அம்மா ரெசிபி! - Page 2 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
Forum moderator: Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » அறுசுவை » அறுசுவை » அம்மா ரெசிபி! (அம்மா ரெசிபி! - தொடர் - நன்றி டாக்டர் விகடன்)
அம்மா ரெசிபி!
RAWALIKADate: Wednesday, 12 Feb 2014, 9:29 PM | Message # 11
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline


''சூடான சாதத்தில் சுடச்சுடக் குழம்பை ஊற்றிச் சாப்பிடுவதே ஒரு தனி டேஸ்ட். அதிலும், மிளகு, வெந்தயம், கறிவேப்பிலை, தனியா, சுண்டைக்காய், மணத்தக்காளி இவற்றை வைத்து வாரம் ஒருமுறை என் வீட்டில் ஏதாவது பத்தியக் குழம்பு செய்வேன்.  உடல் அலுப்பு, பித்தம், அஜீரணம், வாய்க்கசப்பு போன்ற எந்தப் பிரச்னையும் இருக்காது'' என்ற வரலட்சுமி முத்துசாமி, 'தனியா குழம்பு’ செய்யும் முறையை விவரிக்கிறார். தனியா குழம்பு

தேவையானவை:

தனியா (கொத்தமல்லி விதை) - 3 ஸ்பூன், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு, எள்ளு, மிளகு, நெய்  - தலா ஒரு ஸ்பூன், மிளகாய் வற்றல் - 2, புளி - கோலி அளவு, பெருங்காயம், மஞ்சள் தூள் - சிறிதளவு, கறிவேப்பிலை - ஒரு ஆர்க், எண்ணெய் - 2 ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.செய்முறை:

கடாயில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் தனியா, கடலைப் பருப்பு, மிளகு, மிளகாய் வற்றல், உளுத்தம் பருப்பு இவற்றைத் தனித்தனியே வறுத்துப் பொடித்துக்கொள்ளவும்.

புளியை திக்காகக் கரைத்து ஊற்றி, கொதித்ததும் அதில் மஞ்சள் தூள், உப்பு, பெருங்காயம், எள்ளு சேர்த்து, பிறகு அரைத்தப் பொடியைப் போடவும். எல்லாம் கொதித்து வாசனை வந்து கெட்டியானதும் இறக்கி, நெய்யில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.
இதைச் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கும் தொட்டுக்கொள்ளலாம்.  
இதை கல் சட்டியில் செய்தால் இன்னும் சுவை கூடும்.
ம்... மூன்று நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.  சித்த மருத்துவர் வேலாயுதம்:  

மல்லி விதை, வாயுப் பிரச்னை வராமல் தடுக்கும். இதைத் தவிர, இருமல், சளி, தலைவலி, பித்தம், ரத்தக் கொதிப்பு, சர்க்கரை போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கும் அருமருந்து.  இதில் தேநீர் தயாரித்தும் அருந்தலாம். மலச்சிக்கலைப் போக்கும். குடலில் தசை இயக்கத்தைத் தூண்டும். தாங்க முடியாத வயிற்று வலி, வயிற்றுப் புண்ணை ஆற்றும்.படங்கள் : எஸ்.பி.ஜெர்ரி ரினால்டு விமல்
 
RAWALIKADate: Wednesday, 12 Feb 2014, 9:33 PM | Message # 12
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
அம்மா ரெசிபி!

''என் அம்மா கற்றுக்கொடுத்த ரெசிபி இது.  நிறைய நார்ச் சத்து, இதில் இருப்பதால், வீட்டில் வாரம் தவறாமல் இந்த டிபனை செய்வேன். எண்ணெய் சேர்க்காமல் செய்தாலும், பொங்கல் ருசியாக இருக்கும். என் மகன் விரும்பிக் கேட்பதும், வீட்டுக்கு வர்றவங்க செய்யச் சொல்லிக் கொஞ்சுவதும் இந்தக் கோதுமைப் பொங்கலைத்தான். அந்த அளவுக்கு ருசியாக இருக்கும். சத்தும் நிறைந்தது'' என்கிறார், மதுரையைச் சேர்ந்த வசந்தி. 

தேவையான பொருட்கள்:

கோதுமை ரவை - கால் கிலோ, பச்சைப்பயறு - 100 கிராம், வேர்க்கடலை அல்லது முந்திரி - 25 கிராம், உடைத்த மிளகு, சீரகம், அரைத்த கறிவேப்பிலை விழுது, கொத்தமல்லி விழுது, இஞ்சி விழுது, தலா ஒரு ஸ்பூன் நெய் அல்லது ரீஃபைண்ட் ஆயில்.செய்முறை:

கோதுமை ரவையையும், பச்சைப்பயறையும் வாசனை வரும் வரை வறுத்து, பிறகு லேசாக ஊறவைத்து, உப்பு சேர்த்து, குக்கரில் வேகவைக்கவும். கடாயை அடுப்பில் வைத்து, நெய்யை ஊற்றிக் காய்ந்ததும் மிளகு, சீரகத்தைப் போட்டுப் பொரித்து, இஞ்சி, கறிவேப்பிலை, மல்லி விழுதுகளைப் போட்டு நன்றாக வதக்கவும். இதை வேக வைத்துள்ள கோதுமை, பச்சைப்பயறு கலவையில் கொட்டவும். முந்திரி அல்லது வேர்க்கடலையை வறுத்து, கலவையில் சேர்த்து நன்றாகக் கிளறவும். இப்போது சுவையான மணம் உள்ள சத்தான கோதுமைப் பொங்கல் ரெடி. இதற்குத் தொட்டுக்கொள்ள, புதினா சட்னி அருமையாக இருக்கும்.டயட்டீஷியன் சோஃபியா:  

கோதுமை ரவை குறைந்த கலோரி உணவு என்பதால், உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களும் சர்க்கரை நோயாளிகளும் தினமும் சாப்பிடலாம். மேலும், பச்சைப்பயறு சேர்ப்பதால் புரதச் சத்தும், கறிவேப்பிலை, கொத்தமல்லியை அரைத்துச் சேர்ப்பதால், இரும்புச் சத்தும் கிடைப்பதுடன் குடலில் உள்ள கிருமிகளும் அழிக்கப்படும். நல்ல பசியைத் தூண்டும்.- படங்கள்: இ.பொன்குன்றம்
 
RAWALIKADate: Wednesday, 12 Feb 2014, 9:34 PM | Message # 13
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
அம்மா ரெசிபி!உடலை உறுதிப்படுத்தும் தினை அரிசி உப்பமா
'இயல்பாகவே சமைப்பதில் எனக்கு அதிக ஆர்வம். வீட்டிலேயே மூலிகை உணவுகளையும், ஊட்டச் சத்து நிறைந்த தானியங்களில் சுவையான உணவுகளை வெரைட்டியாகவும் சமைத்துக் கொடுப்பேன். ஆரோக்கியம் காக்கும் குடும்பத் தலைவியாக மட்டுமின்றி, வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் உணவியல் நிபுணராகவும் பணிபுரிந்தேன்'' என்று உற்சாகமாகச் சொல்லும் தஞ்சாவூரைச் சேர்ந்த ஜெயந்தி தினகரன், 'தினை அரிசி உப்புமா’ செய்முறையுடன் அதன் பலன்களையும் பட்டியலிடுகிறார்.  

தேவையானவை: 

தினை - 200 கிராம், நீர் - 600 மி.லி, பெரிய வெங்காயம், தக்காளி, கேரட் - தலா 1, துருவிய இஞ்சி - ஒரு ஸ்பூன், பச்சைப் பட்டாணி - 50 கிராம், எண்ணெய் - 50 மி.லி, கடுகு - அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 2, கறிவேப்பிலை, கொத்துமல்லித் தழை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: 

காய்கறிகளைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். உமி நீக்கிய தினை அரிசியை வறுத்து வைத்துக்கொள்ளவும். கடாயில் சிறிது எண்ணெய்விட்டு, கடுகு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி, தக்காளி, நறுக்கிய காய்கறிகள், உப்பு இவற்றை ஒவ்வொன்றாகச் சேர்த்து நன்கு வதக்கவும். அதில் நீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். நன்கு கொதித்த பின் வறுத்த தினையைச் சிறிது சிறிதாகச் சேர்த்து அடிபிடிக்காமல் கிளறி, வெந்ததும் இறக்கவும். கொத்துமல்லித் தழை, தேவையானால் 2 டீஸ்பூன் நெய் சேர்க்க, சுவையான தினை உப்புமா தயார்.பலன்கள்: 

உடல் வலிமையுடன் உறுதியாக இருக்கும். புரதம், இரும்பு, பி-வைட்டமின், தாது உப்புகள், கால்சியம் இதில் நிறைந்து இருக்கிறது. நார்ச் சத்து அதிகம் இருப்பதால், சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது. ஃபைடேட் (றிலீஹ்tணீtமீ), ஃபைட்டிக் அமிலம் (றிலீஹ்tவீநீ கிநீவீபீ), இருப்பதால் புற்றுநோய் வராமல் தடுக்கவும், அதிகப்படியான கொழுப்புச் சத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

படங்கள்: கு.கார்முகில் வண்ணன்
 
RAWALIKADate: Wednesday, 12 Feb 2014, 9:36 PM | Message # 14
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
அம்மா ரெசிபி!மூட்டு வலியை நீக்கும் முடக்கத்தான் கீரை இடலை இட்லி



''இப்பல்லாம், வீட்டுலயும் வித்தியாசமான டிபன் செய்தால்தான் சாப்பிடுறாங்க. வாரத்துல இரண்டு நாள் அரிய வகைக் கீரைகளை வைச்சு வெரைட்டியா டிபன் செய்வேன். வீட்டுக்கு வர்ற சொந்தக்காரங்ககூட, முடக்கத்தான் கீரையில் செய்யும் 'இடலை இட்லி’யை செஞ்சுதரச் சொல்லிக் கேட்பாங்க. 'இது தோசையா இல்லை இட்லியா...

சூப்பரா இருக்கே’னு ஆசையாக் கேட்டு வாங்கிச் சாப்பிடுவாங்க.
ஆரோக்கியமான டிபன். காலையில இல்லைன்னா, பசங்க ஸ்கூல் முடிச்சு வரும்போது சாயங்காலம் செய்துகொடுத்தா விரும்பிச் சாப்பிடுவாங்க.

இதுக்கு வெங்காயச் சட்னி சூப்பரா இருக்கும்'' என்கிற போரூரைச் சேர்ந்த சுதா செல்வகுமார், முடக்கத்தான் கீரை இடலை இட்லி செய்முறையைச் சொன்னார்.

தேவையானவை:

இட்லி அரிசி - 3 கப், முழு உளுந்து - அரை கப், வெந்தயம் - ஒரு கைப்பிடி, முடக்கத்தான் கீரை (ஆய்ந்தது) - 2 கப், வாழை இலை - 1, நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

அரிசி, உளுந்து, வெந்தயம் மூன்றையும் தனித்தனியே ஆறு மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் முதலில் வெந்தயத்தைப் போட்டு சுமார் ஐந்து நிமிடங்கள் அரைத்து, முடக்கத்தான் கீரையைச் சேர்க்கவும். பிறகு உளுந்து, அரிசியைச் சேர்த்து  அரைத்துக்கொள்ளவும். இந்த மாவில் உப்பு சேர்த்துக் கரைத்துவைத்த ஆறு மணி நேரத்தில் மாவு பொங்கி இருக்கும். இடலைத் தட்டு அல்லது இட்லித் தட்டில் வாழை இலையை வைத்து, சிறிது நல்லெண்ணெய் தடவி மாவை இடலையாக (அகலமாக) கொஞ்சம் தடிமனாக ஊற்றவும். இடலைத் தட்டை மூடிவைத்து ஆவியில் வேகவிடவும். 10 நிமிடங்களில் வாழை இலை மணத்துடன்...

சுடச்சுட சுவையான, சத்தான முடக்கத்தான் இடலை இட்லி தயார்.

சித்த மருத்துவர் கண்ணன்:

எண்ணெய் அதிகம் சேர்க்காததால், குழந்தைகளும் வயதானவர்களும் சாப்பிடலாம். சத்தானது. வெந்தயம் சேர்ப்பதால் வயிற்றுக்குக் குளிர்ச்சி. முடக்கத்தான் கீரை, மூட்டு வலி, முழங்கால் வலிகளை நீக்கும். சீறுநீர் தடையின்றி வெளியேறும். எலும்புக்கு நல்ல சக்தியைக் கொடுக்கும். 

 படங்கள்: தே.தீட்ஷித்


Message edited by RAWALIKA - Wednesday, 12 Feb 2014, 9:38 PM
 
RAWALIKADate: Wednesday, 12 Feb 2014, 9:39 PM | Message # 15
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
அம்மா ரெசிபி!சுண்டைக்காய் துவையல்


''என் வீட்டில் மூலிகைச் சமையலுக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்போம். எப்போதாவதுதான் ஹோட்டல் பக்கம் போவோம். வீட்டுச் சமையலே ஆரோக்கியம்தான். அதிலும், மூலிகையில் சமைக்கும் உணவு, உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் உதவும்'' என்கிறார் மதுரை வாசகி பொன்னழகி தேனப்பன், சுண்டைக்காய்த் துவையல் செய்யும் முறையை இங்கே விவரிக்கிறார்...தேவையானவை:

 சுண்டைக்காய்ப் பிஞ்சு - ஒரு கையளவு, உப்பு, புளி - சிறிதளவு, சின்ன வெங்காயம் - 6, கடலைப்பருப்பு - 5 ஸ்பூன், தேங்காய்த் துருவல் - 4 ஸ்பூன். தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை.செய்முறை: 

சுண்டைக்காயைக் கழுவிக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் வதக்கி ஆற வைக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, தாளிக்கும் பொருட்கள் போட்டுத் தாளித்து, சின்ன வெங்காயம், உப்பு, புளி, கடலைப்பருப்பு, தேங்காய்த் துருவல் அனைத்தையும் சேர்த்து வதக்கவும். இதனுடன் வதக்கிய சுண்டைக்காயைச் சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.இட்லி, தோசையுடன் சேர்த்துச் சாப்பிட நன்றாக இருக்கும்.டயட்டீஷியன் சோஃபியா: 

நல்ல செரிமானத்தைத் தரும். உடல் சோர்வை நீக்கும். வயிற்றுப்பூச்சிகளை விரட்டும். சர்க்கரை நோயாளிகள் சாப்பிடுவதன் மூலம், சர்க்கரையைக் கட்டுக்குள் வைக்கலாம். நெஞ்சுக் கபத்தை நீக்கும். இதில் கால்சியம், புரதம், இரும்புச் சத்து அதிகம் இருப்பதால், ரத்தசோகை உள்ளவர்கள் சாப்பிடலாம்.படங்கள்:  எ.கிரேசன் எபினேசர்
 
RAWALIKADate: Wednesday, 12 Feb 2014, 9:42 PM | Message # 16
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
அம்மா ரெசிபி!குளிர்ச்சி தரும் வெந்தயப் பொரியல்



'உடலுக்குக் குளிர்ச்சி தரும் வெந்தயத்தை என் அம்மா அடிக்கடி உணவுகளில் சேர்ப்பாங்க. அதிலும் அம்மா செய்யும் ஸ்பெஷல் வெந்தயப் பெரியலை விரும்பிச் சாப்பிடுவோம். வெந்தயம் கசப்பா இருக்கும் என்பதால், தேங்காய், துவரம்பருப்புடன் வெந்தயப் பொரியல் செய்து தருவாங்க. அதில் சுத்தமா கசப்பே தெரியாது. நல்ல வாசனையாவும் இருக்கும்'' என்கிற சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த ரத்னா, வெந்தயப் பொரியல் செய்யும் முறையைச் சொல்கிறார்.

தேவையானவை: 

வெந்தயம் - ஒரு கப், துவரம்பருப்பு - அரை கப், தேங்காய்த் துருவல் - கால் கப், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை, மஞ்சள் தூள் - சிறிதளவு. காய்ந்த மிளகாய், பச்சைமிளகாய் - தலா 2. தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு.

செய்முறை: 

வெந்தயத்தை முந்தைய நாள் இரவே ஊறவைக்க வேண்டும். மறுநாள் காலையில் நீரை வடித்துவிட்டு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும். துவரம்பருப்பை, கிள்ளு பதத்தில் வேகவைத்துக்கொள்ளவும்.  ஒரு கடாயில் சிறிது எண்ணெய்விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, அதில் வேகவைத்த வெந்தயத்தைப் போட்டு வதக்கி, வெந்த துவரம்பருப்பு, தேங்காய்த் துருவல் சேர்த்து வதக்கவும். சுவையான ஆரோக்கியமான வெந்தயப் பொரியல் ரெடி...

(தேவைப்பட்டால், கடைசியில் சிறிது உப்பு சேர்க்கலாம்.)
சித்த மருத்துவர் கண்ணன்: 

வெந்தயத்தில் நார்ச் சத்து அதிகம் இருக்கிறது. சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும். உடலுக்கு நல்ல குளிர்ச்சியைக் கொடுக்கும்.

படங்கள்: எஸ்.பி.ஜெர்ரி ரினால்டு விமல்
 
RAWALIKADate: Wednesday, 12 Feb 2014, 9:43 PM | Message # 17
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
அம்மா ரெசிபி!கொள்ளுக் காரக் குழம்பு


''சிறு தானியங்களை வைச்சு என் மாமியார் சமைச்சாங்கன்னா, அக்கம் பக்கத்துல இருக்கிறவங்களும் பாத்திரத்தோட ஓடிவந்திடுவாங்க. அந்த அளவுக்கு, சமையல் வாசமும் சுவையும் இருக்கும். அவர்கிட்டதான் கொள்ளுக் காரக் குழம்பு செய்யுறதைக் கத்துக்கிட்டேன். என் வீட்டுல வாரம் ஒரு நாள் இந்தக் குழம்பை செஞ்சிடுவேன். என் மகளுங்க, மகன், பேரப் பிள்ளைங்கன்னு எல்லாருமே விரும்பிச் சாப்பிடுவாங்க. உடம்பும் உரம் மாதிரி ஆரோக்கியமா இருக்கும்'' என்கிற கோவையைச் சேர்ந்த சாவித்திரி சந்திரன்,  கொள்ளுக் காரக் குழம்பு செய்யும் முறையை விளக்கினார்.
தேவையானவை: 

கொள்ளு - 200 கிராம், தோல் உரித்த சின்ன வெங்காயம் - 100 கிராம், சுண்டைக்காய் வத்தல் - 50 கிராம், காய்ந்த மிளகாய் - 4 அல்லது 5, மிளகு, சீரகம் - தலா 50 கிராம், தனியா - 100 கிராம், தக்காளி - 1, கறிவேப்பிலை, கொத்தமல்லி - 100கிராம், கடுகு - உளுத்தம் பருப்பு - சிறிதளவு, எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி, உப்பு - தேவையான அளவு, புளி - ஒரு எலுமிச்சை அளவு.
செய்முறை: 

வெறும் கடாயில் கொள்ளு சேர்த்து வறுத்து, மிக்ஸியில் ரவை பதத்தில் பொடித்துக்கொள்ளவும். காய்ந்த மிளகாய், தனியா, மிளகு, சீரகம் இவற்றைச் சிறிது எண்ணெயில் தனித்தனியே வறுத்துப் பொடிக்கவும். கடாயில் மீண்டும் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வெங்காயத்தைப் போட்டு நன்றாக வதக்கி, கறிவேப்பிலை, தக்காளி சேர்த்து மீண்டும் வதக்கி, சுண்டைக்காய் வத்தல் போட்டு, புளியைக் கரைத்துவிடவும். இதில் அரைத்த கொள்ளுப் பொடி, மசாலாப் பொடியைச் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிட்டு மேலாகக் கொத்தமல்லி தூவி இறக்கவும்.இதே முறையில், கொள்ளுப் பொடியைக் குறைவாகப் போட்டு, ரசப்பொடி சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கினால், கம-கம ரசம் தயார்.டயட்டீஷியன் கிருஷ்ணன்: 

உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைத்து உறுதியாக்கும். எலும்பு வளர்ச்சிக்கு நல்லது. தசைகள் வலுப்பெறும். சிறுநீரகக் கற்களையும் கரைக்கும்! புரதம், கால்சியம், இரும்பு, பொட்டாசியம் மற்றும் நார்ச் சத்து இதில் அதிகம். ஆக்ஸாலிக் ஆசிட் இருப்பதால், அளவோடு எடுத்துக்கொள்வது நல்லது. சிறுநீரகக் கோளாறு இருப்பவர்கள் சாப்பிடக் கூடாது.  படங்கள்: ர.சதானந்த்
 
nilaDate: Thursday, 13 Feb 2014, 2:37 PM | Message # 18
Lieutenant
Group: Checked
Messages: 61
Status: Offline
hi Rawalika,

thanks for sharing.


நட்புடன்,

வெண்ணிலா.D
 
NathasaaDate: Thursday, 13 Feb 2014, 3:41 PM | Message # 19
Major general
Group: *Checked*
Messages: 360
Status: Offline
Hi viji sis
Very useful ......the pics add more color to article
Thnx for the sharing
 
RAWALIKADate: Friday, 14 Feb 2014, 0:06 AM | Message # 20
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
Quote Nathasaa ()
Very useful ......the pics add more color to article

எல்லா புகழும் விகடனுக்கே
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » அறுசுவை » அறுசுவை » அம்மா ரெசிபி! (அம்மா ரெசிபி! - தொடர் - நன்றி டாக்டர் விகடன்)
Search: