தை அமாவாசை - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
  • Page 1 of 2
  • 1
  • 2
  • »
Forum moderator: Laya, Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » ஆன்மீகம் / நல்வழி » ஆன்மிகம் » தை அமாவாசை (செல்வ செழிப்பு தரும் தை அமாவாசை வழிபாடு)
தை அமாவாசை
PattuDate: Wednesday, 29 Jan 2014, 5:35 PM | Message # 1
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
நாளை Jan 30-ந்தேதி 2014 (வியாழக்கிழமை) தை அமாவாசை தினமாகும். அன்று பித்ருக்களை நினைத்து ஒவ்வொருவரும் வழிபாடு செய்ய வேண்டும். அமாவாசையன்று உலகை இயக்கும் சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்வதால் ஒரு காந்த சக்தி ஏற்படுகிறது.

சோதிட ரீதியாக அமாவாசை நிறைந்த நாள் எனக் கூறுகின்றனர். அனேகர் அமாவாசையில் மோதிரம் செய்து போடுகின்றனர். சூரிய கலையும், சந்திர கலையும் சேருவதால் சுழுமுனை என்னும் நெற்றிக்கண் பலப்படுகிறது. அதனால் அமாவாசையில் சாஸ்திரிகள் மந்திர ஜெபம் ஆரம்பிக்கின்றனர். கடலில் நீராடி தங்களுக்கு ஏற்பட்ட தோஷத்தைப் போக்குகின்றனர்.

அமாவாசையன்று ஜீவ சமாதிகள் புதிய உத்வேகத்தைப் பெறுகின்றன. அனேக குரு பூஜைகள் அதிஷ்டான பூஜைகள் அமாவாசையன்று நடத்துகின்றனர். முன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் சிறந்த நாள் அமாவாசை!

 சாதாரணமாக இறந்த ஆவிகள் சந்திரனின் ஒளிக்கற்றையில் உள்ள அமிர்தத்தை சாப்பிடும் அதுதான் அதற்கு உணவு. அமாவாசையன்று சந்திரனின் ஒளிக்கற்றை ஆவிகளுக்குக் கிடைக்காது. அதனால் ஆவிகள் உணவுக்குத் திண்டாடும். பசி தாங்க முடியாமல் ரத்த சம்பந்தமுடைய வீடுகளுக்கு வரும்.

நம்மை யாராவது எண்ணுகிறார்களா? நமக்குத் தர்ப்பணம், படையல் செய்கிறார்களா என்று பார்க்கும். எனவே அமாவாசை அன்று கண்டிப்பாக நாம் நம் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். வீடு வாசல் இல்லாத ஏழைகளுக்கு அமாவாசையன்று அன்னதானம் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு அமாவாசையன்றும் தங்களால் இயன்ற அளவு உணவை அன்ன தானம் செய்யலாம். அமாவாசை பிதுர் தர்ப்பணம் மற்றும் அன்னதானம் ஆகியவற்றைக் குல தெய்வம் இருக்கும் இடத்தில் செய்வது நல்லது. முடியாதவர்கள் தங்கள் இஷ்ட தெய்வம் இருக்கும் இடத்தில் செய்யலாம். வீட்டிலும் செய்யலாம்.

அமாவாசையன்று தலையில் எண்ணெய் தடவக் கூடாது. புண்ணியத் தலங்களில் கடலில் நீராடலாம். அல்லது நதியில் நீராடலாம். அமாவாசையன்று காலை சூரிய உதயத்தின் போது கடலில் எடுக்கப்பட்ட நீரை வீட்டுக்குக் கொண்டுவந்து தீர்த்தமாகத் தெளிக்கலாம். அதனால் வீட்டிலுள்ள தோஷங்கள் நீங்கும்.

உற்றார், உறவினர் தொடர்பு இல்லாத ஆவிகள் மரம், செடி கொடிகளில் அமாவாசையன்று மட்டும் தங்கி, அவற்றின் சாரத்தைச் சாப்பிடும். அதனால் அமாவாசையன்று மட்டும் மரம், செடி, கொடி களையோ காய்கறிகளையோ புல் பூண்டுகளையோ தொடக் கூடாது. பறிக்கக் கூடாது.

ஒவ்வொரு மாதம் அமாவாசை அன்னதானம் செய்ய முடியாதவர்கள் தை, ஆடி, புரட்டாசி அமாவாசையில் அன்னதானம் செய்ய வேண்டும். தானங்கள் தருவது அவரவர் வசதியைப் பொறுத்தது. அன்னதானம் கஞ்சியாகவோ, சாதமாகவோ, இட்லியாகவோ இருக்கலாம். ஆனால் எள்ளு சட்னி அல்லது எள் உருண்டை கண்டிப்பாக இருக்க வேண்டும்.

எதுவும் செய்ய முடியாமல் இருப்பவர்கள் ஒரு பசு மாட்டிற்கு ஒன்பது வாழைப்பழங்கள் அமாவாசை அன்று கொடுக்க வேண்டும். இதற்குச் சாதி, மதம், இனம் என்ற வேறுபாடு இல்லை. முன்னோர்கள் ஆத்மா சாந்தியடைய ஒவ்வொரு மனிதப் பிறவியும் இதைச் செய்ய வேண்டும்.




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Wednesday, 29 Jan 2014, 5:37 PM | Message # 2
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
தை அமாவாசை வழிபாடு! முன்னோர் வழிபாடு !

இறந்த நம் முன்னோர்களுக்குச் சிரத்தையுடன் செய்யும் காரியமே சிராத்தம். சாதத்தைப் பிடித்து ஆறு பிண்டங்கள் வைத்து, எள், ஜலம், தர்ப்பை கொண்டு அவர்களை ஆராதிக்க வேண்டும். தந்தை, தாத்தா, முப்பாட்டன்கள், தாய், பாட்டி, கொள்ளுப் பாட்டி ஆகிய கோத்திர தாயாதிகளுக்கு ஒவ்வொருவரும் செய்யவேண்டிய மிக முக்கிய கடமையாகும் இது.

இந்த ஆறு பிண்டங்களையும் ஒன்றாக இணைத்து காகத்துக்கு வைக்கும்போது, அது உண்ணுவதன் மூலம் நம் முன்னோர்களுக்கு அந்த ஆகாரம் செல்வதாக ஐதீகம்! சிராத்தம், தர்ப்பணம் செய்கிற நாட்களில், வீட்டு வாசலில் கோலம் இடக் கூடாது.

பூஜையறையில் தீபம் ஏற்றக்கூடாது. அதேபோல், சிராத்தம் அல்லது தர்ப்பணம் செய்யும் முன்பு ஆண்களும் சரி, பெண்களும் சரி, நெற்றிக்கு இட்டுக்கொள்ளக் கூடாது. இவை, இறைவனை வழிபட நாம் செய்யும் காரியங்கள்.

பித்ருக்கள் வரும் நேரத்தில், இறை தொடர்புடைய இந்தக் காரியங்களைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும். காரணம், தெய்வத்தை வழிபடும் வேளையில், பித்ருக்கள் வரப் பயப்படுவார்கள் என்கிறது சாஸ்திரம்.




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Wednesday, 29 Jan 2014, 5:39 PM | Message # 3
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
முன்னோர்கள் வழிபாடு செய்யும் முறை

எத்தனை பேருக்கு தமது தாய் தந்தையர் இறந்த தேதி, நேரம் தெரியும். தெரியவில்லை யென்றால் முதலில் தெரிந்து கொள்ளுங்கள். அதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அவர்கள் இறந்த தேதிக் குண்டான திதியை தெரிந்து கொள்ளுங்கள்.

மறைந்த முன்னோர்களின் இறந்த திதி வருடா வருடம் வரும், அன்று கட்டாயம் தர்ப்பணம் செய்ய வேண்டும். தர்ப்பணத்திற்கு கட்டாயம் கறுப்பு எள்தான் பயன்படுத்த வேண்டும். கட்டாயம் கீழ்க்கண்ட பெயர்களை சொல்லி செய்ய வேண்டும்.

தாய் வழி தந்தை வழி
உங்கள் தாயாரின் தகப்பனார் தாயார் உங்கள் தகப்பனாரின் தகப்பனார் தாயார் உங்கள் தாயாரின் தாத்தா பாட்டி    

உங்கள் தகப்பனாரின் தாத்தா பாட்டி உங்கள் தாயாருடைய தகப்பனாரின் தாத்தா பாட்டி    

உங்கள் தகப்பானாருடைய தகப்பனாரின் தாத்தா பாட்டி

மேற்கண்டவர்களுக்கு கட்டாயம் தர்ப்பணம் செய்தல் வேண்டும். மேலும் உங்கள் ரத்த சம்பந்தப்பட்ட உறவுகள் இறந்திருந்தால் கட்டாயம் சேர்த்துக் கொள்ளலாம். உங்கள் தகப்பனாருடன் பிறந்தவர்கள் இறந்திருந்து அவர்களுக்கு குழந்தைகள் இல்லாமல் இருந்தால் கட்டாயம் சேர்த்துக் கொள்ளலாம்.

தர்ப்பணத்தை எங்கு வேண்மானாலும் செய்யலாம். ஆற்றில், கடலில், அருவியில், கிணற்றடியில், நமது பூஜையறையில், ஹாலில் எங்கு வேண்டுமானாலும் செய்யலாம். மனம் சுத்தமாக இருக்க வேண்டும் அவ்வளவுதான். தர்ப்பணம் செய்வது பற்றி தங்களுக்கு முறைகள் தெரிந்திருந்தால் தாங்களே செய்து கொள்ளலாம்.

எனினும் கோவிலுக்கு காணிக்கை செலுத்துவது நல்லது. முதலில் தர்ப்பணம் செய்யும் நாள் அன்று காலை சாப்பிடக் கூடாது. மதியம் சாப்பிடலாம். கத்திரிக்காய், வாழைக்காய் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும். வெங்காயம், பூண்டு, மாமிசம் உண்ணுதல் கூடாது.

மிளகு சேர்ப்பதும் நன்மையைத் தரும். பச்சரிசி உண்ண வேண்டும். இரவு சாதம் சாப்பிடுதல் கூடாது. இட்லி, தோசை, சப்பாத்தி சாப்பிடலாம். முதலில் யாருக்கு திதியோ அவருக்கு தர்ப்பணம் செய்தல் வேண்டும்.

உதாரணமாக திதி உங்கள் தந்தையாருக்கு என்றால் முதலில் உங்கள் தந்தைக்கு தர்ப்பணம் செய்தல் வேண்டும். பின் தந்தை வழியில் உள்ளவர்களுக்கு. பின் தாய் வழியில் உள்ளவர்களுக்கு, செய்தல் வேண்டும்.




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Wednesday, 29 Jan 2014, 5:42 PM | Message # 4
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
பிதுர் தர்ப்பணத்தின் முக்கியத்துவம்

தை அமாவாசையன்று, 'பித்ரு' எனப்படும் முன்னோருக்கு தர்ப்பணம், சிரார்த்தம் முதலானவை செய்யப்பட வேண்டும். அன்று தீர்த்தங்களில் எள்ளை விடுகின்றனர். வாழைக்காய் உள்ளிட்ட சில காய்கறி வகைகளைப் படைகின்றனர். விளக்கு முன் பெற்றவர்களின் படங்களை வைத்து உணவு படைத்து பூஜை செய்கின்றனர்.

காகங்களுக்கும், ஏழைகளுக்கும் உணவளிக்கின்றனர். நம் முன்னோர் தங்கியிருக்கும் இடம், 'பிதுர் லோகம்` எனப்படும். அங்கே, பிதுர் தேவதைகள் இருக்கின்றனர். நம் உறவினர் ஒருவர் இப்போது பசுவாகப் பிறந்திருந்தால் நாம் அனுப்பும் பொருள் வைக்கோலாகவும், குதிரையாக பிறந்திருந்தால் கொள்ளாகவும்,

யானையாக பிறந்திருந்தால் கரும்பு, தென்னை ஓலை என ஏதோ ஒரு வடிவமைப்புக்கு மாற்றப்பட்டு, நாம் தர்ப்பணம் செய்யும் பொருள் போய் சேர்ந்து விடும். இதை சேர்க்கும் வேலையை, 'பிதுர் தேவதைகள்' செய்கின்றனர். இதற்காகவே, இவர்களை கடவுள் நியமித்திருக்கிறார்.

இறப்புக்கு முன் நம் பெற்றோருக்கு எத்தனையோ சேவை செய்கிறோம். அது இறப்புக்கு பின்னும் தொடர வேண்டும். கிராமங்களில் இன்றும் ஒரு வழக்கம் உண்டு. யாராவது தன் சகோதரிகளைக் கன்னிப் பருவத்தில் இழந்து விட்டால், அவர்களுக்கு புடவை, தாவணி, பாவாடை படைத்து வழிபடும் வழக்கம் இருக்கிறது.

இந்த புடவையை ஒரு பெட்டியில் வைத்து, ஒரு வருடம் வரை வீட்டில் ஒரு மூலையில் தொங்க விடுவர். அந்தப் பெண் இந்த புடவையை பயன்படுத்திக் கொள்வாள் என நம்புகின்றனர். பிதுர் தர்ப்பணம் செய்யாவிட்டால் பிதுர்களால் நமக்கு கிடைக்கும் ஆசி கிடைக்காமல் போய்விடும்.




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Wednesday, 29 Jan 2014, 5:44 PM | Message # 5
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
தர்ப்பணம் செய்வது எப்படி?

மறைந்த முன்னோர்களுக்கு வருஷ திதி, தர்ப்பணங்கள் ஆகியவற்றை எவ்வாறு முறைப்படி செய்ய வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் அறிய வேண்டும். தர்ப்பை புல்லை வைத்து, அதில் பித்ருக்களை ஆவாஹனம் செய்து எள்ளும் நீரும் தருவதை தர்ப்பணம் என்பார்கள்.

இறந்தவர் தினம் தெரியவில்லை என்றால், மிருகசீரிடம் மற்றும் மக நட்சத்திரத்தில் தர்ப்பணம் செய்யலாம். எத்தனை பூஜைகள் செய்தாலும், பித்ருக்களுக்கு செய்யவேண்டிய கடமைகளைச் செய்யாவிடில் அது பலனை தராது.

காரை இலை, உளுந்து, முப்பழம், காய், கிழங்கு, செந்நெல், வெல்லம், கோதுமை, நவதானியம், எள், பசும்பால், பாகற்காய், பலாக்காய், மாங்காய், மாதுளம் பழம், கறிவேப்பிலை, எலுமிச்சை, வாழைக்காய், இலந்தை, நெல்லி, திராட்சை, மிளகு, தேன், நெய்,

கண்டங்கத்திரி, கருணைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, சேனைக்கிழங்கு, சீரகம், ஏலம், அவரை, பிரண்டை, தூதுவளை, இஞ்சி, வாழைத்தண்டு, பசுந்தயிர், வள்ளிக்கிழங்கு போன்றவை சிராத்தப் பண்டங்களாகும்.




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Wednesday, 29 Jan 2014, 5:57 PM | Message # 6
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
காசி - கங்கை, இராமேஸ்வரம், வேதாரண்யம் , கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமம், பாபநாசம் - தாமிரபரணி அகத்திய அருவி தீர்த்தம்,  திருவையாறு , திருவரங்கம் - என வசதியிருந்தால் அத்தலங்களுக்குச் சென்று அங்கே பிதுர்க்கடன்களை நிறைவேற்றலாம். இல்லாவிட்டால், அருகிலுள்ள ஆறு, குளம் முதலிய நீர்நிலைகளில் செய்தாலே நலங்கள் நம்மைத் தேடி வரும்.

சில குடும்பத்தில் - மகப்பேறு இன்மை, தீராத  நோய்,   பொருளாதாரச் சரிவு  கடுமையான பிரச்னைகள் என - நிம்மதி இருக்காது. அதற்கு முற்பிறவியின் வினை, முன்னோர் சாபம் - இவைதான் காரணம். இவர்கள் ஒருமுறையாவது வேதாரண்யம் அல்லது இராமேஸ்வரம் சென்று, தர்ப்பணம் செய்து சிவபெருமானை வணங்கி வந்தால், சாபம் தீரும். பாவம் நீங்கி சுபிட்சம் பெறுவர் என்பது ஐதீகம்.

தட்சிணாயணம் - தேவர்களுக்கு இரவுப் பொழுது. அந்த நேரத்தில் தம் சந்ததிகளைக் காக்க பிதுர்லோகத்தில் இருந்து வரும் முன்னோர்களை வரவேற்று ஆடி அமாவாசையில் தர்ப்பணம் தரப்படுகின்றது.

புரட்டாசி மாதத்தில் மகாளய பட்ச அமாவாசையில் முன்னோர்களுக்கு சிறப்பான தர்ப்பணமும் அன்னதானமும் தரப்படுகின்றது.

உத்தராயணம் - தேவர்களுக்கு பகற்பொழுது.  பிதுர்லோகத்திற்குத் திரும்பும் முன்னோர்களை வழியனுப்பும் விதமாக, தை அமாவாசையில் தர்ப்பணம் தரப்படுகின்றது.

விண்ணுலகு எய்திய முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் நாளில் -  வடை, பாயசத்துடன் அறுசுவையாக சமைத்துப் படைத்தால் தான், அவர்களின் ஆசி நமக்குக் கிடைக்கும் என்பதில்லை.

நீர்நிலைகளில் நீராடி முன்னோர்களை நினைத்து எள்ளும், நீரும் அர்க்யம் கொடுத்து வழிபட்டு வணங்கினாலே அவர்களின் ஆசி நமக்குக் கிடைக்கும்.

(அர்க்யம் - தண்ணீருள் மூழ்கி எழுந்து இரு கைகளாலும் நீரை அள்ளி சூரியனை நோக்கி வணங்கி நீரை மீண்டும் நீரில் விடுதல்.)

என்னதான் வரைந்து  வரைந்து எழுதி - வார்த்தைகளை வார்த்தெடுத்தாலும் ,

நாம் - நமது பெற்றோர் அல்லது தாத்தா பாட்டி ஆகியோர் நம்முடன் வாழுங் காலத்தில் -

அவர்களை அன்புடன் அரவணைத்து ஆதரித்து நாளும் நல்லவிதமாகப் பேசி மகிழ்வித்தாலே போதும். அவர்கள் மனங்குளிர்ந்து விரல்களால் வருடி - விழிகளால் நோக்கினாலே போதும்.

பாவங்களும் பழிகளும் நம்மை விட்டு நீங்கினாற்போல ஆகும். ஆனால் -

அந்த பெரும் பாக்கியம் எல்லோருக்கும் எளிதில் கிடைத்து விடுவதில்லை.




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Wednesday, 29 Jan 2014, 6:02 PM | Message # 7
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
தைஅமாவாசை மிகவும் புனிதமான தினமாகும். தை மாதத்தில் வருகின்ற அமாவாசை தை அமாவாசை விரதம் எனச் சிறப்புப் பெறுகின்றது. தமிழ் மாதங்களில் எல்லா மாத அமாவாசை நாட்களுமே சிறப்பானவை என்பதால் தாய், தந்தையரை இழந்தோர் தங்களின் பெற்றோர் மற்றும் மூதாதையரை நினைத்து அமாவாசை நாட்களில் விரதம் கடைப்பிடிப்பர்.

ஆனால் குறிப்பிட்ட சில மாதங்களில் வரும் அமாவாசை நாட்கள் சிறப்பு வாய்ந்தன. அவற்றில் முக்கிய இடம் வகிப்பது ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை ஆகும். தை அமாவாசையான நாளை ஆறு, கடல் போன்ற புனித நீர்நிலைகளில் குளித்து மூதாதையர்களுக்கு படையல் செய்து சிறப்பு பூஜை செய்வர். கடல் கூடும் கன்னியாகுமரி, ராமேசுவரம் மற்றும் காவிரியின் முக்கூடல் தலமான பவானி இங்கெல்லாம் மக்கள் கூட்டம் கூடுதலாக இருக்கும்.

ராமேசுவரத்தில் புகழ் பெற்ற ராமநாதசுவாமி, அம்பாளுடன் தை அமாவாசை தினத்தன்று அங்குள்ள அக்னி தீர்த்தத்திற்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு புனித நீராடல் நடைபெறும். கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுகின்றன. தை அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடுவர். ராமேசுவரம் கடற்கரையில் தங்களின் மூதாதையருக்கு தர்ப்பணம் செய்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.  

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஆண்டு தோறும் தை அமாவாசை தினத்தன்று லட்ச தீபம் ஏற்றப்படுகிறது. அன்றைய தினம் ஸ்ரீநெல்லையப்பர் காந்திமதியம்மன் கோவிலில் காணும் இடமெல்லாம் தீபங்களாக பிரகாச ஜோதியாகவே காணப்படும்.




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Wednesday, 29 Jan 2014, 6:03 PM | Message # 8
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
திருமண தடை நீங்கும்........

பிதுர்களுக்கு திதி கொடுப்பதை ஏதோ செய்யக் கூடாத செயலாகப் பலரும் கருதுகிறார்கள். திதியன்றும், அமாவாசை நாளிலும் வாசலில் கோலமிடுவது கூடாது என்பதால் அசுபமான நாளாக சிலர் எண்ணுகின்றனர். முன்னோர் வழிபாட்டில் முழுமையாக ஈடுபட வேண்டும் என்ற நோக்கத்திலேயே பிதுர்க்கடன் நாளன்று கோலமிடுவது போன்ற செயல்களைத் தவிர்க்க சொல்லியுள்ளனர்.  

முன்னோரது ஆசி பெற அமாவாசை, வருஷதிதி, மகாளயபட்ச நாட்கள் உகந்தவை. இவை புண்ணிய நாட்களாகும். கேளிக்கை, சுபநிகழ்ச்சிகளை இந்தநாட்களில் தவிர்க்க வேண்டும் என்பது விதி. இதன் காரணமாக இந்த நாளை ஆகாத நாளாக எடுத்துக் கொள்ளக் கூடாது. தை அமாவாசை நாளில் நம் முன்னோருக்கு உணவு, புத்தாடை படைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

அந்த ஆடை, உணவை ஏழைகளுக்கு தானமாக கொடுப்பதன் மூலம் அளவற்ற நன்மைகள் நம் வாழ்வில் உண்டாவதை நாம் உணர முடியும். தடைபட்ட திருமணம், நீண்ட நாள்பட்ட நோய் நொடிகள், மன வருத்தம் ஆகியவை விலகி சந்தோஷமும் மனநிறைவும் நம் இல்லத்திலும், உள்ளத்திலும் ஊற்றெடுக்கும்.




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Wednesday, 29 Jan 2014, 6:05 PM | Message # 9
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
காகத்திற்கு உணவிடுங்கள்.......

காகம் சனீஸ்வரருக்குரிய வாகனம் என்று தெரியும். ஆனால், பிதுர் எனப்படும் முன்னோர் வழிபாட்டிலும் காகத்திற்கு முக்கியத்துவம் உண்டு. காகம் எமலோகத்தின் வாசலில் இருக்கும் என்றும், எமனின் தூதுவன் என்றும் சொல்வதுண்டு. காகத்திற்கு சாதம் வைத்தால் எமலோகத்தில் வாழும் நம் முன்னோர் அமைதி பெற்று நமக்கு ஆசியளிப்பார் என்பது நம்பிக்கை.

காகம் நாம் வைத்த உணவைத் தீண்டாவிட்டால் இறந்து போன நம் முன்னோருக்கு ஏதோ குறை இருப்பதாக கருதுவதும் மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.  பிதுர் தர்ப்பணத்திற்குரிய கயாவில் உள்ள பாறைக்கு காக சிலை என்று பெயர்.

அந்த பாறையில் தான் பிண்டம் வைத்து வணங்குவர். தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று பிற காக்கைகளையும் கரைந்து அழைத்த பின்னரே, காகம் உணவு உண்ணும். அப்படிப்பட்ட உயர்ந்த ஜீவனான காகத்திற்கு உணவிடுவதன் மூலம் பிதுர்களின் ஆசியைப் பெற முடியும்.




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Wednesday, 29 Jan 2014, 6:06 PM | Message # 10
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
கொடிய பாவங்கள் நீங்கும்........

மனிதப் பிறவி மகத்தான பிறவி. மனிதனாக பிறந்தால் தான் இறைவனை எளிதில் அடைய  முடியும்.வேறு எந்தப் பிறவிக்கும் இந்த சிறப்பு கிடையாது. வானுலகில் தேவராக இருந்தாலும் கூட இறைவனைத் தரிசிக்கத்தான் முடியுமே ஒழிய அவரோடு இரண்டறக் கலக்க முடியாது .  ஆக இத்தகைய அரிய மானிடப்பிறவியைத் தந்த நம் முன்னோருக்கு  நன்றி தெரிவிக்க வாரிசுகள் நடத்தும்  ஒரு விழாவாக அமாவாசையை எடுத்துக் கொள்ளலாம்.

சூரியனின் வடக்கு திசை பயணம் துவங்கும் உத்ராயண காலத்தின் துவக்கமான தை மாதம் மிகவும் புனிதமானது.  அந்த மாதத்தில் வரும் அமாவாசையில் கடற்கரை தலங்களுக்குச் சென்று முன்னோருக்குச் தர்ப்பணம் செய்து வரலாம். சம்பந்தரும், நாவுக்கரசரும் வழிபட்ட வேதாரண்யம் மிகவும் புனிதமானது. இக்கோவிலுக்குள் உள்ள மணிகாணிகை தீர்த்தத்தில் நீராடினால், கங்கை, யமுனை, நர்மதை, சிந்து, காவிரி போன்ற புண்ணிய நதிகளில் நீராடியதற்கு சமம்.

இதில் நீராடியவர்கள், தங்கள் பாவங்களைக் கழுவிக் கொள்வதுடன், தங்கள் முன்னோர் செய்த பாவங்களுக்கும் சேர்த்து, நிவர்த்தி பெற்று வரலாம். பிரம்மஹத்தி (கொலை செய்த பாவம்) போன்ற கொடிய பாவங்களும் கூட நீங்கும் என்பது ஐதீகம். பல ஆண்டுகளாக யோகம், தானம், தவம் செய்த பலன்களையும் அடையலாம்.  

இந்தக் கோவில் எதிரே உள்ள கடல், ஆதி சேது என்று அழைக்கப்படுகிறது. அதாவது, ராமேஸ்வரத்துக்கு சமமானது இந்த கடல் தீர்த்தம். இதில் ஒரு முறை நீராடுவது ராமேசுவரத்தில் நூறு தடவை நீராடுவதற்கு சமம் என்பவர். தை அமாவாசை, மாசி மாத, மகாளய அமாவாசைகளில் இங்கு நீராடுவர். இவ்வூர் அருகில் உள்ள கோடியக்கரை கடல் தீர்த்தமும் மிகவும் புனிதமானது.




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » ஆன்மீகம் / நல்வழி » ஆன்மிகம் » தை அமாவாசை (செல்வ செழிப்பு தரும் தை அமாவாசை வழிபாடு)
  • Page 1 of 2
  • 1
  • 2
  • »
Search: