தானியங்கள்... தரும் பலன்கள்! - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
  • Page 1 of 1
  • 1
Forum moderator: Laya, Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » ஆயுர் ஆரோக்கியம் » ஆரோக்கியம் » தானியங்கள்... தரும் பலன்கள்! (Thanks - Vikatan)
தானியங்கள்... தரும் பலன்கள்!
RAWALIKADate: Wednesday, 28 May 2014, 9:31 AM | Message # 1
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
தானியங்கள்... தரும் பலன்கள்!
ஜி. பிரபு படம்: வீ. சிவக்குமார்
 உணவு'ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம்... உள்ளே இருக்குமாம் ஈறும் பேனும்...’ என்பார்கள். இது, இன்றைய 'ஃபாஸ்ட் ஃபுட்' கலாசாரத்துக்கு அப்படியே பொருந்தும். பல வண்ணங்களில் வகை வகையாக அலங்கரிக்கப்பட்டு பரிமாறப்படும் உணவுகளில் உடலுக்குத் தேவையான சத்துக்களைவிட, நச்சுப் பொருட்கள்தான் அதிகளவில் உள்ளன. அப்படி விலை கொடுத்து வினையை வாங்கியவர்கள் பலரும்... மீண்டும் பாரம்பரிய சிறுதானிய உணவுகளைத் தேடி ஓட ஆரம்பித்துள்ளனர்!



உடல் பருமனுள்ளவர்கள், ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்கள், சர்க்கரை நோய் உட்பட பலவித நோய்வாய்ப்பட்டவர்கள்... என அனைவருக்கும் சிறுதானியங்களைத்தான் பரிந்துரைக்கிறார்கள் மருத்துவர்கள். அப்படிப்பட்ட சிறுதானியங்களில் உள்ள சத்துக்கள் பற்றி திண்டுக்கல், இயற்கை மருத்துவர், ஷர்மிளா பேசுகிறார்...

''உணவே மருந்து என்று முன்னோர் கூறி வைத்துள்ளனர். அன்று, வயதானவர்கள்கூட அனாயாசமாக கடின வேலைகளைச் செய்ய முடிந்ததற்கு காரணம், அவர்கள் உண்ட ஊட்டச்சத்து மிக்க உணவுகள்தான். இன்றோ நிலைமை தலைகீழாகி, இளம்வயதினர்கூட மாத்திரை புட்டிகளுடன் அலைகின்றனர். மேலை நாட்டினரிடம் இருந்து கற்றுக்கொண்ட தவறான உணவுப் பழக்கம்தான் இதற்கு காரணம். இதிலிருந்து நம் உடலைப் பாதுகாக்க வேண்டுமானால், உடனடியாக பாரம்பரிய, கலாசார உணவுகளுக்கு மாறவேண்டும். குறிப்பாக, சிறுதானிய உணவுகளுக்கு மாறவேண்டும். அவற்றில்தான், புரதச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் சத்து மற்றும் உயிர்ச்சத்துகள் என உடலுக்குத் தேவையான அத்தனை ஊட்டச்சத்துகளும் உள்ளன. அவற்றை உண்டால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, உடல்பருமன், நீரிழிவு, இதயநோய் போன்றவை ஏற்படாது'' என்றவர், ஒவ்வொரு தானியத்துக்குமான குணங்களை வரிசையாக அடுக்கினார்.

கம்பு உணவுகள்: ஜீரண சக்தியையும், உடல் வலிமையையும் அதிகரிக்கும்; உடல் வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்கும்; தேவையற்ற கொழுப்பைக் கரைக்கும்;  புற்றுநோயைத் தடுக்கும்.

சோள உணவுகள்: உடலுக்கு உறுதி அளித்து உடல்பருமனைக் குறைக்கும்; வயிற்றுப் புண்ணை ஆற்றும்; வாய் துர்நாற்றத்தைப் போக்கும். மூலநோயாளிகள் சோள உணவை அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

வரகு உணவுகள்... உடல் எடையைக் குறைக்கும். பெண்களுக்கான நோய்களை சரி செய்யும்.

கேழ்வரகு உணவுகள்... உடல் வெப்பநிலையை சமநிலையில் வைத்திருப்பதோடு, குடலுக்கு வலிமை கொடுப்பவை. குறிப்பாக, சர்க்கரை நோயாளிகளுக்கு இது சிறந்த மாற்று உணவு.

தொடர்ந்த ஷர்மிளா, ''ஆனால், நாம் அதிகமாக அரிசியையே சாப்பிடுகிறோம். அரிசியைக் குறைக்க வேண்டும். அதிலும், புழுங்கல் அரிசி நமது உடலுக்கு ஏற்றது. அதுவும் கைக்குத்தல் அரிசியாக இருப்பது நலம். பச்சரிசி எளிதில் செரிக்காது. தவிர, உடலில் கொழுப்புச்சத்தை அதிகரிக்கும். சீரகச்சம்பா அரிசி உடலில் வாதத்தை சமன் செய்யும். அதேசமயத்தில் பித்தத்தை அதிகரிக் கும். சம்பா ரக அரிசிகள் அனைத்துமே மருத்துவ குணம் கொண்டவை.



கோதுமையில் புரதச்சத்து, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் சத்து, கரோட்டின் நியாசிக், சுண்ணாம்புச்சத்து ஆகியவை உள்ளன. இதுவும் சர்க்கரை நோயாளிகளுக்குச் சிறந்த மாற்று உணவு.

என்றாலும், அரிசி, கோதுமையைவிட... சிறுதானியங்களில்தான் அதிக சத்துக்கள் உள்ளன'' என்ற ஷர்மிளா, ஒரு நாளைக்கு மனிதனுக்குத் தேவைப்படும் சக்தி குறித்தும் விவரித்தார்.

''சராசரி ஆணுக்கு, ஒரு மணி நேரத்துக்கு... அவரது எடையில் ஒரு கிலோவுக்கு ஒரு கிலோ கலோரி அளவு சக்தி தேவைப்படும். உதாரணமாக, 60 கிலோ எடையுள்ள நபருக்கு ஒரு மணி நேரத்துக்கு 60 கிலோ கலோரி சக்தி தேவை. ஒரு நாளைக்கு சராசரியாக 1,440 கிலோ கலோரி சக்தி தேவை. சராசரி பெண்ணுக்கு அவரது எடையில் ஒரு கிலோவுக்கு 0.9 கிலோ கலோரி சக்தி போதுமானது.

சாதாரணமாக ஒரு நாளைக்கு ஒரு கிலோ எடைக்கு, ஒரு கிராம் புரதம் தேவை. எடை குறைக்க விரும்புபவர்கள் கூடுதலாக புரதம் இருக்குமாறு சாப்பிடலாம். ஏனெனில், கொழுப்பைக் குறைப்பதில் புரதம் முக்கிய பங்கு வகிக்கிறது. அதேபோல, ஒரு நாளைக்கு 30 கிராம் நார்ச்சத்து அவசியம் தேவை. இதுவும் கொழுப்பைக் குறைக்க உதவும். அதேநேரத்தில், நார்ச்சத்து அதிகமானால், உடலில் தாது உப்புக்கள் சேர்வதைக் குறைத்துவிடும்.



நாம் உண்ணும் உணவில் 60% கார்போ-ஹைட்ரேட், 20% புரோட்டீன், 15% கொழுப்பு ஆகியவை இருக்க வேண்டும். உப்பு, தாது உப்புக்கள், வைட்டமின்கள், நார்ச்சத்து ஆகியவை அனைத்தும் சேர்த்து 5% இருக்க லாம். இவை சராசரியான அளவுகளே. கொஞ்சம் அதிகமாகவோ, குறைந்தோ இருந்தால் பிரச்னை இல்லை. தொடர்ந்து ஒரே சத்து மட்டும் உடலில் சேர்ந்து வந்தால் பிரச்னைகள் வர வாய்ப்புகள் உண்டு. இதற்காக, எந்தெந்த சத்துக்கு... எதை எதை சாப்பிடுவது என்று பட்டியல் போட்டுக் கொண்டெல்லாம் சாப்பிடத் தேவையில்லை. அரிசி, கோதுமை, பருப்பு, காய்கறிகள், கீரைகள், பழங்கள், பால், தயிர், எண்ணெய், நெய், சர்க்கரை... ஆகிய உணவுகளை தேவையைப் பொறுத்து சாப்பிட்டு வந்தாலே போதும்... உடலுக்குத் தேவையான சக்தி எளிதாகக் கிடைத்துவிடும்'' என்ற ஷர்மிளா, சிறுதானியங்கள் மற்றும் அரிசி-கோதுமையில் உள்ள சத்துக்களின் அளவுகளையும், சிறுதானிய உணவுகளில் உள்ள சத்துக்களையும் பட்டியலிட்டார்.
 
NathasaaDate: Monday, 16 Jun 2014, 9:51 AM | Message # 2
Major general
Group: *Checked*
Messages: 360
Status: Offline
அருமையான தகவல்
 
P_SakthiDate: Thursday, 18 Sep 2014, 1:04 PM | Message # 3
Major general
Group: *Checked*
Messages: 374
Status: Offline
Thanks for this info Viji.
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » ஆயுர் ஆரோக்கியம் » ஆரோக்கியம் » தானியங்கள்... தரும் பலன்கள்! (Thanks - Vikatan)
  • Page 1 of 1
  • 1
Search: