Nathasaa | Date: Saturday, 15 Feb 2014, 11:18 PM | Message # 11 |
![Nathasaa](https://2954423598.uid.me/avatar.jpg) Major general
Group: *Checked*
Messages: 360
Status: Offline
| Hi viji sis thnx much for the Info
|
|
| |
RAWALIKA | Date: Sunday, 16 Feb 2014, 8:52 AM | Message # 12 |
![RAWALIKA](/avatar/06/041510.jpg) Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
| புத்தக விமர்சனம்! - Thanks Vikatanமூளையில் ஒரு குறிப்பிட்ட பாகத்தின் இயக்கம், திடீரென நின்றுபோகும்போது, பக்கவாதம் ஏற்படுகிறது. மூளைக்குச் செல்லும் ரத்தத்தில் ஏற்படும் ஒரு மாற்றம்தான் இதற்குக் காரணம். மூளையின் இடது மற்றும் வலது புறம் சேதமடைந்தால், என்ன பாதிப்புகள் ஏற்படும்... பார்வையில் ஏற்படும் சிக்கல்கள்... மாத்திரை மற்றும் உணவு உண்ணும் முறைகள், 'ஸ்ட்ரோக்’ மறுவாழ்வு சிகிச்சை என்ற இந்த நூலில் விரிவாகத் தரப்பட்டுள்ளன. மேலும் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டவர்களை, எப்படிப் படுக்கவைக்க வேண்டும்? வாக்கர் உதவியுடன் எப்படி நடக்க வேண்டும்... கை, கால் மற்றும் அசைவற்ற விரல்களுக்கு அசையும் பயிற்சி, நடைப்பயிற்சி, பாதிக்கப்படும் உடல் உறுப்புகளுக்கான பயிற்சிகளையும் படங்களுடன் விளக்கியுள்ளார் டாக்டர் ஏ.ஜே.ராஜேந்திரன். மனச்சோர்விலிருந்து மீள்வதற்கான வழிகள், ஸ்ட்ரோக்கினால் ஏற்படும் பாதிப்புகள், அதற்கான தீர்வுகள் இந்தப் புத்தகத்தில் தெளிவாகத் தரப்பட்டிருக்கின்றன. ஸ்ட்ரோக் வருவதற்கான காரணங்கள், அறிகுறிகள், சிகிச்சைமுறைகள் எனப் பாதிப்பு வராமல் காக்கவும், வந்த பின் முன்னெச்சரிக்கையுடன் இருப்பதற்கும் ஆலோசனைகளைத் தந்திருக்கும் சிறந்த புத்தகம் இது. நூலின் பெயர்: ஸ்ட்ரோக் மறுவாழ்வு சிகிச்சை ஆசிரியர்: டாக்டர் ஏ.ஜே.இராசேந்திரன் 75/- கண்ணதாசன் பதிப்பகம், சென்னை - 17.
இன்று மனரீதியான பிரச்னைகளிலிருந்து மீண்டு வருவதற்கான வழிகளைத் தேடி, விழி பிதுங்கி நிற்பவர்கள் ஒருபுறம் என்றால், கணவன் - மனைவிக்கு இடையே ஏற்படும் சின்னச் சின்னச் சிக்கல்களைக்கூட, தீர்த்துக்கொள்ளத் தெரியாமல், பிரிவு ஒன்றையே தீர்வாக எண்ணி, கோர்ட் படிக்கட்டுகளை மிதிப்பவர்களும் உண்டு. எந்த ஒரு சம்பவத்தையும் கதையாகச் சொல்லி, அதற்கான தீர்வைத் தரும்போதுதான், அவற்றை நம்மால் எளிதில் புரிந்து உணர்ந்து, திருத்திக்கொள்ள முடியும். அந்த ரீதியில் குடும்பத்தில் நடக்கும் பிரச்னைக்குரிய விஷயங்களை, சின்னச் சின்னக் கதைகளாகச் சொல்லி, அதற்கு மனநல மருத்துவர் மாத்ருபூதம் அளித்த பதில்களையும் விளக்கமாகத் தந்திருக்கிறது, 'மனநலக் கதைகளும், மாத்ருபூதம் பதில்களும்’ என்ற இந்த நூல்! இதில் வரும் ஒவ்வொரு கதையும் சுவாரஸ்யத்தைத் தூண்டுவதுடன், இதற்கு எது தீர்வாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்துகிறது.நூலின் பெயர்: மனநலக் கதைகளும் மாத்ருபூதம் பதில்களும்! ஆசிரியர்: எஸ்.கதிரேசன் 90/- விகடன் பிரசுரம் 757, அண்ணா சாலை, சென்னை - 2
|
|
| |
RAWALIKA | Date: Wednesday, 26 Feb 2014, 12:22 PM | Message # 13 |
![RAWALIKA](/avatar/06/041510.jpg) Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
| சகாயம் சந்தித்த சவால்கள்!
'லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து’ - இந்தச் சொற்களை எங்கே கேட்டாலும் ஒரு முகம் உங்கள் மனக்கண் முன்வந்து நிற்கும். அவர்தான் சகாயம். ஊழல், முறைகேடு, விதிமீறல் செய்பவர்களுக்கு சகாயம் எப்போதும் ஒரு கஷாயம். அதிகார வர்க்கத்தின் எந்தப் பதவியில் இருந்தாலும் தன்னுடைய கற்பைக் காப்பாற்றிக்கொண்டு இருக்கக்கூடிய ஒருசில அதிகாரிகளில் சகாயமும் ஒருவர். பல அதிகாரிகள் தன்னளவில் நேர்மையானவர்களாக இருந்தால்போதும் என்று நினைப்பார்கள். ஆனால் சகாயம், தன்னைச் சுற்றி உள்ளவர்களையும் நேர்மையானவராக மாற்றும் பிரசாரத்தையும் தொடர்ந்து செய்து வருபவர். அப்படிப்பட்ட சகாயத்தின் பணிக்காலத்தை உடனிருந்து கவனித்த பத்திரிகையாளர் கே.ராஜாதிருவேங்கடம் தொகுத்து, எளிய நடையில் எழுதியுள்ள புத்தகம் இது. சகாயம் சந்தித்த சவால்கள் முதன்முதலாக அந்தரங்கத்தில் இருந்து அம்பலத்துக்கு வருகிறது.
சிலிர்ப்பூட்டும் சித்தன்னவாசல் ஓவிய ஊருக்குப் பக்கத்தில் பெருஞ்சுனை என்ற கிராமத்தில்... அடுத்தவர் வீட்டுக்குச் சொந்தமான மரத்தில் ஒரே ஒரு மாங்காயை எடுத்ததைக்கூட அனுமதிக்காத தாய்க்கும், தனக்குச் சொந்தமான நிலத்தின் வரப்பைத் தாண்டி ஒரு இஞ்ச்கூட கூடுதலாக ஆக்கிரமிக்க விரும்பாத தந்தைக்கும் பிறந்த மகன் சகாயம். தன்னளவில் அப்படி ஒரு குடும்பம் வாழ்வதில் சிக்கல் இல்லை. ஆனால், அரசாங்க அதிகாரியாக வரும் வாரிசால் அப்படி இருக்க முடியுமா? ஐ.ஏ.எஸ். ஆனபிறகும் அப்படி வாழ்ந்து காட்டுவதில்தான், சகாயத்தின் சாதனை அடங்கியிருக்கிறது. 21 ஆண்டுகளில் 21 பணியிடங்களுக்குப் பந்தாடப்பட்டதன் பின்னணியும் அதில்தான் இருக்கிறது.
காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ-வாக இருந்தபோது ஒரே ஒரு பெப்ஸி பாட்டிலில் இருந்த சுகாதாரக்கேட்டைத் தடுக்க அதன் யூனிட்டை பூட்டியது முதல், மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது பல்லாயிரம் கோடி வர்த்தகம் கொடுத்த கிரானைட் நிறுவனங்களின் மூச்சை அடக்கியது வரையிலான காலகட்டங்கள், தமிழக நிர்வாகப் பரப்பில் நீண்ட காலங்கள். 'நான் நேர்மையான அதிகாரியாக இருப்பேன்’ என்று சபதம் செய்துவிட்டு வருபவர்கள், ஆறே மாதங்களில் அதிகாரத்தின் சுவைக்கு அடிமையாகி சபலம் ஆகிவிடுவது உண்டு. அப்படியானால், நிர்வாகத்தில் தூய்மையை ஏற்படுத்துவது எப்படி? சகாயம் ஒரே ஒரு வழியைத்தான் சொல்கிறார்: 'ஆடம்பரம் தவிர்த்த வாழ்க்கை’.
'ஓர் ஏழை நாட்டில் அரசு ஊழியரின் தேவைக்கு இன்று அரசு போதுமான அளவு சம்பளம் அளிக்கிறது. ஆனால், ஆசைக்கும் பேராசைக்கும் யாராலும் சம்பளம் அளிக்க முடியாது. அடிப்படைத் தேவைக்கு, அளிக்கப்படும் சம்பளம் போதுமானது; ஆடம்பரத் தேவைக்கு யார்தான் கூலி தர முடியும்?’ என்று கேட்கிறார் சகாயம். 'மதுரையில் ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்பில் எல்.ஐ.சி. ஹவுசிங்கில் கடனுக்கு ஒரு வீடும், வங்கியில் 7,172 ரூபாயும்தான் என்னுடைய சொத்து’ என்று முதன்முதலில் தனது சொத்துப் பட்டியலை அகில இந்தியாவிலேயே அறிவித்த ஐ.ஏ.எஸ். அதிகாரியாக அவரால் இருக்க முடிந்தது, அந்த பற்றற்ற வாழ்க்கையால்தான். ஊழலுக்கு எதிராக எப்போது வேண்டுமானாலும் அவர் இயக்கம் தொடங்குவார் என்று சொல்வார்கள். ஆனால், அவர் இப்போதும் இயக்கமாகத்தான் இருக்கிறார்!- புத்தகன்
|
|
| |