மாசி மகம் - Page 2 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
  • Page 2 of 2
  • «
  • 1
  • 2
Forum moderator: Laya, Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » ஆன்மீகம் / நல்வழி » ஆன்மிகம் » மாசி மகம் (தோஷங்கள் போக்கும்)
மாசி மகம்
PattuDate: Friday, 14 Feb 2014, 6:25 PM | Message # 11
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
மகாமக தீர்த்த மகிமை:

சில குறிப்பிட்ட பாவங்கள் மட்டுமே கங்கை, யமுனை, நர்மதை, இன்னும் புண்ணிய ÷க்ஷத்திரங்களிலுள்ள பல வகை தீர்த்தங்களில் நீராடினால் தீரும். ஆனால் மகாமகத்தன்று உலகில் இருப்பதாகக் கருதப்படும் 66 கோடி தீர்த்தங்களும் மகாமக குளத்தில் நீராவ வருவதாக ஐதீகம். எனவே கும்பமேளா நீராட்டத்தை விட இது உயர்ந்ததாக கருதப்படுகிறது.

என்றென்று குளிக்கலாம்?

மாசிமக நட்சத்திரம் சித்திரை மாதப்பிறப்பு, கார்த்திகை சோமவாரம்(திங்கள்கிழமைகள்) அமாவாசை, பவுர்ணமி, சூரிய சந்திர கிரகண நாட்கள், தட்சிணாயண காலம்(ஆடிமாதப்பிறப்பு) ஐப்பசி விசு, தேய்பிறை அஷ்டமி திதி, சிவராத்திரி. வெள்ளிக்கிழமைகள் மகாமக குளத்தில் குளிக்க ஏற்ற காலம்.

இதுவரை மகாமகம் நடந்த ஆண்டுகள்

1518, 1529, 1541, 1553, 1565, 1577, 1589, 1600, 1612, 1624, 1636, 1648, 1660, 1672, 1683, 1695, 1707, 1719, 1731, 1743,  1755,1767, 1788, 1802, 1814, 1826, 1838, 1850, 1861, 1873, 1885, 1897, 1909, 1921, 1933, 1945, 1956, 1968, 1980, 1992, 2004

மாசி மகத்தன்று செல்ல வேண்டிய கோயில்கள்:

மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில், திண்டுக்கல்

கும்பேஸ்வரர் திருக்கோயில், கும்பகோணம்




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Friday, 14 Feb 2014, 6:27 PM | Message # 12
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
66 கோடி தீர்த்தம்:

கும்பகோணம் மகாமக குளத்தை மாமாங்கக்குளம் என்றும் குறிப்பிடுவர். 20 ஏக்கர் பரப்பு கொண்ட இக்குளத்தின் வடகரை, தென்கரைகள் சிறிது உள்வளைந்தும், கிழக்கில் குறுகியும், மேற்கில் அகன்றும் உள்ளன.

உயரத்திலிருந்து பார்த்தால் ஒரு குடத்தின் அமைப்பு தெரியும். குளத்தின் வடக்கில் நான்கும், மேற்கு, தெற்கில் மூன்றும், கிழக்கில் இரண்டும், நாற்கோணத்தில் ஒவ்வொன்றுமாக பதினாறு சிவலிங்கங்கள் உள்ளன.

இதனை சோடஷ மகாலிங்கம் என்பர். சோடஷம் என்றால் பதினாறு. இக்குளத்தை, பூமருவும் கங்கை முதல் புனிதமாம் பெருந்தீர்த்தம் மாமகந்தான் ஆடுவதற்கு வந்து வழிபடுங்கோயில் என்று சேக்கிழார் சிறப்பிக்கிறார். பூலோகத்தில் உள்ள 66 கோடி தீர்த்தங்களும் இந்த தீர்த்தத்தில் கலந்திருப்பதாக ஐதீகம்.

மங்களமும் மந்திரமும்:

ஒருசமயம், உலகம் அழிந்த காலத்தில் வெள்ளத்தில் மிதந்த அமிர்த கலசத்தை உடைக்க வந்தார் சிவன். அவர், கும்பகோணத்தில் லிங்க உருவில் ஓரிடத்தில் அமர்ந்து விட்டதை அறிந்த பார்வதி அங்கு வந்தாள்.

மகாமக குளத்தில் நீராடினாள். அம்பிகையை தன் இடப்பாகத்தில் அமரும் படி அருள்புரிந்தார் சிவன். அவளுக்கு மங்களாம்பிகை என்ற பெயர் வந்தது. சக்திபீடங்களில் இது மங்களபீடம், மந்திரபீடம் என்று பெயர் பெறுகிறது.

மங்களம் என்றால் ஆக்குவது. மந்திரம் என்றால் காப்பது. ஆக்குபவளும் அவளே, காப்பவளும் அவளே. இந்த அம்பிகையை மாசிமகத்தன்று வழிபட்டவர்க்கு எதையும் ஆக்கும் சக்தியும், ஆக்கியதைப் பாதுகாக்கும் திறனும் உண்டாகும்.




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Friday, 14 Feb 2014, 6:28 PM | Message # 13
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
அரைமணிநேரத்தில் உலகையே வலம் வரலாம்!

கும்பகோணம் மகாமக குளத்தை ஒருமுறை சுற்றி வர உத்தேசமாக அரை மணி நேரமாகும். இந்தக்குளத்தை ஒருமுறை வலம் வந்தால், நூறுமுறை உலகத்தையே வலம் வந்த புண்ணியம் கிடைக்கும். இக்குளத்தில் நீராட வேண்டும் என்று மனதில் நினைத்தாலே போதும்! பாவங்கள் தீர்ந்து விடும்.

குழந்தையில்லாதவர்கள் மாசிமகத்தன்று நீராடினால் கும்பேஸ்வரர் அருளால் முருகனைப் போல் ஒரு மகன் பிறப்பான். சித்திரை, கார்த்திகை மாதங்களில் நீராடுவதும் சிறப்பு. மாசி மகத்தன்று வீட்டில் நீராடினாலும் கும்பகோணம் இருக்கும் திசை நோக்கி வணங்கியபின் நீராடினால், மகாமக குளத்தில் நீராடியபலன் கிடைக்கும்.

நல்ல குழந்தைகள் பிறக்க வேண்டுமா?

நன்மக்களைப் பெற, புதுமணத் தம்பதிகள் இவ்வாண்டுக்குள் ஒருநாளாவது கும்பகோணம் மகாமக தீர்த்தத்தை ஐந்துமுறை தலையில் தெளித்து, ஒன்பது ஏழை கன்னிப் பெண்களுக்கு வஸ்திர தானம் வழங்க வேண்டும். பிராமணர்களுக்கு பழங்கள் வழங்க வேண்டும்.




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Friday, 14 Feb 2014, 6:32 PM | Message # 14
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
மாசிமகத்தில் விளக்கு ஏற்றுங்க:

ஸ்ரீரங்கத்திற்கு எவ்வளவு சிறப்புண்டோ அத்தனையும் கொண்ட சிறப்பான திவ்யதேசம் திருக்கோஷ்டியூர். மந்திர உபதேசம் வேண்டி ராமானுஜர், திருக்கோஷ்ட்டியூர் நம்பியை 18 முறை தேடி வந்தது இங்கு தான்.

உலகமக்கள் அனைவருக்கும் ஓம் நமோ நாராயணாய என்ற எட்டெழுத்து மந்திரத்தை ராமானுஜர் உபதேசித்ததால் (ஓம் என்பது ஓரெழுத்து) திருமந்திரம் விளைந்த திவ்யதேசம் என்ற பெருமை இதற்குண்டு.

பேரழகு கொண்டவர் என்பதால் இங்கிருக்கும் பெருமாளுக்கு சவுமியநாராயணர் என்பது திருநாமம். பொதுவாக கோயில்களில் உற்ஸவர் விக்ரகங்களை பஞ்சலோகத்தால் அமைப்பர். ஆனால், தூய்மையான வெள்ளியால் ஆன விக்ரகம் இங்குள்ளது.

இதை தேவலோக இந்திரனே தந்ததாக ஐதீகம்.இப்பெருமானை திருமங்கையாழ்வார்  வெள்ளியான் கரியான் மணிநிற வண்ணன் என்று போற்றுகிறார். இங்குள்ள தாயாருக்கு திருமாமகள், நிலமாமகள், குலமாமகள் ஆகிய பெயர்களுண்டு.

மகாமகக்கிணறு என்னும் சிம்மக்கிணறு இங்குள்ளது. இதில் மாசிமகத்தில் நீராடுவது சிறப்பு. மாசிமகத்தன்று இங்கு தெப்பத்திருவிழா நடைபெறும். சவுமியநாராயணரிடம் ஏதாவது வேண்டுகோள் வைத்து அது நிறைவேறியவர்கள், தெப்பக்குளத்தில் தீபமேற்றி வழிபடுவது சிறப்பாகும்.

அந்த விளக்கை புத்திரபாக்கியம், திருமணம் போன்ற கோரிக்கைகளை வைப்பவர்கள் வீட்டிற்கு எடுத்துச்சென்று பூஜையறையில் வைத்துக்கொள்ளலாம்.

வேண்டுதல் நிறைவேறியதும், அடுத்த மாசிமகத்தன்று மீண்டும் அந்த விளக்குடன் மேலும் 3 அல்லது 5 அகல் விளக்குகளை ஏற்றி வைப்பது மரபாகும்.

குளத்தில் நீராடும் ஆறு:

காவிரிநதி ஏழு கட்டங்களாக பாய்ந்து வளம் பெருக்குகிறது. தலைக்காவிரி, அகன்றகாவிரி, பஞ்சநதம், கும்பகோணம், மத்தியார்ச்சுனம், மயிலாடுதுறை, காவிரிப்பூம்பட்டினம் ஆகியன அவை. இவற்றில் நடுநாயகமாகத் திகழும் தலம் கும்பகோணம்.

ஒரு சமயம், வெள்ளத்தால் உலகம் அழிய இருந்த வேளையில், மீண்டும் உயிர்களை படைப்பதற்கான பீஜம் தாங்கிய அமுத கும்பத்தை பிரம்மா நீரில் மிதக்க விட்டார். அது வெள்ளத்தில் மிதந்து ஒதுங்கிய இடமே கும்பகோணம்.

மாசிமகத்தன்று கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் பிரதான வழிபாட்டுத் தலமாகத் திகழ்கிறது. இங்குள்ள தீர்த்தம் மகாமகத் தீர்த்தம். காசியில் ஓடும் புனித கங்கையும் தன் பாவம் தீர நீராடும் குளம் இது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் பெருமை பெற்ற தலம்.




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Friday, 14 Feb 2014, 6:34 PM | Message # 15
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
மாசிமக தலம்:

ஒருசமயம், வெள்ளத்தால் உலகம் அழிய இருந்த வேளையில், படைப்புக்கலன்கள் தாங்கிய அமுதக்குடத்தை, பிரம்மா மேருமலையில் வைத்திருந்தார். பிரளய வெள்ளம் பெருக்கெடுத்து அதில் மிதந்த குடம் தென்பகுதி வந்து சேர்ந்தது.

வேடனாக வந்த சிவபெருமான், திருவிடைமருதூரில் தங்கினார். பாணம் ஒன்றை எடுத்து குடத்தைக் குறிவைத்தார். பாணம் எய்த இடம் பாணாத்துறை ஆயிற்று. இவ்வூர் கும்பகோணத்துக்கு வடகிழக்கே உள்ளது.

குடம் உடைந்து ஐந்து இடங்களில் சிதறியது. வடமேற்கே சுவாமிமலையிலும், தென்மேற்கே தாராசுரத்திலும், தென்கிழக்கே திருநாகேஸ்வரத்திலும், கிழக்கே திருவிடைமருதூரிலும், வடகிழக்கே கருப்பூரிலும் அமுதம் சிதறி விழுந்தது.

இத்தலங்களை "பஞ்சகுரோசத் தலங்கள் என்று குறிப்பிடுவர். "குரோசம் என்றால் "கூப்பிடு தூரம். அருகருகே இந்த தலங்கள் உள்ளதால், இப்பெயர் பெற்றன.

துலாபாரம் கொடுத்த தீட்சிதர்:

கும்பகோணம் மகாமகக்குளக்கரையில் 16 படித்துறைகள் உள்ளன. இத்துறைகளில் அனைத்திலும் சிவன் சந்நிதிகள் உள்ளன. இவற்றைக் கட்டியவர் கோவிந்த தீட்சிதர்.

இவர் நாயக்க மன்னர்களின் அவையில் இருந்தவர். ஒரு மகாமக நாளில் இக்குளத்தின் வடமேற்கு மூலையில், தன் எடைக்கு எடையாக தங்கத்தை கும்பேஸ்வரருக்குக் கொடுத்தார். இப்படிக் கொடுப்பதற்கு, "ஹிரண்ய கர்ப்பம் என்று பெயர்.

குடத்தின் வடிவில் குளம்:

 கும்பகோணம் மகாமகக்குளம் கிழக்கு மேற்காக நீள் சதுரமாகவும், வடகரையும் தென்கரையும் சிறிது உள்வளைந்தும், கிழக்கில் குறுகியும், மேற்கில் அகன்றும் உள்ளது. இதை மேலிருந்து பார்த்தால் குடம்போல காட்சியளிக்கும்.

இக்குளத்தில் புனித நீராடினால் அமுதக் குடத்திற்குள்ளேயே நீராடியது போலாகும். பொதுவாக ஒருவரின் பாவம் புண்ணியதீர்த்தம் எதில் நீராடினாலும் நீங்கும் என்பது சாஸ்திரவிதி. புண்ணியத் தலங்களில் பிறந்தவர்கள் செய்த பாவம் கங்கையில் நீராடினால் நீங்கும்.

ஆனால், காசியில் பிறந்தோர் கும்பகோணத்தில் நீராடினால் தான் பாவம் விலகும். கும்பகோணத்தில் பிறந்தவர்கள் எங்கும் செல்லத் தேவையில்லை. மகாமகக்குளத்தில் நீராடினாலேயே விலகிவிடும். இதனை "கும்பகோணேக்ருதம் பாவம் கும்பகோணே விநச்யதி என்பர்.




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Friday, 14 Feb 2014, 6:36 PM | Message # 16
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
சூரிய பூஜை:

ஈரோட்டில் இருந்து 12கி.மீ.,தொலைவில் உள்ள தலம் பவானி. பவானி ஆறு காவிரியில் சங்கமிக்கும் இடம் என்பதால் இங்கு உள்ள இறைவன் சங்கமேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். காவிரி, பவானி,அமுதநதி ஆகிய மூன்று நதிகள் கூடுவதால் முக்கூடல் என்றும் பெயருண்டு.

பத்மகிரி, நாககிரி, சங்ககிரி, மங்கலகிரி, வேதகிரி ஆகிய ஐந்து மலைகளுக்கு நடுவில் இத்தலம் உள்ளது. யாரொருவர் இப்பெருமானை தரிசிக்கும் பேறு பெறுகிறார்களோ அவரைப் பாவம் தீண்டாது. ÷தவாரப் பாடல்களில் "திருநணா என்றே இத்தலம் குறிப்பிடப்படுகிறது.

தீமை நண்ணாத ஊர் என்பதே திருநணா. இங்குள்ள அம்மன் வேதாம்பிகை எனப்படுகிறாள். இவள் மீது பக்தி கொண்ட ஆங்கிலேயர் காணிக்கையாக யானை தந்தக்கட்டில் ஒன்றை அளித்தார். குபேரனும், விஸ்வாமித்திரரும், பராசரரும் இறைவனை வழிபட்டு பேறு பெற்றனர்.

இங்கு முருகப்பெருமான் சோமாஸ்கந்தமூர்த்தி கோலத்தில் வீற்றிருக்கிறார். மாசிமகத்தன்று சங்கமேஸ்வரர், வேதநாயகி, சுப்பிரமணியர் ஆகியோரை சூரியன் வணங்குவதாக ஐதீகம்.

நீராட உகந்த நாட்கள்:

புனித தீர்த்தங்களில் எல்லாநாட்களும் நீராடலாம் என்றாலும், குறிப்பிட்ட நாட்களில் நீராடுவது சிறப்பானதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. மகாமக குளத்தில் நீராடுவதற்கு அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, வெள்ளிக்கிழமை, கார்த்திகை நட்சத்திரம், சிவராத்திரி, மாசிமகம், மகாமகம் ஆகிய நாட்கள் சிறப்பானதாகும்.

புனிதமான மகாமக தீர்த்தம் கும்பகோணத்தில் மூன்று ஏக்கர் பரப்பில் மகாமகக்குளம் அமைந்துள்ளது. ஒருமுறை உலகம் அழிய இருந்த காலத்தில், படைப்புக்கலன் தாங்கிய அமுதம் நிரம்பிய கும்பத்தை சிவன் அழித்தார். அவ்வாறு பெருகிய அமுதமே இந்தக் குளம் என்று சொல்வதுண்டு.

மாசிமகத்தன்று இக்குளத்தில் நீராடுவது புனிதமானது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகம் மிகவும் சிறப்பானது. இக்குளத்தில் பிரம்மா, அஷ்டதிக்பாலகர்கள், நவகன்னியரான கங்கை, யமுனை, கோதாவரி, நர்மதா, சரஸ்வதி, காவிரி, குமரி, பயோடினி, சரயு நதிகள் நீராடி புண்ணியம் அடைந்தன.

பவுர்ணமியன்று நீராடுவோருக்கு ஏழேழு பிறவிக்கும் நன்மை ஏற்படும். மாசித்திருவிழாவின் பத்தாம்நாளில் கும்பேஸ்வரர் பஞ்சமூர்த்தியுடன் இந்த குளக்கரைக்கு எழுந்தருளி தீர்த்தம் வழங்குகிறார்.

தீர்த்த நீராடலுக்கு முக்கியத்துவம் தரும் விழா மாசி மகம் ஆகும். மாசி மாதத்தில் பவுர்ணமியை ஒட்டி வரும் மகம் நட்சத்திரத்தில் இவ்விழா நடக்கும். தீர்த்தங்களுடன் அமைந்த பெரும்பாலான கோயில்களில் இந்நாளில் தெப்பத்திருவிழா நடக்கும். ஆண் குழந்தை வேண்டுபவர்கள், இந்நாளில் முருகனை வேண்டி விரதமிருந்து வழிபடுவர்.

பலன்:

மாசி மகத்தன்று முருகப்பெருமானை வழிபடுவதால் ஆண் குழந்தை பிறக்கும், அறியாமல் செய்த பாவங்களுக்கு விமோசனம் கிடைக்கும்.




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Friday, 14 Feb 2014, 6:40 PM | Message # 17
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
தீர்த்தமும் அவற்றில் குளிப்பதால் ஏற்படும் பலனும்!

மகாமகத்தன்று மகாமக குளத்தில் குளித்தால் மட்டும் போதாது. கும்பகோணம் நகரை ஒட்டி ஓடும் காவிரியிலும் நீராட வேண்டும். இங்கு காசியப தீர்த்தம் (சோலையப்பன் தெரு கடைசியில்) கதா தீர்த்தம் (ஓடக்கரை) சக்கர தீர்த்தம், ஈசான்ய தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் (அரசலாறு) ஆகிய தீர்த்தக் கட்டங்கள் உள்ளன.

கும்பகோணத்தின் இதர தீர்த்தங்கள்:

மகாமகக் குளம் நீங்கலாக கும்பகோணத்தில் பொற்றாமரைக் குளம், கவுதம தீர்த்தம், இந்திர தீர்த்தம், வியாச தீர்த்தம், சோம தீர்த்தம், வராக தீர்த்தம், வருண தீர்த்தம், நாக தீர்த்தம், பாதாளச்சங்கு ஆகிய தீர்த்தக் குளங்கள் உள்ளன. இதில் சோம தீர்த்தம், இந்திர தீர்த்தம் முழுமையாக மூடப்பட்டு விட்டது.

16 கிணறுகள் உள்ள தீர்த்தம்:

மகாமக குளத்தில் 16 ஊற்றுக் கிணறுகள் உள்ளன. இந்த கிணறுகளில் இருந்தும் பக்தர்கள் தண்ணீர் எடுத்து குளித்த காலம் உண்டு. இப்போது காவிரியிலேயே தண்ணீர் இல்லாதது தான் பெரிய மனக்குறை. இருப்பினும் மகாமகத்தை ஒட்டி இக்கிணறுகளில் சிறிதளவு தண்ணீர் இருக்கும்.

19 தீர்த்தக்குளியல் பயன்

1. வாயு தீர்த்தம்-நோய் நீங்குதல்
2. கங்கை தீர்த்தம்- அவஸ்தையற்ற மரணம்
3. பிரம்ம தீர்த்தம்- முன்னோர்களின் பாவம் தொலைதல்
4. யமுனை தீர்த்தம்- தங்க நகைகள் சேருதல்
5. குபேர தீர்த்தம்- சகல செல்வ விருத்தி
6. கோதாவரி தீர்த்தம்- விரும்பியது நடத்தல்
7. ஈசான்ய தீர்த்தம்- அவஸ்தைப்படுவோர் சிவனடி அடைதல்
8. நர்மதை தீர்த்தம்- தேகபலம் உண்டாகுதல்
9. இந்திர தீர்த்தம்- பூலோகத்தில் சொர்க்க வாழ்வு
10. சரஸ்வதி தீர்த்தம்- கல்வி விருத்தி
11. அக்னி தீர்த்தம்- பிரம்மஹத்தி (கொலை) தோஷம் நீக்கம்
12. காவிரி தீர்த்தம்- ஆண்மை பெருகுதல்
13. யமன் தீர்த்தம்- எமபயம் நீங்குதல்
14. குமரி தீர்த்தம்- அசுவமேத யாக பலன் கிடைத்தல்
15. நிருதி தீர்த்தம்- பில்லி, சூன்யம் விலகுதல்
16. பயோடினி தீர்த்தம்- குடும்ப ஒற்றுமை
17. தேவ தீர்த்தம்- ஆயுள்விருத்தி
18. வருண தீர்த்தம்- மழை வளம்செழித்தல்
19. சரயு தீர்த்தம்- மனநிம்மதி

மகாமக குளக்கரையில் 16 லிங்கங்கள்:

1. பிரம்ம தீர்த்தேஸ்வரர்
2. முகுந்தேஸ்வரர்
3. தனேஸ்வரர்
4. விருஷபேஸ்வரர்
5. பரணேஸ்வரர்
6. கோணேஸ்வரர்
7. பக்திஹேஸ்வரர்
8. பைரவேஸ்வரர்
9. அகத்தீஸ்வரர்
10. வியாசேஸ்வரர்
11. உமைபாகேஸ்வரர்
12. நைருத்தீஸ்வரர்
13. பிரம்மேஸ்வரர்
14. கங்காதரேஸ்வரர்
15. முத்த தீர்த்தேஸ்வரர்
16. ஷேத்திர பாலேஸ்வரர்




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Friday, 14 Feb 2014, 6:41 PM | Message # 18
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
மாசி மகத்தின் சிறப்புக்கள் – ஒரு பார்வை!

1. மகாவிஷ்ணுவாக அவதாரம் எடுத்தது மாசி மகத்திருநாளில் தான்.

2. மாசி மாதத்து சங்கடஹர சதுர்த்தி மிக விசேஷம். அந்நாளில் விரதம் இருப்பவர்கள் எல்லாவித தோஷங்களிலிருந்தும் விடுபடுவர்.

3. மாசி மாதத்தன்று தான் பார்வதிதேவி காளிந்தி நதியில் ஒரு தாமரை மலரில்
வலம்புரிச் சங்காகத் தோன்றினாள்.

4. சிவபெருமான் திருவிளையாடல்கள் பல புரிந்தது மாசிமாதத்தில் தான்.

5. மாசி மாதத்தன்று மந்திர உபதேசம் பெறுவது சிறந்ததாகத் கருதப்படுகிறது.

6. குலசேகர ஆழ்வார் மாசி மாதம் புனர்பூச நட்சத்திர நாளில் தான் அவதரித்தார்.

7. அன்னதானத்தின் பெருமைகளை உணர்த்துவது மாசி மகம் தான்.

8. மாசி மாத பூச நட்சத்திரம் தினத்தன்று தான் முருகப்பெருமான் சுவாமி மலையில் தன்
தந்தை சிவபெருமானுக்கு உபதேசம் செய்தார்.

9. பிரம்மஹத்தி போன்ற பெரும் பாவங்களைப் போக்கி பேய்க்கும் நற்கதி கொடுக்கும் இரு
ஏகாதசிகள் வருவது மாசி மாதத்தில் தான்.

10. உயர் படிப்பு படிக்க விரும்பு பவர்கள் ஆராய்ச்சி செய்ய விரும்புபவர்கள் மாசிமக
நாளில் அவற்றைத் தொடங்கினால் அதில் சிறந்து விளங்கலாம்.

11. அகத்தியர் தன் விருப்பங்கள் நிறைவேற தவம் இருந்து அருள் பெற்றது மாசிமாதத்தில் தான்.

12. காரடையான் நோன்பும் சாவித்ரி விரதமும் இம்மாதத்தில் வரும் விசேஷ விரதங்கள். மாசி
மகத்தன்றுதான் காமதகன் விழா நடைபெறுகிறது.

13. மாசி மாதத்தில் வீடு குடி போனால் வாடகை வீடாக இருந்தாலும் அவ்வீட்டில் அதிக
நாட்கள் வாழ்வார்கள். எனவே இம்மாதத்தில் புது வீடு கிரகப்பிரவேசம் நடத்தலாம்.

14. இம் மாதத்தை மாங்கல்ய மாதம் என்றும் கூறுவர்.

15. மாசி மக நட்சத்திரத்தில் பிறப்போர் ஜனத்தை ஆள்வர் என்பதும் மாசிக் கயிறு பாசி
படியும் என்பதும் பழமொழி. இம் மாதத்தில் பெண்கள் புது மாங்கல்யச் சரடு கட்டிக் கொள்வது சிறப்பானது.

16. மாசிமக புனித நீராடல் செய்ய இயலாதோர் மாசி மக புராணம் படிக்கலாம். அல்லது
கேட்கலாம் அதுவும் புண்ணியமே.

17. மாசி மகத்தன்று நெல்லையப்பர் கோவில் பொற்றாமரை தீர்த்தத்தில் திருநாவுக்கரசருக்கு தெப்ப
விழா நடத்துவர். இதற்கு அப்பர் தெப்பம் எனப் பெயர்.

18. மாசி மாதத்தில் அதிகாலை எழுந்து குளித்தபின் துளசியால் மகாவிஷ்ணுவை வழிபட்டால், வைகுண்டத்தில் இடம் கிடைக்கும்.

19. மாசிமக நாளில் அம்பிகையை குங்குமத்தால் அர்ச்சித்து வழிபடுபவர்களுக்கு, இன்பமும் வெற்றியும் தேடி
வரும்.

20. மாசி சுக்ல பஞ்சமியில் ஸ்ரீசரஸ்வதி தேவியை மணமுள்ள மலர்களால் அலங்கரித்து வழிபட்டால், கல்வியில் சிறந்து விளங்கலாம்.




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ


Message edited by Pattu - Friday, 14 Feb 2014, 6:45 PM
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » ஆன்மீகம் / நல்வழி » ஆன்மிகம் » மாசி மகம் (தோஷங்கள் போக்கும்)
  • Page 2 of 2
  • «
  • 1
  • 2
Search: