பெண்களுக்காக - Page 2 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
Forum moderator: Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பயனுள்ள தகவல்கள் » பயனுள்ள தகவல்கள் » பெண்களுக்காக (பெண்களுக்காக)
பெண்களுக்காக
kvsureshDate: Friday, 31 Jan 2014, 5:00 PM | Message # 11
Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
பெண்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் உதிரப்போக்கு..!
சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு!

பெண்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் உதிரப்போக்கு, உரிய அளவைவிடஅதிகமாகவும், 
அதிக நாட்களுக்கும் இருந்தால் அதை அதிஉதிரப்போக்கு எனகிறோம் .

காரணங்கள்:
ரத்தம் உறைவதில் ஏற்படும் குறைஷ்பாடுகளினாலும், ரத்தசோகை, தைராய்டுநோய்கள்,
 காசநோய், கருப்பைக் கட்டிகள், சினைப்பை நீர்க்கட்டிகள், கர்ப்பத்தடைமா த்திரைகள் உட்கொண்டதன் பின்விளைவுகள் போன்ற காரணங்களாலும் அதிகஉதிரப்போக்கு ஏற்படும்.


Regards and Thanks

Kothai Suresh
 
kvsureshDate: Friday, 31 Jan 2014, 5:02 PM | Message # 12
Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:

அத்திப் பட்டையை மோர் சேர்த்து இடித்துச் சாறு எடுத்து 30 மி.லி. அருந்தலாம்.

அத்திப் பால் ஐந்து சொட்டு எடுத்து வெண்ணெய் சேர்த்து உண்ணலாம்.

குங்கிலியத்தை நெய்விட்டுப் பொரித்து நீர் சேர்த்துக் குழைத்து, கால்ஸ்பூன்உண்ணலாம்.

இளம் வாழைப்பூவை அவித்து 30 மில்லி சாறெடுத்துத் தேன் கலந்து உண்ணலாம்.

இத்தியின் பிஞ்சை அரைத்து, கொட்டைப் பாக்கு அளவு உண்ணலாம்.

தொட்டாற்சிணுங்கியின் இலைச் சாற்றை 15 மி.லி. அருந்தலாம்.


Regards and Thanks

Kothai Suresh
 
shanDate: Friday, 31 Jan 2014, 5:04 PM | Message # 13
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
கோதை ,
மேலே உள்ள பதிவு எனக்கு தெரியலை .1ச்ட் பேஜ்.உனக்கு தெரியுதா
 
kvsureshDate: Friday, 31 Jan 2014, 5:06 PM | Message # 14
Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
Hi shanthi,
ennakku adhe problem than pa  cut agi agi varu methi post poda mudiyala, msg too lengthynu varudhu


Regards and Thanks

Kothai Suresh
 
kvsureshDate: Friday, 31 Jan 2014, 5:08 PM | Message # 15
Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
i[ppo cursera move panna  page theriyudhu, medhi post eppadi podanu puriyala padhileye nikkudhu

Regards and Thanks

Kothai Suresh
 
shanDate: Saturday, 01 Feb 2014, 12:22 PM | Message # 16
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
இப்போ சரி ஆகிவிட்டது கோதை ....
 
SLKDate: Monday, 03 Feb 2014, 5:17 AM | Message # 17
Lieutenant
Group: Checked
Messages: 73
Status: Offline
Library
Intha page mattum sariya align aagale pa.. page-ode right side poga scroll bar illai.. ethuvume theriyale??
 
srkDate: Tuesday, 11 Feb 2014, 10:18 AM | Message # 18
Major general
Group: *Checked*
Messages: 304
Status: Offline
Quote SLK ()
Intha page mattum sariya align aagale pa.. page-ode right side poga scroll bar illai.. ethuvume theriyale??

New message boxkku keele scroll bar irukkuppa. everytime keele poi scroll pannithan parkanum. already complaint panniyachuppa. soon they will rectify it.


Life is God's Gift
 
RAWALIKADate: Thursday, 06 Mar 2014, 9:07 AM | Message # 19
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
நான் ஒரு பெண்!


நன்றி - விகடன் சிந்திக்க சில நிமிடங்கள்...
ப்ரியா தம்பிநான்... நான் ஒரு பெண்; நான் ஒரு மகள்; நான் ஒரு தாய்; நான் ஒரு தங்கை; நான் ஒரு மனைவி; நண்பர்களுக்கு நான் ஒரு தோழி; வேலை செய்யும் இடத்தில் நான் மேலதிகாரி. 30 ஆண்டுகளுக்கு முன் இருந்ததுபோல் இன்று என் வாழ்க்கை இல்லை. பொருளாதாரத்தில் நான் தனித்து நிற்கிறேன். விரும்பிய உடைகளை அணிகிறேன். ஆனால், எங்கேனும் ஒப்பனைகள் இன்றி நான், நானாக இருக்க முடிகிறதா?
நண்பர்களே... சில நிமிடங்கள் நான் பேசுவதைக் கேட்கிறீர்களா? சில நிமிடங்கள் போதும்... கொஞ்ச நேரத்துக்கு உங்கள் காதுகளையும் மனதையும் திறந்து அமைதியாகக் கேளுங்கள் போதும்!
'என்னது பொம்பளைப் பிள்ளையா?’ என்ற அலறல்கள் வீடுகளில் இன்று கேட்பது இல்லை. 'ஒரே ஒரு குழந்தை, அதுவும் பெண் குழந்தைதான் வேணும்’ என்று ஆசைப்பட்டு பலர் பெற்றுக் கொள்கிறார்கள். எப்போதும் பெண்ணின் அன்பில் திளைத்துக்கொண்டே இருக்க விரும்பும் ஆண் மனதுக்கு... மகள் இன்னுமொரு தாய். ஒரு தந்தைக்கு ஒரு மகளிடம் ஆயிரம் எதிர்பார்ப்புகள் உண்டு. ஒரு மகளாக நாங்கள் என்ன எதிர்பார்ப்போம் என உங்களுக்குத் தெரியுமா?
எங்களுக்குத் தேவை உங்கள் அதிகாரம் அல்ல... அன்பு; அரவணைப்பு; தோழமை. தந்தையைத் தோழனாக அமையப் பெற்ற எந்தப் பெண்ணும் தன்னம்பிக்கையோடு முதல் அடியை இந்தச் சமூகத்துக்குள் எடுத்துவைக்க முடியும். அப்பாவின் அதிகாரத்துக்குள், அவர்களின் மிரட்டலில் வளர்க்கப்படும் பெண்கள்... பார்க்கும் ஆண்களிடம் தந்தைமையைத் தேடி ஏமாந்துபோகும் உளவியலை அறிவீர்களா? ஒரு தலைகோதலில், 'நான் இருக்கேன்’ என்று ஆண் சொல்லும் வார்த்தைகளில், எல்லாவற்றையும் விட்டுவிட்டு சரணாகதி அடையும் சில பெண்களைப் பார்த்து ஆச்சரியம் வரலாம். ஆனால், இதன் பின்னணியில் வீட்டில் அப்பாவிடம் எதிர்பார்த்து ஏமாந்துபோன ஒரு மகளின் மனது இருக்கிறது.



இன்றைக்குக் காதலைச் சொல்வதற்கு முன்புபோல் ஆண்டுக்கணக்கில் காத்திருக்க வேண்டியதே இல்லை. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிகள், எல்லாவற்றையும் சாத்தியம் ஆக்கியிருக்கிறது. ஆனாலும் இன்றும் பெண்கள் தங்கள் காதலை உணர்வதுபோல் சொல்லிவிட முடிவது இல்லை. பெண்கள் என்றால் மாநகர மால்களில் நவீன உடைகளில் நடமாடுகிற பெண்கள் மட்டும் அல்ல... கிராமங்களில் கல்யாணத்துக்கு முன்பு ஒரு டிகிரிக்காகக் கல்லூரி போகும் பெண்களையும் நினைவில் கொள்ளவும்.

காதலை மறுக்கவாவது பெண்களுக்கு உரிமை இருக்கிறதா? சமீபத்தில் மட்டும் எத்தனை ஆசிட் வீச்சுக்களைப் பார்த்தோம். தங்களை வேண்டாம் என்று நிராகரிக்க, தனக்குப் பிடித்த ஆண்களைக் காதலிக்கும் உரிமை பெண்களுக்கும் இருக்கிறது என்பதை ஏன் மறந்துபோனோம்? அலுவலகத்தில் உடன் வேலைசெய்யும் பெண் காதலை மறுத்தால், திரும்பத் திரும்ப வற்புறுத்துவதும், அந்தப் பெண்ணைப் பற்றிய வதந்திகளைப் பரப்புவதும் என்ன மாதிரியான மனநிலை நண்பர்களே?
ஆம்! காதலில்கூட இங்கு பாரபட்சம்தான். காதலனுக்குத் தன்னைப் பிடிக்கவைக்க என்ன செய்வது, காதலனின் வீட்டுக்குப் பிடிக்க எப்படி நடிப்பது என்ற பாசாங்குகளில்தான் ஓடிக்கொண்டு இருக்கிறது பெரும்பாலோரின் காதல்.

அவளது கனவுகளை, ஏமாற்றங்களை, பகிரப்படாத துயரங்களைப் பேச அவளை அனுமதித்தது உண்டா? கண்களில் சந்தோஷம் மினுங்க உங்கள் பால்யம் பற்றி நீங்கள் பகிரும்போது, அந்தக் கண்களில் முத்தமிட அவள் விரும்புவாள் என்பது தெரியுமா? அணைத்தலோ, முத்தமிடுதலோ ஆண் தரும்போது பெற்றுக்கொள்ள வேண்டியவளாகத்தானே பெண் இருக்கிறாள். ஒரு பெண் தானாக வந்து முத்தமிட்டால், உடனே அவளது இயல்பை, கேரக்டரை எல்லாம் சந்தேகப்படுவது ஏன்? உங்களுக்கு வந்தால் அன்பு, அதுவே எங்களுக்கு வந்தால் தீண்டத்தகாத பொருளா?

அதிகாலையில் நடக்கும்போது இருளடைந்த வீடுகளில் சமையல் அறையில் மட்டும் விளக்கு எரிவதைப் பார்க்கலாம். அந்த ஜன்னலை எட்டிப்பார்த்தால், அதற்குள் நிற்கிற பெண்ணுக்கு 20 முதல் 70 வயதுக்குள் இருக்கலாம். அவள் புதிதாக வேலைக்குச் சேர்ந்த பெண்ணாக இருக்கலாம்; புதிதாகத் திருமணம் ஆன பெண்ணாக இருக்கலாம்; இரண்டு குழந்தைகளின் தாயாக இருக்கலாம். மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்பவளாக இருக்கலாம்; வங்கி ஒன்றின் உயர் அதிகாரியாக இருக்கலாம்; பணி ஓய்வுபெற்ற ஒரு டீச்சராக இருக்கக்கூடும்; துணிக்கடை ஒன்றில் 12 மணி நேரம் நின்று மரத்துப்போன கால்கள் அவளுக்கு இன்னமும் வலிக்கக்கூடும்; இங்கே வேலைகளை முடித்துவிட்டு வேறு வீடுகளுக்கு அவள் வேலைக்குச் செல்பவளாகவும் இருக்கலாம்; கொஞ்சம் உற்றுப் பார்த்தால் இரவுப் பணியில் களைப்படைந்து தூங்கச் சொல்லிக் கெஞ்சும் கண்களையும் அந்த முகத்தில் நீங்கள் பார்க்கக்கூடும்.
 
RAWALIKADate: Thursday, 06 Mar 2014, 9:09 AM | Message # 20
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline


அப்படியே கொஞ்சம் அந்த வீட்டின் படுக்கை அறையில் எட்டிப் பாருங்கள். அங்கே ஒரு கணவன் உறங்கிக்கொண்டு இருக்கிறான். அந்தப் பெண்ணின் காதல் கணவனாகக்கூட அவன் இருக்கக்கூடும். திருமணத்துக்குப் பிறகு சொர்க்கத்தைக் காட்டுவேன் என்று வாக்குக் கொடுத்தவனாகக்கூட இருக்கலாம். வீட்டின் செலவுகளைப் பகிர்ந்துகொள்ள பெண்கள் வேலைக்குப் போக ஆரம்பித்த பிறகும், அவர்களது வேலைகளைப் பகிர்ந்துகொள்வதில் நாம் ஓர் அடியாவது முன்னே எடுத்துவைத்திருக்கிறோமா? காதல் என்பது எல்லாவற்றையும் பகிர்வதுதானே?

பெண்கள் திருமணமானால், குடும்பத்தைத் தவிர வேறு எதையுமே சிந்திக்க முடியாது. திருமணமான ஓர் ஆணின் வாழ்க்கையும், பெண்ணின் வாழ்க்கையும் இங்கு ஒரேமாதிரிதான் இருக்கிறதா என ஒப்பிட்டுப் பாருங்கள். அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வந்தால் லேப்டாப், மொபைல் போன் கதி என்று கிடக்கும் கணவர்கள்... அதே நேரத்தில் சமையல், வீடு, குழந்தைகள் எனப் போராடிக்கொண்டிருப்பதைக் கவனிக்க மறுக்கும்போது பெண்களுக்குக் கோபம் வருவது இயல்புதானே!

திருமணத்துக்குப் பிறகு எல்லா சுதந்திரங்களும் தொலைந்துபோனதாக ஆண்கள்தான் சதாசர்வகாலமும் புலம்புகிறார்கள். ஆனால், சமூக வலைதளங்களில் அவர்களால் தொடர்ந்து இயங்க முடிகிறது; கல்லூரி நண்பர்களோடு சுற்றுலா செல்ல முடிகிறது; வெளியாகிற எல்லாத் திரைப்படங்களையும் பார்க்க முடிகிறது... இப்படியான எல்லா ஆசைகளும் பெண்களுக்கும் இருக்கும் என யோசித்திருக்கிறீர்களா?



ஆறு நாட்கள் வேலைக்குப் பின் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் ஓய்வு எடுக்கிற பாக்கியம் எத்தனை பெண்களுக்கு இங்கே கிடைக்கிறது? ஞாயிற்றுக்கிழமை காலையில் ஆடோ, கோழியோ, கொக்கோ வாங்கிக் கொடுப்பதோடு கடமை முடிந்த பாவனையில் டி.வி-யில் மூழ்கியிருக்கும் கணவனுக்கு, தன் மனைவிக்கும் அப்படியானஇளைப்பாறுதல் தேவைப்படுகிறது என்று புரியாமல்போவது ஏன்? எங்கள் பாட்டிகளின் ஞாயிற்றுக்கிழமைகள் விறகு அடுப்பில் போனதென்றால், எங்களின் கிழமைகள் கேஸ் ஸ்டவ் முன் கழிகின்றன. அடுப்பின் வெக்கையில் மட்டும்தானே வித்தியாசம்? இப்படி அதிகப்படியான வேலைகளில்கூட நாங்கள் மனம் சோர்ந்துவிடுவது இல்லை. அந்த வேலையை நீங்கள் அங்கீகரிக்க மறுக்கும்போதுதான், மனம் கசந்துபோகிறது.

அது எப்படி கணவன்களே... டி.வி-யில் மொக்கைப் படங்களைக் கண் இமைக்காமல் பார்க்கும் உங்களால், மனைவி பேச ஆரம்பித்து மூன்றாவது நிமிடத்தில் தூங்கிவிட முடிகிறது? அது எவ்வளவு பெரிய புறக்கணிப்பும் அவமானப்படுத்துதலும் என்று ஏன் புரியவில்லை?

ஒரு குடும்பத்தில் தான் தூங்கும் நேரத்தையாவது பெண்ணால் தேர்வுசெய்ய முடிகிறதா? கணவன் தூங்கும் நேரத்தில் மனைவியும் தூங்கியாக வேண்டும். ஒருவேளை அவள் தூங்கத் தாமதமானால், பாத்திரம் கழுவுதல், மறுநாளைக்கு அயர்ன் செய்தல்... என ஏதேனும் காரணங்கள் இருக்கக்கூடும். மாறாகத் தனக்காக அவள் வாசிப்பதையோ, தனக்குப் பிடித்த ஒரு படத்தைப் பார்ப்பதையோ, தனக்காக அவள் நடனமாடுவதையோகூட நம் குடும்பங்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன.
படுக்கையறையில்கூட ஒரு பெண் தன் விருப்பங்களைச் சொல்லவோ, மறுக்கவோ அவளுக்கு வாய்ப்பு இருக்கிறதா? அவளுக்கு இதெல்லாம்தான் பிடிக்கும்... என நீங்களாக முடிவுசெய்து ஏதேதோ செய்கிறீர்கள். அவளுக்கு அது நிஜமாகவே பிடிக்கிறதா என்பதையேனும் ஒருநாள் கேட்டுப் பாருங்களேன்.

ஒரு பெண், வயதுக்கு வருவதில் இருந்து இறந்துபோவது வரை அவளது உடல் எத்தனையோ மாற்றங்களைச் சந்திக்கிறது. அவளுக்கு என்றே இயற்கை தந்த ஏராளமான வலிகளும் அவஸ்தைகளும் உண்டு. அவள் அருகே உட்கார்ந்து அவள் உடலில் நடக்கும் மாற்றங்கள் பற்றி, அப்போதைய அவள் வேதனை பற்றிப் பேச வேண்டும் என்று ஒவ்வொரு மனைவியும் எதிர்பார்க்கிறாள் தெரியுமா? ஆப்பிளின் புதிய போன் சந்தைக்கு வருவதற்கு முன்பே அதன் பயன்களை இணையத்தில் தேடி அப்டேட் செய்பவர்களால், மெனோபாஸ் நேரத்தில் பெண்கள் சந்திக்கும் மனக்குழப்பங்கள் பற்றிய கட்டுரையைப் படித்தால், மனைவியின் சிடுசிடுப்புக்குக் காரணம் அறிய முடியுமே. தேவை, நேரம் அல்ல... கொஞ்சம் அக்கறை!
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பயனுள்ள தகவல்கள் » பயனுள்ள தகவல்கள் » பெண்களுக்காக (பெண்களுக்காக)
Search: