இயற்கை மருத்துவம் - Page 3 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
Forum moderator: Laya, Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » ஆயுர் ஆரோக்கியம் » ஆரோக்கியம் » இயற்கை மருத்துவம் (இயற்கை மருத்துவம்)
இயற்கை மருத்துவம்
JeniliyaDate: Friday, 07 Feb 2014, 9:32 AM | Message # 1
Private
Group: Moderators
Messages: 19
Status: Offline
இயற்கை மருத்துவம் தொடர்பான தகவல்களை பகிரவும்

கவனிக்க:

தகவல் பெறப்பட்ட மூலத்தை குறிப்பிடவும்.

இல்லையேல் நீங்கள் பகிர்ந்த தகவல் நீக்கப்படும்
 
MeenatchiDate: Tuesday, 25 Feb 2014, 9:05 AM | Message # 21
Colonel
Group: Checked
Messages: 249
Status: Offline
ஹாய் மீனாக்ஷி,
  உங்களது தகவலுக்கு மிக்க நன்றி .......


Meenatchi .S
 
MeenakshiDate: Wednesday, 26 Feb 2014, 4:31 AM | Message # 22
Sergeant
Group: Checked
Messages: 35
Status: Offline
புதினா ஒரு மருத்துவ மூலிகை

புதினா Mentha spicata ஒரு மருத்துவ மூலிகையாகும். இது வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், செரியாமை முதலியவற்றிற்கு உதவுகிறது. கறிவேப்பிலை மற்றும் கொத்துமல்லியைப் போலவே புதினாவும் உணவுக்கு மணமூட்டுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. புதினாக்கீரை பசியைத் தூண்டும். மணமும் காரச் சுவையும் கொண்டது. அதற்காகவே, பல்வேறு நாடுகளிலும் புதினாக் கீரையை மக்கள் விரும்பி வளர்க்கின்றனர்.

புதினாக் கீரையில் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் அதிக அளவில் இருக்கின்றன. துவையல், சட்னி, பொடி போன்றவை தயாரித்தும் மசால் வடையில் சேர்த்தும், பிரியானி மற்றும் இறைச்சி வகைகளில் சேர்த்தும் புதினாக் கீரை பயன்படுத்தப்படுகிறது.

புதினாக் கீரையைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் இரத்தம் சுத்தமாகும். வாய் நாற்றம் அகலும். ஜீரண சக்தி அதிகரித்து பசி தூண்டப்படும். மலச்சிக்கலும் நீங்கும். பெண்களின் மாதவிலக்குப் பிரச்னைகள் தீர புதினாக்கீரை உதவுகின்றது. ஆண்மைக் குறைவை நீக்கி முழுமையான இல்லற இன்பத்தை அனுபவிக்கவும் புதினாக் கீரை உதவுகின்றது.

ஊளைச் சதையைக் குறைப்பதற்குப் புதினா சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. வயிற்றுப் புழுக்களை அழிக்க இது உதவுகின்றது. வாய்வுத் தொல்லையை அகற்றுகின்றது. புதினா இலையின் சாற்றை தலைவலிக்குப் பூசலாம். இளைப்பு நோயையும், ஆஸ்துமாவையும் புதினாக் கீரை கட்டுப்படுத்துகின்றது. மஞ்சள் காமாலை, வாதம், வறட்டு இருமல், சோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினாக் கீரை சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. பல் ஈறுகளில் உண்டாகும் நோய்களையும் புதினாக் கீரை குணப்படுத்துகிறது.

புதினாக் கீரை வாங்கும்போது இலைகளைப் பயன்படுத்தி விட்டுத் தூர எறியும் தண்டுகளை மண்ணில் ஊன்றி வைத்தால் அவை தளிர்த்துப் புதிய இலைகளைக் கொடுக்கும். வயிற்றுப்போக்கு ஏற்பட்ட சமயம் புதினாக்கீரை துவையலை சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.

சருகுபோல காய்ந்தபின் அதை எடுத்து, உத்தேசமாக அந்த இலை இருக்கும் அளவில் எட்டில் ஒரு பங்கு சோற்று உப்பை அத்துடன் சேர்த்து உரலில் போட்டு நன்றாக இடிக்க வேண்டும். தூளான பின் எடுத்து, மாவு சலிக்கும் சல்லடையில் சலித்து எடுத்து, வாயகன்ற பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். இதைத் தினசரி உபயோகித்து வந்தால் பற்கள் முத்தைப்போல பிரகாசிக்கும். பல் சம்பந்தமான எல்லா வியாதிகளும் குணமாகும்.

source - mooligai maruthuvam
 
MeenakshiDate: Monday, 03 Mar 2014, 5:07 AM | Message # 23
Sergeant
Group: Checked
Messages: 35
Status: Offline
மருத்துவ பயன் நிறைந்த வெற்றிலை

வெற்றிலை பொதுவாக சீதத்தை நீக்கும் சக்தி கொண்டது. வெப்பம் தரும், அழுகல் அகற்றும், உமிழ்நீர் பெருக்கும், பசி உண்டாக்கும், பால் சுரக்க  வைக்கும், காமத்தைத் தூண்டும். நாடி நரம்பை உரமாக்கும், வாய் நாற்றம் போக்கும். வெற்றிலைச் சாறு சிறுநீரைப் பெருக்குவதற்கும் பயன்படுகிறது. வெற்றிலைச்சாற்றுடம் நீர் கலந்த பாலையும், தேவையான அளவு கலந்து பருகி வர சிறு நீர் நன்கு பிரியும்.

வெற்றிலையை கடுகு எண்ணெயில் போட்டு லேசாக சூடு செய்து மார்பில் வைத்துக் கட்டிவர மூச்சுத் திணறல் மற்றும் இருமலுக்கு சுகம் தரும்.
குழந்தைகளுக்கு வரும் சுரம், சன்னிக்கு, வெற்றிலைச் சாற்றில் , கஸ்தூரி, கோரோசனை, சஞ்சீவி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை மத்தித்து தேனுடன் கொடுக்க குணமாகும். சளி, இருமல், மாந்தம், இழுப்பும் குணமாகும்.

வெற்றிலையை அனலில் வாட்டி அதனுள் ஐந்து துளசி இலையை வைத்துக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து 10 மாத குழந்தைக்கு 10 துளிகள் காலை, மாலை கொடுக்க சளி, இருமல் குணமாகும். அனலில் வாட்டிய வெற்றிலையை மார்பிலும் பற்றாகப் போட சளி குறையும். குழந்தைகளுக்கு மலர்ச்சிக்கல் ஏற்பட்டால் வெற்றிலைக் காம்பை ஆமணக்கு எண்ணையில் தோய்த்து ஆசன வாயில் செலுத்த உடனடியாக மலம் கழியும்.

வெற்றிலையை அரைத்து கீல்வாத வலிகளுக்கும், விதைப்பையில் ஏற்படும் வலி, வீக்கம் முதலியவைகளுக்கு வைத்துக் கட்ட நல்ல பலன் தரும். கம்மாறு வெற்றிலைச் சாறு 15 மி.லி. அளவு வெந்நீரில் கலந்து கோடுக்க வயிற்று உப்புசம், மந்தம், சன்னி, சீதளரோகம், தலைவலி, நீர் ஏற்றம் வயிற்று வலி குணமாகும்.

வெற்றிலையில் சிறிது ஆமணக்கு எண்ணெய் தடவி லேசாக வாட்டி கட்டிகளின் மேல் வைத்துக்கட்டி வர கட்டிகள் உடைந்து சீழ் வெளிப்படும். சிறப்பாக இதை இரவில் கட்டுவது நல்லது. சுக்கு, மிளகு, திப்பிலி சம அளவு கலந்த திரிகடுக சூரணத்துடன் வெற்றிலைச் சாறு தேன் கலந்து சாப்பிட ஆஸ்துமா குணமாகும். 5 கிராம் சூரணம்+10 மி.லி. வெற்றிலைச்சாறு தேன் 10 கிராம் கலந்து காலை, மாலை நோயிக்குத் தக்க வாறு 48-96 நாள் சாப்பிட வேண்டும்.

குழந்தை பெற்ற பின்னர் தாய்க்கு அதிகமாக பால் சுரக்க வெற்றிலையை சிறிது ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி மார்பில் வைத்துக் கட்டி வர தாய்பால் அதிகமாகச்சுரக்கும். வெற்றிலைச் சாறு நான்கு துளி காதில் விட எழுச்சியினால் வரும் வலி குணமாகும். விடாது மூக்கில் ஒழுகும் சளிக்கும் வெற்றிலைச்சாற்றை மூக்கில் விட குணமாகும்.

வெற்றிலையின் வேரை சிறுதளவு எடுத்து வாயிலுட்டு மென்று வர குரல் வளம் உண்டாகும். எனவே இசைக்கலைஞர்கள் இதனை அதிகம் பயன்படுத்துகிறார்கள். நுரையீரல் சம்பந்தமான நோய்களிக்கு வெற்றிலைச்சாறும், இஞ்சிச் சாறும் சம அளவு கலந்து அருந்திவர நன்மை ஏற்மடும். சிறுவர்களுக்கு அஜீரணத்தைப் போக்கி பசியைத் தூண்ட வெற்றிலையோடு மிளகு சேர்த்து கஷாயம் செய்து கொடுத்து வரலாம்.

SOURCE:http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=1329&cat=500


Message edited by Meenakshi - Monday, 03 Mar 2014, 5:08 AM
 
MeenakshiDate: Friday, 21 Mar 2014, 8:38 AM | Message # 24
Sergeant
Group: Checked
Messages: 35
Status: Offline
சித்த மருத்துவ குறிப்புகள்

தலைவலி குணமாக: விரவி மஞ்சளை விளக்கு எண்ணெய்யில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை மூக்கின் வழியாக உரிஞ்ச தலைவலி,  நெஞ்சுவலி முதலியன அகலும்.

இருமல் குணமாக:அரசு மரத்துப்பட்டையை காயவைத்து வறுத்து கரியானவுடன் தூளாக்கி 1 டம்ளர் நீரில் 1 கரண்டி போட்டு கொதித்ததும் வடிகட்டி  சர்க்கரை, பால் சேர்த்து குடித்தால் இருமல் குணமாகும்.

ஜலதோஷம்: ஜலதோஷம் காய்ச்சல், தலைவலிக்கு பனங்கிழங்கை அவித்து காயவைத்து இடித்து பொடியாக்கி பனங்கற் கண்டு சேர்த்து சாப்பிட்டால்  குணமாகும்.

வறட்டு இருமல் குணமாக:கருவேலமரக் கொழுந்தை கசக்கி சாறு எடுத்து வெந்நீரில் கலந்து சாப்பிட வறட்டு இருமல் குறையும் வெள்ளை முதலான  நோய்கள் குணமாகும்.

ஆஸ்துமா, மூச்சுத்திணறல் குணமாக:முசுமுசுக்கை இலையை அரிந்து வெங்காயத்துடன் நெய் விட்டு வதக்கி பகல் உணவில் சேர்த்து சாப்பிட  ஆஸ்துமா, மூச்சுதிணறல் குணமாகும்.

சளிகட்டு நீங்க:தூதுவளை, ஆடாதோடா, சங்கன் இலை கண்டங்கத்திரி இலை, சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட இறைப்பு  சளிகட்டு நீங்கும்.

பிரயாணத்தின் போது வாந்தி நிறுத்த:தினசரி ஒரு நெல்லிக்காய் என தொடர்ந்து 41 நாட்கள் சாப்பிட்டால் வாந்தி வராது.

காசம் இறைப்பு நீங்க :கரிசலாங்கன்னி, அரிசி, திப்பிலி பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட இறைப்பு குணமாகும்.

தலைப்பாரம் குறைய : நல்லெண்ணையில் தும்பை பூவை போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும்.

தும்மல் நிற்க :தூதுவளை பொடியை மிளகு பொடி அல்லது தேனில் அல்லது பாலில் கலந்து சாப்பிட்டால் தும்மல் நிற்கும்.

SOURCE - Sidtha medicine


Message edited by Meenakshi - Friday, 21 Mar 2014, 8:39 AM
 
lakshmiDate: Sunday, 06 Apr 2014, 10:43 PM | Message # 25
Major
Group: Users
Messages: 92
Status: Offline
 முதுமை தோற்றத்தை தடுக்கும் எண்ணெய் மஜாஜ்!


முதுமை பல காரணங்களால் ஏற்படுகிறது. அதற்கு நாம் உண்ணும் உணவுகளும் ஒரு வகை காரணம். அதுமட்டுமல்லாமல் சருமத் திற்கு ஏற்ற முறையான பராமரிப்பும் இல்லை. அதிலும் குழந்தை பிறந்து விட்டால் சருமம் சற்று தளர்ந்தது போல தோற்றமளிக்கும்.தளர்வை சரிசெய்ய முதுமை தோற்றத்தை தடுக்க எண்ணெய் மஜாஜ் மிகவும் அவசியம். மஜாஜ் செய்வதால் ஏற்படும் பயன்கள் என்ன என்று பார்க்கலாம்.திராட்சை எண்ணெய்இந்த எண்ணெயில் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. ஆகவே சருமம் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்கும் அதுமட்டுமல்லாமல் திராட்சை எண்ணெயில் மஜாஜ் செய்தால் சரும தளர்ச்சி நீங்குவதோடு ஏதேனும் தழும்புகள் இருந்தால் நாளடைவில் மறைந்து வி டும். முகம் நன்கு பொலிவோடு இருக்கும். எந்த வயதிலும் இளமையாக இருக்க விரும்புபவர்கள் இந்த மஜாஜை செய்தால் முகச் சுருக்கம் நீங்கி இளமையாக தெரிவீர்கள்.அவகோடா எண்ணெய்நமது உடலில் சருமம் தளர்ந்து காணப்படுவதற்கு காரணம் உடலில் இருக்கும் கொலாஜெனின் உற்பத்தி குறைவாக இருப்பது தான். ஆனால் இந்த அவகோடா எண்ணெயில் இருக்கும் ஒமேகா3பேட்டி ஆசிட் அந்த கொலாஜெனின் உற்பத்தியை அதிகரித்து தளர்ச்சியை குறைத்து விடும். ஆகவே இந்த எண்ணெயை வைத்து மஜாஜ் செய்தால் சருமம் இருக்கமடைந்து முகத்தில் சருமத்துளைகள் அதிகம் காணப்பட்டாலும் அவற்றை விரைவில் போக்கி விடும்.நல்லெண்ணெய்உடலுக்கு செய்யும் மஜாஜிற்கு பயன்படுத்தும் எண்ணெயில் மிகவும் சிறந்தது நல்லெண்ணெய் தான். சில நேரங்களில் எண்ணெய் மஜாஜ் பருக்களை ஏற்படுத்தும். ஆனால் நல்லெண்ணெய்யை பயன்படுத்தினால் எந்த ஒரு பிரச்சனையும் வராது. இந்த எண்ணெய் சருமத்தில் ஏற்படும் பருக்களை நீக்கி விடும்..ஆலிவ் எண்ணெய்என்ணெய் வகைகளில் மிகச்சிறந்த எண்ணெய் எதுவென்றால் அது ஆவில் எண்ணெய் என்று சொல்லலாம். இதில் ஆக்ஸிடன்ட் மற்றும் ஓமேகா2 பேட்டிஆசிட் அதிகமாக இருக்கிறது. முக்கியமாக இந்த எண்ணெயை வைத்து மஜாஜ் செய்யும் போது எண் ணெயை எக்காரணம் கொண்டும் சூடேற்றக்கூடாது. அவ்வாறு சூடேற்றினால் அதில் உள்ள சத்துகள் அனைத்தும் அழிந்துவிடும்.எனவே ஆயில் மஜாஜ் செய்து உங்கள் இளமையை தக்க வைத்துக்கொள்வது உங்கள் கையில் தான் இருக்கிறது.

Added (06 Apr 2014, 10:41 PM)
---------------------------------------------
 நரம்பு தளர்ச்சி குணமடையும், ஆண்மையை வலுவூட்டும்!


நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடு ஏற்படும். எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டுவரவேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட நரம்புகள் பலம் பெறும். ஆண் தன்மை சீரடையும்.குழந்தை பேறு தரும்திருமணமான தம்பதியர் குழந்தை பேறுக்காக மருத்துவரையோ, ஜோசியரையோ நாடுவர். அவர்களுக்கு செவ்வாழை அருமருந்தாகும். குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.எளிமையுடன் எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப்பழம். வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன.பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப்பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. செவ்வாழையின் தாயகம் அமெரிக்க நாடுகளான கோஸ்டரீகா, மற்றும் கியூபா எனக் கூறப்படுகிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது.கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண்நோய் குணமாகும்.பல்வலி, பல்லசைவு, போன்ற பலவகையான பல்வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.சொரி சிறங்கு நீங்கும்சொரி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணம் தரும். சிரங்குக்கு மருந்து போடாவிட்டாலும், செவ்வாழைப்பழத்தை தொடர்ந்து ஏழுநாட்களுக்கு சாப்பிட்டு வர சருமநோய் குணமடையும்.தொற்றுநோய் தடுக்கப்படும்தொற்று நோய் கிருமிகளைக் கொல்லும் அறிய சக்தி செவ்வாழைப்பழத்தில் உள்ளது. வாரம் ஒருமுறை செவ்வாழை சாப்பிட்டு வர உடலில் தொற்றுநோய் பாதிப்பு கட்டுப்படும்.

Added (06 Apr 2014, 10:43 PM)
---------------------------------------------
Hi Meenakshi,

Thanks for the infos.

 
NathasaaDate: Wednesday, 09 Apr 2014, 8:03 PM | Message # 26
Major general
Group: *Checked*
Messages: 360
Status: Offline
உபயோகமான தகவல்கள்
பகிர்வுக்கு நன்றி
 
lakshmiDate: Monday, 12 May 2014, 11:18 PM | Message # 27
Major
Group: Users
Messages: 92
Status: Offline
சளி இருமல் போக்கும் இயற்கை மருந்துகள்
மிளகையும் வெல்லத்தையும் வெறும் வயிற்றில் உட்கொண்டால் இருமல் நீர்க்கோவை ஆகியவை குணமாகும். சீரகத்தையும் கற்கண்டையும் மென்று தின்றால் இருமல் குணமாகும். நான்கு மிளகையும், இரு கிராம்பையும் நெய்யில் வறுத்து பொடி செய்து ஒரு வெற்றிலையில் மடித்து மென்று விழுங்கினால் இருமல் குணமாகும். நான்கு வால் மிளகைச் சிறிதளவு புழுங்கலரிசியுடன் வாயில் போட்டு மென்று அதன் ரசத்தை பருகினால் இருமல் குணமாகும்.

தூய்மையான அருகம்புல்லை எடுத்து நன்றாக மென்று பற்களில் வலியுள்ள பகுதியில் ஓதுக்கினால் பல்வலி உடனே குணமாகும். பல் துலக்கி பின் தேனை ஈறு முழுவதும் தடவவேண்டும். சிறிது நேரம் கழித்து வாயைக்கொப்பளித்தால் பற்களில் உள்ள கிருமிகள் அழியும். தேங்காய் எண்ணெயை நாள்தோறும் பலமுறை உதட்டில் தடவினால் உதடு வெடிப்பு உதட்டு புண், தோல் உரிதல் ஆகியன குணமாகும்.

அரிசியையும் திப்பிலியையும் சிறிதளவு எடுத்து தேனில் பத்து நாட்கள் ஊறவைத்து தினம் ஒரு திப்பிலியை வாயில் போட்டு அடக்கிக்கொண்டால் ஞாபக சக்தி அதிகரிக்கும். மழைக்காலத்தில் ஒரு தம்ளர் பாலில் சிறிதளவு சுக்கு பொடி கலந்து இரவு குடித்து வந்தால் காலையில் புத்துணர்வு பெறலாம். துளசி இலையை நன்றாக வெயிலில் காய வைத்து பொடி செய்து டீத்தூளில் சேர்த்து டீ தயாரித்து குடித்து வந்தால் நன்கு பசி எடுக்கும். 

குளிர்காலத்தில் ஏற்படக்கூடிய சளி, கபம் நீங்கும். அரிசிபொரியைத் தண்ணீரில் வேகவைத்து சாப்பிட்டால் ரத்த கொதிப்பினால் வரக்கூடிய தலை சுற்றல் குணமாகும். தலை சுற்றலுடன் வாந்தி ஏற்பட்டால் வெங்காயத்தினை சாறெடுத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிடலாம். துளசி இலைச்சாறு, 150 மிலி கற்கண்டு இவை இரண்டையும் கலந்து சர்ப்பத்தாகக் காய்ச்ச வேண்டும். அதில் வேளைக்கு ஒரு டீஸ்பூன் அளவு தினசரி இருவேளை உட்கொண்ட பின் பசும்பால் அருந்தலாம். 

இந்த சர்பத் சர்வரோக நிவாரணியாகும். மூளை, நரம்பு, இதயம், இரைப்பை ஆகியவற்றைப் பலப்படுத்தும். ஞாபகசக்தியை அதிகரிக்கும். கண்களில் நீர்வடியும் பிரச்சனை உள்ளவர்கள் தினந்தோறும் வெறும் வயிற்றில் சில பாதாம் பருப்புகளை மென்று தின்றால் நீர் வடிதல் குணமாகும். தூய்மையான தாய்ப்பாலில் இருதுளியைக் கண்களில் விட்டால் கண் சூடு, கண் எரிச்சல் ஆகியன குணமாகும். மாதுளை இளைச்சாற்றில் சில துளிகளை மூக்கில் விட்டால் மூக்கில் இருந்து ரத்தம் வடிவது நிற்கும். 

சித்தரத்தையைச் சிறிதளவு எடுத்துப்பொடித்து, பசும்பாலில் கலந்து உட்கொண்டால் தும்மல், மூக்கில் நீர்வடிதல் குணமாகும். பூண்டுத் தோல், மிளகு, ஓமம், ஆகியவற்றை இடித்து நெருப்பு அனலில் இட்டுப்புகையைப் பிடித்தால் மூக்கடைப்பு மூக்கில் நீர்வடிதல் முதலிய நோய்கள் குணமாகும். எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறு எடுத்து அதை சூடு படுத்தி சிறிது தேன் கலந்து நாள் ஒன்றுக்கு 3வேளை வீதம் உள்ளங்கையில் விட்டு உட்கொள்ள வேண்டும். 

இதனால் தொண்டை வலி தொண்டை தொடர்பான நோய்கள் குணமாகும். வெறும் வயிற்றில் பச்சை திராட்சை பழத்தின் சாற்றை பருகினால் வறட்டு இருமல் குணமாகும். தேனையும், எலுமிச்சை பழசாற்றையும் சமஅளவில் உட்கொண்டால் சளி இருமல் ஆகியன குணமாகும். நீர்கோவை விலகும். 

Source:Dinakaran
 
siddhuDate: Wednesday, 20 Aug 2014, 2:35 AM | Message # 28
Colonel
Group: *Checked*
Messages: 171
Status: Offline
Hi 
Can any one tell me which herb reduces triglycerides?
Thanks
 
siddhuDate: Saturday, 23 Aug 2014, 7:31 PM | Message # 29
Colonel
Group: *Checked*
Messages: 171
Status: Offline
இது மங்கையர் மலரில் வந்தது.

ஆரோக்கிய உணவில்
முதலிடம் வகிப்பது கீரைதான். இதை உணவில் தினமும் சேர்த்து வந்தால் நோய் நொடி அண்டாது. ஒவ்வொரு கீரைக்கும்
உள்ள சத்துக்களை காண்போம்.
முருங்கைக் கீரை -
விட்டமின் ஏ,பி,சி, கணிசமான அளவு இரும்புச் சத்து உள்ளது. செரிமானம் குறைந்த குழந்தைகள், இதய நோயாளிகள் இரவில் சாப்பிடக் கூடாது. கண் பார்வையைத் தெளிவாக்கும் குணம் கொண்டது. தாது பலம் பெருகும்.
வெந்தயக் கீரை-
இரும்புச் சத்து, விட்டமின் ஏ,சுண்ணாம்பு சத்து கொண்டது. வளரும் குழந்தைகளுக்கும் மூல வியாதிக்காரர்களுக்கும்
நீரிழிவு நோயாளிக்கும் ஏற்றது. சூட்டைத் தணித்து
உடலுக்கு வலுவூட்டும்.
அகத்திக் கீரை-
விட்டமின் ஏ மற்றும் சுண்ணாம்பு சத்து கொண்டது. வாய் மற்றும் வயிற்றில் புண் உள்ளர்வர்கள்
இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வர உடனடி நிவாரணம் கிடைக்கும். மற்ற மருந்துகள் சாப்பிடும் போது இதைச் சாப்பிடக் கூடாது. வயதானவர்கள் சூப்
பதத்தில் மட்டுமே சாப்பிட வேண்டும்.
மணத்தக்காளி-
விட்டமின் பி12, மற்றும் ஏரி போப்வின் கொண்டது.
வாய்ப்புண் மற்றும் வயிற்றுப் புண் உள்ளவர்களுக்கு
நல்லது, உடல் சூட்டைக் குறைக்கும். காயத்தை ஆற்றும். வயிற்றில் பூச்சிகள்
உருவாகாமல் தடுக்கும்.
வல்லாரை-
செரடோனியம் கொண்டது. பள்ளிக்
குழந்தைகளுக்கு வாரத்தில் ஒரு முறையாவது செய்து தர வேண்டும். மூளைக்கு வலுவூட்டி நினைவாற்றலைப் பெருக்கும் தன்மை கொண்டது.
புதினா- இரும்பு, சுண்ணாம்பு சத்து, விட்டமின்சி, விட்டமின் டி கொண்டது, ஆஸ்துமா நோயாளிகளுக்கு நல்லது. மூல நோய், தொண்டையில் ரணம். குடல் புண் உள்ளவர்கள் சாப்பிடக் கூடாது. பசியையும்
நாக்கின் ருசியையும் தூண்டக் கூடியது. செரிமானத்துக்கு உதவும்.
கொத்துமல்லி-
விட்டமின் பி, பி2 மற்றும் விட்டமின் சி கொண்டது. எல்லோருக்கும் நல்லது. நோய் எதிர்ப்பு சக்தியைக்
கொடுக்கும். பித்தத்தைக் குறைக்கும்.
நாவின் ருசியைத் தூண்டும்.
முளைக்கீரை- தாது உப்புகள் மற்றும் விட்டமின் ஏ
கொண்டது. உடல் தளர்ச்சியைப் போக்கும். சதைப் பிடிப்பு இல்லாதவர்கள்
அடிக்கடி சாப்பிடலாம். ஆஸ்துமா நோயாளிகள். தலையில் நீர் கோத்து இருப்பவர்கள்
சாப்பிடக் கூடாது. உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும்
 
ram2858Date: Tuesday, 09 Sep 2014, 9:19 AM | Message # 30
Sergeant
Group: *Checked*
Messages: 30
Status: Offline
Home Remedies For EczemaEczema is term for a group of medical conditions that cause the skin to become inflamed or irritated.Here are some effective Home Remedies For Eczema:
  • Make a thick Paste of Sandalwood with a tsp of Camphor. Apply this on the affected area. This helps in curing Eczema.
  • Mix a Pinch of Turmeric Powder and Bitter Neem Leaves together. Make a Paste and Apply on the eczema affected area.
  • Mudpack is also an Effective Treatment in Curing Eczema.
  • Cut thin slices of a cucumber and allow the slices to soak for at least two hours. Filter and apply the Liquid over the affected areas.
  • Another Simple Remedy for treating Eczema would be Coconut Oil. Applying this Oil on the Eczema affected area helps to Keep the Skin smooth and Soft.
  • Applying Mashed Papaya seeds on the rashes Reduces Irritation and Itching. And It helps in Curing Eczema.



Here are some effective Home Remedies For Earache:
  • Soak corner of towel in hot water and using that give some heat to the aching ear for a few minutes.
  • Put few drops of garlic juice in ears. This would help treat earache.
  • Put few drops of warmed mustard oil in the ear using a dropper.
  • Extract some juice of Onion. Warm this and put four drops of it before going to bed.
  • Extract the Juice of few mango leaves. Warm this juice a little and apply it on the ear. This helps in treating Earache.
  • Put 3-4 drops of lukewarm olive oil as ear drops into the canal.

Added (09 Sep 2014, 9:16 AM)
---------------------------------------------
Home Remedies For ArthritisArthritis is inflammation of the joints (the points where bones meet) in one or more areas of the body.The main symptoms of arthritis are joint pain and stiffness, which typically worsen with age.Here are some effective Home Remedies For Arthritis

  • Massaging Olive Oil Over the affected area is an effective way to get relief from the Pain of Arthritis.
  • Have a Potato Juice with warm water in the Morning on Daily Basis.
  • Include food items rich in calcium, zinc and vitamin C in the Diet.
  • Massaging with castor oil also reduces the pains, thereby providing relief from arthritis.
  • Relaxing in a tub of warm water to which a cupful of sea salt has been added is an effective remedy for Arthritis.
  • Rub the affected area with warm vinegar, just before sleeping.
  • Mix camphor with a few drops of mustard oil. Regularly massage the affected area with this mixture.

Added (09 Sep 2014, 9:19 AM)
---------------------------------------------
Here are some effective Home Remedies For Corns

  • Papaya Juice is an Effective Remedy in treating Corns. Apply half tsp of Papaya Juice over the affected area thrice a day.
  • Apply a Juice from Lemon Over the hard area, Overnight. Wash it in the Morning.
  • Place fresh pineapple peel Over the Corn. Leave it overnight. It would cure the problem of corns.
  • Make a Paste of Chalk Powder and Water. Apply this over the Affected area thrice a day. It Would relieve all of the Pain by Corns.
  • Intake of foods rich in vitamin and minerals would also beneficial in healing the corns.
  • Place a Slice of Onion Over the Corns and Bandage them. Keep it Overnight and Wash it off in the Morning.
  • Place a Cotton ball with Vinegar over the hard area. Keep them overnight and remove the next morning


Message edited by ram2858 - Tuesday, 09 Sep 2014, 9:14 AM
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » ஆயுர் ஆரோக்கியம் » ஆரோக்கியம் » இயற்கை மருத்துவம் (இயற்கை மருத்துவம்)
Search: