எல்லாமே பன்னாட்டு நிறுவனங்கள் என்பது முக்கிய அம்சம்.
பாதுகாப்பு ஏற்பாடு: இங்குள்ள ஒரே பிரச்னை பழங்கள் மற்றும் பணியாளர்கள் பாதுகாப்பு. அடர்ந்த மலையடிவாரம் என்பதால் காட்டு பன்றிகள், யானை, காட்டு மாடுகள் உட்பட வனவிலங்குகள் தொல்லை அதிகம். எனவே பண்ணையை சுற்றி பாதுகாப்பாக வேலி அமைத்துள்ளார்.
வெளிமார்க்கெட்டில் எவ்வளவு விலை கிடைத்தாலும், உள்ளூர் வியாபாரிகளுக்கு குறைந்த விலையில் பழங்களை வழங்கி வருகிறார். கம்பம், கூடலூர், லோயர்கேம்ப் பகுதி மக்களுக்கும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட உலகத்தரம் வாய்ந்த மாதுளை சில்லரை மார்க்கெட்டில் தெரு வியாபாரிகள் மூலம் கிடைத்து வருவது இதில் மிகவும் சிறப்பான அம்சம்.
குரியன்ஜோசப் கூறியதாவது:
""நன்மை விதைத்து, நல்லதை அறுவடை செய்'' என்று கேரளாவில் கூறுவார்கள்.
நான் மண்ணை கெடுத்து அதிக லாபம் சம்பாதிக்க விரும்பவில்லை. மாறாக மண்ணை வளப்படுத்தி, நிறைவான விளைச்சல் எடுக்க விரும்பினேன். நமது பழங்களை தரமாக மாசற்ற வகையில் உற்பத்தி செய்து வென்றுள்ளேன்.
அடுத்த கட்டமாக, இயற்கை குறித்த விழிப்புணர்வுக்காக இந்த இடத்தில் பண்ணை சுற்றுலா அமைக்க திட்டமிட்டுள்ளேன். வருபவர்களை இங்கேயே தங்க வைத்து, பண்ணையை நேரடியாக பார்வையிட்டு, பழங்களை பறித்து சாப்பிட்டு செல்லும் வகையில் ஏற்பாடு செய்ய உள்ளேன். இவ்வாறு கூறினார்.
தொடர்புக்கு: 91 93886 10249
www.harvestfresh.ininfo@harvestfresh.in

--- Thanks Dinamalar
 
JanviDate: Wednesday, 17 Jun 2015, 6:02 PM | Message # 92
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
ஐந்து சென்ட் நிலத்தில் நெல், மீன், கோழி...



""ஐந்து சென்ட் நிலத்தில் நெல்லும், மீனும், கோழியும் வளர்ப்பது சாத்தியம்,'' என்கிறார் சிதம்பரம் அண்ணாமலை பல்கலை உழவியல் துறை பேராசிரியர் ஆர்.எம்.கதிரேசன்.
இந்திய வேளாண் ஆய்வுக்கழகம், உலகவங்கி நிதியுதவியுடன் சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதார மேம்பாட்டிற்கான ஆய்வுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நாகை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் 600 விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணைய பயிற்சி அளிக்கப்பட்டு, சிறப்பாக செயல்படுகின்றனர். எங்களது மாதிரி திட்டம் ஐந்து சென்ட் அளவு தான். ஐந்து சென்ட்டில், அதாவது 200 சதுர மீட்டரில் நடுவில் 20 சதுரஅடியில் ஒருமீட்டர் ஆழத்திற்கு பள்ளமாக்க வேண்டும். 
பள்ளத்தில் நீர் நிரம்பும் போது, நிலத்தின் மட்டமும், நீர் மட்டமும் ஒன்றாக இருக்க வேண்டும். வழக்கமாக நெல்வயலில் 10செ.மீ., ஆழத்திற்கு நீர்கட்டுவதுண்டு. பள்ளத்தில் கட்லா, மிர்கால், ரோகு, புல்கெண்டை என, 200 மீன்குஞ்சுகளை விடவேண்டும். நெற்பயிர் வளரும் போது கூடவே களையும் வளரும். புல்கெண்டை ரகம், களைச்செடிகளை உண்ணும். பகலில் பள்ளத்திலும், வெயில் குறையும் போது வயலில் நீந்திச் சென்று புழு, பூச்சிகளை உணவாக கொள்ளும்.
பள்ளத்தையொட்டி 20 இறைச்சிக் கோழிகள் வளர்க்கும் ஒரு கூண்டு அமைக்க வேண்டும். இந்த கூண்டை நாங்களே இலவசமாக அமைத்துத் தந்தோம். ஒருநாள் குஞ்சின் விலை ரூ.25 முதல் ரூ.35க்குள் இருக்கும். இவற்றை முதல் பத்து நாட்கள் வீட்டில் வளர்த்து, 11வது நாளில் கூண்டில் வளர்க்க வேண்டும். கடைகளில் கிடைக்கும் கறிக்கோழி தீவனம் கொடுத்து வளர்த்தால், 45 நாட்களில் இரண்டு கிலோ எடை அதிகரிக்கும். ஒரு கோழிக்கு தீவனத்திற்கு ரூ.60 கணக்கிட்டால், செலவு போக கோழிக்கு ரூ.200 லாபம் கிடைக்கும்.
150 நாட்கள் நெற்பயிரில் ஐந்து முறை கோழி வளர்த்து, லாபம் பார்க்கலாம். கோழி எச்சம் நீரில் கரைந்து பயிர்களுக்கும், மீனுக்கும் உரமாகும். 150 நாட்களில் 30 முதல் 45 கிலோ எடையுள்ள மீன்கள் மொத்தமாக கிடைக்கும். மழை, வெள்ளத்தால் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் கோழி, மீன்கள் கைகொடுக்கும். இதையே ஒரு ஏக்கர் அளவுக்கு விரிவுபடுத்தினால், 20 கோழிக் கூண்டுகள் வைக்கலாம். நெல் சாகுபடி செய்வதற்கு முன் அடியுரம் இடலாம். கோழி, மீன்கள் வளர்ப்பதால், யூரியா போன்ற மேல் உரம், பூச்சிகொல்லி மருந்து எதையும் பயன்படுத்தக்கூடாது, என்றார். இவரிடம் பேச: 96551 88233.

--- Thanks Dinamalar
 
JanviDate: Wednesday, 17 Jun 2015, 6:20 PM | Message # 93
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
 
JanviDate: Wednesday, 17 Jun 2015, 6:24 PM | Message # 94
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
 
JanviDate: Thursday, 25 Jun 2015, 8:15 PM | Message # 95
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
வீட்டுக் கழிவு நீரில் செழிக்கும் செடிகள்!

இ. கார்த்திகேயன் படங்கள்: ஏ. சிதம்பரம் கழிவு நீர் மேலாண்மை

2030-ம் ஆண்டில் தண்ணீர் மற்றும் உணவுப் பற்றாக்குறை ஏற்படும், மத்தியக்
கிழக்கு நாடுகளைப் போல இந்தியாவும் தண்ணீர் நெருக்கடி நாடாக மாறும்’ என்ற
அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது, சர்வதேச தண்ணீர் மேலாண்மை நிறுவனம்.
குளம், குட்டைகள், ஆறுகளை ஆழப்படுத்துவது ஒரு புறம் இருந்தாலும், தண்ணீர்
சிக்கனம் என்பது தவிர்க்க முடியாததாக உள்ளதால், கழிவு நீரைக் கூட ஏதாவது
ஒரு வகையில் பயன்படுத்தியாக வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
அவ்வகையில், வீட்டுக் கழிவு நீர் மூலம் வீட்டுத் தோட்டத்துக்குப் பாசனம்
செய்து வருகிறார், தூத்துக்குடியைச் சேர்ந்த ஜெல்ஜோசப்.  70 வயதான
ஜெல்ஜோசப்பை தூத்துக்குடி கிருபைநகரில் உள்ள அவரது இல்லத்தில் நீர்
மேலாண்மைச் சிறப்பிதழுக்காகச் சந்தித்தோம். மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சிக்
கொண்டே நம்மிடம் பேசத்தொடங்கினார். ''என்னோட பூர்விகம் தூத்துக்குடிதான்.
மதுரையில் லேப் டெக்னீசியன் படிப்பு முடிச்சுட்டு, மைசூர்ல 5 வருஷம் வேலை
பாத்தேன். அப்பறம்  தூத்துக்குடிக்கே வந்து தனியா லேப் ஆரம்பிச்சுட்டேன்.
எனக்கு அடிப்படையில் இயற்கையின் மீதும், இயற்கை விவசாயத்தின் மீதும் ஆர்வம்
அதிகம். அதனாலதான் வீட்டுத் தோட்டம் போட்டு பராமரிச்சுட்டு இருக்குறேன்.
தோட்டத்துக்கு எங்க வீட்டுக் கழிவுகளையே உரமாக்கிடுவேன். அதே மாதிரி
வீட்டுல எந்தக் கழிவு நீரையும் வெளிய விடுறதில்லை. அதையும் தோட்டத்துக்கே
பாய்ச்சிடுவேன்' என்று முன்னுரை கொடுத்த ஜெல்ஜோசப் தொடர்ந்தார்.

செப்டிக் டேங்க் கிளீன் செய்யத் தேவையில்லை!
'அதேமாதிரி, உதிர்ற இலை, பூக்கள் எல்லாத்தையும் ஒரு மூலையில் போட்டு
சாணத்தைக் கரைச்சு தெளிச்சுவிட்டா, அதுல மண்புழுக்கள் உருவாகிடும். அதை
வெச்சு மண்புழு உரம் தயாரிச்சு பயன்படுத்திக்குவேன். அதேமாதிரி
தென்னைமரத்தின் அடிப்பகுதியைச் சுத்தி தேங்காய் நாரை வரிசையாக
அடுக்கிடுவேன். அதனால், தென்னைக்கு எப்பவுமே ஈரப்பதம் கிடைச்சுட்டே
இருக்கும். 'செப்டிக் டேங்க்’ கழிவு நீரை செடிகளுக்குப் பாய்ச்சினா செடிகள்
கறுத்துடும், கிருமிகள் உருவாகும்னு சொல்றாங்க. ஆனா, எங்க வீட்டு செப்டிக்
டாங்க் கழிவு நீர்ல 'பேசிலஸ் சப்டாலிஸ்’ங்கிற பாக்டீரியாவைக் கலந்து,
அந்தத் தண்ணீரை நேரடியா செடிகளுக்கு விட்டுட்டு இருக்கேன். இந்த
பாக்டீரியா, மலத்தை சாப்பிட்டுடும். வெறும் தண்ணிதான் வெளியவரும். இந்த
பாக்டீரியாவைப் பயன்படுத்தும்போது, கழிவறையை சுத்தம் செய்ய பினாயிலை
பயன்படுத்துனா பாக்டீரியாக்கள் செத்துடும். அதே நேரத்துல ஆரஞ்சு, எலுமிசைச்
பழத்தோல்களை காய வெச்சு அரைச்சு அது மூலமா கழிவறையை சுத்தப்படுத்தலாம்'
என்ற ஜெல்ஜொசப் கழிவு நீரை சுத்திகரிக்கும் முறைகளைச் சொன்னார்.

சுலபமாக சுத்திகரிக்கலாம்!
'பாத்ரூமில் இருந்து வருகிற சோப் தண்ணீர், துவைத்த சோப் தண்ணீர்
ஆகியவற்றை நேரடியாகச் செடிகளுக்குப் பாய்ச்சக் கூடாது. அதை வடிகட்டி
சுத்திகரித்துத்தான் பாய்ச்ச வேண்டும்.
இரண்டு கிணறு உறைகளை ஒன்றின் மேல் ஒன்றாக அமைத்து, தொட்டி போன்ற அமைப்பை
ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதிலிருந்து தண்ணீர் கசிந்து செல்வது போல,
வாய்க்கால் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதன் அடிப்பரப்பில் இரண்டு அங்குல
அளவுள்ள ஜல்லிக் கற்களைப் பரப்பி, அதன் மேல் முக்கால் அங்குல அளவுள்ள
ஜல்லிக் கற்களைப் போட்டு... அதன் மீது கொசுவலையை விரித்து, வலைக்கு மேல்
சலித்த பருமணலை நிரப்ப வேண்டும். சோப் கலந்த கழிவு நீரை குழாய் மூலம்
இத்தொட்டிக்குள் விழுமாறு அமைத்துக் கொள்ளவேண்டும். தொட்டியின்
நடுப்பகுதியில் சேம்புச் செடியை நட்டு விட வேண்டும். சேம்புச் செடி, நுரை
கலந்த சோப்புத் தண்ணீரை உறிஞ்சி நல்ல தண்ணீரை மட்டுமே அடியில் விடும்.
தொட்டியின் மேல் மட்டத்திலேயே தேவையற்றக் கழிவுகள் படர்ந்து விடும். தவிர,
தொட்டி நடுவில் வலை அமைத்திருப்ப தால் நீர் வடிகட்டப்பட்டு விடும்.

தாத்தா பாட்டிகள்..!
நிறைவாகப் பேசிய ஜெல் ஜோசப், ''முருங்கை, சோற்றுக்கற்றாழை, மணப்புல்,
புளிச்சகீரை, பப்பாளி, வேம்பு, துளசி, கருந்துளசி, இன்சுலின், ஆடாதொடை,
அம்மான் பச்சரிசி, சிறியாநங்கை, பெரியாநங்கை, தூதுவளை, பூண்டு, கீழாநெல்லி,
வேலிக்காத்தான், ஃபாஷன் ஃப்ரூட், வெட்டுக்காயத் தழைனு எல்லாமே வீட்டுல
இருக்கு. இது எல்லாமே எல்லா வீட்டுலயும் கட்டாயம் இருக்க வேண்டிய
மூலிகைகள். இந்த மூலிகைகள்தான் நம் தாத்தா, பாட்டிகள். அதேமாதிரி
மூலிகைகளின் பெயர்களையும், மருத்துவ குணங்களையும் சின்னப் பிள்ளைகளுக்கு
கண்டிப்பா சொல்லிக் கொடுக்கணும். 'வீட்டுச் சத்தம் வெளியே போகக் கூடாது’
என்று பெரியவங்க சொல்லுவாங்க. அதே வீட்டுக் கழிவுநீரையும் வெளிய விடாம
உபயோகிச்சா வீட்டுத் தோட்டத்தைச் செழிக்க வைக்கலாம்'' என்று சொல்லி
விடைகொடுத்தார்.
தொடர்புக்கு,
ஜெல்சோசப்,
செல்போன்: 94864-54263

தினம் தினம் எரிவாயு!
ஜெல்ஜோசப், சமையலறைக் கழிவுகள் மூலம் இயற்கை எரிவாயு தயாரித்து, அடுப்பு எரிப்பதற்கு
பயன்படுத்துகிறார். தினமும் ஒரு மணி நேரம் அளவுக்கு தற்போது இவருக்கு
எரிவாயு கிடைத்து வருகிறது. இதன் அமைப்பு மற்றும் பயன்பாடு குறித்து, அவர்
தந்த தகவல்கள்-
இந்த எரிவாயுக் கலன் அமைப்பதில், சிற்சில முறைகள் இருக்கின்றன. 'தரைக்கு
மேல் மிதக்கும் கலன் அமைத்தல்' என்கிற முறை, எளிமையானதாகவும் குறைந்த
செலவுடையதாகவும் இருக்கும். நான்கு அடி உயரம், மூன்றரை அடி விட்டம் கொண்ட
சாண எரிவாயுக் கலன் அமைத்துக் கொள்ள வேண்டும் (இது மிதக்கும் கலன்,
கீழிருக்கும் கலன் என இரண்டு பாகங்கள் கொண்டது. ரெடிமேடாகவும் கிடைக்கும்).
இதில் உட்செலுத்தும் குழாய், செரிப்பான், வாயுச் சேகரிப்பான்,
சாணக்கழிவுக் குழம்பு வெளியேறும் பகுதி, வாயு உற்பத்தியை வெளியே கொண்டு
செல்லும் குழாய் இணைப்பு என மொத்தம் ஐந்து பாகங்கள் இருக்கும்.
முதல்முறையாக உற்பத்தி செய்யத் தொடங்கும்போது 400 கிலோ சாணம் மற்றும்
400 லிட்டர் தண்ணீர் தேவை. இரண்டையும் 1;1 என்ற விகிதாச்சாரத்தில் கலந்து,
நன்கு கலக்கி, 800 லிட்டராக்கிவிட வேண்டும். கலவையை நன்கு கிளறிவிடும்போது,
குப்பைகள் மேலே மிதக்கும். அவை அனைத்தையும் அகற்றிவிட வேண்டும். இந்த அளவு
கரைசல் எப்போதுமே கலனில் இருக்க வேண்டும். இந்தக் கரைசலுக்கு 'ஸ்டார்ட்டர்
கரைசல்’ என்று பெயர். இந்தக் கரைசலை, உட்செலுத்தும் குழாயில் புனல் மூலம்
ஊற்றி, மூடி விடவேண்டும். இந்தக் கரைசல் செரிப்பானை அடையும். அங்கே,
அனரோபிக் பாக்டீரியாக்கள் அதிக அளவில் உற்பத்தியாவதால், ஒரு வார காலத்தில்,
மிதக்கும் கலன் படிப்படியாக உயர ஆரம்பிக்கும். 2 வாரத்தில் சாண எரிவாயு
முழுவதுமாக உற்பத்தியாகிவிடும். எரிவாயு, வெளிச்செல்லும் குழாய் மூலம்,
அடுப்பை வந்தடையும். கலன் அரை அடி உயர்ந்ததுமே, அடுப்பைப் பற்ற வைத்து
சோதித்துப் பார்க்கலாம். ஆனால், ஆரம்பத்தில் 4-5 நாட்களுக்கு சாண
எரிவாயுவைப் பயன்படுத்தாமல், வெளியில் விட்டு விடவேண்டும். காரணம்,
சாணத்தின் துர்நாற்றம் அதிகமாக இருக்கும். 6-வது நாளில் இருந்து எந்தவித
துர்நாற்றமும் இருக்காது.
ஆரம்பத்தில் ஒரு வாரம் வரை, புதிதாக கலனுக்குள் எந்த இடுபொருளையும்
போடாமல் எரித்துப் பார்க்கலாம். பிறகு, தினமும் நம் வீட்டுச் சமையல்
கழிவுகளை (காய்கறிகள், அழுகியப் பழங்கள், வெங்காயத் தோல்கள் என அனைத்தும்)
போடலாம். மேலும் எவ்வளவு சாணம் கிடைக்கிறதோ, அதில் சமஅளவு தண்ணீரையும்
சேர்ந்து அன்றாடம் கலனில் செலுத்தலாம். கலனில் எப்பொழுதும் கரைசல்
முழுவதுமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும் (உதாரணமாக, ஒரு வாளி சாணம்,
என்றால் ஒரு வாளி தண்ணீர்), அதிகமான கரைசலும் கூடாது. வாயு உற்பத்திக்குப்
பிறகு, சாணக்கழிவு குழம்பானது வெளியேறும் குழாய் மூலமாக வெளியேறிவிடும்.
இதைச் சேமித்து பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம் தயாரிப்பு மற்றும் அசோலா
வளர்ப்புக்கும் உயிர் உரமாகவும் பயன்படுத்தலாம்.

Thanks Pasumai Vikatan
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பசுமை - இயற்கையின் கொடை » வீட்டு தோட்டம் / மாடி தோட்டம் » வீட்டு தோட்டம் / மாடி தோட்டம் (வீட்டு தோட்டம் / மாடி தோட்டம்)
  • Page 10 of 10
  • «
  • 1
  • 2
  • 8
  • 9
  • 10
Search: