சௌந்தர்ய லஹரி
|
|
Pattu | Date: Thursday, 06 Mar 2014, 5:37 PM | Message # 31 |
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
| 30. அஷ்ட சித்தி பெற
ஸ்வதேஹோத்பூதாபிர்-க்ருணிபி-ரணிமாத்யாபி-ரபிதோ நிஷேவ்யே நித்யே த்வா-மஹமிதி ஸதா பாவயதி ய: கிமாஸ்சர்யம் தஸ்ய த்ரிநயந-ஸம்ருத்திம் த்ருணயதோ மஹாஸம்வர்த்தாக்நிர்-விரசயதி நீராஜந-விதிம்
தேவியின் மேனியை தன் மேனியாக சிந்தித்தல் (தமிழ்)
அம்மே நின் மெய்ப் பிரிவாம் அணிமாதி தொழும் அழியா இம்மேனி தம்மேனி எனத் தெளிந்து பாவிப்பார் செம்மேனி அரன் வாழ்வுஞ் சிதைவது எனப் புறக்கணித்து வெம்மேனி ஊழி அனல் தீபமிட விளங்குவார்.
பொருள்:
ஆதியும் அந்தமும் இல்லாத நிலையான பரம்பொருளான தாயே! உன் உடலிலிருந்து தோன்றிய அணிமா முதலிய எண்வகைச் சித்திகளாகிய தேவதைகளால் சூழப்பெற்றவளே! எவன், உன்னைத் தன் ஆத்மா என்றெண்ணி எப்போதும் சிந்திக்கிறானோ அவனுக்கு சிவசாயுஜ்யமெனும் செல்வத்தைக் கூடப் பெரிதாகக் கருதாத அவனுக்கு, பிரளய காலத்தில் எழும் ஊழித் தீ கூட, மங்கள ஆரத்தி செய்யும் என்பதில் என்ன வியப்பு?
ஜபமுறையும் பலனும்
96 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால் அணிமாதி அஷ்ட சித்திகள் உண்டாகும். எந்தக் காரியத்தைத் தொடங்குவதிலும் அதைரியம் நீங்கி தைரியம் உண்டாகும். கூடுவிட்டுக் கூடுபாய்தலென்னும் பரகாய ப்ரவேச சக்தியும் சித்திக்கும் என்பது நம்பிக்கை.
Don't wait for the opportunity. Create it!
என்றென்றும் அன்புடன் லதா ராஜூ
|
|
| |
Pattu | Date: Friday, 07 Mar 2014, 5:58 PM | Message # 32 |
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
| 31. தேவியின் உபாசனை பெற
சது:ஷஷ்ட்யா தந்த்ரைஸ் ஸகல-மதி ஸந்தாய புவநம் ஸ்தி தஸ்-தத்தத் ஸித்தி-ப்ரஸவ-பரதந்த்ரை: பசுபதி: புநஸ்-த்வந்நிர் பந்தா-தகில-புருஷார்த்தைக-கடநா- ஸ்வதந்த்ரம் தே தந்த்ரம் க்ஷிதிதல-மவாதீதர-திதம்
தேவியினுடைய வித்தை வந்தவாறு (தமிழ்)
பசுபதி தன் நீதி கொண்டு, அறுபத்துநாலு பல கலை ஞானமும், கருணையால் வசிவுஅற நெடும்புவனம் மாயையின் மயக்கி, அதன் வழிவரும் பெரும்பயன் எலாம், இசை பெற விளைத்ததுவும், பின்னும் உனது ஏவலால், இணையில் உனது ஆகமம் எலாம், விசைபெற விளைத்து, எவையும் இது தர அளித்தும் விமலை! உனது உரிமை அலவோ!
பொருள்:
பராசக்தி தாயே! பரமசிவன் இவ்வுலகில் அவரவர் விரும்பும் சித்திகளை மட்டும் அளிக்கும் 64 சாஸ்திரங்களால் திருப்தியடையச் செய்துவிட்டு பேசாதிருந்துவிட்டார். ஆனால் பின்னர் உன்னுடைய நிர்ப்பந்தத்தின் பேரில் அந்த 64 சாஸ்திரங்களின் வாயிலாகவும் அடையக்கூடிய பிறவிப் பயன்களையெல்லாம் ஒருங்கே கிடைக்கச் செய்யக்கூடிய ஆற்றல் வாய்ந்த முக்கியமான பஞ்சதசீ என்னும் உன்னுடைய உபாசனா முறையே இப்பூவுலகில் வெளியிட்டார்.
ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால் ராஜ வசியமும், பொன், பொருள், மனைவி, மக்கள், வீடு, வாகனம் போன்ற சகல விதமான செல்வமும் உண்டாகும் என்பது நம்பிக்கை.
Don't wait for the opportunity. Create it!
என்றென்றும் அன்புடன் லதா ராஜூ
|
|
| |
Pattu | Date: Saturday, 08 Mar 2014, 7:44 PM | Message # 33 |
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
| 32. சுவர்ணாபரணங்கள் பெற
ஸிவ: ஸக்தி: காம: க்ஷித-ரத ரவி: ஸீதகிரண: ஸ்மரோ ஹம்ஸ: ஸக்ரஸ்-ததநு ச பரா-மார ஹரய: அமீ ஹ்ருல்லேகாபிஸ்-திஸ்ருபி-ரவஸாநேஷு கடிதா பஜந்தே வாணாஸ்தே தவ ஜநநி நாமாவயவதாம்
தேவியின் மூலமந்திரம் (தமிழ்)
அரியதாகும் சிவம், சக்தி, மதன், அவனி, பின்பு ஆதித்தன், மதி, மதன வேள், பெருகுவான், இந்திரன், பின்புபரை, மதனன், மால் பேசின் முக்கண்டம் அடைவே உரியதாம் அந்தத்தின் மாயை மும்முறை அமைத்து உறு மெழுத் தடைய உணர்வால் தெரியின், நாமத்தினொடும் உனது உறுப்பாம் என்று செப்பும், நான் மறைகள், உமையே!
பொருள்:
அம்பிகையே! சிவ பீஜாக்ஷரமான க; சக்தி பீஜாக்ஷரமான ஏ; காம பீஜாக்ஷரமான ஈ; பிருதிவி பீஜாக்ஷரமான ல ; சூரிய பீஜாக்ஷரமான ஹ; சந்திர பீஜாக்ஷரமான ஸ; மன்மத பீஜாக்ஷரமான க ; ஆகாச பீஜாக்ஷரமான ஹ; இந்திரனின் பீஜாக்ஷரமான ல ; பரா பீஜமாகிய ஸ; மன்மத பீஜமாகிய க ; ஹரி பீஜமாகிய ஸ ஆகிய இந்த உன்னுடைய அட்சரங்கள் புவனேசுவரி பீஜமான ஹ்ரீங்காரங்கள் மூன்றுடன் சேர்ந்து 15 அட்சரங்களும் மகாமந்திரத்தின் பகுதிகள் ஆகின்றன.
ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால் செப்பைத் தங்கமாக மாற்றும் சக்தி ஏற்படும். மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்ததற்கு மேலாக அதிக லாபம் உண்டாகும் என்பது நம்பிக்கை.
Don't wait for the opportunity. Create it!
என்றென்றும் அன்புடன் லதா ராஜூ
|
|
| |
Pattu | Date: Sunday, 09 Mar 2014, 7:14 PM | Message # 34 |
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
| 33. செல்வம் செழிக்க
ஸ்மரம் யோநிம் லக்ஷ்மீம் த்ரிதயமித-மாதௌ தவ மநோ: நிதாயைகே நித்யே நிரவதி-மஹாபோக-ரஸிகா: பஜந்தி த்வாம் சிந்தாமணி-குண-நிபத்தாக்ஷ-வலயா: ஸிவாக்நௌ ஜுஹ்வந்த: ஸுரபிக்ருத-தாராஹுதி-ஸதை:
எல்லா நலங்களையும் தரும் மந்திரம்
மோக போக விழைவினார், உன் மூல வித்தை தன்னின் முன்னாக, மாரன், யோனி, பொன், அணங்கு, அமைத்து நெய்யினால் யோகம் ஆர் சிவத்தழற்குள், ஓமம் உற்று, விமலையே தியாக மா மணிக் கொடு, அக்க வலயம் உள் செவிப்பரே.
பொருள்:
ஹே தேவியே! உன் பஞ்சதசாக்ஷரீ மந்திரத்தின் முதலில் காம பீஜமான க்லீம், புவனேஸ்வரி பீஜமான ஹ்ரீம், லக்ஷ்மி பீஜமான ஸ்ரீம் ஆகிய மூன்று அக்ஷரங்களையும் சேர்த்து இடைவிடாமல் ஜபித்து அதன் மகிமையை உணர்ந்த சிலர், தொடர்ந்து ஜபம் செய்து, சக்தி முக்கோணத்திலுள்ள அக்னியில் (சிவாக்னி) காமதேனு தந்த நெய்யைப் போன்ற மனமகிழ்ச்சியைக் கொண்டு எண்ணற்ற அர்ப்பணங்களைச் செய்து ஆராதித்து வருகிறார்கள்.
ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால் செல்வம் மேன்மேலும் வளரும். மற்றும் இந்த சுலோகத்தைப் பாராயணம் செய்யும் போது, தம் கையில் மூடி வைத்துக் கொள்ளும் பணத்தைப் போல் பத்துமடங்கு பணம் அதிகமாகக் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
Don't wait for the opportunity. Create it!
என்றென்றும் அன்புடன் லதா ராஜூ
|
|
| |
Pattu | Date: Monday, 10 Mar 2014, 6:52 PM | Message # 35 |
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
| 34. சந்தேகம் நீங்க
ஸரீரம் த்வம் ஸம்போ: ஸஸி-மிஹிர-வ÷க்ஷருஹ-யுகம் தவாத்மாநம் மந்யே பகவதி நவாத்மாந-மநகம் அத: ஸேஷ: ஸேஷீத்யய-முபய-ஸாதாரணதயா ஸ்த்தித: ஸம்பந்தோ வாம் ஸமரஸ-பராநந்த-பரயோ:
சக்தி வடிவும் சிவன் வடிவும் ஒன்று (தமிழ்)
இருசுடர் முலைத்துணைச் சிவன் வடிவு நீ, அதனை யானும் நவமாக நினைவேன் உருவு நிறை தன்னில் அளவு ஒத்த பரமானந்தம் உடைய பரனோடு, பரையுமாய், மருவும் இனிதாம், உங்கள் கூட்டம், அது சேடமும் கொல்? மறுத்து அதனை, உடையதுவுமாய், அருகில், இருவர்க்கும் ஒரு பொதுவாகி, நிற்கும் அழிவு அற்ற ஞான முதலே.
பொருள்:
பராசக்தி! சூரிய, சந்திரர்களைத் தனங்களாக உடைய நீ பரமசிவனுக்கு உடல் என்றும், காலம், குலம், நாமம், ஞானம், சித்தம், நாதம், பிந்து, கலை, ஜீவன் ஆகிய ஒன்பது வியூகங்களின் சொரூபியான சிவனை உன்னுடைய உடல் என்றும் மனக்கண்ணால் என்னால் காண முடிகிறது. ஆகையால் உடைமை, உடையவர் என்னும் இந்த உறவு சமரசப்பட்ட ஆனந்த பைரவர், ஆனந்த பைரவி என்ற உங்களில் இருவருக்கும் சமமாகவே தோன்றுகிறது.
ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால் எல்லாவிதமான சந்தேகங்களும் நீங்கும். மற்றும் ஜலோதரம், தீராச்சளி, சீதள ஜ்வரம் போன்ற சகல ஜலரோகங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.
Don't wait for the opportunity. Create it!
என்றென்றும் அன்புடன் லதா ராஜூ
|
|
| |
Pattu | Date: Tuesday, 11 Mar 2014, 7:50 PM | Message # 36 |
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
| 35. இதயநோய் நீங்க
ஸ்மமநஸ்த்வம் வ்யோம த்வம் மருதஸி மருத்ஸாரதி-ரஸி த்வ-மாபஸ்-த்வம் பூமிஸ்-த்வயி பரிணதாயாம் ந ஹி பரம் த்வமேவ ஸ்வாத்மாநம் பரிணமயிதும் விஸ்வ-வபுஷா சிதாநந்தாகாரம் ஸிவயுவதி-பாவேந பிப்ருஷே
ஆறு சக்கரங்களிலும் வியாபிக்கும் தேவி (தமிழ்)
மனமும் நீ, வெளியும் நீ, வளியும் நீ, கனலும் நீ, மறிபுனலும் நீ, புவியும் நீ நினையில் நீ பரம் அறவளர்ந்து ஒளிபரந்து விடில் நீ அன்றி ஒன்றும் உளதோ? உனது, மா ஞான ஆனந்த உருவைப், புவன உரு என வகுத்து அருளவோ? அனையுமாய், மகவும் ஆமாறு போல் நீ சக்தி அருண வடிவு ஆயது உமையே!
பொருள்:
அம்பிகையே! நீயே ஆக்ஞா சக்கரத்தில் மனமாக விளங்குகிறாய். விசுத்தி சக்கரத்தில் ஆகாசமாக விளங்குகிறாய். அநாஹதத்தில் வாயுவாக இருக்கிறாய். ஸ்வாதிஷ்டானத்தில் அக்கினியாக இருக்கிறாய். ஜல தத்துவமும் பிருதிவி தத்துவமும் ஆன நீயே பிரபஞ்சமாகவும் வடிவெடுக்கும் போது உன்னைத் தவிர வேறுபொருள் இல்லை. இவ்வாறாக நீ வடிவெடுப்பதற்காக சிவபிரானின் பத்தினி என்ற நிலையை ஏற்றுக் கொள்கிறாய்.
ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால் மார்பு நோய் நீங்கும். கடுக்காயில் ஜபம் செய்து, அதை நீரில் உறைத்துச் சாப்பிடச் செய்யவும் என்பது நம்பிக்கை.
Don't wait for the opportunity. Create it!
என்றென்றும் அன்புடன் லதா ராஜூ
|
|
| |
Pattu | Date: Wednesday, 12 Mar 2014, 5:58 PM | Message # 37 |
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
| 36. சகல நோய்களும் நீங்க
தவாஜ்ஞா-சக்ரஸ்த்தம் தபந-ஸஸி-கோடி த்யுதிதரம் பரம் ஸம்பும் வந்தே பரிமிலித-பார்ஸ்வம் பரசிதா யமாராத்த்யந் பக்த்யா ரவி-ஸஸி-ஸுசீநா-மவிஷயே நிராலோகேசலோகே நிவஸதி ஹி பாலோக-புவநே
ஆக்கினைச் சக்கரத்தில் காட்சி (தமிழ்)
அருளும்உனது ஆக்கினைத் திகிரிக்குள் உட்பட்டு, அருக்கன், மதி, அனைய வடிவாய்ப் பருவமுதிர் பர சின்மயத்தோடு உறு பான்மையாம் பரமசிவனைப் பணிகுவாம், ஒரு பொழுதில் இப்பரமசிவனை, எழுகதிர் மதிய ஒளி கடந்து, ஒளிரும், ஒருபால் பெருகு பரமானந்த விழைவு ஒளி, நினைப்பது கொல்? பெறுமுத்தி, சக்தி ஒளியே!
பொருள்:
அம்பிகை தாயே! உன் ஆக்ஞா சக்கரத்தில் இருப்பவரும், கோடி சூர்ய சந்திரர்களின் பிரகாசத்தை கொண்டவரும், ஸகுண, நிர்க்குண சக்திகளை இரு பக்கமும் அணைக்கப் பெற்றவருமான பரமசிவனை வணங்குகிறேன். அப்படி பரமசிவனை பக்தியுடன் வணங்கும் ஒருவன் சூரியன், சந்திரன், அக்கினி ஆகிய மூவரின் ஒளியும் பரவாத பரஞ்சோதி வடிவமான உன்னுடைய ஸாயுஜ்ய பதவியைப் பெற்று மகிழ்வான்.
ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால் சாதாரண நோய்களும், தீராத நோய்களும் தீரும். பிரம்மராக்ஷஸ் பிடித்தவர்களை அது விட்டு ஓடி விடும் என்பது நம்பிக்கை. சுலோகத்தை ஜலத்தில் எழுதச் செய்து ஸ்நானம் செய்விக்கவும்.
Don't wait for the opportunity. Create it!
என்றென்றும் அன்புடன் லதா ராஜூ
|
|
| |
Pattu | Date: Thursday, 13 Mar 2014, 5:20 PM | Message # 38 |
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
| 37. பிசாசு பீடை நீங்க
விஸுத்தௌ தே ஸுத்தஸ்படிக-விஸதம் வ்யோம-ஜநகம் ஸிவம் ஸேவே தேவீமபி ஸிவஸமாந-வ்யவஸிதாம் யயோ: காந்த்யா யாந்த்யா: ஸஸிகிரண-ஸாரூப்ய-ஸரணே: விதூதாந்தர்-த்வாந்தா விலஸதி சகோரீவ ஜகதீ
விசுத்தி சக்கரத்தில் காட்சி (தமிழ்)
இறைவி! நின் விசுத்தித் தலத்திடை பளிங்கு நிற எழிலொடு, உலகருள் தந்தையாய், உறையுமொரு சிவனையும், அவன் போலும் ஆரம்பம் உடைய உனையும் பணிகுவாம், நிறை மதி ஒளிக்கு ஒத்த, நெறி ஏகும், உமது ஒளியின் நிலவுண்டு, பசி களைவது ஓர் முறை பெறு சகோதரம் என, உலகு பாதக இருள் முடித்துக் களித்து உறையுமே.
பொருள்:
தாயே! உன்னுடைய விசுத்தி சக்கரத்தில் தெளிவான பளிங்கைப் போன்ற வடிவினரும், ஆகாச தத்துவத்தைத் தோற்றுவிப்பவருமான சிவனையும் அதே போன்ற நிலையினளான உன்னையும் வணங்குகிறேன். சந்திரனின் சந்திரகிரணத்தைப் போல வெளிவரும் உங்கள் இருவரின் ஒளியினால் உலகம் முழுவதும் அஞ்ஞானமென்னும் அகவிருள் நீக்கப் பெற்று, நிலவில் களிக்கும் சகோரப்பக்ஷி போல் விளங்குகிறது. (இருள் நீங்கினால் சகோரங்கள் கண் தெரிந்து ஒன்றோடொன்று சேருமென்பது கவிமரபு.)
ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 5000 தடவை ஜபித்து வந்தால் பேய், பிசாசு, பூதம், பிரும்ம ராக்ஷஸ் போன்றவை நீங்கி விடும் என்பது நம்பிக்கை.
Don't wait for the opportunity. Create it!
என்றென்றும் அன்புடன் லதா ராஜூ
|
|
| |
Pattu | Date: Friday, 14 Mar 2014, 7:15 PM | Message # 39 |
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
| 38. குழந்தைகள் நோய் நீங்க
ஸமுந்மீலத்-ஸம்வித்-கமல-மகரந்தைக-ரஸிகம் பஜே ஹம்ஸத்வந்த்வம் கிமபி மஹதாம் மாநஸசரம் யதாலாபா-தஷ்டாதஸ-குணித வித்யாபரிணதி; யதாதத்தே தோஷாத் குணமகில-மத்ப்ய: பய இவ
அனாகத சக்கரத்தில் தோற்றம் (தமிழ்)
முன்னைத் தபோதனர் தம் இதயமான தவாவி முது ஞான முளரி நறவு ஆர்ந்து, அன்னத்தின் வடமொழி பெயர் பெற்று, மொழி பயிலும் அறு மூன்று விஞ்சை விரிவால், பன்னப் பொதிந்த, தீவினை நீரில், நற்குணப்பால் பிரித்து உண்டு, களியா, மன்னப் படுஞ்சிறைப் புள் இணையை, நாடொறும் வழுத்ததும், மலர்க்கமலையே!
பொருள்:
பராசக்தியே! நான் இரண்டு அன்னப்பறவைகளை வணங்குகிறேன். அவை நன்றாக மலர்ந்த ஞானம் என்னும் தாமரையிலிருந்து ஆனந்தம் என்னும் இனிய தேனைப் பருகுபவை. மகான்களின் மனம் என்னும் தடாகத்தில் நீந்துபவை. அவை பேசிக் கொள்ளும் இன்பப் பேச்சிலிருந்தே பதினெட்டுக் கலைகளும் தோன்றுகின்றன. அன்னங்கள் நீரையும் பாலையும் பிரித்து விடுவதைப் போல, இவை குற்றங்களையும் குணங்களையும் பிரிக்கின்றன. (இங்கு சிவனும் சக்தியுமே அன்னப்பறவைகள் எனக் குறிப்பிடப்படுவன.)
ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 5000 தடவை ஜபித்து வந்தால், குழந்தைகளுக்கு ஏற்படும் பாலாரிஷ்டம் என்பது நீங்கி சுகமாகும் என்பது நம்பிக்கை.
Don't wait for the opportunity. Create it!
என்றென்றும் அன்புடன் லதா ராஜூ
|
|
| |
Pattu | Date: Saturday, 15 Mar 2014, 6:28 PM | Message # 40 |
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
| 39. கெட்ட கனவுகள் வராமல் இருக்க
தவ ஸ்வாதிஷ்ட்டாநே ஹுதவஹ-மதிஷ்ட்டாய நிரதம் தமீடே ஸம்வர்த்தம் ஜநநி மஹதீம் தாஞ்ச ஸமயாம் யதாலோகே லோகாந் தஹதி மஹஸி க்ரோதகலிதே தயார்த்ரா யா த்ருஷ்டி: ஸிஸிர முபசாரம் ரசயதி
சுவாதிட்டானத்தில் காட்சி (தமிழ்)
நிலை பெறு சுவாதிட்டான நின் சிவ அனலும், நீயும், இலகிய தன்மை நெஞ்சத்து இறைஞ்சுவம், உரைக்கமாட்டோம்; உலகம் அப்பார்வை செந்தீக்கு உருகில், நின் கருணை பொங்கி அலை எறி அமுதப் பார்வை அளித்து, இனிது அருளும் அம்மே!
பொருள்:
அம்பிகையே! உன் ஸ்வாதிஷ்டான சக்கரத்தில் அக்னி தத்துவத்தைச் சிந்தித்து அதில் எப்பொழுதும் ஒளிர்கின்ற பிரளய கால அக்னி வடிவினரான ருத்ரனையும், மஹத் என்னும் மகிமை வாய்ந்தவளான பராசக்தியையும் போற்றித் துதிக்கின்றேன். அந்தப் பரமசிவனின் பார்வையாகிய அக்னி உலகங்களையெல்லாம் எரிக்கும்போது குளிர்ச்சி மிகுந்த கருணை பொழியும் உன் திருவிழிப் பார்வைதானே குளிர்வித்துக் காக்கிறது!
ஜபமுறையும் பலனும்
12 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 108 தடவை ஜபித்து வந்தால் பயத்தை உண்டாக்கும் கெட்ட கனவுகள் நீங்கும் என்பது நம்பிக்கை.
Don't wait for the opportunity. Create it!
என்றென்றும் அன்புடன் லதா ராஜூ
|
|
| |