டிப்ஸ் டிப்ஸ் - Page 3 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
Forum moderator: Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பயனுள்ள தகவல்கள் » பயனுள்ள தகவல்கள் » டிப்ஸ் டிப்ஸ் (அவள் விகடனில் வரும் டிப்ஸ்)
டிப்ஸ் டிப்ஸ்
RAWALIKADate: Wednesday, 05 Feb 2014, 1:46 PM | Message # 21
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
 
kvsureshDate: Wednesday, 05 Feb 2014, 1:46 PM | Message # 22
Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
Hi viji,
Nice tips viji, ellame romba useful tips, thodarndhu podu.


Regards and Thanks

Kothai Suresh
 
RAWALIKADate: Wednesday, 05 Feb 2014, 1:48 PM | Message # 23
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline


 
RAWALIKADate: Wednesday, 05 Feb 2014, 1:49 PM | Message # 24
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
புடவைகளுக்கு ஃபால்ஸ் வைத்து தைக்கப் போகிறீர்களா? நூல் புடவைகளுக்கு காட்டன் ஃபால்ஸும், செயற்கை இழைப் புடவைகளுக்கு பாலியஸ்டர் ஃபால்ஸும் தைத்தால், புடவையை நனைக்கும்போது ஃபால்ஸ் சுருங்காமல் இருக்கும். தையல்காரரிடம் கொடுக்கும்போது, சரியாகச் சொல்லிக் கொடுக்க வேண்டும். புடவையின் பார்டர், ஃபால்ஸை விட அகலம் குறைவாக இருக்கிறதா... ஃபால்ஸை அதே அகலத்துக்கு மடித்துத் தைத்தால், புடவையில் தையல் தெரியாமல் இருக்கும்.- எஸ்.விஜயா சீனிவாசன், திருவெறும்பூர்தினமும் கடுகு தாளிக்கும்போது, கடுகு பொரிந்து கிச்சன் மேடையில் விழுந்து அழுக்காகும். இதனை தவிர்க்க, ஒரு வாரத்துக்கு தேவையான கடுகை, வெறும் வாணலியில் (மூடி போட்டு) எண்ணெய் விடாமல் பொரித்து, ஒரு டப்பாவில் எடுத்து வைத்துக் கொள்ளலாம். தாளிக்கும்போது கடுகைத் தவிர மற்ற பொருட்களைத் தாளித்துக் கொண்டு, ஏற்கெனவே பொரித்து வைத்துள்ள கடுகை அதில் சிறிது தூவிக் கொள்ளலாம். மேடையும் சுத்தமாக இருக்கும்.- ராதா நாயகம், சென்னை-87இது கோடைக்காலம் என்பதால், குழந்தைகளின் அலமாரி, டிரெஸ் அடுக்கு, அவர்களின் அறை போன்றவற்றை... குழந்தைகளைக் கொண்டே சுத்தம் செய்து, அடுக்க சொல்லுங்கள். தன் வேலையை தானே செய்த திருப்தியோடு, அவர்களுக்கு உடல் உழைப்பும் கிடைக்கும்.- மஞ்சு வாசுதேவன், நவி மும்பைஃப்ரிட்ஜிலிருந்து எடுத்து உபயோகிக்கும் தயிர், சிலருக்கு சரிப்பட்டு வராமல் போய்விடும். அப்படிப்பட்டவர்களுக்கு, சாப்பிடுவதற்கு மூன்று மணி நேரத்துக்கு முன்பு தேவையான தயிரை உறை ஊற்றினால்... புளிக்காமல் தயிர் தோய்ந்துவிடும். முதல் நாள் இரவு தோய்த்த தயிரில் மறுநாள் சாப்பிடுவதற்கு அரை மணி முன்னதாக அரை டம்ளர் பாலைச் சேர்த்துக் கலக்கி வைத்தாலும், புளிக்காமல் சரியான பதத்தில் தயிர் கிடைக்கும்.- கனகம் பொன்னுசாமி, கோவைசுவர் கடிகாரங்களின் பின்னால் ஒரு வெள்ளைக் காகிதத்தை ஒட்டி வைத்து, அதனுள் போடப்பட்டிருக்கும் பேட்டரி மாற்றும் தேதிகளைக் குறித்து வைத்து கொள்ளுங்கள். பேட்டரி உழைக்கும் நாட்களை அறிவதோடு, கடிகாரம் நின்றுவிட்டால், அது பழுதாகிவிட்டதா அல்லது பேட்டரி தீர்ந்துவிட்டதா என்றும் கண்டுபிடித்துவிடலாம்.- விஜி ஸ்ரீதர், பெங்களூரு  வீட்டில் குப்பைத்தொட்டி இருந் தால், அதன் உள்ளே, கால் ஸ்பூன் பிளீச்சிங் பவுடரைத் தூவிவிடுங்கள். பிறகு அதனுள் பிளாஸ்டிக் கவர் விரித்து அதன் உள் குப்பை போட் டால், பூச்சிகள் அண்டாமல், குப்பைத் தொட்டி சுத்தமாகவும் இருக்கும்.- வி.விஜயலட்சுமி, கும்பகோணம்
 
RAWALIKADate: Wednesday, 05 Feb 2014, 1:49 PM | Message # 25
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
கற்கள் பொருத்திய மூக்குத்தி, தோடு போன்றவற்றை சுத்தம் செய்யும்போது, ஒரு உலோக வடிகட்டி அல்லது சல்லடையினுள் வைத்து  சுத்தம் செய்யவும். அப்போதுதான் கற்கள், திருகாணி போன்றவை கை தவறினாலும் தொலைந்து விடாமல் பத்திரமாக இருக்கும்- லக்ஷ்மி ஸ்ரீநிவாசன், சென்னை-24        

முறுகலான தோசை செய்ய, ஒரு ஆழாக்கு உளுந்துக்கு இரண்டு ஸ்பூன் துவரம்பருப்பும், ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பும் சேர்த்து ஊற வைத்து அரையுங்கள். தோசை முறுகலாகவும் தங்க நிறத்திலும் வரும்.- ஆர்.ஜோதிமணி, மேட்டுப்பாளையம்

பாகற்காய் சமைக்கும்போது கசப்பு தெரியாமல் இருக்க, சர்க்கரை அல்லது வெல்லம் சேர்ப்போம். அதற்குப் பதில், பாகற்காயை பொரியலாகச் செய்யும்போது, கேரட் அல்லது பீட்ருட் துருவி, தாளிப்புடன் சேர்த்து வதக்கிவிட்டு, பின்னர் பாகற்காய் சேர்க்கவும். பாகற்காயை குழம்பு அல்லது பிட்லை செய்யும்போது, சில துண்டுகள், கேரட்டையும் சேர்த்து வேகவிட்டால் ருசியும் சத்தும் கூடுவதோடு கசப்பும் குறையும்- அஸ்வினி ஆனந்த், அம்பத்தூர்

மோர்க்குழம்பு, தேங்காய் சட்னி, அவியல் போன்றவை தயாரிக்கும்போது, பச்சை மிளகாயை அப்படியே சேர்த்து அரைக்காமல், ஒரு சொட்டு சமையல் எண்ணெயை, சூடான வாணலியில் விட்டு, பச்சை மிளகாயைப் போட்டு சில விநாடிகள் புரட்டி, பின்னர் அரையுங்கள். சுலபமாக அரைபடுவதுடன், அடுத்த நாள் வரைகூட பதார்த்தங்கள் கெட்டுப் போகாமல் இருக்கும்.- எஸ்.ராஜம், வில்லிவாக்கம்



ஒரு நிமிடத்தில் ஒரு ராய்தா தயாரிக்கலாமா? ஒரு கப் கெட்டித் தயிரில் இரண்டு சிட்டிகை உப்பும், அரை ஸ்பூன் சாட் மசாலா அல்லது சன்னா மசாலா பொடியும் சேர்த்துக் கலக்கினால்... ஃப்ரைடு ரைஸுக்கு ஏற்ற அவசர ராய்தா ரெடி.. விருப்பப்பட்டால், கூடுதலாக கைவசமுள்ள மிக்சர், ஓமப்பொடி, பூந்தி இதில் ஏதாவது தூவிப் பரிமாறலாம்.- விஜயலட்சுமி, பெங்களூரு

தேவையைவிட கீரை அதிகமாக இருக்கிறதா? அவற்றின் வேர்களை நீக்கிவிட்டு, கழுவி ஒரு தாளில் பரப்புங்கள். ஈரப்பதம் காய்ந்த பிறகு, வாணலியை சூடாக்கி, அடுப்பை அணைத்துவிட்டு சில விநாடிகள் நிறம் மாறாத அளவுக்கு கீரையைப் போட்டு புரட்டுங்கள். ஆறியதும்... ஒரு டப்பா அல்லது கவரில் போட்டு குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிட்டால், நாலு நாட்களானாலும் அழுகிப் போகாமல் பச்சைப் பசேலென்று இருக்கும்.- வத்சலா சதாசிவன்,  சென்னை-64


Message edited by RAWALIKA - Wednesday, 05 Feb 2014, 1:51 PM
 
RAWALIKADate: Wednesday, 05 Feb 2014, 1:53 PM | Message # 26
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline




 
RAWALIKADate: Wednesday, 05 Feb 2014, 1:54 PM | Message # 27
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline




 
RAWALIKADate: Wednesday, 05 Feb 2014, 1:55 PM | Message # 28
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline


 
RAWALIKADate: Wednesday, 05 Feb 2014, 2:01 PM | Message # 29
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
சொந்த அனுபவத்தில் கண்டது

இரும்பு தோசை கல் மற்றும் வாணலியில் எண்ணெய் கோடிங் போல் படிந்து "என்னை" கவனி

என்று இருந்தால்
 நன்றாக அடுப்பில் சூடாக்கி விட்டு சட்டுவம் / நன்கு சுரண்டும் வகையில் உள்ள கத்தி போன்றவை கொண்டு சுரண்டவும், அதுவும் அடுப்பு எரியும்போது தீயை கூடியோ அல்லது குறைத்தோ வைத்து செய்யவும். நன்றாக சூடான பின்பே சுரண்டினால் வரும்.

அப்பப்போ இந்த வைத்தியம் என் தோசை கல்லிற்கு செய்வதால் தோசை கல்லின் எல்லை வரை பேப்பர் ரோஸ்ட் போட முடிகிறது...
 
NathasaaDate: Wednesday, 05 Feb 2014, 3:36 PM | Message # 30
Major general
Group: *Checked*
Messages: 360
Status: Offline
Hi Viji sis
Ur tips are very helpful
thnx for the sharing
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பயனுள்ள தகவல்கள் » பயனுள்ள தகவல்கள் » டிப்ஸ் டிப்ஸ் (அவள் விகடனில் வரும் டிப்ஸ்)
Search: