குழந்தைகளுக்கான திரைப்படங்கள் - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
  • Page 1 of 1
  • 1
Forum moderator: Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » மனதிற்கு பிடித்த பொழுதுபோக்கு » சினிமா » குழந்தைகளுக்கான திரைப்படங்கள் (குழந்தைகளுக்கான திரைப்படங்கள்)
குழந்தைகளுக்கான திரைப்படங்கள்
LayaDate: Wednesday, 12 Feb 2014, 8:21 AM | Message # 1
Lieutenant
Group: Moderators
Messages: 72
Status: Offline
நாடு, மொழி, இனம் பேதமில்லா குழந்தைகளுக்கான திரைப்படங்கள் பற்றி இங்கு பகிர்ந்துகொள்ளவும்.
 
குழந்தைகளுடன் நாமும் குழந்தையாக மாறி அவர்களின் உலகில் சஞ்சரித்து மகிழ்வோம்...வாருங்கள்.
 
SSDate: Wednesday, 12 Feb 2014, 8:56 AM | Message # 2
Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
Frozen(2013)

குழந்தைகளுக்காக Disney நிறுவிய மற்றுமொரு கற்பனை கதை.

இரு சகோதரிகள் Elsa மற்றும் Anna. இதில் பெரியவளுக்கு ஒரு அதிசயம் உண்டு,
அவளால் பனியினை உண்டு பண்ண முடியும். சிறு வயதில் இருவரும் அப்படி பனி
செய்து விளையாடும் பொழுது  அவள் இளையவளை பனி தாக்கி உறைய செய்து
விடுகிறாள். அப்படி செய்யும் பொது trolls என்ற உயிரினம் அவளை
காப்பாற்றுகிறது. அதனால் பெற்றவர்கள் இரு குழந்தைகளை ஒன்றாக இருக்க விடாமல்
செய்து வளர்கின்றனர்.

பெரியவர்கள் ஆகும் போது, அவர்கள் இருவரின் பெற்றோர்கள் இறந்து விடுகின்றனர். இரு சகோதரிகளும் சந்திப்பது பெரியவளின்
முடிசூட்டு விழாவின் பொழுது தான். அப்படி அவர்கள் சந்திக்கும் பொது
எதிர்பாரா விதமாக, பெரியவள் ஒரு பனி புயலையே நாட்டில் கொண்டு வந்து
விடுகிறாள், அதற்கு பிறகு அவள் நாட்டை விட்டே சென்று விடுகிறாள்.

சகோதரிகள் ஒன்று சேர்ந்தார்களா? நாடு திரும்ப நல்ல நிலைமைக்கு வந்ததா என்பதை படத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் கட்டி போட்டு விடுகிறது இந்த
படம், அப்படி ஒரு மாய உலகத்தை காட்டுகின்றனர். Olaf என்கின்ற பனிமனிதனை
அனைவரும் விரும்புகின்றனர்.

ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி வருகிறது.
 
SSDate: Wednesday, 12 Feb 2014, 9:01 AM | Message # 3
Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
Turbo 2013

கார்  ரேசில் பங்கு கொண்டு மனிதனை விழ்த்தும் அபார சக்தி கொண்ட ஒரு நத்தையின் கதை தான் turbo. முதலில் கார் ரேஸ் வீரரை பார்த்து தன்னை தானே ஊக்குவிப்பதாகட்டும் ரேஸில் கலந்து கொண்டு கடைசி வரை போரடுவதாகட்டும் மிகவும் நன்றாக சித்தரிக்க பட்டுள்ளது. அனைவரும் குழந்தைகளோடு பார்க்க வேண்டிய ஒரு நல்ல படம்.
 
NathasaaDate: Wednesday, 12 Feb 2014, 11:52 PM | Message # 4
Major general
Group: *Checked*
Messages: 360
Status: Offline
thnQ SS for providing this .....
 
TamilMadhuraDate: Thursday, 13 Feb 2014, 1:18 AM | Message # 5
Lieutenant
Group: Checked
Messages: 58
Status: Offline
Barbie in the 12 dancing princesses

அருமையான அம்புலிமாமா கதை. போகோ டிவியில் அடிக்கடி ஒளிபரப்புவார்கள். தவறாமல் பாருங்கள்.

இனி கதைச் சுருக்கம்

பன்னிரண்டு தாயில்லா அரசகுமாரிகள் தங்கள் தந்தையால் வளர்க்கப் படுகிறார்கள். அவர்களுக்கு பாலே நடனம் என்றால் உயிர். அவர்களுக்கு அரச பரம்பரை பழக்கவழக்கங்களைக் கற்றுத் தர வருகிறார் ராஜாவின் சகுனி சகோதரி. இளவரசிகளுக்கு எண்ணற்ற கட்டுப்பாடுகளை விதிக்கிறாள். அதில் நடனம் ஆடக்கூடாது என்பதும் ஒன்று.
ஒரு கதைப்புத்தகத்தின் உதவியால் மூன்று இரவுகள் யாருக்கும் தெரியாமல் நடனமாடி ஒரு மாய அரண்மனைக்கு செல்கிறார்கள். இதனிடையே அத்தைக்காரி ராஜாவை விஷம் வைத்து மரணப் படுக்கையில் தள்ளுகிறாள். அரசகுமாரிகள் மாய அரண்மனையிலிருந்து வரும் பாதையைத் தகர்க்கிறாள். ஒரு செருப்புத் தைப்பவனின் (இவன் ஒரு அரச குமாரியின் ஜோடி.  நம்ம தமிழ் சினிமா டச் தெரியல?) உதவியால் அங்கிருந்து தப்பிக்கிறார்கள். ராஜாவைக் காப்பாற்றுகிறார்கள். கடைசியில் பாலே நடனமாடி சுபம் போடுகிறார்கள்.

பெண் குழந்தைகள் ரசித்துப் பார்ப்பார்கள். பாலே டான்ஸ் அத்தனை அற்புதமாய் இருக்கிறது. படம் பார்க்கத் தொடங்கிய  சில நிமிடங்களில் அனிமேஷன் என்பதையே மறந்து விடுவீர்கள்.


தமிழ் மதுரா

Message edited by TamilMadhura - Thursday, 13 Feb 2014, 1:19 AM
 
SLKDate: Thursday, 13 Feb 2014, 6:13 AM | Message # 6
Lieutenant
Group: Checked
Messages: 73
Status: Offline
thanks SS..
frozen nalla padam.. kadippaga parkalaam.. kuzhanthaigal migavum virumbuvaargal..

en pasangalukku bday treat-a intha padam thaan ponom.. release aana same week.. romba pidichithu.. ippo kooda "Let it snow" thaan padittu irukaanga..
 
SSDate: Thursday, 13 Feb 2014, 9:14 AM | Message # 7
Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
yes SLK.... naanum appo thaan ponen.. ennoda ponnu mattum illa pa, we were also mesmerized for that one and half hour.. brilliant movie pa.. creativity was at its best..
 
SSDate: Thursday, 13 Feb 2014, 9:24 AM | Message # 8
Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
Dumbo (1941) - 

ஒரு பெரிய யானைக்கு பிறக்கும் குட்டியானை மற்றதை விட வித்தியாசமாக உள்ளது. அதற்கு காது மிகவும் பெரியதாக இருக்கும். அதனால் அதனை தங்கள் இணையாக மற்ற யானைகள் சேர்க்கவில்லை. இதனால் மிகவும் மனம் உடைந்து போய்விடுகிறது, மேலும் தாழ்வுமனப்பான்மை வந்து விடுகிறது. ஒரு எலி எப்படி யானையின் தாழ்வுமனப்பான்மையை போக்கி அதனை சர்கஸில் பெரிய ஸ்டார் ஆக்கிவிடும் என்பதே கதை.

ஒரு மணிநேரம் செல்லும் இந்த படம் 1941ல் படமாக்க பட்டது என்பது அதிசயமே. இதனை டிஸ்னி நிறுவனமே வெளியிட்டு உள்ளது.

USல் இருப்பவர்கள் NETFLIXல் இதனை பார்க்கலாம். குழந்தைகள் விரும்பி பார்ப்பார்கள்.
 
NathasaaDate: Thursday, 13 Feb 2014, 3:47 PM | Message # 9
Major general
Group: *Checked*
Messages: 360
Status: Offline
Hi tamil & SS
thnx for the sharing
 
SLKDate: Thursday, 20 Feb 2014, 5:57 AM | Message # 10
Lieutenant
Group: Checked
Messages: 73
Status: Offline
Thanks SS for the reviews.

Dumbo another children's favorite.. nalla karuthu ulla padam.. unakku irukkum kuraiyai nee niraiyaaga matra mudiyumnu nambikkai ootum oru padam..
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » மனதிற்கு பிடித்த பொழுதுபோக்கு » சினிமா » குழந்தைகளுக்கான திரைப்படங்கள் (குழந்தைகளுக்கான திரைப்படங்கள்)
  • Page 1 of 1
  • 1
Search: