டிப்ஸ் டிப்ஸ் - Page 2 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
Forum moderator: Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பயனுள்ள தகவல்கள் » பயனுள்ள தகவல்கள் » டிப்ஸ் டிப்ஸ் (அவள் விகடனில் வரும் டிப்ஸ்)
டிப்ஸ் டிப்ஸ்
shanDate: Wednesday, 29 Jan 2014, 2:11 PM | Message # 11
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
அருமையான உபோயோகமான டிப்ஸ் ரவளி ........நன்றி ........
 
RAWALIKADate: Wednesday, 29 Jan 2014, 2:21 PM | Message # 12
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
Quote shan ()
அருமையான உபோயோகமான டிப்ஸ் ரவளி ........நன்றி ........

சாந்தி

இன்னும் நிறைய இதுபோல் இருக்கு.

நான் தான் 1௦ - 1௦ போடலாம்ன்னு.

அதுவும் இல்லாம இது பலருக்கும் பயன்படும்ன்னு எனக்கு தோன்றினாலும் நீங்கள் எல்லாம் விரும்புவீர்களானால் தொடரலாம் அப்படின்னு நினைச்சேன்.
 
shanDate: Wednesday, 29 Jan 2014, 4:28 PM | Message # 13
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
Quote RAWALIKA ()
சாந்தி

இன்னும் நிறைய இதுபோல் இருக்கு.

நான் தான் 1௦ - 1௦ போடலாம்ன்னு.

அதுவும் இல்லாம இது பலருக்கும் பயன்படும்ன்னு எனக்கு தோன்றினாலும் நீங்கள் எல்லாம் விரும்புவீர்களானால் தொடரலாம் அப்படின்னு நினைச்சேன்.


ஹாய் ரவளி ,
நீ கொடுத்தது அனைத்தும் தேவையான டிப்ஸ் ......சோ இருக்கிறதை தினமும் போடு ......
 
RAWALIKADate: Wednesday, 29 Jan 2014, 4:36 PM | Message # 14
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
Quote shan ()
ஹாய் ரவளி ,
நீ கொடுத்தது அனைத்தும் தேவையான டிப்ஸ் ......சோ இருக்கிறதை தினமும் போடு ......

கண்டிப்பா போடறேன் சாந்தி
 
SLKDate: Friday, 31 Jan 2014, 10:43 PM | Message # 15
Lieutenant
Group: Checked
Messages: 73
Status: Offline
Rawalika..nice and helpful tips pa.. thanks
 
meyyammaiDate: Saturday, 01 Feb 2014, 10:28 AM | Message # 16
Private
Group: Checked
Messages: 11
Status: Offline
nice viji.
thanks
naan ungalai romba thedinen viji
 
RAWALIKADate: Saturday, 01 Feb 2014, 10:36 AM | Message # 17
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
Quote meyyammai ()
naan ungalai romba thedinen viji

நன்றி

நானும் உங்களை எல்லாம் மிஸ் செய்தேன்

நான் பதிவிடும் இது போன்ற தகவல்களை நீங்கள் மற்றும் உங்களைப் போல் பலர் படிப்பது எனக்கு தெரியும்.
 
rajiiDate: Monday, 03 Feb 2014, 10:07 PM | Message # 18
Major
Group: *Checked*
Messages: 83
Status: Offline
Hi Rawalika,

Thx for  useful tips.thotarattum ungal sevai.
 
RAWALIKADate: Wednesday, 05 Feb 2014, 1:42 PM | Message # 19
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
 
RAWALIKADate: Wednesday, 05 Feb 2014, 1:43 PM | Message # 20
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
வீட்டைப் பூட்டிவிட்டு ஒன்றிரண்டு நாட்கள் வெளியூர் சென்று திரும்பினால்... வீடு முழுக்க எறும்பு, பூச்சிகள் என்று சமயங்களில் படுத்தி எடுத்துவிடும். ஊருக்குப் புறப்பட்டால்... எல்லா அறைகளின் (குளியலறையும் சேர்த்து) நான்கு மூலைகளிலும் பூச்சி மருந்து அடியுங்கள். சமையலறை சிங்க், வாஷ்பேஸின் ஆகியவற்றின் துவாரங்களில் நாஃப்தலின் உருண்டைகளைப் போடுங்கள். சமையலறை அலமாரிகளின் ஓரங்களில் லஷ்மண் ரேகாவினால் கோடு வரையுங்கள். அதன் பிறகு பாருங்கள்... பூச்சிகள் அண்டவே அண்டாது.- ராஜலஷ்மி மகாதேவன், கோவை

நீங்கள் தயாரிக்கும் பதார்த்தம் எல்லாம் தேங்காய் எண்ணெய் மணத்துடன் இருக்க வேண்டுமா? மாவுடன் ஒன்றிரண்டு ஸ்பூன் துருவிய தேங்காய் கொப்பரையை (துருவிய கொப்பரையை 'டெஸிகேடட் கோகனட்' என்று டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் வாங்கலாம்.) சேர்த்துப் பிசையுங்கள்.... தேங்காய் எண்ணெய் சேர்க்காமலேயே சுவையும் மணமும் அபாரமாக இருக்கும்!- அலமேலு நாகராஜன், சென்னை-33

கட்டிப் பெருங்காயத்தை சாம்பாரில் சேர்ப்பதாக இருந்தால், பருப்பை வேக வைக்கும்போதே அதனுடன் சேர்த்து விடுங்கள். இதனால் மணம் தூக்கலாக இருப்பதுடன், குறைந்த அளவு பெருங்காயமே போதுமானதாக இருக்கும்.- சியாமளா பாலு, திருச்சி

குழந்தைகள் வீட்டில் விளையாடும்போது, பொம்மைகள் அத்தனையையும் எடுத்துப் போடாதீர்கள். வெகு விரைவில் அவற்றைப் பார்த்து சலிப்படைந்து விடுவார்கள். ஒவ்வொரு நாளும் ஒன்றிரண்டு பொம்மைகளாகக் கொடுத்து விளையாடச் செய்தால், விளையாட்டு ஆர்வம் பொங்குவதோடு, சலிப்பும் வராது. எதை வைத்து விளையாடுவது என்கிற குழப்பமும் வராது.- லலிதா ஸ்ரீதரன், மேற்கு மாம்பலம்

ஒரு கரண்டி லேசான அவல், 3 கரண்டி பால், ஒரு ஸ்பூன் துருவிய தேங்காய், இனிப்புச் சுவைக்கு தேவையான சர்க்கரை அல்லது தேன் அல்லது மில்க்மெய்ட் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் கலந்து கொள்ளுங்கள். பொடித்த பாதாம், உலர்ந்த திராட்சை, முந்திரி... எது கை வசம் இருந்தாலும் மேலே தூவி கிண்ணங்களில் நிரப்பி ஸ்பூனுடன் குழந்தைகளுக்கு கொடுங்கள். ஆவலுடன் சாப்பிடுவார்கள். முன்னதாகவே தயாரித்து ஃப்ரிட்ஜில் குளிர வைத்தும் கொடுக்கலாம்.- சங்கரி வெங்கட், புது பெருங்களத்தூர்


Message edited by RAWALIKA - Wednesday, 05 Feb 2014, 1:45 PM
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பயனுள்ள தகவல்கள் » பயனுள்ள தகவல்கள் » டிப்ஸ் டிப்ஸ் (அவள் விகடனில் வரும் டிப்ஸ்)
Search: