வழிகாட்டி - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
  • Page 1 of 2
  • 1
  • 2
  • »
Forum moderator: Laya, Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பெற்றோர்களே உங்கள் குழந்தைகளுக்காக... » குழந்தைகளுக்காக... » வழிகாட்டி (மாணவர்களுக்கு தேவையான பயனுள்ள குறிப்புகள்)
வழிகாட்டி
srkDate: Sunday, 09 Feb 2014, 9:54 AM | Message # 1
Major general
Group: *Checked*
Messages: 304
Status: Offline
TANCET நுழைவுத்தேர்வு (சில அடிப்படை தகவல்கள்)


தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் MBA., MCA., எம்.இ., M.Tech., M.Arch., M.Plan போன்ற படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் சேர விரும்பும் மாணவர்கள் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வை (TANCET) எழுத வேண்டும். பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும் இந்தநுழைவுத் தேர்வை எழுதலாம். ஆனால், மாணவர் சேர்க்கை விதிமுறைகள் அந்தந்தப் பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனங்களைப் பொருத்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத் துறைகள் மற்றும் அதன் மண்டல மையங்கள், அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகள், சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் உள்ள இடங்களில் எம்.பி.ஏ., சேர விரும்பும் மாணவர்கள் இந்த நுழைவுத் தேர்வை எழுதலாம். எம்.பி.ஏ., படிப்பில் சேர ஏதாவது பட்டப் படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இடஒதுக்கீட்டுப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் குறைந்தது 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ படித்து விட்டு மூன்று ஆண்டுகள் பட்டப் படிப்பு படித்தவர்கள், பத்தாம் வகுப்பு, மூன்று ஆண்டு டிப்ளமோ படித்துவிட்டு மூன்று ஆண்டுகள் பட்டப் படிப்புப் படித்தவர்கள், பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., பி.பார்ம் படித்தவர்கள், ஏ.எம்.ஐ.இ., படித்து முடித்த பிறகு இரண்டு ஆண்டுகள் முழு நேர ஆசிரியர் அனுபவம் பெற்றவர்கள் எம்.பி.ஏ., படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வை எழுத விண்ணப்பிக்கலாம்.

பிளஸ் டூ நிலையில் கணிதத்தை ஒரு பாடமாக எடுத்துப் படித்து ஏதாவது மூன்று ஆண்டுகள் இளநிலைப் பட்டம் பெற்றவர்கள் எம்.சி.ஏ., படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வை எழுத விண்ணப்பிக்கலாம். பட்டப்படிப்பில் பொதுப் பிரிவினர் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இடஒதுக்கீட்டுப் பிரிவினர் குறைந்தது 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு படித்து விட்டு பிளஸ் டூ படித்துவிட்டு மூன்று ஆண்டுகள் அல்லது நான்கு ஆண்டுகள் பட்டப் படிப்பைப் படித்தவர்கள் இந்த நுழைவுத் தேர்வை எழுதலாம். பத்தாம் வகுப்பு படித்துவிட்டு மூன்று ஆண்டுகள் டிப்ளமோ படித்து, அதன் பிறகு மூன்று ஆண்டுகள் பட்டப் படிப்பைப் படித்த மாணவர்களும் இந்த நுழைவுத் தேர்வை எழுதலாம்.

MCA Lateral Entry படிப்பில் சேர விரும்புபவர்களும் இந்த நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். பிளஸ் டூ நிலையில் கணிதத்தை ஒரு பாடமாக எடுத்து பி.சி.ஏ., இன்பர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடங்களில் பி.எஸ்சி., பட்டம் பெற்றவர்களும் இந்த நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். பட்ட நிலையில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இடஒதுக்கீட்டுப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் குறைந்தது 45 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். இந்த லேட்டரல் என்ட்ரி எம்.சி.ஏ., படிப்புக்கு அரசிடம் அனுமதி பெறுவதைப் பொருத்து அட்மிஷன் இருக்கும் என்பதை மாணவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

எம்.பி.ஏ., நுழைவுத் தேர்வு இரண்டு மணி நேரம் நடைபெறும். அப்ஜெக்ட்டிவ் முறையில் நூறு வினாக்கள் கேட்கப்படும். புள்ளி விவரங்களை ஆராய்ந்து, அதனைப் பயன்படுத்தி பிசினஸ் முடிவுகளை எடுத்தல், காம்பிரிஹென்ஷன் அடிப்படையிலான கேள்விகள், பிளஸ் டூ நிலையில் படித்தவை உள்பட பட்ட வகுப்பு நிலையில் கணக்குகளைத் தீர்க்கும் திறன், ஆங்கில மொழி அறிவு போன்றவை குறித்து வினாக்கள் கேட்கப்படும்.

எம்.சி.ஏ., நுழைவுத் தேர்வில் அப்ஜெக்ட்டிவ் முறையில் நூறு வினாக்கள் கேட்கப்படும். அதற்கு விடையளிக்க இரண்டு மணி நேரம் வழங்கப்படும். குவாண்டிடேட்டிவ் எபிலிட்டி, அனலிட்டிக்கல் ரீசனிங், லாஜிக்கல் ரீசனிங், கம்ப்யூட்டர் அவேர்னஸ் ஆகிய பிரிவுகளுடன் வெர்பல் ஆக்டிவிட்டி, பேசிக் சயின்ஸ் போன்றவற்றிலிருந்தும் கேள்விகள் கேட்கப்படும்.

எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு வினாத்தாளில் மூன்று பகுதிகள் உள்ளன. முதல் பகுதியும் இரண்டாவது பகுதியும் அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயமானது. மூன்றாவது பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள 14 சிறப்புப் பாடப்பிரிவுகளில் ஏதாவது ஒரு பிரிவைத் தேர்வு செய்து எழுத வேண்டும். முதல் பகுதியில் 30 வினாக்கள் கேட்கப்படும். அதற்கு 30 மதிப்பெண்கள். இரண்டாவது பகுதியில் 45 வினாக்கள் கேட்கப்படும். அதற்கு 30 மதிப்பெண்கள். மூன்றாவது பகுதிக்கு 40 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

ஏற்கெனவே இளநிலைப் பட்டம் பெற்றவர்கள் மட்டுமல்ல, தற்போது இறுதியாண்டில் இறுதி செமஸ்டர் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களும் இந்த நுழைவுத் தேர்வை எழுத விண்ணப்பிக்கலாம்.


Life is God's Gift
 
srkDate: Sunday, 09 Feb 2014, 10:04 AM | Message # 2
Major general
Group: *Checked*
Messages: 304
Status: Offline
2,269 பணியிடங்களுக்கு நேர்முகத்தேர்வு இல்லாத குரூப்–2 தேர்வுக்கு TNPSC அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க மார்ச் மாதம் 5–ந்தேதி கடைசி நாள்.

தமிழக அரசுத்துறைகளில் காலி பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அதன்படி இந்த வருடம் நடத்த உள்ள தேர்வுகள் விவரத்தை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் ஏற்கனவே அறிவித்தார்.

அதன்படி நேர்முகத்தேர்வு அல்லாத குரூப்–2 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தேர்வில் 2 ஆயிரத்து 269 பணியிடங்கள் உள்ளன. தமிழ்நாடு சட்டசபை எழுத்தர் பணி, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய உதவியாளர், சமூகநலத்துறை உதவியாளர், காவல்துறை உதவியாளர், வருவாய்த்துறை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப இந்த தேர்வு நடத்தப்பட உள்ளது.

ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்

இதற்கான தேர்வு மே மாதம் 18–ந்தேதி நடத்தப்பட இருக்கிறது. ஆன்லைன் வழியாக தேர்வாணைய இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும். குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாக இருக்கவேண்டும். சிறைச்சாலை, போலீஸ், மருத்துவம், கிராம சுகாதார பணிகள்,போக்குவரத்து கழகம், பதிவுத்துறை, தொழிலாளர் நலம், நெடுஞ்சாலைத்துறை, வரலாற்றுத்துறை உள்ளிட்ட பல துறைகளில் உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பட்டப்படிப்பு படித்திருந்தாலும் போதும். வருவாய் நிர்வாகத்துறை உதவியாளர் பணியிடத்திற்கு பி.இ. படிப்பு தகுதி ஆகாது. பி.ஏ., பி.எஸ்சி., பி.காம் போன்ற மற்ற பட்டப்படிப்புகள் தகுதியானது. தேர்வு எழுத மையங்கள் தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மே மாதம் தேர்வு

எப்படி விண்ணப்பிக்கவேண்டும் என்ற முழு விவரமும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் உள்ளது. விண்ணப்பிக்க மார்ச் மாதம் 5–ந்தேதி கடைசி நாள். எழுத்து தேர்வு மே மாதம் 18–ந்தேதி காலை 10 மணி முதல் 1 மணிவரை நடைபெறும். இந்த தேர்வு ஆப்ஜெக்டிவ் முறையாகும். அதாவது ஒரு கேள்விக்கு 4 பதில்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் ஒன்று மட்டும் சரியான விடையாக இருக்கும். அதை டிக் செய்ய வேண்டும்.

மேலதிக விபரங்களுக்கு:

Group II full informations PDF


Life is God's Gift
 
srkDate: Sunday, 09 Feb 2014, 10:10 AM | Message # 3
Major general
Group: *Checked*
Messages: 304
Status: Offline
Chartered Accountant படிப்பு

பத்தாண்டுகளுக்கு முன் கல்லூரி முடித்தவர்கள் மட்டுமே சி.ஏ., படிக்க முடிந்தது. இன்றைய நிலையில், 12ம் வகுப்பை முடித்த ஒரு மாணவர், சி.ஏ. படிப்பை மேற்கொள்ள முடியும். மேலும், முன்பு ஐந்தரை வருடங்களாக இருந்தப் படிப்பு, தற்போது 4 வருட படிப்பாக மாறியுள்ளது..

பி.காம்., பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்ணும், மற்ற இளநிலை பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெறுவோர், இனி சி.ஏ., படிக்க, CPT நுழைவுத் தேர்வு எழுதத் தேவையில்லை.

மேல்நிலைப் பள்ளிப் படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களை பெற்ற மாணவர்கள் CPT( Common Proficiency Test) தேர்வுக்கு தகுதிபெறுவார்கள். ஆப்ஜெக்டிவ் முறையிலான இந்த தேர்வில், நெகடிவ் மதிப்பெண்கள் உண்டு. இந்த தேர்வில், அக்கவுண்டிங் அடிப்படைகள், வணிகச் சட்டங்கள், பொது பொருளாதாரம் மற்றும் எண்ணிக்கை அடிப்படையிலான திறனாய்வு உள்ளிட்ட பிரிவுகளில் கேள்விகள் கேட்கப்படும்.

இதன்பிறகு, 9 மாதங்கள் கழித்து, Integrated Professional Competence Course(IPCC) என்ற தேர்வை எழுத வேண்டும். இந்த தேர்வானது 2 பிரிவுகளைக் கொண்டது. முதல் பிரிவில் 4 தாள்களும், இரண்டாவது பிரிவில் 3 தாள்களும் உள்ளன. இந்த இரண்டு பிரிவு தேர்வையும் முடித்தப் பிறகு, ஒருவர் இறுதி நிலைக்கு செல்லலாம்.

சி.ஏ., படிப்புக்கென தனியாக கல்லூரி கிடையாது. வீட்டிலிருந்து தான் படிக்க வேண்டும். படிக்கும் போது, ஆடிட்டரிடம் உதவியாளராக சேர்ந்து மாதம் 3000 ரூபாயிலிருந்து உதவித்தொகை பெறலாம். சி.ஏ., முடித்த உடனேயே பி.எச்டி., படிப்பில் சேரலாம். மற்ற படிப்புகளுக்கு இந்த சலுகை கிடையாது. தேர்ச்சி பெற்ற பின், நிறுவனங்கள் வீடு தேடி வந்து வேலை வாய்ப்பை வழங்கும்.

வேலை செய்ய விருப்பமில்லாதவர்கள் தனியாக பயிற்சி செய்யலாம். இந்தியாவில் சி.ஏ., படித்தவர்கள் 10 லட்சம் பேர் தேவை. தற்போது 1.65 லட்சம் பேர் மட்டுமே உள்ளனர். மிகப்பெரிய இடைவெளி இருப்பதால், வேலைவாய்ப்புகள் குவிந்துள்ளன.

நான்காண்டு கடின உழைப்பு வாழ்க்கை பாதையை வசதியானதாக மாற்றிவிடும். 24 மணி நேரம் என்பது அனைவருக்கும் கொடுக்கப்பட்ட பொதுவான சொத்து. அதை பொழுதுபோக்குக்காக அதிகம் செலவிடாமல், படிப்புக்காக மாற்றிக் கொள்ள வேண்டும். வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமென நினைத்தால், பொழுதுபோக்குகளை தள்ளிவிட வேண்டும். 17 வயதில் படித்து 21 வயதில் மாதம் லட்சங்களில் சம்பளம் கிடைக்கும் ஒரே படிப்பு சி.ஏ., தான்,

ஒரு நிறுவனத்தை வெற்றிகரமாக இயக்கத் தேவைப்படும் திறன் சி.ஏ., படித்தவர்களிடம் அதிகமாக உள்ளது. சி.ஏ., படித்தவர்களே இந்திய நிறுவனங்களுக்கான சிறந்த தலைவர்களாக அடையாளம் காணப்படுகின்றனர். நிறுவனத்தின் வளர்ச்சிக்குத் தேவைப்படும் உடனடி முடிவுகளை சி.ஏ., படித்தவர்களால் எளிதாக எடுக்க முடியும்.

நிதி தொடர்புடைய அம்சங்களில் தெளிவு, ஸ்திரத்தன்மை, , மாற்றம் பெறும் வரிவிதிப்பு முறைகள், பொருள்களுக்கான விலையினை நிர்ணயித்தல் போன்ற பணிகளில் சி.ஏ பணியை திறம்பட மேற்கொள்ளலாம் .


Life is God's Gift
 
srkDate: Sunday, 09 Feb 2014, 10:14 AM | Message # 4
Major general
Group: *Checked*
Messages: 304
Status: Offline
பேச்சுலர் ஆஃப் பார்மசிஸ்ட் என்பது நான்கு ஆண்டு பட்டப்படிப்பு. இது மருந்து தயாரிப்பு, விநியோகம், ஆராய்ச்சி வரையிலான பாடப் பிரிவுகளை உள்ளடக்கியது. இதில் மேற்படிப்புகளாக மெடிசன்ஸ் கெமிஸ்ட்ரி, பார்மா டெக்னாலஜி, இன்டஸ்ட்ரியல் பார்மசி, பார்மாசூட்டிக்கல் ஆகியவற்றை படிக்கலாம். இதன்மூலம் ஆராய்ச்சி நிலையம், ஆய்வுக் கூடம், மருந்து தரக் கட்டுப்பாட்டுத் துறை, மருந்து உற்பத்தித் துறைகளில் வேலைவாய்ப்பு கிடைக்கும். இதுதவிர, எம்.பி.ஏ. இன் பார்மா மேனேஜ்மென்ட் படிக்கலாம். இப்படிப்புகள் சென்னை, மற்றும் மதுரை அரசு கல்லூரிகளிலும், 32 தனியார் கல்லூரிகளிலும் உள்ளன. அரசு கல்லூரியில் ரூ.1200-ம், தனியார் கல்லூரியில் 28 ஆயிரமும் செலவாகும்.

பிசியோதெரபி பட்டப் படிப்பு, நான்கரை ஆண்டுகள் கொண்டது. 6 மாதம் இன்டன்ஷிப் கட்டாயம். இதில் பெண்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பு கிடைக்கும். ஏனெனில் பெண்கள், பெண் பிசியோதெரபிஸ்ட் மூலமே சிகிச்சை பெற விரும்புவர். இதிலும் மாஸ்டர் ஆஃப் பிசியோதெரபி இன் ஆர்த்தோ, ஸ்போர்ட்ஸ் நியூரோ சயின்ஸ், கார்டியோரிஸ்ட், ரெஸ்பெரடரிஸ் சயின்ஸ், பீடியாட்ரிக்ஸ் உள்ளிட்ட மேற்படிப்புகளுக்கு வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. தமிழகத்தில் இரு அரசுக் கல்லூரிகளிலும், 22 தனியார் கல்லூரிகளிலும் இந்தப் பாடப் பிரிவு உள்ளது. பிசியோதெரபி படிக்க விரும்புபவர்கள், கவுன்சலிங் செல்லும்போது, மருத்துவமனை சார்ந்த கல்லூரிக்கு முக்கியத்துவம் அளிப்பது நலம்.

பேச்சுலர் ஆஃப் ஆடியாலஜி ஸ்பீச் லேங்குவேஜ் பெத்தாலஜி (பி.ஏ.எஸ்.எல்.பி.) என்பது ஐந்தாண்டு பட்டப் படிப்பு. இதில் ஒரு ஆண்டு இன்டன்ஷிப் கட்டாயம். சென்னை மருத்துவக் கல்லூரியில் மட்டுமே இது இருப்பதால் இதற்கு கடும் போட்டி நிலவுகிறது.

திக்குவாய், குரல் சீரமைப்பு மற்றும் பேச்சுத் திறன் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது குறித்த படிப்பு இது. இதற்கு இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் அமோக வேலைவாய்ப்பு உள்ளது.


Life is God's Gift
 
srkDate: Tuesday, 11 Feb 2014, 8:52 AM | Message # 5
Major general
Group: *Checked*
Messages: 304
Status: Offline
B.E Electronics & Communication Engineering  படிப்பை முடித்தவர்களில் 80 சதவீதம் பேர் ஐடி நிறுவனங்களில் பணிக்குச் செல்கின்றனர்.

ஐடி நிறுவனங்களுக்கு இணையாக பல்வேறு துறைகளிலும் இதற்கான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. பட்டமேற்படிப்பு, சான்றிதழ் படிப்பு மூலம் தரமான வாழ்வை பெறலாம்.

தேசிய அளவில் நடத்தப்படும் கேட் உள்ளிட்ட தகுதித் தேர்வு மூலம் பொது நிறுவனங்களில் உயர்ந்த பதவியை அடைய முடியும். எம்.இ. / எம்.டெக் பட்டமேற்படிப்பில் VLST டிசைன், மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் டிசைன் அண்டு டெக்னாலஜி, பவர் எலக்ட்ரானிக்ஸ், ஃபைபர் ஆப்டிக்கல் அண்டு லைட்வேவ் இன்ஜினீயரிங் ஆகியன கூடுதல் வாய்ப்பு கொடுக்கக்கூடிய பட்டமேற்படிப்புகளாகும்.

RS அண்டு மைக்ரோ வேவ் இன்ஜினீயரிங், டெலிகம்யூனிகேஷன் சிஸ்டம் படிப்புகள் நல்ல பணி வாய்ப்பு அளிக்கக் கூடியவை. ஆட்டோமொபைல் துறையில் உயர் பதவிக்கு செல்ல, ஆட்டோமேடிவ் இன் எலக்ட்ரானிக்ஸ் படிக்கலாம். இது வேலூர் விஐடி கல்வி நிறுவனத்தில் உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள அப்லைடு எலக்ட்ரானிக்ஸ், மெடிக்கல் எலக்ட்ரானிக்ஸ் படிப்புகள், புதிய புதிய மருத்துவ பரிசோதனை கருவிகளை கண்டுபிடிக்க வாய்ப்பளிக்கிறது.

எம்.இ. கம்யூனிகேஷன் நெட்வொர்க்கிங், ஏவியானிக்ஸ் உள்ளிட்டவை சிறந்த பட்டமேற்படிப்புகளாக உள்ளன. எலக்ட்ரானிக் அண்டு கம்யூனிகேஷன் படிக்கும்போதே, MOS டிரான்சிஸ்டர் ஆபரேஷன், CNOS சர்க்யூட்ஸ், லாஜிக்கேட்ஸ் ஃபிலிப்ஃபிலாப்ஸ், ஆபரேஷனல் ஆம்னிஃபயர், ஃபீட்பேக் ஆம்னிஃபயர் உள்ளிட்ட சிறப்பு பாடங்களில் நல்ல திறனையும் அறிவையும் வளர்த்துக் கொள்வதால், பல்வேறு நிறுவனங்களில் பணியாற்ற அழைப்பு விடுக்கின்றனர்.

பட்டமேற்படிப்பில் விருப்பமில்லாதவர்கள், குறைந்தகால சான்றிதழ் படிப்பு மூலம் நல்ல பணிக்குச் செல்லலாம். DSP (டிஜிட்டல் சிக்னல் பிராஸசிங் சிஸ்டம் டிவைன்), அட்வான்ஸ் டிப்ளமோ ரியல் டைம் ஆப்ரேடிங் சிஸ்டம், சர்டிபிகேட் கோர்ஸ் வெரிலாக் அண்டு VHDL, அட்வான்ஸ் புரோகிராம் இன் வயர்லெஸ் டெக்னாலஜி, அட்வான்ஸ் டிப்ளமோ இன் ஆப்டிக்கல் ஃபைபர் கம்யூனிகேஷன், பிஜி டிப்ளமோ இன் மொபைல் கம்ப்யூட்டிங், அட்வான்ஸ் டிப்ளமோ இன் டெலிகாம் புரோட்டாகால் டெவலப்மென்ட், பிஜி டிப்ளமோ இன் இன்டிரஸ்டியல் ஆட்டோமேடிவ் சிஸ்டம் டிசைன் உள்ளிட்ட சான்றிதழ் படிப்புகளை முடிப்பவர்களுக்கு, ஐடி துறைக்கு இணையான பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்களில் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும்.

விமானங்களின் வரவு அதிகமாகியுள்ள நிலையில், வான் வெளி வழித்தடங்களுக்கான கட்டுப்பாடு அறைகளில் பணியாற்ற கூடிய பட்டமேற்படிப்புகள் உள்ளன. இதில் விருப்பமுள்ளவர்கள் ஏர் டிராஃபிக் கன்ட்ரோல் கோர்ஸ் எடுத்து படிக்கலாம். ஆண்டுக்கு ஒரு முறை ஏடிசி மூலம் சிவில் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. வளர்ந்து வரும் கணினி யுகத்தில் நானோ டெக்னாலஜிக்கு மிகப்பெரும் எதிர்காலம் உள்ளது. கோவை, கொச்சியில் உள்ள அமிர்தா பல்கலை.யில் எம்.டெக் நானோ சயின்ஸ் அண்டு டெக்னாலஜி படிப்புகள் உள்ளன.

தரமான வாழ்க்கை அளிக்கக் கூடிய பட்டமேற்படிப்புகளை தேர்வு செய்வதன் மூலம் எளிதில் நல்ல வேலைவாய்ப்பை பெறலாம்.

இணையத்திலிருந்து.........


Life is God's Gift
 
NathasaaDate: Tuesday, 11 Feb 2014, 4:20 PM | Message # 6
Major general
Group: *Checked*
Messages: 360
Status: Offline
Hi srk
many thanx for this informative thread
 
srkDate: Wednesday, 12 Feb 2014, 10:24 AM | Message # 7
Major general
Group: *Checked*
Messages: 304
Status: Offline
Quote Nathasaa ()
many thanx for this informative thread

Thank you Nathasaa for visiting this thread......... smile


Life is God's Gift
 
srkDate: Wednesday, 12 Feb 2014, 10:36 AM | Message # 8
Major general
Group: *Checked*
Messages: 304
Status: Offline
எதை படித்தால் என்ன ஆகலாம்....?

கல்வி சம்பந்தமாக ஒரு படம் இதில் ஒரு மாணவன் மாணவி 10,11,12,படிப்பு முடித்து எந்த மாதிரியான கல்வி பயின்றால் எத்தனை வருடம் என்ன படிப்பு படிக்கலாம் என்ற விபரம் உள்ளது.

இதை அனைவரும் உங்களுக்கு தெரிந்த அனைத்து 10,11,12,படிப்பு படிக்கும் மாணவ மாணவிகளிடம் பகிர்ந்து கொள்ளலாமே!!!!

நன்றி பதிவிட்டவருக்கு  



Life is God's Gift
 
srkDate: Thursday, 13 Feb 2014, 8:39 AM | Message # 9
Major general
Group: *Checked*
Messages: 304
Status: Offline
படித்து பட்டம் பெற்ற மாணவர்கள் மத்தியில் வேலைக்கான நேர்முகத் தேர்வுக்கு செல்லும் போது ஒரு வித அச்சம் நிலவுகிறது. நேர்முகத் தேர்வில் எந்த மாதிரியான கேள்விகள் கேட்பார்கள், அதற்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என உள்ளத்தின் ஓரத்தில் பயம் இருந்து கொண்டு தான் இருக்கும்.இதை களைவதற்காக நேர்முகத் தேர்வில் பொதுவாக கேட்கப்படும் 10 கேள்விகளும், அதற்கான பதில்களும்......... 

Top 10 HR Interview Questions with Answers For Freshers & Experienced

Here is the list of top 10 Human Resource interview questions which are commonly asked in each and every HR interview.

HR Interview is almost the last round of selection process in any company or organization. When this stage comes, the first question comes in every job seekers mind is that what sort of questions will interviewer ask in the HR interview? Tackling the questions of the interviewer and putting them in clear sentences is a major and challenging task especially to the freshers who didn't has no prior experience.

Question 1. Tell me about yourself

Answer: It is the most often asked question in interviews and also the most tricky question. Start by telling why you are well qualified for the position. Remember, always match your educational & experience qualification to what the interviewer is looking for. In other words you should give information what the interviewer is looking for. Be careful that it should not seem rehearsed.

Question 2. What are your greatest strengths?

Answer: Number of answers are good to give, but in positive manner. Some good instances are:

About your problem solving skills, ability to work hard, professional expertise, leadership skills, positive attitude etc.

Question 3. Do you have any blind spots?

Answer: Disguise your strength as a weakness. Beware this is an eliminator question, designed to shorten the candidate list.

Question 4. Why should I hire you?

Answer: Try to know the interviewer’s greatest needs and demands, this question will give you advantage over other candidates and give him best facts for hiring you than someone else.

Question 5. Why did you leave your last job?

Answer: Always answer in a positive manner regarding reason. Never talk negatively or badly about your previous organization. If you do, you will cut a sorry figure. Give suitable reasons for leaving last job.


Life is God's Gift
 
srkDate: Thursday, 13 Feb 2014, 8:41 AM | Message # 10
Major general
Group: *Checked*
Messages: 304
Status: Offline
Question 6. Where do you see yourself five years from now?

Answer: Don’t be too specific. Make assure interviewer that you wanna make a long-term commitment with the organization and this is the exact position you are looking for.

Question 7. Describe your management style?

Answer: Tell about some common labels as progressive or consensus etc. can have several meanings or descriptions depending on which management expert you listen to. The situational style is safe, and fits to all.

Question 8. Are you a team player?

Answer: Of course, I’m a team player. Always say this and should have examples ready. Tell that you often perform for the good of the team rather than mean is good evidence of your team attitude.

Question 9. How would you be an asset to our organization?

Answer: Highlight and let them know about your strengths. This is the exact question where you can win their heart and with confidence.

Question 10. Do you have any questions for me?

Answer: Always have some questions prepared for the interviewer. How soon will I be able to be join? etc


All the very best for your HR Interviews


Life is God's Gift
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பெற்றோர்களே உங்கள் குழந்தைகளுக்காக... » குழந்தைகளுக்காக... » வழிகாட்டி (மாணவர்களுக்கு தேவையான பயனுள்ள குறிப்புகள்)
  • Page 1 of 2
  • 1
  • 2
  • »
Search: