காரடையான் நோம்(ன்)பு - Page 2 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
  • Page 2 of 2
  • «
  • 1
  • 2
Forum moderator: Laya, Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » ஆன்மீகம் / நல்வழி » ஆன்மிகம் » காரடையான் நோம்(ன்)பு (மாங்கல்ய பாக்கியம் தரும் காரடையான் நோன்பு!)
காரடையான் நோம்(ன்)பு
PattuDate: Thursday, 13 Mar 2014, 7:46 PM | Message # 11
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
வெல்ல அடை

தேவையானவை:

*வறுத்த பச்சரிசி மாவு 1 கப்
*காராமணி 1/4 கப்
*தேங்காய் சிறிய பற்களாக கீரியது அரை கப்
*வெல்லம் (பொடித்தது) 1 கப் 
*ஏலக்காய் தூள் 1 டீஸ்பூன்
*தண்ணீர் 2 கப்

செய்முறை:

1.  காராமணியை வேகவிட்டு வடிய வைக்கவும்.

2.  ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக்கொண்டு இரண்டு கப் தண்ணீர் விட்டு வெல்லத்தைப்போட்டு கொதிக்கவிடவும்.

3.  வெல்லம் நன்றாக கரைந்து தண்ணீர் "தள தள' என்று கொதிக்கும்போது காராமணி,தேங்காய் துண்டுகள்,ஏலப்பொடி சேர்க்கவும்.

4.  வறுத்துவைத்துள்ள மாவை ஒரு கையால் கொட்டிக்கொண்டே மறுகையால் கிளறவும்.
மாவு நன்றாக வெந்ததும் கையில் லேசாக எண்ணைய் தடவி அதில் இந்த மாவை உருட்டி வைத்து வடைபோல் தட்டி 

5.  இட்லி பாத்திரத்தில் வைத்து பத்து நிமிடம் கழித்து எடுக்கவும்.




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Thursday, 13 Mar 2014, 7:47 PM | Message # 12
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
உப்பு அடை

தேவையானவை:

*வறுத்த பச்சரிசி மாவு 1 கப்
*காராமணி 1/4 கப்
*தேங்காய் துண்டுகள் 1/2 கப்
*தண்ணீர் 2 கப்
*பொடியாக நறுக்கிய இஞ்சி 1 டேபிள்ஸ்பூன்
*பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் 1 டேபிள்ஸ்பூன்
*உப்பு,எண்ணைய் தேவையானது

தாளிக்க:

*கடுகு,உளுத்தம்பருப்பு,பெருங்காயம்,கறிவேப்பிலை

செய்முறை:

1.  காராமணியை வேகவிட்டு வடிய வைக்கவும்.

2.
 ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு அதில் சிறிதளவு எண்ணைய் விட்டு தாளிக்க
வேண்டியவைகளை தாளித்து இஞ்சி,பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

3.
 பின்னர் இரண்டு கப் தண்ணீரை உப்புடன் சேர்த்து கொதிக்கவிடவும்.தண்ணீர்
நன்கு கொதித்தவுடன் வெந்த காராமணி,தேங்காய் துண்டுகள் சேர்த்து வறுத்த மாவை
தூவிக்கொண்டே கிளறவும்.

4.  மாவு நன்றாக வெந்ததும் வடைபோல தட்டி இட்லி தட்டில் வைத்து பத்து நிமிடம் கழித்து எடுக்கவும்




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Thursday, 13 Mar 2014, 7:50 PM | Message # 13
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
இந்த வருடம் காரடையான் நோம்(ன்)பு மார்ச் மாதம் 14தேதி
[14/3/2014] வெள்ளிகிழமை அன்று வருகின்றது .

நோம்(ன்)பு சரடு கட்டிக்கொள்ள வேண்டிய சமயம் 8.15 PM-9.15 PM (IS TIME).

இந்த நோம்(ன்)பு மாசியும் -பங்குனியும் சேரும் நேரத்தில் கொண்டாடபடுகின்றது.







Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » ஆன்மீகம் / நல்வழி » ஆன்மிகம் » காரடையான் நோம்(ன்)பு (மாங்கல்ய பாக்கியம் தரும் காரடையான் நோன்பு!)
  • Page 2 of 2
  • «
  • 1
  • 2
Search: