அழகாக அறிவோம் ஆங்கிலம் !
|
|
RAWALIKA | Date: Wednesday, 29 Jan 2014, 2:51 PM | Message # 1 |
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
|
முழுமதி மணியன் படங்கள் : என்.ஜி.மணிகண்டன்
முதல் அத்தியாயத்தில் ப்ரொநவுன் (Pronoun) எனப்படும் பிரதிப் பெயர்ச்சொற்களை வாசிக்கவும் எழுதவும் கற்றுக்கொண்டோம். இப்போது, Noun&-ஐ தொடர்ந்து வருகின்ற Verb (வெர்ப்) எனப்படும் வினைச்சொல்லை வாசிக்கவும் எழுதவும் கற்றுக்கொள்வோமா?Verb-ல் இரண்டு வகை உண்டு. அவை Main Verb (மெயின் வெர்ப்) மற்றும் Helping Verb(ஹெல்ப்பிங் வெர்ப்) ஆகும். மெயின் வெர்ப் என்பதை வினைச்சொல் என்றும், ஹெல்ப்பிங் வெர்ப் என்பதை துணை வினைச்சொல் என்றும் குறிப்பிடலாம்.ஹெல்ப்பிங் வெர்ப்பற்றி முதலில் தெரிந்துகொள்வோம். ஏனென்றால், இந்தச் சொற்கள் ஒவ்வொரு வாக்கியத்திலும் வந்துகொண்டே இருக்கும். அடிக்கடி வரக்கூடிய சொற்களை வாசிக்கத் தெரிந்துகொள்ளும்போது, நமக்கு தன்னம்பிக்கை ஏற்படும். அது, நம் ஆங்கில வாசிப்புத் திறனை மேம்படுத்தும்.
Helping Verb :
‘do’ forms - do, does,
did ‘have’ form - have, has, had
இந்தச் சொற்கள் மெயின் வெர்ப் உடன் சேர்ந்து, செயல் நடைபெற்ற காலத்தை Tense (டென்ஸ்) உணர்த்தும் பணியைச் செய்கின்றன.
முதலில், இந்தச் சொற்களை வாசிக்கவும் எழுதவும் தெரிந்துகொள்வோம்.
பின்னர், இந்தச் சொற்களைப் பயன்படுத்துவதுபற்றி பார்த்துக்கொள்ளலாம்.
d,o - do(டு)(do என்பதன் பொதுவான அர்த்தம் - செய்)
d,o,e,s - does (டஸ்)
d,i,d - did(டிட்) ('லட்டு’ என்பதை வாசிக்கும்போது உண்டாகும் லபீடு உச்சரிப்பைப் போல், டிட் என்பதை உச்சரிக்க வேண்டும்)
h,a,v,e - have(ஹேவ்)
(have என்பதன் பொதுவான அர்த்தம் - பெற்றிரு)
h,a,s - has (ஹேஸ்)
h,a,d - had (ஹேட்)(ஹேட் என்பதில் 'ட்’-ஐ லபீடு உச்சரிப்பைப் போல் உச்சரிக்க வேண்டும்)
Message edited by RAWALIKA - Wednesday, 29 Jan 2014, 2:53 PM |
|
| |
RAWALIKA | Date: Wednesday, 29 Jan 2014, 2:54 PM | Message # 2 |
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
|
இனி, ஹெல்ப்பிங் வெர்ப்-ஐ எழுதிப் பழகுவோம். அடுத்த பக்கத்தில் உள்ள இரண்டு அட்டவணைகளிலும் பயிற்சி செய்யுங்கள். ஓர் அட்டவணைக்கு இரண்டு நாட்கள் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இது, ஹெல்ப்பிங் வெர்ப் சொற்களைத் தெளிவாகத் தெரிந்துகொள்ளும் வரை நடைபெற வேண்டும்.மேலே உள்ள இரண்டு அட்டவணைகளிலும் எழுத்துகளை உச்சரித்துக்கொண்டே எழுத வேண்டும். இந்தப் பயிற்சிக்குப் பிறகு, ஓர் ஆங்கில நாளிதழின் ஒரு பக்கத்தை எடுத்துக்கொண்டு, அதில் இந்தச் சொற்கள் எங்கெல்லாம் இருக்கின்றனவோ, அவற்றைப் பென்சிலால் வட்டமிடுங்கள். இதனால், ஹெல்ப்பிங் வெர்ப் சொற்களைப் பார்த்தவுடன் சொல்லும் திறன் உங்களுக்குள் வந்துவிடும்.நமக்குத் தெரிந்த தமிழ் மொழியின் உதவியுடன் மேற்கண்ட சொற்களை உச்சரித்தால், எளிதாகவும் விரைவாகவும் வாசிக்கலாம்.(தொடர்ந்து அறிவோம்...)
|
|
| |
RAWALIKA | Date: Wednesday, 29 Jan 2014, 2:55 PM | Message # 3 |
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
| அழகாக அறிவோம் ஆங்கிலம் !இதுவரை நீங்கள் 32 சொற்களை கற்றுக்கொண்டுள்ளீர்கள். புதிய புதிய சொற்களைக் கற்றுக்கொள்ளும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறதா?இப்போது அந்தச் சொற்களைவைத்து சின்னச் சின்ன வாக்கியங்களை வாசிப்போம். He is a boy.அவன் ஒரு சிறுவன்.He is a man.அவர் ஒரு மனிதர்.I am a student.நான் ஒரு மாணவன் / மாணவி.She was a girl.அவள் சிறுமியாக இருந்தாள்.she is a woman.அவர் ஒரு பெண்மணி.They are my friends.அவர்கள் என் நண்பர்கள்.They were my friends.அவர்கள் நண்பர்களாக இருந்தனர்.It is a good school.இது ஒரு சிறந்த பள்ளி.It is his bag.இது அவனுடைய / அவருடைய பை.Give me your pen.எனக்கு உன்னுடைய பேனாவைக் கொடு.May I help you?நான் உனக்கு உதவலாமா?Shall we meet you?நாங்கள் உங்களைச் சந்திக்கலாமா?I can singஎன்னால் பாட முடியும்.யாருடைய துணையும் இல்லாமலேயே வாசித்துவிட்டீர்களா... மிக நன்றாகக் கற்றுவருகிறீர்கள். வெரிகுட்!ஒருவேளை, இந்தச் சிறிய வாக்கியங்களை வாசிப்பதில் சிரமம் இருந்தால், ஆங்கிலம் நன்றாக அறிந்தவர்களின் உதவியை நாடுங்கள்.இந்த வாக்கியங்களை நன்றாகக் கற்றுக்கொண்ட பிறகு, அடுத்த நிலைக்கு நகரலாம்.மேலே குறிப்பிட்டுள்ள வாக்கியங்களில், நீங்கள் படித்த boy, man, student, girl, woman, friends, school, bag, pen, help, meet, sing ஆகிய வார்த்தைகளைச் சொல்லிக்கொண்டே எழுதிப் பழகுங்கள். அவ்வாறு செய்தால், உங்களது வாசிப்புத் திறன் இன்னும் மேம்படும்.அடுத்து, இந்தப் பகுதியில் ஆங்கில மொழியில் அடிக்கடி பயன்படுத்தப்படும் சில சொற்களை அறிந்துகொள்வோம்.as அஸ்): 'சிறுமியாக இருந்தாள்’ என்ற வாக்கியத்தில், 'ஆக’ என்பதன் பொதுவான அர்த்தத்துக்குப் பயன்படுத்தும் சொல்தான் as.an (ஆன்): 'ஒரு புத்தகம்’ என்று சொல்லும்போது வரும் 'ஒரு’ என்பதுதான் an ன் பொதுவான அர்த்தம்.at (அட்): 'அவன் பக்கத்தில் இருந்தால்’ என்ற வாக்கியத்தில் வரும் 'இல்’ என்பதன் பொதுவான அர்த்தம்தான் at.by (பை): 'கத்தியால் பழத்தை நறுக்கினாள்’ என்று சொல்லும்போது, அந்த வாக்கியத்தில் வரும் ஆல் (கத்தி ஆல் = கத்தியால்) என்பதுதான் byன் பொதுவான அர்த்தம்.in (இன்): 'உண்டியல் உள்ளே காசு இருந்தது’ என்ற வாக்கியத்தில் வரும் 'உள்’ என்பதன் பொதுவான அர்த்தம்தான் in..if (இஃப்): 'நீ நன்றாகப் படித்ததால், நல்ல மதிப்பெண் பெறலாம்’ என்ற வாக்கியத்தில், if என்ற சொல், 'அப்படி இருந்தால்’ என்கிற பொதுவான பொருளைத் தருகிறது.on (ஆன்): 'மேஜை மேலே பேனா இருந்தது’ என்ற வாக்கியத்தில், 'மேலே’ என்பதுதான் on-ன் பொதுவான அர்த்தம்.of (ஆஃப்): 'இது அவனுடைய பேனா’ என்ற வாக்கியத்தில் வரும் 'உடைய’ என்பதன் ஓர் அர்த்தம்தான் of..இந்தப் பகுதியில் கற்றுக்கொண்ட ஆங்கிலச் சொற்களை எப்போதும்போல் வாய்விட்டுச் சொல்லிக்கொண்டே நோட்டுப் புத்தகத்தில் எழுதிப் பழகுங்கள்.அத்துடன், இதுவரை நாம் கற்றுக்கொண்ட சொற்களைத் தொகுத்து வையுங்கள். அவற்றை அருகில் வைத்துக்கொண்டு, ஆங்கிலப் பத்திரிகையை எடுத்து, அதில் இடம்பெற்றுள்ள நீங்கள் படித்தச் சொற்களை அடையாளம் கண்டு, அவற்றைப் பென்சிலில் வட்டமிடுங்கள்.இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து செய்யும்போது, நீங்கள் படித்த சொற்கள் மனதில் ஆழமாகப் பதியும். அவை எந்தச் சூழலிலும் மறக்காது.- தொடர்ந்து அறிவோம்...
|
|
| |
RAWALIKA | Date: Wednesday, 29 Jan 2014, 2:55 PM | Message # 4 |
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
|
Message edited by RAWALIKA - Wednesday, 29 Jan 2014, 2:56 PM |
|
| |
RAWALIKA | Date: Wednesday, 29 Jan 2014, 2:57 PM | Message # 5 |
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
| அழகாக அறிவோம் ஆங்கிலம் !
Message edited by RAWALIKA - Wednesday, 29 Jan 2014, 2:58 PM |
|
| |
RAWALIKA | Date: Wednesday, 29 Jan 2014, 2:58 PM | Message # 6 |
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
|
|
|
| |
RAWALIKA | Date: Wednesday, 29 Jan 2014, 3:00 PM | Message # 7 |
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
| அழகாக அறிவோம் ஆங்கிலம் !
|
|
| |
RAWALIKA | Date: Wednesday, 29 Jan 2014, 3:01 PM | Message # 8 |
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
|
|
|
| |
RAWALIKA | Date: Wednesday, 29 Jan 2014, 3:02 PM | Message # 9 |
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
|
|
|
| |
RAWALIKA | Date: Wednesday, 29 Jan 2014, 3:04 PM | Message # 10 |
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
|
|
|
| |