சௌந்தர்ய லஹரி - Page 5 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
Forum moderator: Laya, Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » ஆன்மீகம் / நல்வழி » ஆன்மிகம் » சௌந்தர்ய லஹரி (100 ஸ்லோகங்கள் அடங்கிய தொகுப்பு)
சௌந்தர்ய லஹரி
PattuDate: Sunday, 16 Mar 2014, 7:03 PM | Message # 41
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
40. வருங்காலம் உணர

தடித்வந்தம் ஸக்த்யா திமிர-பரிபந்த்தி-ஸ்புரணயா
ஸ்புரந்-நாநாரத்நாபரண-பரிணத்தேந்த்ர-தனுஷம்
தவ ஸ்யாமம் மேகம் கமபி மணிபூரைக-ஸரணம்
நிஷேவே வர்ஷந்தம் ஹரமிஹிர-தப்தம் த்ரிபுவநம்


மணிபூரக சக்கரத்தில் தரிசனம் (தமிழ்)

விரித்த இருள் விழுங்கும் சக்தி மின்னொடும் பன் மணி இந்திர வில்லினோடும்,
தரித்தமறை பரவு சிவ தபனகதிர் எறிப்ப, அதில் தழன்று, தீயில்
பிரித்து உலகம் குளிர, ஒளி தழைத்து ஒளிரப், பொழி அமுத தாரை மாரி
பரித்த மணி பூரகத்துள், பச்சை முகில் பணிவன், அருள் பழுத்த கொம்பே!


பொருள்:

ஹே பகவதி, நீலமேக ரூபமான உனது ஸதாசிவ தத்வத்தை நான் வணங்குகிறேன். அந்த மேகம் மணிபூரகமென்னும் சக்கரத்தையே இருப்பிடமாகக் கொண்டது; அங்குள்ள இருளையகற்றும் சக்தியாகிய மின்னல்களை உடையது; பல்வேறு வர்ணமுள்ள ரத்தின ஆபரணங்களின் ஒளியாகிய வானவில்லுடன் கூடியதும்; கறுத்ததும் காலாக்னி ருத்ரனால் பிரளய காலத்தில் எரிக்கப்பட்ட மூவுலகையும் அமிர்தமாகிய மழையைப் பொழிந்து குளிரச் செய்வதுமாகிய உன் சதாசிவ தத்துவத்தை வணங்குகிறேன்.

ஜபமுறையும் பலனும்

45 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால், வருங்காலத்தை அறியலாம். தாம் விரும்பிய பொருளை அடையும் வகையைக் கனவில் காணலாம் என்பது நம்பிக்கை.


Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Monday, 17 Mar 2014, 5:53 PM | Message # 42
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
41. வயிற்று வலி நீங்க

தவாதாரே மூலே ஸஹ ஸமயயா லாஸ்ய-பரயா
நவாத்மாநம் மந்யே நவரஸ-மஹாதாண்டவ-நடம்
உபாப்யா-மேதாப்யா-முதய-விதி-முத்திஸ்ய தயயா
ஸநாதாப்யாம் ஜஜ்ஞே ஜநகஜநநீமத் ஜகதிதம்


மூலாதார சக்கரத்தில் தாண்டவம் (தமிழ்)

நீ நந்து மூல ஆதாரத்தில், ஆனந்த நிர்த்தமிடும் இறைவி! நின்னோடு
ஆனந்தத் தாண்டவம் விளைத்து, நவ வடிவுபெறும் ஆதி சிவனைப் பரவுவாம்;
வானம் தொடுத்து, உலகம் அடையப்படைத்து இடும், இவ்வகையின் புணர்ச்சி அலவோ?
ஞானங்கொள், அனை, தந்தை, என, உலகு தெளிவுற நடத்துவது, ஞான ஒளியே!


பொருள்:

தாயே! உன்னுடைய மூலாதாரமென்னும் சக்கரத்தில் நர்த்தனம் புரிபவளான ஸமயா தேவியோடு சிருங்காரம் முதலிய 9 ரஸங்கள் பொருந்திய தாண்டவமென்னும் நடனம் புரிகின்ற மஹாபைரவமென்னும் உன் ரூபத்தைத் தியானம் செய்கிறேன். பிரளயத்திற்குப் பின் மறுபடியும் தோன்றுகிற இந்த உலகத்திற்கு, மஹாபைரவர், மஹாபைரவி என்னும் நீங்கள் இருவரும் கருணையால் ஒன்றுகூடி இந்த உலக ஜீவர்களுக்குத் தாயும் தந்தையுமாகிறீர்கள்.

ஜபமுறையும் பலனும்

30 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 4000 தடவை ஜபித்து வந்தால், வயிற்று வலி நீங்கும். குல்மம் என்னும் வயிற்றுக் கட்டியும் நீங்கி சௌக்கியம் உண்டாகும் என்பது நம்பிக்கை.


Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Tuesday, 18 Mar 2014, 6:08 PM | Message # 43
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
42. வயிற்றில் ஏற்படும் நோய்கள் நீங்க

கதைர்-மாணிக்யத்வம் ககநமணிபி: ஸாந்த்ர-கடிதம்
கிரீடம் தே ஹைமம் ஹிமகிரிஸுதே கீர்த்தயதி ய:
ஸ நீடேயச்சாயா-ச்சுரண-ஸபலம் சந்த்ர ஸகலம்
தநு: ஸெளநாஸீரம் கிமிதி ந நிபத்நாதி திஷணாம்


அழகின் அலைப்பெருக்கு(சௌந்தர்ய லஹரி) கிரீட வர்ணனை-வசியம் பெருக்க

அந்தரம் மணித்தபனர் பலமணியின் வடிவெடுத்து அமரும் உனது அம்பொன் முடிமேல்
இந்த கலை நவமணியின் ஒழுகு பல நிறமடைந்து இலகும் அதிசய வடிவினால்,
சந்திரகலை நன்று நன்று என்பர் சிலர்; அன்று அன்று சந்திர கலை இந்த நிறமே
இந்திர சிலை இந்திர சிலை என்பர் சிலர் ஆதலால் யாது என வழுத்த உமையே.


பொருள்:

மலையரசனின் மகளே! உனக்குச் சேவை செய்யும் பொருட்டு மாணிக்கங்களாக உருவெடுத்துள்ள பன்னிரண்டு சூரியர்களால் நன்கு இழைக்கப்பட்ட உன் பொற்கிரீடத்தை வர்ணிக்க எவன் மனம் விரும்புகிறதோ அவன், கிரீடத்தில் பதிக்கப்பட்டுள்ள நவரத்தினங்களின் ஒளியால் விந்தையான வர்ணம் உள்ளது போலத் தோற்றமளிக்கும் சந்திரகலையை இந்திரனுடைய வில் என்று நினைத்துக் கொள்ள மாட்டானா?

ஜபமுறையும் பலனும்

45 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால், மஹோதரம் என்னும் நோய் விலகும். மற்றும் பசு, பக்ஷி, மனிதர்கள், தேவர்கள் அனைவரையும் வசீகரிக்கும் சக்தியும் ஏற்படும் என்பது நம்பிக்கை.


Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Wednesday, 19 Mar 2014, 7:02 PM | Message # 44
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
43. ஜயம், புகழ் பெறவும், வியாதி நீங்கவும்

துநோது த்வாந்தம் நஸ்-துலித-தலிதேந்தீவர-வநம்
கந-ஸ்நிக்த-ஸ்லக்ஷ்ணம் சிகுர-நிகுரும்பம் தவ ஸிவே
யதீயம் ஸெளரப்யம் ஸஹஜ-முபலப்தும் ஸநமநஸோ
வஸந்த்யஸ்மிந் மந்யே வலமதந-வாடீ-விடபிநாம்


கூந்தல் அழகு-சகல காரியங்களில் வெற்றி பெற (தமிழ்)

அலர்ந்த கரு நெய்தல் அங்காடு எனக் கடை குழன்று அற நெய்த்து இருண்டு செறிவோடு
இலங்குறும் இயற்கை மணம் எண் திசை அளப்ப அதில் இதழ் மூழ்கு நறை விழைவினால்
பொலன் கொள் முடி ஆகண்டலேசன் பொற்று உணர்விரி பொதும்பர் மது மலர் படிவதோர்
சிலம்பு அளி பரந்த உனது ஓதி என் மனத்திருள் செறிவு தெற அருள் கமலையே.


பொருள்:

அம்பிகையே! உன் கருங்கூந்தல் மலர்ந்த கருநெய்தல் காடு போல அடர்ந்து, வழவழப்பாயும், மிருதுவாயும் உள்ளது. அது எங்கள் அகஇருளை அகற்றட்டும். அதிலுள்ள இயற்கையான நறுமணத்தை அடைய விரும்பியே இந்திரனின் நந்தவனத்திலுள்ள கற்பக மலர்களெல்லாம் அந்தக் கேசத்தில் வாசம் செய்கின்றன என எண்ணுகிறேன்.

ஜபமுறையும் பலனும்

45 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால் எடுத்த காரியங்கள் எல்லாவற்றிலும் வெற்றியுண்டாகும். நோய்களெல்லாம் நீங்கும் என்பது நம்பிக்கை.


Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
saiDate: Wednesday, 02 Apr 2014, 12:35 PM | Message # 45
Lieutenant colonel
Group: Users
Messages: 137
Status: Offline
Mam LALITHA SAHASRANAMAM  kedaikkuma?
 
LibraryDate: Friday, 04 Apr 2014, 12:58 PM | Message # 46
Lieutenant
Group: Friends
Messages: 64
Status: Offline
Quote sai ()
Mam LALITHA SAHASRANAMAM kedaikkuma?

Lalitha_Sahasra_Namam_Tamil.pdf
 
saiDate: Friday, 04 Apr 2014, 3:37 PM | Message # 47
Lieutenant colonel
Group: Users
Messages: 137
Status: Offline
Thank u so much.
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » ஆன்மீகம் / நல்வழி » ஆன்மிகம் » சௌந்தர்ய லஹரி (100 ஸ்லோகங்கள் அடங்கிய தொகுப்பு)
Search: