தமிழ் சினிமா - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
Forum moderator: Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » மனதிற்கு பிடித்த பொழுதுபோக்கு » சினிமா » தமிழ் சினிமா (படங்களை பற்றிய உங்கள் கருத்துக்களை பகிரவும்.)
தமிழ் சினிமா
JeniliyaDate: Monday, 03 Feb 2014, 1:03 PM | Message # 1
Private
Group: Moderators
Messages: 19
Status: Offline
படங்களை பற்றிய உங்கள் கருத்துக்களை பகிரவும்.
 
TamilMadhuraDate: Wednesday, 12 Feb 2014, 4:40 AM | Message # 2
Lieutenant
Group: Checked
Messages: 58
Status: Offline
நான்தான் பிள்ளையார் சுழியா? ஓகே நம்ம தளபதி படம், பொங்கல் விருந்து, ஜில்லாவோட ஆரம்பிக்கலாமா? பாருங்க மக்களே நான் எந்த விமர்சனமும் எழுதல. தி ஹிந்துல வந்ததை அப்படியே காப்பி பேஸ்ட் பண்ணுறேன்.

விஜய் - மோகன்லால் என இரண்டு பெரிய ஸ்டார்களை வைத்து சரியான காட்சிகளை அமைத்த விதத்தில் ’ஜில்லா’ வந்திருக்கு நல்லா!
மதுரை ஏரியா தாதா சிவன் (மோகன்லால்). அவரது கார் டிரைவர் போலீஸ்
அதிகாரியால் கொல்லப்பட, அவரது மகன் சக்தி(விஜய்)யை எடுத்து வளர்க்கிறார்.
சக்திக்கு போலீஸ் அதிகாரிகள் என்றாலே ஆகாது. போலீஸுடன் ஏற்பட்ட தகராறில்
தனக்கு போலீஸில் செல்வாக்குள்ள ஆள் வேண்டும் என்று சக்தியை போலீஸ்
ஆக்குகிறார். அதற்குபிறகு ஏற்பட்ட வெடி விபத்தில் சிவன் - சக்தி
இருவருக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. இறுதியில் என்ன ஆனது ஜெயித்தது யார்
என்பதை 3 மணி நேர படமாக கூறியிருக்கிறார்கள்.
விஜய், மோகன்லால் என இரண்டு பெரிய ஸ்டார்களை வைத்துக் கொண்டு, இருவரது
ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் விதத்தில் காட்சிகள் அமைத்தில் ஸ்கோர்
செய்கிறார் இயக்குநர் நேசன். மதுரை தாதாவாக நரை தாடியுடன் மோகன்லால்,
நடிப்பில் பின்னியிருக்கிறார். மோகன்லாலை இமிடேட் செய்வது, அவரின் எதிரிகளை
பந்தாடுவதில் ஆரம்பித்து, போலீஸாக ஆனவுடன் மோகன்லாலை திருத்த நினைப்பது என
நடிப்பில் ஸ்கோர் பண்ணியிருக்கிறார் விஜய். இடைவேளை சமயத்தில் விஜய் -
மோகன்லால் பேசும் வசனக் காட்சிகள், படத்தை தூக்கி நிறுத்துகின்றன.
விஜய்யுடன் நடனமாட ஒரு பெண் வேண்டுமே என நாயகியாக காஜல் அகர்வாலை
சேர்த்திருக்கிறார்கள். பாடலுக்கு மட்டும் இருந்தால் பத்தாது என்று சில
காட்சிகளில் வந்து செல்கிறார். மற்றபடி 'ஜில்லா'வில் காஜல் ஸ்கோர் செய்ய
ஸ்கோப் இல்லை. விஜய், மோகன்லால் இருவரையும் தொடர்ந்து அடுத்து இடத்தில்
சூரி. போலீஸ் கான்ஸ்டபிளாக இவர் பேசும் வசனக் காட்சிகள் சிரிப்பு சரவெடி.
இப்படத்தின் மூலம் இனி முக்கிய நாயகர்களின் படங்களில் சூரிக்கு ஒரு ரோல்
ரிசர்வ்ட்.
பாடல்கள் மட்டுமல்லாது படத்தின் பின்னணி இசையிலும் ஈர்க்கிறார்
இசையமைப்பாளர் இமான். போலீஸ் உடை போட்டுக் கொண்டு விஜய் நடந்து வரும்
காட்சிகளில் இவரின் பின்னணி இசை ஓஹோ. கணேஷ் ராஜவேலுவின் ஒளிப்பதிவில் நிறைய
இடத்தில் வரும் CHOPPER ஷாட்ஸ் பிரமிக்க வைக்கின்றன.

- நன்றி: தி ஹிந்து
 


எனக்கு விஜய் டான்ஸ் ரொம்பவே பிடிக்கும். இந்தப் படத்துல 'கண்டாங்கி', 'வெரசாப் போகையிலே' என்று கலக்கிருக்காரு. மோகன்லாலப் பத்தி நம்ம எல்லாருக்கும் தெரியும். கதாபாத்திரமாவே வாழ்ந்திருப்பார். விஜய் அண்ட் லால் இருவரும் சேர்ந்து தமிழ் அண்ட் கேரளா இசைக்கருவிகள் மிக்ஸ் சாங் 'சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸ்டா'  சூப்பர்.



மக்களே நான் ஸ்டார்ட் பண்ணி விட்டுட்டேன். இனி நீங்க எல்லாரும் கலக்குங்க.
Attachments: 9265386.jpg (242.2 Kb)


தமிழ் மதுரா
 
JayDate: Sunday, 16 Feb 2014, 3:07 PM | Message # 3
Major general
Group: Checked
Messages: 441
Status: Offline
பண்ணையாரும் பத்மினியும்

Friends நான் இன்னைக்கு ஒரு சூப்பர் படம் பார்த்தேன்.  இயக்குனர் அருண் இயக்கிய பண்ணையாரும் பத்மினியும்.  சூப்பர் movie.  உயிரற்ற ஒரு பொருள் மீது இத்தனை ஆசை வைக்க முடியுமா.  முடியும் என்கிறது இந்தப் படம்.  படத்தில் நடித்த ஒருஒருவரும் அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள். 

எனக்கு ஹீரோ விஜய் சேதுபதியை விட பண்ணையாராக வரும் JPயைத்தான் மிகவும் பிடித்திருந்தது.  அவரும் அவர் மனைவியாக வரும் துளசியும் அந்தக் கதாபாத்திரமாகவே மாறி விட்டார்கள்.  55-60  வயதிலும்  காதலும், பாசமும் மாறாமல் ஒருவருக்காக மற்றவர் பார்த்து பாத்துச் செய்வது superb.  

கண்டிப்பாக மிஸ் பண்ணாம பாருங்க பிரிட்ன்ஸ்.   தமிழ்ப் படம் தியேட்டர்ல பார்க்க முடியாத நாட்டுல இருக்கறவங்க இந்த லின்க்ல பாருங்க.

http://www.youtube.com/watch?v=L5qZjWsSI6U

அட்மின் இந்தப் போஸ்ட் எங்க போடறது தெரியாம இங்கப் போட்டுட்டேன்.  வேற இடத்துல போஸ்ட் பண்ணனும்ன்னா ப்ளீஸ் let me know.
 
SSDate: Tuesday, 04 Mar 2014, 10:43 AM | Message # 4
Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
ஜன்னல் ஓரம் -

கருபழனியப்பனின் புதிய படம். ஒரு மலையாள படத்தை தமிழில் எடுத்துள்ளனர்.

பழனியிலிருந்து பண்ணைக்காடு செல்லும் பேருந்தில் பார்த்திபன் தான் ஓட்டுனர்.விமல் புதுசாக சேரும் கண்டக்டர். அவர்கள் பண்ணும் அலம்பல் தான் முதல் பாதி. பண்ணைக்காடு என்பது தமிழகத்தின் ஒரு கோடியில் இருக்கும் ஒரு கிராமம். இங்கே MGR ,சிவாஜி இருவரும் இறந்ததே தெரியாது அப்படி ஒரு தகவல் தொழில்நுட்பம் செல்லாத இடம். இங்கே ஒரு மரணம் நடக்கிறது. அதன் பழி விமல் மீதி விழுகிறது. ஆனால் அவர் கொலையாளி இல்லை, கொலை செய்தவன் யார் என்று த்ரில்லர் படம் .

எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்த்தால் இந்த படத்தை ரசிக்கலாம்....

Attachments: 7584350.jpg (176.0 Kb)


Message edited by SS - Tuesday, 04 Mar 2014, 10:44 AM
 
RAWALIKADate: Tuesday, 04 Mar 2014, 10:47 AM | Message # 5
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
நன்றி 

இந்த மாதிரி யாராவது நல்ல படம்னு சொன்னாதான் நான் படம் பாக்கறதே.
 
ammusamDate: Wednesday, 05 Mar 2014, 11:43 AM | Message # 6
Private
Group: *Checked*
Messages: 10
Status: Offline
idhil varum ennad ennadi oviyame song romba nalla irukkum
ammu
 
JanviDate: Thursday, 18 Sep 2014, 2:26 AM | Message # 7
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
எனக்கு உங்களை மாதிரி எழுத வராது. அதனால லிங்க் தரேன். எனக்கு விமர்சனம் பிடிச்சிருக்கு. படம்??????

 
JanviDate: Thursday, 18 Sep 2014, 2:28 AM | Message # 8
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
அதே அமர காவியம் படம்தான் 

 
JanviDate: Thursday, 18 Sep 2014, 2:46 AM | Message # 9
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
இப்ப சாங்ஸ் நல்லாவே இருக்கு. 

 
JanviDate: Friday, 19 Sep 2014, 1:21 AM | Message # 10
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
அஞ்சான் படத்தோட ரிவியு 

 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » மனதிற்கு பிடித்த பொழுதுபோக்கு » சினிமா » தமிழ் சினிமா (படங்களை பற்றிய உங்கள் கருத்துக்களை பகிரவும்.)
Search: