அறுசுவை - Page 2 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
  • Page 2 of 2
  • «
  • 1
  • 2
Forum moderator: Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » அறுசுவை » அறுசுவை » அறுசுவை (சமையல் குறிப்புகளை இங்கு பகிரலாம்)
அறுசுவை
lakshmiDate: Thursday, 24 Apr 2014, 12:03 PM | Message # 11
Major
Group: Users
Messages: 92
Status: Offline
ஜவ்வரிசி பகாளாபாத்!



தேவையான பொருட்கள்:
 ஜவ்வரிசி - அரை கப்,
தயிர் - ஒரு கப்,
காய்ச்சி ஆற வைத்த பால் - அரை கப்,
இஞ்சி - சிறு துண்டு,
பச்சை மிளகாய் - மூன்று,
கடுகு, பெருங்காயத்தூள் - தாளிக்க தேவையான அளவு,
கேரட் துருவல் - நான்கு தேக்கரண்டி,
கொத்தமல்லித் தழை - சிறிதளவு,
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

ஜவ்வரிசியை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள் காலையில் அதை வேகவைத்து, தயிருடன் கலக்கவும். அதனுடன் காய்ச்சி ஆற வைத்த பால், உப்பு, கேரட் துருவல், கொத்தமல்லித் தழை ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். பின், கடாயில் எண்ணெயை காயவிட்டு, கடுகு, பெருங்காயத்தூள், இஞ்சித் துருவல், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து தாளித்து, அதை ஜவ்வரிசி கலவை மீது கொட்டி அலங்கரித்து, பரிமாறவும்.
 
NathasaaDate: Friday, 25 Apr 2014, 2:08 PM | Message # 12
Major general
Group: *Checked*
Messages: 360
Status: Offline
thnQ for sharing the Recipes friends
 
lakshmiDate: Saturday, 17 May 2014, 2:03 PM | Message # 13
Major
Group: Users
Messages: 92
Status: Offline
மேங்கோ மின்ட் ஜுஸ்



தேவையான பொருட்கள்:
 சர்க்கரை - இரண்டு கப்,
தண்ணீர் - ஒரு கப்,
புதினா ஜூஸ் - அரை கப்,
வேக வைத்த மாங்காய் விழுது - அரை கப்,
வறுத்து பொடித்த சீரகப் பொடி - ஒரு தேக் கரண்டி,
மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி,
ஜல்ஜீரா பொடி - ஒரு சிட்டிகை, (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்)

செய்முறை: இரண்டு கப் சர்க்கரையை, ஒரு கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விட்டு, ஆற வைக்கவும். இதில், வேக வைத்த மாங்காய் விழுது, சீரகப் பொடி, மிளகுப் பொடி, ஜல்ஜீரா பொடி சேர்த்து கலந்து வைக்கவும்.

ஜூஸ் கலக்கும் விதம்: கால் பங்கு ஜூசில், முக்கால் பங்கு தண்ணீர் சேர்த்து, டம்ளரில் நிரப்பி பரிமாறவும்.
டிப்ஸ்: மாங்காயின் புளிப்பும், மிளகின் காரமும், புதினாவின் மணமும் கலந்த சுவை, அலாதியாக இருக்கும். வெயிலில் அலைந்து, திரிந்து வரும்போது, இதைக் குடித்ததால், புத்துணர்ச்சி ஏற்படும்.
 
laksDate: Sunday, 18 May 2014, 8:06 PM | Message # 14
Lieutenant
Group: Users
Messages: 40
Status: Offline
hi jas
thanks for the ravaladdu recipe. romba easya irukkuthu.
 
shanDate: Sunday, 18 May 2014, 9:37 PM | Message # 15
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
hai rawali ,
ths for the recipe..

hai jas ,
நீ சொன்ன முறையில் ஆப்பம் வருமா ?நான் சம அளவில் இரு அரிசியும் எடுத்து வெந்தயம் ஒரு பிடி சேர்த்து அரைப்பேன் ......இடிலி பாத்திரத்தில் வேக வைத்தால் ஆப்பம் போல் இருக்குமா ?

hai lashmi,
ths fo the 2 recipes....mangai serpathaal jusice supera irukum pol....
 
shanDate: Sunday, 18 May 2014, 9:40 PM | Message # 16
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
hai jas,
rava laddu super.....
 
lakshmiDate: Thursday, 29 May 2014, 10:29 PM | Message # 17
Major
Group: Users
Messages: 92
Status: Offline
காளான் ரைஸ்,

தேவையானவை:

எண்ணெய் -தேவையான அளவு
பாசுமதி அரிசி - 2கப்
காளான் - 100கிராம்
வெங்காயம் - 2
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 4 பல்
சில்லி சாஸ் - 1 டீஸ்பூன்
சோயா சாஸ் - 2 டீஸ்பூன்
வெள்ளை மிளகுதூள் -சிறிது
உப்புதூள் தேவையான அளவு

செய்முறை
உதிராக சாதம் வடித்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு நீளமாக நறுக்கிய வெங்காயம் பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, காளான் சேர்த்து  சோயாசாஸ், சில்லிசாஸ், வெள்ளை மிளகுதூள், உப்பு சேர்த்து கிளறவும். பொடியாக நறுக்கிய வெங்காயதாள் சேர்த்து மீண்டும் ஒரு முறை கிளறி  இறக்கி பரிமாறவும்.
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » அறுசுவை » அறுசுவை » அறுசுவை (சமையல் குறிப்புகளை இங்கு பகிரலாம்)
  • Page 2 of 2
  • «
  • 1
  • 2
Search: