இயற்கை மருத்துவம் - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
Forum moderator: Laya, Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » ஆயுர் ஆரோக்கியம் » ஆரோக்கியம் » இயற்கை மருத்துவம் (இயற்கை மருத்துவம்)
இயற்கை மருத்துவம்
JeniliyaDate: Friday, 07 Feb 2014, 9:32 AM | Message # 1
Private
Group: Moderators
Messages: 19
Status: Offline
இயற்கை மருத்துவம் தொடர்பான தகவல்களை பகிரவும்

கவனிக்க:

தகவல் பெறப்பட்ட மூலத்தை குறிப்பிடவும்.

இல்லையேல் நீங்கள் பகிர்ந்த தகவல் நீக்கப்படும்
 
MeenakshiDate: Friday, 07 Feb 2014, 7:23 PM | Message # 2
Sergeant
Group: Checked
Messages: 35
Status: Offline
பாட்டி வைத்தியம்

வெங்காயத்தை நசுக்கி முகர்ந்தாலே தலைவலி நீங்கிவிடும். அல்லது வெங்காயத்தை பாதியாக அறுத்து நெற்றில் தேய்த் தாலும் தலைவலி குறையும். உள்ளங்கையில் தீக்காயம் ஏற்பட்டால் உடனடியாக அந்த இடத்தில் நெய்யை தடவினால் எரிச்சல் அடங்கிவிடும். சீழ் பிடிக்காது. புளி ஏப்பம் நிற்க சமஅளவு சீரகமும், உப்பும் சேர்த்து வாயில் போட்டு மென்று தண்ணீர் குடிக்க வேண்டும்.

அஜீரணம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வயிற்றுவலி போன்றவற்றைக் குறைக்க மிளகு அருமருந்து. மிளகு சாப்பிடுவதால் வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் சுரக்கிறது. அது வயிற்றில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளைச் சரிசெய்கிறது. ஆனால் அல்சர் உள்ளவர்கள் மிளகை அதிகம் சேர்த்துக்கொள்ளக் கூடாது.

அப்போது புளி ஏப்ப பிரச்னை தீர்ந்துவிடும். ஆப்பிள் தோல் சீவாமல் சுத்தமாக கழுவி அப்படியே சாப்பிட்ட வேண்டும். ஆப்பிள் தோலில் வைட்டமின் ஏ உள்ளது.  பசுநெய், தயிர் கலந்து சாப்பிட்டு வந்தால் நரைமுடி கருமையாக மாறும். கோதுமை கஞ்சியை மாதவிடாய் இருக்கும் காலங்களில் சாப்பிட்டு வந்தால், உடற்சோர்வு நீங்கி பலம்பெறும். தேங்காய் பால் அடிக்கடி சாப்பிட்டு வர ஆண்மை பெருகும், தாது விருத்தியாகும்.

சுக்கு, மிளகு, திப்பிலி வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குண மாகும். பூண்டு, வெங்காயம் அதிகம் உணவில் சேர்த்து வந்தால் தேவையற்ற கொழுப்பு குறையும். கரும்பு சோகையை எரித்து சாம்பலாக்கி வெண்ணெயுடன் கலந்து உதட்டு வெடிப்புக்குப் போட்டால் உடனே குணமாகும். விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டால் பித்தத்தைக் குறைக்கலாம்.

source - dinakaran


Message edited by Meenakshi - Friday, 07 Feb 2014, 7:25 PM
 
shanDate: Friday, 07 Feb 2014, 9:02 PM | Message # 3
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
ஹாய் மீனு ,
பாட்டி வைத்திய குறிப்பிற்கு நன்றி ......
 
MeenakshiDate: Saturday, 08 Feb 2014, 9:34 PM | Message # 4
Sergeant
Group: Checked
Messages: 35
Status: Offline
பாட்டி வைத்தியம்



நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் நோய் குணமாகும். இதயமும் வலுவடையும். இஞ்சி சாறு மற்றும் எலுமிச்சை சாறு  ஆகியவற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் மார்பு வலி குணமாகும். குப்பை மேனி இலை, மஞ்சள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து  அரைத்து உடலில் பூசி ஒரு மணிநேரம் கழித்து குளித்தால் தோல் நோய் குணமாகும்.

நாய் கடித் தால், அந்த இடத் தில் எருக்கண் பாலை விட்டால் விஷம் முறியும். ஒரு டம்பளர் நீரில் இஞ்சி, சீரகம், கருவேப்பிலை ஆகிய மூன்றையும்  போட்டு கொதித்த பின்னர், ஆறவைத்து வடிகட்டி குடித்தால் அஜூரணம் குணமாகும். ஆரஞ்ச் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் ஈரல் சம்பந்தமான  பிரச்னைகள் தீரும்.

அன்னாசி பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் கண் நோய் குணமாகும். மஞ்சள் தூள், அருகம்புல் மற்றும் சுண்ணாம்பு கலந்து நகச்சுற்று உள்ள  இடத்தில் பூசி வந்தால் குணமாகும். அத்தி பழத்தை தினமும் தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை பெறும்.

source - natural medicine
 
rajiiDate: Saturday, 08 Feb 2014, 9:57 PM | Message # 5
Major
Group: *Checked*
Messages: 83
Status: Offline
Hi meenakshi,

marupadium unga arogiya (vaithiya) kurippu matrum thagavalkal thodarvathirukku nandripa...
 
RAWALIKADate: Saturday, 08 Feb 2014, 10:09 PM | Message # 6
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
Hi Meenakshi 

இந்த காலத்துக்கு தேவையானது. பலருக்கு இதுபோன்ற விஷயங்கள் தெரியாது.

இப்படியாவது நம் நாட்டில் எப்படி உணவே மருந்தாக இருந்தது என்று அறிந்துக்கொள்ள முடியும்.

இதுவும் இயற்கை உணவு முறையும் நீங்கள் இங்கு பகிர்வது பலருக்கும் உபயோகமாக இருக்கும்.

நல்ல தகவல்களை மற்றவர்களுக்கு கொண்டுசேர்ப்பது விளக்கேற்றி வைக்கும் புண்ணியம்.... உங்களுக்கும் உங்கள் சந்ததியினருக்கும்.
 
MeenakshiDate: Sunday, 09 Feb 2014, 3:07 AM | Message # 7
Sergeant
Group: Checked
Messages: 35
Status: Offline
Hello shan,rajii,rawalika

thanks for ur comments pa.
 
MeenakshiDate: Monday, 10 Feb 2014, 6:27 AM | Message # 8
Sergeant
Group: Checked
Messages: 35
Status: Offline
சர்க்கரை, கொலஸ்ட்ராலுக்கு மருந்தாகும் வெந்தயம்
ஆரம்பக்காலத்தில், 25 கிராம் வெந்தயத்தை தினமும் இரண்டு வேளை, ஒரு வேளைக்கு 12.5 கிராம் (தோராயமாக இரண்டு தேக்கரண்டி) என்ற  அளவில், காலை மற்றும் இரவு உணவுகளோடு எடுத்து கொள்ளலாம் வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊரவைத்தோ அல்லது பொடியாக  இடித்து தண்ணீரிலும் மற்றும் மோரிலும் கலந்தோ உணவிற்கு 15 நிமிடங்கள் முன்னதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

இரவு முழுவதும் ஊறவைக்கப்பட்ட விதைகள் அல்லது பொடியாக இடித்தெடுக்கப்பட்ட விதைகளை, தோசை, சப்பாத்தி, இட்லி, பொங்கல், உப்புமா,  தயிர், பருப்பு மற்றும் காய்கறி கூட்டுகள் செய்யும் போது அவற்றுடன் இணைந்து பயன்படுத்தலாம். இப்படி செய்யும்போது விதைகளின் கசப்புத்தன்மை  ஓரளவிற்கு குறைகிறது.

இவைகளை தயார் செய்யும்போது உண்பவரின் ருசிப்புத்தன்மைக்கேற்ப உப்பையோ அல்லது புளியையோ சேர்த்து தயார் செய்யலாம். ரத்தத்தில்  சர்க்கரை மற்றும் கொலஸ்டிரால் அதிகளவு இருக்கும்வரை இவ்விதைகளை உட்கொள்ளலாம். வெந்தயம் எடுத்துக்கொள்வதுடன் தினமும் நடைபயிற்சி  போன்ற உடற்பயிற்சிகளை செய்வதும் மிகவும் அவசியம். உடல் எடையை குறைப்பதின் மூலம், இன்சுலின் ஹார்மோனின் செயல்களை அதிகரிக்க  செய்யும்.

இவ்விதைகளை உட்கொள்ளும் நோயாளிகளில் சிலருக்கு ஆரம்பத்தில் வயிற்றுபோக்கு மற்றும் குடலில் வாயு உற்பத்தியாவது அதிகமாக  காணப்படும். வெந்தயத்தை உணவாக பயன்படுத்துவதுடன் பரிந்துரைக்கப்பட்ட மற்ற சர்க்கரைநோய் சிகிச்சை முறைகளையும் பின்பற்ற வேண்டும்.  இப்படி பயன்படுத்தும்போது சர்க்கரை வியாதிக்கான மருந்துகளின் அளவு குறையலாம்.

சர்க்கரை நோய் மற்றும் கொலஸ்டிரால் என்பது நமது மக்களிடையே காணப்படும் சில பொதுவான நோய்களாகும். சர்க்கரை நோயாளிகளுக்கு  அளிக்கப்படும் சிகிச்சை முறைகளுடன், வெந்தயம் உட்கொள்வது, உறுதுணையாய் செயல்படுகிறது. சர்க்கரை நோயினால் திடீரென ஏற்படும் உடல்  நலக் கேடுகளுக்கு உடனடியாக மருத்துவ ஆலோசனையை நாடுவது அவசியம்.

Dinakaran natural medicine
 
MeenakshiDate: Tuesday, 11 Feb 2014, 6:39 AM | Message # 9
Sergeant
Group: Checked
Messages: 35
Status: Offline
கால் வலியை விரட்டும் நெல்லி ரசம்

குதிகால், பாதம், கெண்டைக்கால், மூட்டு, தொடை ஆகிய இடங்களில் ஏற்படும் வலியைப் போக்கும் திறமை பெற்றது வெற்றிலை நெல்லி ரசம்.

தேவையான பொருட்கள்:முழு நெல்லிக்காய் 10, வெற்றிலை 20, கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை தலா ஒரு கைப்பிடி, காய்ந்த மிளகாய் 4,  பூண்டு 6 பல், வால் மிளகு, சீரகம் தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள் அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் 2 டீஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப.

செய்முறை: நெல்லிக்காயை விதை நீக்கி சாறு எடுக்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, வெற்றிலை மூன்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வெறும் சட்டியில் காய்ந்த மிளகாயை கிள்ளி போட்டு,  பொடியாக நறுக்கிய பூண்டு, ஒன்றிரண்டாகத் தட்டிய வால்மிளகு, சீரகம் ஆகியவற்றை போட்டு இளம் சிவப்பாக வறுக்கவும். பின்னர், பொடியாக  நறுக்கிய கறிவேப்பிலை, வெற்றிலை, கொத்தமல்லி இலையை அதில் போட்டு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

நன்றாக வதங்கியதும் விழுதாக அரைத்துக்கொள்ளவும். ஒரு சட்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி, அரைத்து வைத்துள்ள விழுதைப் போட்டு வதக்கவும்.  அதில் நெல்லிக்காய் சாறு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். அடுப்பை மிதமாக எரியவிடவும். கொதிக்கும் பக்குவம்  வந்ததும், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்கவிடாமல் கீழே இறக்கவும்.

இந்த நெல்லி ரசத்தை குடிப்பதன் மூலம் குதிகால் வலியை எளிதில் குறைப்பதோடு, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் இதயநோயாளிகளுக்கும்  ஏற்ற உணவாக அமைகிறது. எலும்பு புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

Source : natural medicine


Message edited by Meenakshi - Tuesday, 11 Feb 2014, 4:57 PM
 
NathasaaDate: Tuesday, 11 Feb 2014, 4:26 PM | Message # 10
Major general
Group: *Checked*
Messages: 360
Status: Offline
Hi meenakshi smile
thnx for the informative sharing
its really helps the needed people
keep sharing more
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » ஆயுர் ஆரோக்கியம் » ஆரோக்கியம் » இயற்கை மருத்துவம் (இயற்கை மருத்துவம்)
Search: