தை அமாவாசை - Page 2 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
  • Page 2 of 2
  • «
  • 1
  • 2
Forum moderator: Laya, Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » ஆன்மீகம் / நல்வழி » ஆன்மிகம் » தை அமாவாசை (செல்வ செழிப்பு தரும் தை அமாவாசை வழிபாடு)
தை அமாவாசை
PattuDate: Wednesday, 29 Jan 2014, 6:07 PM | Message # 11
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
அமாவாசை வழிபாடு........

வானவியல் கணிப்பின் படி சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் கூடுகின்ற போதுள்ள காலம் அமாவாசை ஆகும். சூரியனைப் பிபிதுர் காரகன்' என்கிறோம். சந்திரனை பிமாதுர் காரகன்' என்கிறோம். எனவே சூரியனும், சந்திரனும் எமது பிதா மாதாக்களாகிய வழிபாடு தெய்வங்களாகும்.  சூரிய பகவான் ஆண்மை, ஆற்றல், வீரம் என்பவற்றை எல்லாம் எமக்குத் தரவல்லவர், சந்திரன் எமது மனதுக்கு திருப்தியானவர்.

இதனால் மகிழ்ச்சி தெளிவான தெளிந்த அறிவு, இன்பம், உற்சாகம் என்பவற்றை எல்லாம் தரவல்லவர்.  இத்தகைய பெருமைகளை எல்லாம் தருகின்ற சூரிய சந்திரனை தந்தை, தாய் இழந்தவர்கள் அமாவாசை, பூரண தினங்களில் வழிபாடு செய்வர்.

தை அமாவாசை தினத்தில் அதிகாலை எழுந்து தீர்த்தம் ஆடி, பின்னர் சிவாலய தரிசனம், பிதுர் தர்ப்பணம், அன்னதானம் செய்தல் என்பன முக்கியத்துவம் பெறுகின்றன.  பிதுர் தேவர்களை சிரத்தையோடு வழிபாடு செய்து சிரார்த்தம் செய்வதால் பிதுர்களின் தோஷங்களில் இருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கை.




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Wednesday, 29 Jan 2014, 6:08 PM | Message # 12
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
முன்னோரின் ஆசி..........

திருதயுகம், திரோதாயுங்களில் வருஷ திதி நாளில் முன்னோர்கள் நேரில் வந்து நாம் கொடுக்கும் உணவையும், வழிபாட்டையும் ஏற்றுக் கொண்டனர். யுகங்களில் பூவுலகில் தர்மம் தழைத்திருந்ததால் இந்நிலை இருந்தது. ராமன் அயோத்தி திரும்பி பட்டம் கட்டிய நாளில் தசரதர் நேரில் தோன்றி தன் பிள்ளையை ஆசியளித்து மகிழ்ந்ததாக ராமாயணம் கூறுகிறது.  

துவாபரயுகம் மற்றும் கலியுகத்தில் பிதுர்கள் நம் கண்ணுக்குத் தெரியாமல் போய் விட்டனர். ஆனால் சூட்சும வடிவில் அவர்கள் நம்மை நேரில் பார்ப்பதாகவும், ஆசியளிப்பதாகவும் சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன. ஒருவரின் வயிற்றில் பிறந்தால் மட்டும் பிள்ளையாகி விட முடியாது. பிள்ளைக்குரிய முழு தகுதியை ஒருவன் பெற வேண்டுமானால், வாழும் காலத்தில் பெற்றோரைக் கவனிப்பதோடு, இறப்புக்கு பிறகும் பிதுர் கடனை முறையாகச் செய்ய வேண்டும்.

சிரத்தையுடன் அதாவது அக்கறையுடன் செய்வதற்கு சிரார்த்தம் என்று பெயர்.  இறந்த பின்னும் நம் வாழ்வு தொடர்கிறது என்ற உண்மையை நமக்கு இக் கடமை நினைவூட்டுகிறது. இறந்த முன்னோர்களின் நற்கதிக்காகவும், அவர்களின் பூரண ஆசி வேண்டியும், சந்ததியினர் இக்கடமையைச் செய்கின்றனர். இச்சடங்கினைத் தீர்த்தக் கரையில் செய்வது வழக்கம்.

இயலாதவர்கள் வீட்டிலேயே செய்து முடிப்பர்.  சிரார்த்தம் கொடுக்கும் போது சொல்லும் மந்திரத்தின் பொருளைத் தெரிந்து கொண்டு சொல்லும் போது தானே நிச்சயம் பலன் கிடைக்கும். மனிதவாழ்வு இறப்புக்கு பின்னும் தொடர்கிறது என்ற உண்மையை உணர்ந்து செய்யும் போது இச்சடங்கு பொருளுடையதாகும். முன்னோரை வழிபடும் நாட்களில் தை அமாவாசை முக்கியமானது.



Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Wednesday, 29 Jan 2014, 6:10 PM | Message # 13
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
புண்ணிய நதியில் நீராடல்......

முன்னோர்களுக்கு நாம் செய்யும் திதி பலன்களை நம்மிடம் இருந்து பெற்று பிதுர் தேவதைகளிடம் வழங்குபவர் சூரியன். அந்த தேவதைகளே மறைந்த நம் முன்னோரிடம் பலன்களைச் சேர்க்கின்றன.  அதனாலேயே சூரியனைப் பிதுர்காரகன் என்கிறோம்.

அமாவாசை நாட்களில் தீர்த்தங்கரைகளில் நீராடும் போது, பிதுர்காரகராகிய சூரியனுக்கு அர்க்கியம் செய்வது (இரு கைகளாலும் நீர் விடுவது) மிகுந்த நன்மை தரும். சமுத்திரத்தில் அல்லது புண்ணிய நதிகளில் நீராடியவுடன் முழங்கால் அளவு நீரில் நின்று கொண்டு, சூரியனை நோக்கி மூன்று முறை அர்க்கியம் செய்வதன் மூலம் இவர் அருளைப் பூரணமாக பெறமுடியும்.

அமாவாசை அன்று தர்பணம், தானம், தர்மம் செய்வதால் மிகவும் புண்ணியம் கிட்டும்.

தர்பணம்:

ஒவ்வொரு அமாவாசை அன்றும் தர்பணம் செய்வதே சிறந்தது. அருகில் உள்ள சிவன், பெருமாள் கோவில் குளக்கரையில் தர்பணம் செய்வதே நன்று. நீர் ஓடும் ஆறு, நதி, கடற்கரை ஆகிய இடங்களிலும் செய்வது சிறப்பானதாகும்.

வெளிநாட்டில் வசிப்பவர்கள் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று "ஆத்ம சாந்தி" வழிபாடு செய்யலாம்.

தானம் தர்மம்:

அன்று காலையில் அருகில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களுக்கு சென்று அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றை தானம் செய்வது மிகவும் பலன் தரும்.

கோபூஜை:

அன்று காபி அல்லது சிற்றுண்டிக்கு உட்கொள்ளும் முன்னர் பசுவிற்கு கோதுமை தவிடு அல்லது அரிசி தவிடு, வெல்லம், வாழைப்பழம் கலந்து தானம் செய்வதால் மூதாதையர் ஆசி் கிடைக்கும்.

காகம் அன்னம்:

அன்று மதியம் வாக்கில் காகத்திற்கு அன்னம் வைத்தல் மிகவும் புண்ணியத்தை தரும்




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
RAWALIKADate: Wednesday, 29 Jan 2014, 8:02 PM | Message # 14
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
Quote Pattu ()
நாளை Jan 30-ந்தேதி 2014 (வியாழக்கிழமை) தை அமாவாசை தினமாகும்.

பட்டு நல்லவேளை ஞாபகப்படுத்தினீங்க..

நீங்கதான் இப்போசதைக்கு பஞ்சாங்கம் மாதிரி ... எந்த ஒன்னையும் சரியான நேரத்துக்கு தெரிஞ்சிக்க முடியுது.


Message edited by RAWALIKA - Wednesday, 29 Jan 2014, 8:03 PM
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » ஆன்மீகம் / நல்வழி » ஆன்மிகம் » தை அமாவாசை (செல்வ செழிப்பு தரும் தை அமாவாசை வழிபாடு)
  • Page 2 of 2
  • «
  • 1
  • 2
Search: