நிகழ்வுகள் - Page 2 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
Forum moderator: Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பயனுள்ள தகவல்கள் » நிகழ்வுகள் » நிகழ்வுகள் (நிகழ்வுகள்)
நிகழ்வுகள்
JeniliyaDate: Tuesday, 04 Feb 2014, 2:15 PM | Message # 1
Private
Group: Moderators
Messages: 19
Status: Offline
நம்மைச்சுற்றி நடக்கும் அறிந்துக்கொள்ள வேண்டிய நிகழ்வுகள் பல இருக்கும். உலகின் எந்த மூலையில் நடந்தாலும், அதை இங்கு பகிரவும்.

கவனிக்க

சில நிகழ்வுகள் பற்றி குறிப்பிடும்போது பிரச்சினைகள் வர வாய்ப்பு இருக்கிறது, அதுபோன்ற நிகழ்வுகளை இங்கு பகிரவேண்டாம்
 
NathasaaDate: Thursday, 06 Feb 2014, 11:33 AM | Message # 11
Major general
Group: *Checked*
Messages: 360
Status: Offline
Hi viji sis 
many thnx for the sharing
 
NathasaaDate: Thursday, 06 Feb 2014, 11:35 AM | Message # 12
Major general
Group: *Checked*
Messages: 360
Status: Offline
புற்று நோயாளிக்கு தலைமுடியை தானமாக வழங்கிய கல்லூரி மாணவிகள்



புற்றுநோயால் பாதிப்படைந்து தலைமுடியை இழக்கும் நோயாளிகள் இறுதி நாட்களில் தாழ்வு மனப்பான்மையின்றியும், மகிழ்ச்சியாகவும் வாழும் பொருட்டு சென்னை மாநிலக்கல்லூரியில் மாணவிகள் முடி தானம் செய்தனர்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு முடியினை தானமாக அளிக்கும் ‘கேன் கட் – கேன் ஹெல்ப்’ எனும் நிகழ்ச்சி சென்னை மாநிலக்கல்லூரி கருத்தரங்கு கூடத்தில் நேற்று நடந்தது. நுங்கம்பாக்கம் ‘பிரிஜ் டா‘ சலூன், கல்லூரி நிர்வாகத்துடன் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் கல்லூரியைச் சேர்ந்த 100–க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகளிடம் புற்றுநோயாளிகளின் துயரங்கள் குறித்தும், அவர்களின் சூழ்நிலைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

நிகழ்ச்சி முடிவில் சில மாணவிகள் முடிகளை தானம் செய்ய முன்வந்தனர். உடனே அவர்களின் பெயர் பதிவு செய்யப்பட்டு, தயாராக இருந்த முடி வெட்டுபவர்களைக்கொண்டு மாணவிகளின் முடி 6 அங்குலம் அளவிற்கு வெட்டப்பட்டு பத்திரப்படுத்தப்பட்டது.

ஏராளமான மாணவிகள் தங்களின் பெற்றோர்களிடம் கேட்டு தானம் தருவதாகவும் கூறினர். சிலர் தங்களின் பெற்றோரையும் அழைத்து வருவதாகவும் கூறினர். இதுகுறித்து ‘பிரிஜ் டா’ சலூன் உரிமையாளர் ஆர்.மேனகா கூறியதாவது, புற்றுநோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் ‘ஹீமோ தெரபி’ எனும் சிகிச்சை அளிக்கப்படும்போது நோயாளிகளுக்கு தலைமுடி வேரோடு உதிர்ந்துவிடும்.

ஏற்கனவே புற்றுநோயால் அவதிப்படும் நோயாளிகளுக்கு தலைமுடியும் இல்லாது போகும்போது மிகவும் கவலை அடைகிறார்கள். இதனால் தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு வெளியிடங்களுக்கு செல்லவே தயங்குகிறார்கள்.

அதுபோன்ற பாதிப்படைந்த நோயாளிகளுக்கு இலவசமாக விக் வழங்குவது என்றும் அதற்காக முடி தானத்தை ஊக்கப்படுத்துவதற்காகவும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. சென்னையில் உள்ள எல்லா கல்லூரிகளுக்கும் சென்று புற்றுநோய் பாதிப்பு பற்றியும், முடிதானம் பற்றியும் எடுத்துக்கூறுகிறோம். இதில் விருப்பமுள்ளவர்களிடம் இருந்து அவர்களுடைய கூந்தலில் இருந்து 6 அங்குலம் அளவுக்கு மட்டும் முடி தானமாக பெறுகிறோம்.

தானமாக பெற்ற இந்த முடி சேமிக்கப்பட்டு ‘விக்’காக மாற்றி, வரும் பிப்ரவரி 4–ந்தேதி உலக புற்றுநோயாளிகள்தினத்தன்று, முடி இழந்த புற்றுநோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட இருக்கிறது என கூறினார்
 
NathasaaDate: Thursday, 06 Feb 2014, 11:42 AM | Message # 13
Major general
Group: *Checked*
Messages: 360
Status: Offline
முகநூலில் வெளிவந்த புகைப்படம்: மாணவி தற்கொலை

முகநூலில் பிரசுரமான புகைப்படம் ஒன்று காரணமாக குருநாகல் பிரதேசத்தில் மாணவியொருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

முகநூலில் பிரசுரமான புகைப்படம் காரணமாக மன வேதனை அடைந்த குறித்த மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

16 வயது பாடசாலை மாணவி ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

முகநூலில் பிரசுரமாகியிருந்த புகைப்படம் தொடர்பில் பாடசாலையில் விளக்கம் கோரப்பட்டதாகவும் பெற்றோரிடம் இவ்வாறு விளக்கம் கோரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முகநூலில் பிரசுரமான புகைப்படம் தொடாபில் பாடசாலையின் அதிபர் பெற்றோரை அழைத்து விளக்கம் கோரியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து குறித்த மாணவி வீட்டில் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

இது தொடர்பிலான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்


Message edited by Nathasaa - Thursday, 06 Feb 2014, 11:44 AM
 
RAWALIKADate: Thursday, 06 Feb 2014, 1:16 PM | Message # 14
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
Thanks Nathasaa
 
srkDate: Sunday, 09 Feb 2014, 9:35 AM | Message # 15
Major general
Group: *Checked*
Messages: 304
Status: Offline
Thanks Rawalika and Nathasaa.

Life is God's Gift
 
srkDate: Sunday, 09 Feb 2014, 9:37 AM | Message # 16
Major general
Group: *Checked*
Messages: 304
Status: Offline
சென்னையில் நடந்த இந்த நிகழ்வு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்களுக்கு ஒரு எச்சரிக்கை:

நேற்று வலைத்தமிழுக்கு சென்னையில் நடந்த இந்த உண்மை சம்பவத்தை அனுப்பி பகிரக் கேட்டுக்கொண்டார்கள்.

நண்பர் வீட்டில் கணவன்- மனைவி இருவரும் வேலைக்கு போகிறவர்கள். எனவே காலையில் தனியார் வாகனம் வந்து குழந்தையை பள்ளிக்கு ஏற்றிக் கொண்டு செல்வது வழக்கம். நேற்றும் அதன்படியே நண்பர் அவரின் மாமியாரை வெளியில் நின்று குழந்தையை வாகனத்தில் அனுப்பச் சொல்லிவிட்டு அலுவலகம் கிளம்பிக்கொண்டிருந்தார்.

வழக்கமாக வரும் நேரத்தில் ஐந்து நிமிடம் முன்பே ஒரு வாகனம் வந்தது, ஆனால் அதில் தினமும் வரும் பக்கத்து தெருவில் இருக்கும் இரண்டு குழந்தைகள் இல்லை. நண்பரின் மாமியார் சந்தேகப்பட்டு பணிப்பெண்ணை எங்கே அந்த இரண்டு குழந்தைகள் என்று கேட்டுள்ளார்கள். அதற்கு சில காரணங்களை சொல்லி மழுப்பியுள்ளார் குழந்தையை அழைக்க வந்த பெண். திருப்தி அடையாத நண்பரின் மாமியார் மருமகனை சத்தம் போட்டு கூப்பிட, நண்பர் வந்து விபரம் கேட்க ஆரம்பித்தவுடன், முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளார். எனவே அவர் சுதாரிப்பதற்குள் வாகனம் வேகமாகப் போய்விட்டது. பின்புறம் பார்க்கையில் அந்த வாகனத்திற்கு வாகன எண் (Registration number plate) இல்லாமல் இருந்துள்ளது.

இவர்கள் கொஞ்சம் சுதாரிக்காமல் விட்டிருந்தால் வந்த வட இந்திய வாகன ஓட்டுனரும், தமிழ் பேசும் பணிப்பெண்ணும் குழந்தையை கடத்தியிருப்பார்கள். நண்பர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

பெற்றோர்களே! சென்னை நாளுக்கு நாள் கொஞ்சம் கூட ஈவு இரக்கமற்ற, பாதுகாப்பற்ற நிலையில் மாறி வருகிறது. குறிப்பாக குழந்தைகளின் பாதுகாப்பு மிகவும் கேள்விக்குறியாகியுள்ளது. எதையும் அசட்டையாக இல்லாமல், விழிப்புணர்வுடன், எச்சரிக்கை உணர்வுடன் இருங்கள்.

நண்பர்களுக்கு பகிருங்கள்.


Life is God's Gift
 
MeenatchiDate: Monday, 10 Feb 2014, 1:43 PM | Message # 17
Colonel
Group: Checked
Messages: 249
Status: Offline
hi srk,
  Neega solrathu absolutely correct.v have only 2option.
1.school bus(athula anupavam eppo  bayama iruku)
2.parents drop and pick up her/his child.(this is the only safe option)


Meenatchi .S
 
NathasaaDate: Thursday, 13 Feb 2014, 5:02 PM | Message # 18
Major general
Group: *Checked*
Messages: 360
Status: Offline
Hi srk smile
Indeed !!!
thnx for the post

Added (13 Feb 2014, 4:53 PM)
---------------------------------------------
மட்டக்களப்பைப் சேர்ந்த இயக்குநர் பாலுமகேந்திரா மரணம்: அதிர்ச்சியில் திரையுலகம்

இலங்கையைச் சேர்ந்த தமிழ் சினிமாவின் முக்கிய படைப்பாளி பாலுமகேந்திரா ( வயது 74) உடல்நலக் குறைவு காரணமாக இன்று சென்னை மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பில் 1934-ல் பிறந்த தமிழரான பாலு மகேந்திரா ஒரு ஒளிப்பதிவாளராகத்தான் தன் வாழ்க்கையை ஆரம்பித்தார்

1977-ல் கோகிலா என்ற கன்னடப் படம் மூலம் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானார்



இந்தப் படம் நேரடியாக தமிழகத்தில் வெளியாகி வெள்ளி விழா கண்டது. தமிழகத்தில் அத்தனை பெரிய வெற்றி பெற்ற கன்னடப் படம் இதுவாகத்தான் இருக்கும். தமிழில் அவர் இயக்கிய முதல் படம் அழியாத கோலங்கள்.

அந்தப் படத்தில் தொடங்கிய அவரது திரைப் பயணம் ஒரு அழகிய நதியைப் போல தெளிவாக இருந்தது. ஆர்ப்பாட்டமில்லாத, அழகிய வெற்றிகள் மூலம் இந்திய சினிமாவின் முக்கிய படைப்பாளியாக அடையாளம் காணப்பட்டார்.அண்மைக்காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இருந்தும், அதை வென்று, தலைமுறைகள் என்ற படத்தை இயக்கி நடித்தார்.

இந்த நிலையில் இன்று திடீரென்று அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சைப் பலனின்றி இறந்தார்

Added (13 Feb 2014, 5:02 PM)
---------------------------------------------
Facebook கின் காரணமாக தற்கொலை செய்த வெனுஷா இமந்தி. உண்மையில் நடந்தது என்ன?

இலங்கையில் கடந்த வாரம் Facebook கின் காரணமாக தற்கொலை செய்துகொண்டாள் எனச் சொல்லப்பட்டு வரும் சிறுமி வெனுஷா இமந்தியின் புகைப்படங்கள்  இவை



தந்தையுடன்


Facebook கின் காரணமாகத்தான் தற்கொலை செய்து கொண்டாளா என்பதனை, உண்மையில் என்ன நடந்ததென்பதை வைத்து நீங்களே தீர்மானியுங்கள்.

10 ஆம் வகுப்பில் கல்வி கற்றுவந்த வெனுஷா இமந்தியின் Facebook கணக்கின் Wall இல், அவரது நண்பனாக இணைந்துகொண்ட ஒருவன், காதல் ஜோடியொன்றின் புகைப்படத்தை Tag செய்துவிடுகிறான். அதனை வெனுஷாவின் பாடசாலை ஆசிரியை ஒருவர் கண்டு, அதிபரிடம் போய் முறையிடுகிறார். அதிபர், 5000 மாணவர்கள், ஆசிரியர்கள் முன்னிலையில் அந்தச் சிறுமியை மேடைக்கு அழைத்து ‘வேசி’ எனத் திட்டுகிறார். மறுதினம் பெற்றோரை பாடசாலைக்கு அழைத்துவரும்படி கட்டளையிடுகிறார்.

தான் செய்யாத ஒரு தவறுக்காக அவப் பெயர் கேட்க நேர்ந்ததையிட்டு பெரும் மன உளைச்சலுக்குள்ளான சிறுமி, தனது தந்தைக்கு 3 பக்கங்களில் ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு, தாயின் சேலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்கிறாள்.

தற்காலத்தில் வயதில் பெரியவர்கள் பலர் சமூக மாற்றங்களை ஏற்றுக் கொள்ளவோ, கற்றுக் கொள்ளவோ மறுக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் Facebook உட்பட, சமூக வலைத்தளங்கள் எல்லாமே தீயவை, வழிகெடுப்பவை மாத்திரமே. எனவே அவற்றைப் பாவிப்பவர்களும் கூட மோசமானவர்கள் என்பதுதான் அவர்களின் எண்ணமாக இருக்கிறது.
உண்மையில் அவளது தற்கொலைக்கு யார் காரணம்? என்னைக் கேட்டால் ‘அதிபர்’ என்றுதான் சொல்வேன். இந்த விடயத்தைப் பொறுத்தவரையில் பல வருடங்கள் சேவையாற்றியவரும், இராணுவப் பயிற்சி பெற்றவருமான ஒரு பொறுப்புள்ள அதிபர் எதையெல்லாம் செய்யக் கூடாதோ அதைத்தான் செய்திருக்கிறார்.
# உண்மையில் என்ன நடந்தது என சிறுமியிடம் விசாரிக்கவில்லை.

# எந்தப் பெண்ணையும் குற்றம் சாட்டக் கூடாத ஒரு பட்டப் பெயரை பகிரங்கமாகக் கூறி, அவள் மீது முத்திரை குத்தியமை.

# 5000 பேர் முன்னிலையில் அவமானப்படுத்தியமை.

# பதின்ம வயது என்பது எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடிய வயது என்பது குறித்து கவனமெடுக்காமை.


சிறுமியின் கடிதத்தில் அவள் குறிப்பிட்டிருக்கிறாள். “எனக்கு நேர்ந்தது, இனி எனது பாடசாலையில் எந்த மாணவிக்கும் நிகழக் கூடாது” இனி நேராது என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை. எனினும் இப்பொழுது அந்த அதிபரை என்ன செய்யலாம்?
.

 
NathasaaDate: Friday, 14 Feb 2014, 3:07 PM | Message # 19
Major general
Group: *Checked*
Messages: 360
Status: Offline
திரையுலகின் பிதாமகன்! மரணம்! கண்ணீரில் நனைகிறது பாரதம்! அதிர்ச்சியில் திரையுலகம்.

சென்னை: மூத்த இயக்குநர், தமிழ் சினிமாவின் மிக முக்கிய படைப்பாளி பாலுமகேந்திரா உடல்நலக் குறைவு காரணமாக இன்று மருத்துவமனையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 74. இலங்கையின் மட்டக்களப்பில் 1934-ல் பிறந்த தமிழரான பாலு மகேந்திரா ஒரு ஒளிப்பதிவாளராகத்தான் தன் வாழ்க்கையை ஆரம்பித்தார்

பாலு மகேந்திரா 1977-ல் கோகிலா படம் மூலம் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானார் பாலு மகேந்திரா. இது ஒரு கன்னடப் படம். இந்தப் படம் நேரடியாக தமிழகத்தில் வெளியாகி வெள்ளி விழா கண்டது. தமிழகத்தில் அத்தனை பெரிய வெற்றி பெற்ற கன்னடப் படம் இதுவாகத்தான் இருக்கும். தமிழில் அவர் இயக்கிய முதல் படம் அழியாத கோலங்கள். அந்தப் படத்தில் தொடங்கிய அவரது திரைப் பயணம் ஒரு அழகிய நதியைப் போல தெளிவாக இருந்தது.



ஆர்ப்பாட்டமில்லாத, அழகிய வெற்றிகள் மூலம் இந்திய சினிமாவின் முக்கிய படைப்பாளியாக அடையாளம் காணப்பட்டார் பாலு மகேந்திரா. சமீப நாட்களாக முதுமை மற்றும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இருந்தும், அதை வென்று, தலைமுறைகள் என்ற படத்தை இயக்கி நடித்தார். அந்தப் படம் அனைவராலும் பாராட்டப்பட்டது. தமிழ் சினிமாவின் முக்கிய படமாகப் பார்க்கப்பட்டது. தனது அடுத்த படத்தை விரைவில் தொடங்கப் போவதாகக் கூறிவந்தார் பாலு மகேந்திரா. இந்த நிலையில் இன்று திடீரென்று அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது

ஆனால் சிகிச்சைப் பலனின்றி இறந்தார் பாலு மகேந்திரா. பாலு மகேந்திராவுக்கு அகிலா என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். நடிகை மௌனிகாவை பின்னர் தன் இரண்டாவது மனைவியாக உலகுக்கு அறிவித்தார் பாலு மகேந்திரா. இயக்குநர்கள் பாலா, வெற்றிமாறன் என பாலு மகேந்திராவின் சீடர்கள் தமிழ் சினிமாவின் முக்கிய படைப்பாளிகளாகத் திகழ்கிறார்கள். பாலுமகேந்திரா மரணம் தமிழ் சினிமாவைப் பொருத்தவரை நம்ப முடியாத, ஜீரணிக்க இயலாத ஒரு பேரிழப்பாகக் கருதப்படுகிறது. தமிழ் திரையுலகமே தீராத அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது





 
NathasaaDate: Friday, 14 Feb 2014, 3:14 PM | Message # 20
Major general
Group: *Checked*
Messages: 360
Status: Offline
Celebrities paying homeage to Director Balu Magendra













 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பயனுள்ள தகவல்கள் » நிகழ்வுகள் » நிகழ்வுகள் (நிகழ்வுகள்)
Search: