மாசி மகம் - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
  • Page 1 of 2
  • 1
  • 2
  • »
Forum moderator: Laya, Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » ஆன்மீகம் / நல்வழி » ஆன்மிகம் » மாசி மகம் (தோஷங்கள் போக்கும்)
மாசி மகம்
PattuDate: Friday, 14 Feb 2014, 5:58 PM | Message # 1
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
தோஷங்கள் போக்கும் மாசி மகம்

நாளை (15.02.2014) மாசி மகம். மகாவிஷ்ணு,
உமாமகேஸ்வரன், முருகன் ஆகிய 3 தெய்வங்களுக்கும்
உகந்த நாள் மாசி மகம்.
கும்ப ராசியில் சூரியன் இருக்கும் போது சந்திரன் சிம்ம ராசியில் மக
நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வார். இந்நாளே மாசி பவுர்ணமியுடன்
கூடிய மாசி மகமாக திகழ்கிறது.

உமா தேவியார் மாசி மாதம்  மக நட்சத்திரத்தில்தான் தட்சணின் மகள் தாட்சாயணியாக அவதரித்தார்
என்பதால் மிகவும் புண்ணிய நாளாக கருதப்படு கிறது. பெண்களுக்குரிய விரத
தினமாகவும் போற்றப்படுகிறது. பாதாளத்தில் இருந்த பூமியை பெருமாள்
வராக அவதாரம் எடுத்து வெளிகொணர்ந்த நாளும் மாசி மகத்தன்றுதான்.

இந்நாள் முருகப் பெருமானுக்கும் உகந்த நாளாகும். அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பன்
என்ற பெயரும் முருகனுக்கு உண்டு. இதற்கு காரணமான  தந்தைக்கு  முருகன் மந்திர உபதேசம்
செய்த நாளும் மாசி மகம்தான்.

இப்படி, முப்பெரும் தெய்வங்களுக்கு உகந்த இந்த நன்னாள்,தோஷம் நீக்கும் புண்ணிய நாளாக கருதப்படுகிறது. இந்நாளில் புண்ணிய ஸ்தலங்களை தரிசிப்பதும்,
புண்ணிய நதிகள், தீர்த்தங்களில் நீராடுவதும் பாவங்களை போக்கும் என்பது ஐதீகம்.

நதி, கடல், குளம், புண்ணிய தீர்த்தங்கள், கும்பகோணம், ராமேஸ்வரம் போன்ற இடங்களில் தர்ப்பணம்,
பிதுர் கடன் செய்வது நன்மை தரும்.

பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்து துன்பக் கடலில் இருக்கும் ஆன்மா, இறைவனது அருட்கடலை வேண்டும்
நாளே மாசி மகத்தின் சிறப்பு. இந்த  நாளை ‘கடலாடும்  நாள்‘ என்றும் ‘தீர்த்தமாடும் நாள்‘ என்றும் சொல்வார்கள். புண்ணிய இடங்களில் தீர்த்தமாட முடியாதவர்கள் விரதம் இருந்து  கோயிலுக்கு
சென்று உமாமகேஸ்வரனை தரிசிப்பர்.

தமிழகத்தை பொறுத்தவரை கும்பகோணத்தில் மாசி மகம் சிறப்பாககொண்டாடப்படுகிறது. வடஇந்தியாவில் கும்பமேளா என்ற  பெயரில் கொண்டாடுகிறார்கள். பிற ஸ்தலங்களில் செய்த பாவம் காசியில்
தீரும். காசியில் செய்த பாவம் கும்பகோணத்தில் நீங்கும் என்பதே கும்பகோணத்தின்  சிறப்பு.

ஆண்டுதோறும் மாசி மகம் வந்தாலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குருபகவான் சிம்ம
ராசியில் இருக்கும்போது வருவது மகா மகமாகும். அன்றைய தினம்  பல லட்சம் பேர்
மகாமக குளத்தில் நீராடுவர்.

மாசி மகம் பல்வேறுசிறப்புக்களை கொண்டது. இந்நாளில் மாணவர்கள் தங்கள் இஷ்ட தெய்வங்களை,
குலதெய்வங்களை வணங்கி பாடங்களை படித்தால் அறிவு விருத்தியாகும்.

மந்திர உபதேசம் பெறுவதும்மிகவும் சிறப்பாகும். கல்வி தொடர்பான செயல்களை
தொடங்க வேண்டும் என்றால் மாசி மகத்தில் தொடங்குவது நன்று.

தேவாரம், திருவாசகம், காயத்ரி மந்திரம், கந்த சஷ்டி கவசம் மற்றும் ஸ்தோத்திர
பாடல்கள், ராமாயணம், மகாபாரதம், கந்தபுராணம், விஷ்ணு புராணம்  போன்ற
புத்தகங்களை படிப்பது பலன் கொடுக்கும்.

நம்முன்னோர்கள் தாய், தந்தையர் ஆகியோரை நினைத்து அன்னதானம், ஆடைதானம் செய்யலாம்.  இதனால் குடும்பத்தில் ஒற்றுமையும், சுபிட்சமும் நிலவும்.

மாசி மாதத்தில் கிரகப்பிரவேசம்செய்தால் சகல பாக்யங்களும் ஏற்படும்.
வாடகை வீடு மாறவும்  உகந்த நாள் இது.

மாசி மாத சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகரை வழிபட்டால் தடைகள் விலகும். குழந்தை
பாக்யம் இல்லாதவர்கள், அடிக்கடி கருச்சிதைவு ஏற்படுபவர்கள் மாசி மகத்தில் விரதம்
இருந்து முருகப் பெருமானை வழிபட்டால் தோஷம் நீங்கி, குழந்தை பாக்யம் கிட்டும்.

திருச்செந்தூரில் மாசி மகம் மிகவும்பிரசித்தி பெற்றது. கடற்கரையில் முருகப் பெருமான் எழுந்தருளி
தீர்த்தவாரி நடக்கும். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் மெரினா  கடற்கரையில் எழுந்தருளி அருளாசி வழங்குகிறார்.

கடலூர்தேவனாம்பட்டினம் கடற்கரையில் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள், திரு
ப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் என ஈசனும், பெருமாளும் ஒன்றுகூடி எழுந்தருளி அருள்பாலிப்பது மிகவும் விசேஷம்.




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ


Message edited by Pattu - Friday, 14 Feb 2014, 6:07 PM
 
PattuDate: Friday, 14 Feb 2014, 6:00 PM | Message # 2
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
 மகத்துவம் மிகுந்த மாசி மகம் விரத கதை

மாசி மாதத்தில் வரும் மக நட்சத்திரத்தோடு கூடிய புண்ணிய காலம் மாசி மகம் ஆகும். ஈசனுடன் ஏற்பட்ட ஊடல் காரணமாக பார்வதி தேவி பூமியில் பிறக்கும்படி நேர்ந்தது. காளிந்தி நதியில் இருந்த தாமரைப் பூ ஒன்றில் வலம்புரிச் சங்கு வடிவமாய் இருந்தாள் அம்பிகை. அப்போது தக்கன் தன் மனைவி வேதவல்லியோடு அங்கு நீராட வந்தான்.

அவனது பார்வையில் வலம்புரிச் சங்கு பட்டது. அதனை எடுத்தபோது, அது அழகிய பெண் குழந்தையாயிற்று. இறைவியே குழந்தையாய் வந்த இத்தினம் மாசி மகம் ஆகும். ஆதி காலத்தில் அரசன் ஒருவன் இருந்தான். அவன் மிகவும் கொடியவனாக இருந்தான். நாட்டு மக்கள் அவனால் மிகவும் துன்பங்களை அனுபவித்து வந்தனர்.

இதனை நாட்டின் குருவால் சகித்துக் கொள்ள முடியவில்லை. எனவே அரசனை வெல்லும் பொருட்டு, அதற்கான உபாயத்தை கூறும் படி, ஒரு இரவு நேரத்தில் வருண தேவனிடத்தில் சென்றார், அந்த நாட்டின் குருவானவர். கானகத்தில் இருந்த வருணன் வருவது பகைவன் என்று எண்ணி, தனது பாசத்தை அவர் மீது வீசினான். உடனே குரு இறந்து போனார்.

அந்தக் கொலை பாவத்தால் பிசாசு வடிவம் ஒன்று அங்கு தோன்றியது. அது வருணனை இரண்டு கால்களோடு கைகளையும், கழுத்தோடு கூடும்படி கட்டி சமுத்திரத்தினுள் வீசி விட்டது. வருணன் அங்கே நெடுங்காலமாக துன்பத்தை அனுபவித்துக் கொண்டு விடுவிப்பார் இன்றி கட்டுண்டு கிடந்தான்.

வருணன் இல்லாத காரணத்தால் மண்ணுலகில் மழை வளம் இல்லாமல் மக்கள் பஞ்சத்தில் தவித்து வந்தனர். இதனால் விண்ணவர்களும், மண்ணுலகத்தினரும் சேர்ந்து சிவபெருமானை நோக்கி மனமுருக வேண்டித் துதித்தனர்.

அவர்கள் வேதனையை உணர்ந்து கொண்ட ஈசன், பல காலமாக சமுத்திரத்தில் கட்டுண்டு கிடக்கும் வருணனின் கட்டுக்களை அறுத்தெரிந்து அவனை விடுவித்தார். வருணன் எழுந்து சிவபெருமானை வணங்கி நின்றான். பின்னர் ஈசனிடம் வேண்டுகோள் ஒன்றையும் வைத்தான்.

‘ஐயனே! மாசி மகமாகிய இத்தினத்தில், நான் கட்டுண்டு துன்பப்பட்டு கிடந்த இந்தத் தலத்தில் இந்தத் துறையில் நீராடி இறைவனை வேண்டுபவர்களுக்கு பாசத்தை நீக்கி அவர்களுக்கு முக்தியைக் கொடுக்க வேண்டும். அன்றைய தினத்தில் ஐயனே!

தாங்கள் இந்தத் துறையில் எழுந்தருளல் வேண்டும்’ என்று வேண்டி பிரார்த்தித்து வரங்களைப் பெற்றான். இந்தச் சரித்திரத்தை வியாக்கிர பாத முனிவர், இரணியவர்மச் சக்கரவர்த்திக்குக் கூறினார். அவன் மாசி மகத் தினம் வர, அன்றையப் பொழுதில் சிதம்பரத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானுக்குக் கொடியேற்றி வைத்தான்.

அப்போது முனிவர்கள் முதலானவர்கள் வந்திருந்து விழாவைத் தரிசித்துக் ‘கனகசபைக்குத் தலைவரே! உங்களை எண்ணி வாழும் உயிர்கள் அனைத்துக்கும் அருள் செய்ய வேண்டும்’ என்று வேண்டினார்கள். பின்னர் தேவர்கள் அனைவரும் சேர்ந்து, சிவபெருமான் சமுத்திரத்திற்கு எழுந்தருளும் வழியை அலங்காரம் செய்தார்கள்.

சிவபெருமான் சமுத்திரத்திற்கு எழுந்தருளினார். வருணன் இதனைக் கண்டு ஈசனை எதிர்கொண்டு வணங்கினான். அவனுடன் சேர்ந்து மற்ற தேவர்கள் அனைவரும் சிவ பெருமானை வணங்கி வழிபட்டனர். சிவபெருமான் வருணனது பாசத்தை நீக்கியருளிய துறையிலே திருமஞ்சனமாடி அடியார்களுக்கு அனுக்கிரகம் செய்து கனகசபையினுள்ளே எழுந்தருளினார்.

சிதம்பரத்தில் உள்ள பத்துத் தீர்த்தங்களுள் பாசமறுத்த துறையும் ஒன்று. சிதம்பரத்தில் இருந்து சுமார் 2½ கிலோ மீட்டர் தொலைவில் இந்த துறை உள்ளது. மாசி மகம் தினத்தில் விரதமிருந்து பாசமறுத்த துறையில் தீர்த்தோற்சவம் வெகு சிறப்பாக நடைபெறும்.

இந்த தினத்தில் இறைவனை வழிபடுவதுடன் இத்துறையில் நீராடினால் பாவங்கள் விலகி ஓடும் என்பது நம்பிக்கை. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாசி மகத்தில் வரும் புண்ணிய நாள் மாமாங்கம் எனப்படும். கும்பகோணத்தில் இந்த விழா மிகவும் சிறப்பாக நடைபெறும்.




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Friday, 14 Feb 2014, 6:02 PM | Message # 3
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
மாசி மகம் என்றால் என்ன?

மாசி மகம் என்பது மாசி மாத பௌர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திர நாளில்
இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு சிறப்பான நாளாகும். அன்றைய
தினம் கடலாடும் விழா என்று கொண்டாடப்படுகிறது.

பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்து துன்பக்கடலில் மாய்ந்தழுந்தும் ஆன்மாவானது இறைவனது அருட்கடலாகிய இன்பவெள்ளத்தில் அமிழ்ந்து திளைக்கச் செய்யும் நன்நாளே மாசிமகக் கடலாடு தீர்த்தமாகும். தீர்த்தமாட இயலாதவர்கள் விரதமிருந்து கோயிலுக்குச் சென்று இந்நாளைக் கொண்டாடுவர்.

தமிழ்  நாட்டில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பகோணத்தில் கும்பேசுவரர் கோயிலில் மாசிமகத் திருவிழா (மகா மகம்) சிறப்பாக நடைபெறும். அன்று யமுனை,சரசுவதி, கோதாவரி, நர்மதா,
சிந்து, காவேரி போன்ற 12 நதிகள் மக்கள் கழுவிய பாவச்சுமைகளை அகற்றி  புனிதம் பெற
அங்கு வருவதாகவும். குரு சிம்ம ராசிக்கு வரும் இந்நாளில் எல்லோரும் கடலில்
நீராடி நற்பேறு பெறுவர் என்பதும் ஐதீகம்.

மாசி மாதம் சூரியன் கும்பராசியில் சஞ்சாரம் செய்வார், மக நட்சத்திரத்தில் சிங்கராசிக்குரியது. அன்று
சந்திரன் மக நட்சத்திரத்தில் சிங்கராசியில் சஞ்சரிப்பார். இந்நாளே மாசிமகம் எனப்படும்.

இத்தினத்தில் தீர்தோற்சவம் நடைபெறுவது வழக்கம், இந்தியாவில் கும்பகோணத்தில் மாசிமகம் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றது.

இதேபோல வட இந்தியாவில் கும்பமேளா என்ற பெயரில் சிறப்பாகக் கொண்டாடுகின்றார்கள்.

மாசி மகம் வழிபாடும் சிறப்பும்!

மக நட்சத்திரம் பெருமாளுக்கும் உகந்த நாள். நீர் நிலை உள்ள இடங்களில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுவது வழக்கம். இப்படி தீர்த்தவாரிக்கு பெயர் பெற்ற 108 திவ்யதேசங்களில் ஒன்று மகாபலிபுரம். இங்கு மாசி மகத்தன்று நீராடுவது ராமேஸ்வரத்தில் நீராடிய பலனைத் தரும். இதற்குக் காரணமானவர் புண்டரீக மகரிஷிதான்.

திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள பெருமாளின் காலடியில் அன்றலர்ந்த தாமரை மலரை வைத்து வணங்க வேண்டும் என்ற ஆவலில் இவர் மாமல்லை கடற்கரையில் மலரை வைத்துவிட்டு, பாற்கடலுக்கு வழி ஏற்பாடு செய்ய முயற்சித்தார். அதற்காக கடல்நீரை தொடர்ந்து இரைத்துக் கொண்டிருந்தார்.

இவரின் தளரா முயற்சியையும் தாளாத பக்தியையும் கண்ட திருமால் ஒரு முதியவராக உருக்கொண்டு முனிவரிடம் வந்து, எனக்கு பசியும் களைப்புமாக உள்ளது. ஊருக்குள் சென்று உணவு வாங்கி வாருங்கள். அதுவரை நானே கடல்நீரை உமக்காக இரைக்கிறேன் என்று அனுப்பினார்.

முனிவரும் உணவு வாங்கிவந்து பார்த்தபோது கடல் உள்வாங்கி இருந்தது. முதியவரைக் காணோம். அப்போது ஒரு குரல் கேட்டது. முனிவர் அவ்விடத்தைப் பார்க்க, தான் வைத்த மலரை பாதங்களில் வைத்துக்கொண்டு திருமால் தரையில் பள்ளிகொண்டு ரிஷிக்கு காட்சி தந்தார்.

ஸ்ரீமன் நாராயணனே தன் திருக்கரத்தால் நீர் இரைத்த இந்த அர்த்தசேது கடலில் மகத்தன்று நீராடுவது பெரும் புண்ணியம்.



Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ


Message edited by Pattu - Friday, 14 Feb 2014, 6:10 PM
 
PattuDate: Friday, 14 Feb 2014, 6:04 PM | Message # 4
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
மாசி மாதத்தில் என்ன சிறப்பு ?

தீர்த்த நீராடலுக்கு முக்கியத்துவம் தரும் விழா மாசி மகம் ஆகும்.
மாசி மாதத்தில் பவுர்ணமியை ஒட்டி  வரும் மகம் நட்சத்திரத்தில் இவ்விழா நடக்கும். தீர்த்தங்களுடன் அமைந்த பெரும்பாலான கோயில்களில் இந்நாளில் தெப்பத்திருவிழா நடக்கும். ஆண்
குழந்தை வேண்டுபவர்கள், இந்நாளில் முருகனை வேண்டி விரதமிருந்து வழிபடுவர்.

மக நட்சத்திரத்தை “பித்ருதேவதா நட்சத்திரம்” என்று அழைப்பார்கள். இந்த பித்ருதேவதாதான் முன்னோர்களுக்கு ஆத்ம சாந்தியை தருகிறது. முன்னோர்கள் ஆத்மசாந்தியுடன் இருந்தால்தான் அவர்களுடைய வம்சம் சுபிட்சமாக இருக்கும்.

உலகத்தை இறைவன் உருவாக்குவதற்கு முன், பித்ருதேவனை உருவாக்கிய பிறகே
தேவர்களையும், மனிதர்களையும் மற்ற ஜீவராசிகளையும் உருவாக்கினார் என்கிறது சாஸ்திரம். இதனால்
முதல் மரியாதையானது மக நட்சத்திரத்திற்கு உரிமை உடைய பித்ருதேவனுக்குதான்.

பித்ருக்களை குளிர்விக்க ஏற்ற நாள்

எந்த சுபநிகழ்ச்சி நடந்தாலும் பித்ருக்களை வணங்கினால் அந்த சுபநிகழ்ச்சி தடையில்லாமல் நடக்கும். பித்ருதேவனின் ஆசியும் கிடைக்கும். அதனால்தான் மாசிமகம் தினத்தன்று பித்ருக்களுக்கு பூஜை
செய்யவேண்டும்.

மாசிமகதினத்தன்று புனித நதிகளில் நீராடுவதை “பிதுர் மஹா ஸ்நானம்” என்கிறது சாஸ்திரம்.
மாசி மாதம் மக நட்சத்திர பவுர்ணமி தினத்தன்று திருண்ணாமலையில் கிரிவலம் செல்லும்போது வண்டாடி சித்தர்கள் என்பவர்கள், மனித வடிவில் பறந்து வருவர்.

ஆனால்,அவர்களின் வடிவம் ஒரு வண்டின் அளவுக்கு சிறியதாக இருக்கும். இந்த
வண்டாடி சித்தர்களின் கிரிவலப்பயணத்தை தரிசிக்கும் பாக்கியம் பெற்றவர்களின் பிரச்சினைகள் அடுத்த
சில மாதங்களில் (அபூர்வமாக சில நாட்களில்) தீர்ந்துவிடுகின்றன.




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ


Message edited by Pattu - Friday, 14 Feb 2014, 6:12 PM
 
PattuDate: Friday, 14 Feb 2014, 6:05 PM | Message # 5
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
மாசி மக கிரிவலம் – பன்மடங்கு பலன் தரக்கூடிய ஒன்று!

நீதித்துறையில் இருப்பவர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் போன்றோருக்கு நியாயமான பதவி
உயர்வுகளையும், சீரான புகழையும் அளிப்பதுடன் தர்மம், நியாயம், சத்தியம் தவறாது
நடப்பவர்களுக்கு உரிய தார்மீக ரீதியான கீர்த்தியும், விருதுகளும் பதவிகளும் மாசி
மகத்தன்று அண்ணாமலை கிரிவலம் செல்வதால் கிட்டும்.

கல்வித்துறையில் இருப்பவர்களுக்கும், மின்அணுத் துறையில் இருப்பவர்களுக்கும் பல்வேறு மேன்மைகளை இந்த மாசி பவுர்ணமி கிரிவலம் தரும். பல குடும்பங்களில் கணவன் தன்னுடன் அன்புடன் இருப்பதில்லை என்று ஏங்குகின்ற மனைவியின் ஏக்கத்தை நீக்கிட விரும்பும் இல்லத்தரசிகள் மாசி மாத பவுர்ணமி அன்று
தனது தாய் தந்தை அல்லது சகோதர சகோதரிகளுடன் அல்லது மகன் மகளுடன் கிரிவலம் வரலாம்.

அப்படி ஒரே ஒரு முறை மாசி மகத்துக்கு கிரிவலம் வந்தாலே கணவனின் பூரண அன்பு கிடைக்கும்.
முன்ஜென்ம வினைகள் தீர்க்கும் !

முன் ஜன்ம வினைகள் நீங்கவும், பிறருடைய சொத்துக்களை அபகரித்தவர்கள் மனம்
திருந்தி வாழவும், குடும்பத்தில் அழுத்தும் நீண்ட காலக்கடன்கள் தீரவும் இந்த
மாசி மாத பவுர்ணமி அன்று அண்ணாமலைக்கு கிரிவலம் செல்ல வருக! வருக!! வருக!!!
அண்ணாமலைக்கு வருக! அனைத்துவித வளங்களும் பெறுக!!!

மகம் நட்சத்திரம் மற்றும் சிம்ம ராசி அன்பர்கள் அவசியம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் !
குறிப்பாக மகம் நட்சத்திரத்தில் பிறந்த சிம்ம ராசி அன்பர்கள் அனைவரும் இந்த
மாசி மகத்தை – நல்ல முறையில் பயன் படுத்திக் கொள்வது அவசியம். அன்றைய
தினம் , இறை வழிபாடும், இறை தரிசனமும், அடுத்த ஒரு வருடத்திற்கு உங்களுக்கு தேவையான மன
வலிமையை தரும்.




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ


Message edited by Pattu - Friday, 14 Feb 2014, 6:15 PM
 
PattuDate: Friday, 14 Feb 2014, 6:16 PM | Message # 6
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
குந்தியும், மாசிமகமும்:

குந்திதேவிக்கு, சூரியன் மூலமாக கர்ணன் அவதரித்தான். திருமணமாவதற்கு முன் கர்ணனைப் பெற்ற குந்திதேவி, குழந்தையை ஒரு பெட்டியில் வைத்து ஆற்றில் விட்டாள். அந்தப் பாவம் அவளை உறுத்திக்கொண்டே இருந்தது. ஒரு நாள் ஒரு முனிவரைச் சந்தித்த குந்தி, கர்ணனை ஆற்றில் விட்ட பாவம் நீங்க பரிகாரம் கேட்டாள்.

அதற்கு முனிவர், மாசி மகம் அன்று ஏழு கடலில் நீராடினால் பாவம் விலகும் என்றார். ஒரே நாளில் எப்படி ஏழு கடல்களில் நீராட முடியும்? என்று இறைவனை வேண்டினாள் குந்தி. அப்போது, திருநல்லூர் கோயில் பின்புறம் ஒரு தீர்த்தம் உள்ளது. அதில் உனக்காக ஏழு கடல் தீர்த்தங்களை வரவழைக்கின்றேன்.

அந்தத் தீர்த்தத்தை ஏழு கடலாக நினைத்து மாசி மகம் அன்று நீராடு! என்று அசரீரி கேட்டது. குந்தியும் அப்படியே செய்து விமோசனம் பெற்றாள். அந்தத் தீர்த்தமே சப்த சாகர தீர்த்தம் ஆகும். இத்திருத்தலம், தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டம் திருநல்லூரில் உள்ள பஞ்சவர்ணேஸ்வரர் கோயில் ஆகும்.

நீராட உகந்த நாட்கள்:

 புனித தீர்த்தங்களில் எல்லாநாட்களும் நீராடலாம் என்றாலும், குறிப்பிட்ட நாட்களில் நீராடுவது சிறப்பானதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. மகாமக குளத்தில் நீராடுவதற்கு அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, வெள்ளிக்கிழமை, கார்த்திகை நட்சத்திரம், சிவராத்திரி, மாசிமகம், மகாமகம் ஆகிய நாட்கள் சிறப்பானதாகும்.



Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Friday, 14 Feb 2014, 6:17 PM | Message # 7
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
மாசி மகத்தன்று செய்யவேண்டியது என்ன?

மாசி மகத்தில் புண்ணிய தீர்த்தங்களைத் தரிசிப்பதும் தொடுவதும் பருகுவதும் அதில்
நீராடுவதும் புண்ணியத்தைத் தரும்; பாவங்கள் தொலையும். இத்தினத்தில்
தீர்த்தக் கரைகளில் தர்ப்பணம், பிதுர்க்கடன் ஆகியவை செய்தால், அவர்கள் பாவங்கள் நீங்கி
நற்கதி பெறுவர் என்பது நம்பிக்கை.

இந்த மாசி மக நட்சத்திரத்தன்று புனித நீர்நிலையில் நீராடினால் கிடைக்கும் பலன்கள் ஏராளம்.
தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் நீங்கும். உயர்ந்தவன்- தாழ்ந்தவன், ஏழை- பணக்காரன் என்ற
பாகுபாடின்றி அனைவரும் நீராடலாம். திருமணமானவர்கள் தங்கள் மனைவியுடன் நீராட
வேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது.

அன்றிரவு பௌர்ணமி வேளையில் விழித்திருந்து அம்மன் சன்னதிகளில் நடக்கும் பூஜைகள், அபிஷேக
ஆராதனைகளை தரிசிப்பது மிக்க நன்மை தரும்.

சதுரகிரி, திருவண்ணாமலை, திருநீர்மலை உள்ளிட்ட மலை ஷேத்ரங்களில் கிரிவலம் செல்வது சாலச்
சிறந்தது.




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ


Message edited by Pattu - Friday, 14 Feb 2014, 6:18 PM
 
PattuDate: Friday, 14 Feb 2014, 6:19 PM | Message # 8
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
மகாமகத்தன்று நீராடினால் என்னென்ன பாவம் நீங்கும்?

மகாமகத்தன்று முறைப்படி தீர்த்தமாடினால், பிரம்மஹத்தி (கொலை) தோஷம், கோயில் சொத்தை கொள்ளையடித்த பாவம், குடித்துவிட்டு புரிந்த பாவங்கள், விஷ்ணு துரோகம்,. சிவ துரோகம், திருடிய பாவம், பல பெண்களை மனதில் நினைத்தது, தம்பதிகளை பிரித்த பாவம், குடும்பங்கடைள சிதைத்த பாவம் ஆகியவை நீங்கும்.

காசியிலே பிறந்தாலும்..: புண்ணிய நதிகளில் நீராடினால் பாவம் தீரும் என்ற நம்பிக்கை காலம் காலமாக இருக்கிறது. அதுவும் கங்கையில் நீராடி, காசி விஸ்வநாதரை வழிபடுவது மிகவும் உயர்ந்தது என்கிறோம். ஆனால், காசியில் பிறந்தவர்கள் கூட, தங்கள் பாவத்தைப் போக்கிக் கொள்ள ஒரு புனிதமான தலம் இருக்கிறதா என்றால் அது கும்பகோணம் என்று தமிழர்கள் பெருமைப்படலாம்.

கும்பகோணத்தில் பிறந்தாலே போதும். காசிக்கோ இதர புண்ணியத்தலங்களுக்கோ செல்லத் தேவையில்லை. கும்ப கோணேக்ருதம் பாவம் கும்பகோணே விநச்யதி என்ற ஸ்லோகம் இதை நிரூபிக்கிறது. ஏனெனில், உலகிலுள்ள அத்தனை புண்ணிய நதி தேவதைகளும், தங்களிடம் சேர்ந்த பாவத்தை 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை, இங்குள்ள மகாமக குளத்தில் நீராடி தீர்க்க வருவதாக ஐதீகம்.

இந்த குளத்தில் மகாமகம் மட்டுமின்றி, ஒவ்வொரு மாசிமகத்திலும், இதர மாதங்களில் வரும் மக நட்சத்திர நாட்களிலும் நீராடி காசி செல்வதை விட உயர்ந்த புண்ணியத்தைப் பெறலாம்.




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Friday, 14 Feb 2014, 6:22 PM | Message # 9
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
கர்ண பரம்பரைக்கதை

முன்பு ஒருகாலத்தில் வருணபகவானைப் பீடித்த பிரகத்தி அவரை கடலுக்குள் ஒழித்து வைத்திருந்தது. வருணபகவான் சிவபெருமானை வேண்ட, அவரும் அவனைக் காப்பாற்றினார். அவனை விடுவித்த தினம் மாசிமகம் ஆகும். அப்போது வருணன் சிவபெருமனை அன்றைய தினத்தில் புண்ணிய தீர்தமாடுவோரின் பாவங்களை நீக்கி அவர்களுக்கு வீடுபேற்றை அருள்படி வேண்டினான். அவரும் அவ்வாறே வரமளித்தார்.

முன்பு ஒருகாலத்தில் பார்வதி சமேதராகக் கைலையில் எழுந்தருளி இருந்தார். அப்பொழுது உமாதேவியார் அரனாரை அஞ்சலி செய்து எம்பெருமானின் தத்துவநிலையைச் சாற்றியருளும் படி கேட்டார். அதற்குப் பரமசிவன் "தேவி, பேரும், குணமும், உருவமும், செயலும் இல்லாத நாம் சக்தியால் அருவுருவங்கொண்டு செயற்படுகின்றோம்" என்றார்.

இதனைக் கேட்ட பார்வதி தன்னால் தான் எல்லாம் நடைபெறுகிறது என்று பெருமைப்பட்டாள். அதனால் சிவபெருமான் தான் இன்றி ஏதும் ஏதும் இயங்காது என்று கூறித் தனித்து நின்றார்.

இதனால் உலகம் இயக்கமின்றி ஜடமாகியது. அம்பிகை அரனடியை வணங்கி எம்பெருமானே எல்லாம் நீரே என்று உணரப்பெற்றேன், கருணை புரிந்தருளுக என்று இறைஞ்சினார். அப்பொழுது சிவபெருமான் தான் தக்கனுகுக் கொடுத்த வரத்தை நிறைவேற்ற திருவுளங்கொண்டார்.

தேவியைப் பார்த்து உலகம் இயக்கமற்று இருந்த பாவம் உன்னையே சேரும் அப்பாவம் நீங்க நீயே யமுனை நதியில் வலம்புரிச் சங்குவடிவில் தவஞ்செய்யும்படி கட்டளையிட்டருளினார்.

அரனாரின் கட்டளைப்படி பார்வதி தேவியார் யமுனை நதியில் ஓர் தாமரை மலரில் வலம்புரிச் சங்கு வடிவில் தவஞ்செய்து கொண்டுருந்தார்.ஒரு மாசி மக நாளில் தட்ச பிரஜாபதி தனது மனைவி வேதவல்லியுடன் யமுனை நதியில் வந்து நீராடினான்.

அப்பொழுது அங்கு தாமரை மலரில் இருந்த வலம்புரிச் சங்கினைக் கண்டெடுத்தான். எடுத்த மாத்திரத்திலே அது பெண்ணுருவாயிற்று.

 இது சிவனாரின் வரப்படி பார்வதிதேவியாரே வந்தார் என உணர்ந்து வேதவல்லியுடன் கொடுத்து தம் அரண்மனைக்கு எடுத்துச் சென்றான். அம்பிகைக்கு தாட்சாயிணி என்று நாமகரணம் சூட்டி அன்புடன் வளர்த்தான் என்று கந்தபுராணம் கூறுகின்றது.

அம்பிகை மாசி மக நட்சத்திரத்தில் அவதரித்தால் மாசிமகம் பெருமை பெறுகின்றது.

மாசி மாதம் சூரியன் கும்பராசியில் சஞ்சாரம் செய்வார், மக நட்சத்திரத்தில் சிங்கராசிக்குரியது. அன்று சந்திரன் மக நட்சத்திரத்தில் சிங்கராசியில் சஞ்சரிப்பார். இந்நாளே மாசிமகம் எனப்படும். இத்தினத்தில் தீர்தோற்சவம் நடைபெறுவது வழக்கம்.

இந்தியாவில் கும்பகோணத்தில் மாசிமகம் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றது.




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Friday, 14 Feb 2014, 6:24 PM | Message # 10
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
மாசி மகம் கொண்டாடப்படுவது எப்போது?

குரு பகவான் சிம்மராசியில் பிரவேசிக்கும் போது வரும் மாசி மாதத்து நட்சத்திரமே. மகாமக தினமாகக் கொண்டாடப்படும். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த குரு பிரவேசம் நிகழும். இந்த நாளில் கும்பகோணம் மகாமக குளத்தில் நீராடினால், அனைத்து புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடிய பலன் கிட்டும்.

சுற்றி வந்தாலே போதும்: மகாமக குளத்தில் நீராட வேண்டுமென்ற அவசியம் இல்லை. அதை ஒரு முறை சுற்றி வந்தாலே, பாற்கடலைக் கடையும்போது மத்தாக இருந்த மேருமலையை நூறு தடவை சுற்றிய பலன் கிடைக்கும். இரண்டு முறை சுற்றினால் சிவலோகத்தை வலம் வந்த பலனும். மூன்று தடவை சுற்றி வந்தால், பிறப்பு என்பதே இல்லாத நிலையும் ஏற்படும்.

ஏழு வகை குடும்பத்திற்கும் விமோசனம்:

மகாமக குளத்தில் குடும்பத்திலுள்ள எல்லாரும் போய் நீராட வேண்டிய அவசியமில்லை. குடும்பத்தில் பயபக்தியுள்ள ஒருவர் மட்டும் நீராடினால், முந்தைய தலைமுறையினர் செய்த பாவம்,. இனி வரப்போகும் தலைமுறையினர் பாவம் செய்யாமல் புண்ணியங்களை சேகரித்துக் கொள்ளுதல் ஆகிய நற்பலன்கள் கிட்டும்.

தம்குடும்பம், தாய்வழி குடும்பம், தந்தை வழி குடும்பம், சம்பந்தி (பெண்ணை எடுத்தவர்) வழி குடும்பம், சிற்றன்னை குடும்பம், உடன் பிறந்தார் குடும்பம், தந்தையுடன் பிறந்த சகோதரிகள் குடும்பம், தாய்மாமன் மற்றும் பெண் கொடுத்த மாமனார் குடும்பம் ஆகிய ஏழு வகை குடும்பங்களும் பாவம் நீங்கி பரிசுத்தமாகும்.




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » ஆன்மீகம் / நல்வழி » ஆன்மிகம் » மாசி மகம் (தோஷங்கள் போக்கும்)
  • Page 1 of 2
  • 1
  • 2
  • »
Search: