காரடையான் நோம்(ன்)பு - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
  • Page 1 of 2
  • 1
  • 2
  • »
Forum moderator: Laya, Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » ஆன்மீகம் / நல்வழி » ஆன்மிகம் » காரடையான் நோம்(ன்)பு (மாங்கல்ய பாக்கியம் தரும் காரடையான் நோன்பு!)
காரடையான் நோம்(ன்)பு
PattuDate: Thursday, 13 Mar 2014, 7:25 PM | Message # 1
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
மாங்கல்ய பாக்கியம் தரும் காரடையான் நோன்பு!



சுமங்கலி பெண்கள், மாங்கல்ய பாக்கியத்திற்கும், கன்னியர்கள் சிறப்பான வாழ்க்கைத் துணை அமையவும், வரம்கோரி பங்குனியை புருஷனாகவும், மாசியை பெண்ணாகவும் கொண்டு, இரண்டும் கூடும்காலத்தில், மகாலட்சுமியை நோக்கி நோன்பு இருப்பது காரடையான் நோன்பு.

காரடையான் நோன்பின்போது மஞ்சள்சரடு வைத்து வழிபட்டு, சுப வேளையில் அதனை பெண்கள் கழுத்தில்அணிந்து கொள்ள வேண்டும்.

அத்துடன் கணவரிடம் ஆசி பெறுவதால் தங்கள் வாழ்வும் சிறக்கும். கணவரும் ஆரோக்கியமாக நீண்ட காலம் வாழ்ந்து வம்சம் தழைத்து வளரும் என்பது நம்பிக்கை.




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Thursday, 13 Mar 2014, 7:31 PM | Message # 2
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
காரடையான் நோம்புஸ்லோகத்தை பார்க்கும் முன் எதற்கு கொண்டாடுகின்றோம் என்பதை அறிவோமா

அஷ்வபதி
மன்னனின் மகள் சாவித்ரி. எதிரிகளிடம்
நாட்டை பறிகொடுத்த சால்வ நாட்டு மன்னனின்
மகன் சத்யவான். சொத்து, சுகங்களை இழந்ததால்
காட்டில் விறகு வெட்டி பிழைத்து
வந்தான்.
அவனை விரும்பி திருமணம் செய்துகொண்டாள் சாவித்ரி.

ஒருநாள் தன் தோழிகளுடன் வனத்திற்குச் சென்றாள்.
அழகான நீர்வீழ்ச்சியைக்கண்டு மனம் பரவசம் அடைந்தாள் கூடவே ஒரு சுந்தரமுகமும் தெரிய ஆவலுடன் அந்தத்திசையில் நோக்கினாள் ஒரு அழகான வாலிபன் அவள் மனதைக்கொள்ளைக்கொண்டான்.

அந்த நிமிடமே அவனே தன் புருஷன் என்று தீர்மானமும் கொண்டாள், மாளிகைக்குத்திரும்பி வந்து தன் தந்தையிடம் தன் விருப்பத்தைத்தெரிவித்தாள்.

 அரசர் தன் மகளை சத்யவானுக்குத் திருமணம் செய்துக்கொடுத்தார்.

இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியாகசென்று கொண்டிருந்த நேரத்தில் தன் கணவன் சத்யவானுக்கு
ஆயுள் குறைவு என்றும் அதிகபட்சம்
ஒரு வருடம்தான் உயிர் வாழ்வான் என்றும்
தேவரிஷி நாரதர் மூலம் அறிந்து
அதிர்ச்சியடைந்தாள் சாவித்ரி.

அரண்மனை வாசம் போய் காட்டின் அருகில் ஒரு சின்ன வீடு ,, மாளிகைவிட்டு வந்த சாவித்திரி அதிலும் இன்பத்தைக்கண்டாள் தன் புருஷனின் உயிரைக்காக்க பார்வதி செய்த விரத்ததை மேற்கொண்டாள்.

அங்குக்கிடைத்த நெல்லிருந்து அரிசியைப் பொடியாக்கி அதில் காராமணியும் சேர்த்து அடைப்போல் தட்டி வெண்ணெயுடன் நைவேத்தியம் செய்தாள் , பின் மஞ்சள் சரடை சுமங்கலியாக இருக்கப்பிரார்த்தித்து கட்டிக்கொண்டாள் .

கணவனின் ஆயுள் நீடிக்கவும்,தன் மாங்கல்யத்தை காத்துக் கொள்ளவும் காட்டில் விரதம் இருக்க ஆரம்பித்தாள்.
நாரதர் குறிப்பிட்ட நாளும் வந்தது. சாவித்ரியின்
மடியிலேயே விழுந்து உயிர் நீத்தான் சத்யவான்.
சத்யவானின் உயிரை பறித்துக்கொண்டு புறப்பட்டுக்
கொண்டிருந்தார் எமதர்மராஜன்.




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Thursday, 13 Mar 2014, 7:33 PM | Message # 3
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
மாசி முடிந்து பங்குனி மாதம் பிறக்கப்போகிற
நேரம். மங்களகரமான நாள். கணவனுக்கு நீண்ட
ஆயுள் வேண்டி நோன்பிருந்த அவள்
தன் விரதத்தை அன்றுதான் முடித்திருந்தாள். யார் கண்ணுக்கும் தென்படமாட்டார்
எமதர்மராஜன்.

ஆனால், சாவித்ரியின் பதிபக்தியும்,விரத மகிமையும் எமதர்மராஜனை அவளது கண்களுக்கு காட்டிக்
கொடுத்தது. சத்யவானின் உயிரை எடுத்துச் செல்லும்
எமனை பின்தொடர்ந்தாள். ‘பிறந்தவர் ஒருநாள் இறந்தே ஆக
வேண்டும். இது உலக நியதி.

அதை நான் மீற முடியாது.அதற்கு யாரும் விதிவிலக்கும் அல்ல’
என்று கூறிய எமதர்மன், தர்ம
சாஸ்திரங்களை பற்றி சாவித்ரியிடம் விளக்கினான்.
தன் பின்னால் வரவேண்டாம் என்றும் கூறினான். சாவித்ரி
எதையும் கேட்கவில்லை.

தொடர்ந்து எமனுடன் வாக்குவாதம் செய்தாள்.அவள் மீது எமனுக்கு இரக்கம்
பிறந்தது. ‘எடுத்த உயிரை திருப்பி
கொடுக்க வாய்ப்பில்லை. அதனால், அதை விட்டுவிடு.
ஏதாவது வரம் கேள் தருகிறேன்’
என்றான்.

சாவித்ரி சாதுர்யமாக ‘கற்புநெறி தவறாமல் வாழ்ந்து வரும்என் வம்சம் வாழையடி வாழையாக
தழைக்க அருள் புரியுங்கள் தர்ம
ராஜனே’ என்றாள். உயிரை எடுத்துக் கொண்டு
செல்லும் எமன் அவசரத்தில் சற்றும்
யோசிக்காமல், ‘கேட்டதை தந்தோம். உன்
வம்சம் வாழையடி வாழையாக தழைக்கும்’
என்று வரம் தந்தான்.

‘தர்மராஜனின்கருணைக்கு நன்றி. தங்கள் வாக்கு,
வரம் பலிக்க வேண்டும். என்
வம்சம் தழைக்க என் கணவனை
என்னுடன் அனுப்ப வேண்டும்’ என்று
வேண்டி நின்றாள் சாவித்ரி.




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Thursday, 13 Mar 2014, 7:34 PM | Message # 4
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
அவளது பதிபக்தியையும், சமயோசித புக்தியையும் எண்ணி
வியந்த எமதர்மராஜன், சத்யவானுக்கு மீண்டும் உயிர் தந்தான் எமதர்மன்.
அத்துடன் தீர்க்க சுமங்கலியாக இருக்க
வாழ்த்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றான்.

விரதத்தை முடித்திருந்த சாவித்ரி, காட்டிலேயே மண்ணை பிசைந்து அடைகளாகதட்டினாள். காமாட்சி அம்மனை நினைத்து படைத்து
அதையே உண்டு விரதத்தை முடித்தாள்
என்கிறது புராணம்.

சாவித்ரி மண்ணை பிசைந்து அடைதட்டி அம்மனுக்கு நைவேத்யம் செய்த அடிப்படையில்தான், மண்
சோறு சாப்பிட்டு நேர்த்திக் கடன் நிறைவேற்றும் வழக்கம்
வந்ததாக கூறப்படுகிறது.

சாவித்ரி விரதம் இருந்ததை நினைவுகூர்ந்து,முதல் போகத்தில் விளையும் நெல்லை குத்தி (கார்
அரிசி) அதில் அடை செய்து
அம்பாளுக்கு படைத்து வழிபடுகின்றனர்.

சிவனுக்காக
உப்பு அடை, பார்வதிக்காக வெல்ல
அடை நைவேத்யம் செய்து அதை பிரசாதமாக
சாப்பிட்டு ‘உருகாத வெண்ணையும் ஓரடையும்
நூற்றேன், மறுக்காமல் எனக்கு மாங்கல்ய பாக்யம்
தா’ என்று பிரார்த்தனை செய்து
கணவன் மற்றும் பெரியோர்களிடம் ஆசி
பெற்று நோன்பை முடிக்க வேண்டும்.

நம்பிக்கையுடனும், பக்தி சிரத்தையுடனும் இந்தநோன்பை கடைபிடித்தால் கணவன் - மனைவி இடையே
இருக்கும் பூசல்கள், கருத்து வேறுபாடுகள் நீங்கி
பாசமும், நேசமும், அன்யோன்யமும் அதிகரிக்கும்.
 
பிரிந்திருக்கும்
தம்பதியர் ஒன்று கூடுவார்கள். பெண்களின்
ஜாதகத்தில் இருக்கும் அஷ்டம ஸ்தான தோஷங்கள்,
மாங்கல்ய தோஷங்கள் நீங்கும்.

குழந்தை பாக்ய தடைநீங்கி வம்சம் விருத்தியாகும். இந்த
நோன்பில் கலந்து கொள்ளும் கன்னிப்பெண்களுக்கு
தோஷங்கள், தடைகள் நீங்கி அவர்களது
கல்யாண கனவுகள் நிறைவேறும் என்பது
ஐதீகம்.




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Thursday, 13 Mar 2014, 7:36 PM | Message # 5
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
பூஜை செய்யும் முறை:
 
பூஜை அறையை சுத்தம் செய்து
கோலமிட்டு ஸ்வாமி படங்களுக்கு பூ
சாற்றி, வெற்றிலைபாக்கு, மஞ்சள், வாழைப்பழம், தேங்காய்
வகையறாக்களை வழக்கம் போல் ஒரு
தட்டில் ( மரத்தட்டு இருந்தால் விசேஷம்) வைக்க வேண்டும்.

மஞ்சள்சரடு கட்டிக் கொள்வதற்கு முன்பு
அதில் ஒரு சிறிய பசு
மஞ்சளை துளையிட்டுக் கோர்த்துக் கட்டியோ அல்லது புஷ்பம்
கட்டியோ வைக்கவேண்டும்.
 
பலா இலை அல்லது வாழை
இலையில் பிரசாதம் வைக்க வேண்டும் “ நோன்பு
அடை” முக்கியம். “நோன்பு அடை” அல்லது
கொழுக்கட்டை வழக்கம் இல்லாத குடும்பத்தவர்கள்
வெற்றிலை பாக்குடன் கேசரி போன்ற ஏதேனும்
ஒரு இனிப்பை செய்தும், ஸ்வாமிக்கு
நிவேதனம்  செய்வதை
வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
 
ஒரு வெல்ல அடை, சிறிது
வெண்ணை இலையில் வைத்து, நோன்பு
சரடை அம்மனுக்கு சாற்றி, துளசிச் செடியில்
ஒன்று கட்டி, தங்கள் கழுத்திலும்
கட்டிக்கொள்வார்கள். “உருகாத வெண்ணையும், ஓரடையும்
நான் வைத்தேன் ஒரு நாளும் என்
கணவர் பிரியாத வரம் தருவாய்
” என்று அம்பாளை நினைத்து வேண்டிக்கொண்டு
அம்பாள் ஸ்லோகம் சொல்வார்கள்.
 
மொத்தத்தில்
பெண்டிர் அனைவரும் தம் தம் கணவருக்காக
சிரத்தையாக செய்யும் விரதமே – காரடையான் நோன்பு.

 



Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Thursday, 13 Mar 2014, 7:37 PM | Message # 6
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
விரதம் இருக்கும் பெண்கள் அதிகாலையில் எழுந்து நீராடி, பூஜையறையை சுத்தம் செய்ய வேண்டும்.இஷ்ட அம்பாள் படம் வைத்து, அவளை காமாட்சியாக அல்லது சாவித்திரியாகக் கருதி வழிபட வேண்டும்.

அம்மனுக்கு கார் அரிசியும் காராமணியும் கலந்து செய்த அடையும், உருகாத வெண்ணெயும் நிவேதனம் செய்வார்கள். நோன்புச் சரட்டில் மலரைக் கட்டி பூஜையில் வைத்து கழுத்தில் கட்டிக்கொள்வார்கள்.

மாசிக் கயிறு பாசி படியும் என்று, பங்குனி முதல் நாளில் புதிய மங்கலச் சரடை மாற்றிக் கொள்வது விசேஷமானதாகக் கருதப்படுகிறது



Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Thursday, 13 Mar 2014, 7:38 PM | Message # 7
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
நோன்பு
பற்றிய கதைகள் :

காமாக்ஷி
அம்மன், நதிக்கரையில் ஆற்று மணலில் சிவலிங்கம்
பிடித்துவைத்து பூஜை செய்கையில் வெள்ளம்
பெருக்கெடுத்து வந்தது.

மணலில் பிடித்தசிவலிங்கம் கரைந்து போகாமல் காக்கவே
“காரடையான் நோன்பு ” விரதம் இருந்ததாகவும், சிவபெருமான்
பிரத்யக்ஷமாகி காமாக்ஷியை மணந்து கொண்டதாகவும் கதை
சொல்லப்படுகிறது.
 
ராஜகுமாரி,
சாவித்திரி தன் மனதிற்கு இசைந்த
கணவன் சத்தியவானை மணந்து காட்டில் வாழ்ந்து
வந்தனர். கல்யாணம் முடிந்து ஒரு வருடத்தில் கணவனை,
இழக்க நேரிடும் என்று அறிந்திருந்தாள்.

அதேபோல்மரம் வெட்டச்சென்ற சத்தியவான் உயிர் இழக்க, பதிவிரதை
சாவித்திரி யமனை பின் தொடர்ந்துசென்று,
தங்களுக்கு நூறு குழந்தைகள் பிறக்க
வரம் கேட்டு, யமதர்ம ராஜனும்
வரம் கொடுக்க இறந்த கணவனுக்கு
உயிர் கொடுக்கச் செய்து, மீட்டு வந்ததாகக்
கதை சொல்லப்படுகிறது.




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Thursday, 13 Mar 2014, 7:40 PM | Message # 8
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
நோம்பு செய்யும் போது கீழ் வரும் ஸ்லோகத்தை சொல்லவும்

'உருக்காத வெண்ணையும் ஓரடையும் நான் நூற்றேன் .

அதாவது" உருகாத வெண்ணையுக் ஓரடையும் நான் வைக்க
என் கணவன் என்னைவிட்டு என்றும் பிரியாமல் இருக்கவேணும் "

( 'நூற்றேன்' என்பதற்கு 'தருவேன்' என்று சொல்வதும் உண்டு)

என்று சொல்லியபடியே சரடை அணிந்துக்கொள்வார்கள.



Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Thursday, 13 Mar 2014, 7:42 PM | Message # 9
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
உள்ளத்தில்பக்தியும்,புத்தியில்சிரத்தையும்கூடிசெய்யும்விரதம்.
அன்றுமட்டுமல்லாது,வாழ்க்கைமுழுவதும்
இந்தசுலபமானஸ்லோகத்தைசொல்லலாம்- ஆண்களும்தான்.

மங்களேமங்களாதாரேமாங்கல்யேமங்களப்ப்ரதே
மங்களார்த்தம்ம்ங்களேசிமாங்கல்யம்தேஹிமேஸதா!!




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Thursday, 13 Mar 2014, 7:45 PM | Message # 10
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
காரடையான் நோன்பு அன்று வெல்ல அடை,உப்பு அடை
என்று இருவகை அடைகள் செய்வது வழக்கம்.

முதலில் பச்சரிசி அரைகிலோவை அரைமணிநேரம்
ஊறவைத்து களைந்து வடித்து காயவைத்து நைசாக
அரைத்து சலித்துக்கொள்ளவும்.வாசனை
வரும்வரை வறுக்கவும்.




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » ஆன்மீகம் / நல்வழி » ஆன்மிகம் » காரடையான் நோம்(ன்)பு (மாங்கல்ய பாக்கியம் தரும் காரடையான் நோன்பு!)
  • Page 1 of 2
  • 1
  • 2
  • »
Search: