நிகழ்வுகள் - Page 3 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
  • Page 3 of 3
  • «
  • 1
  • 2
  • 3
Forum moderator: Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பயனுள்ள தகவல்கள் » நிகழ்வுகள் » நிகழ்வுகள் (நிகழ்வுகள்)
நிகழ்வுகள்
JeniliyaDate: Tuesday, 04 Feb 2014, 2:15 PM | Message # 1
Private
Group: Moderators
Messages: 19
Status: Offline
நம்மைச்சுற்றி நடக்கும் அறிந்துக்கொள்ள வேண்டிய நிகழ்வுகள் பல இருக்கும். உலகின் எந்த மூலையில் நடந்தாலும், அதை இங்கு பகிரவும்.

கவனிக்க

சில நிகழ்வுகள் பற்றி குறிப்பிடும்போது பிரச்சினைகள் வர வாய்ப்பு இருக்கிறது, அதுபோன்ற நிகழ்வுகளை இங்கு பகிரவேண்டாம்
 
RAWALIKADate: Monday, 17 Feb 2014, 10:15 AM | Message # 21
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
கன்சல்டிங் ஃபீஸ்... உங்கள் சாய்ஸ்!

நன்றி - விகடன்
பெருந்துறையில் பெருமைக்குரிய மருத்துவர்ஏழை, பணக்காரர் என்று பார்த்து வருவது இல்லை நோய். வசதி படைத்தவர்களுக்கு நோய்வாய்ப்பட்டால்,  உடனடியாக மருத்துவரை அணுகி, வாரக் கணக்கில் அல்லது மாதக் கணக்கில் கூட சிகிச்சை பெற்றுக்கொள்வது சுலபம். ஆனால், வசதி இல்லாதவர்கள் பாடுதான் எப்போதும் திண்டாட்டம். அரசு மருத்துவமனையில் காத்திருப்பதைத் தவிர வேறு வழி இல்லை. நிலைமை இப்படியிருக்க, நாம் விருப்பப்பட்டுக் கொடுப்பதை டாக்டர் ஃபீஸாக வாங்கிக் கொள்கிறார் ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த டாக்டர் டி.ராம்பிரசாத்.
பெருந்துறையில் இருக்கும், 'பே வாட் யு கேன்’ என்ற கிளினிக்குக்கு நேரில் சென்றோம். சுவாசம், நுரையீரல் பிரச்னைகளுக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர் டி.ராம்பிரசாத்தை சந்திக்க ஏராளமான நோயாளிகள் காத்திருந்தனர். மருத்துவமனைக்குள் நுழைந்ததும் நம் கண்ணில்பட்டது இரண்டு வித்தியாசமான அறிவிப்புகள்... 'மருத்துவ ஆலோசனைக்கு வரும் நோயாளிகள், மருத்துவ ஆலோசனைக் கட்டணத்தைத் தங்கள் வசதிக்கு ஏற்ப அலுவலக உண்டியலில் செலுத்தலாம். அதுவும்கூட கட்டாயம் இல்லை!’, 'சிகிச்சைக்கு வரும் நோயாளியிடம் பிரச்னை குறித்து, டாக்டர் முழுமையாகப் பேசுவார் என்பதால், சில சமயங்களில் காலதாமதம் ஏற்படும். முன்பதிவு செய்திருந்தாலும், பொறுமை காப்பது அவசியம்’ என்பதுதான் அந்த வாக்கியங்கள். குறைந்த கட்டணத்தில் அல்லது இலவசமாகவே சிகிச்சை அளிப்பதால் மருத்துவமனை சுமாராக இருக்கும் என்று நினைத்திருந்த நமக்கு ஆச்சர்யம். மருத்துவமனை வாடையே இல்லை. அழகான உள் அலங்காரம், சுவர்களில் நகைச்சுவைத் துணுக்குகள் என வழக்கமான தனியார் மருத்துவமனைகளைப் போல இல்லாமல், மனதுக்கு தெம்பையும் உற்சாகத்தையும் ஊட்டியது 'பே வாட் யு கேன் கிளினிக்’.


டாக்டர் டி.ராம்பிரசாதிடம் பேசினோம் ''நான் பிறந்து, வளர்ந்தது  ஆந்திராவில். விசாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரியில் படித்தேன். அங்கேயே சில காலம் பணியாற்றினேன். பிறகு பெருந்துறையில் சானடோரியம் மருத்துவமனையில் வந்து பணியில் சேர்ந்தேன். அருமையான சுற்றுச்சூழலே வியாதியைப் பாதி குணப்படுத்திவிடும். பெருந்துறையின் இயற்கை சூழல் எனக்கு அதை நினைவுபடுத்தியது. சுற்றிலும் மரங்கள், வயல் வரப்பு இயற்கையான சூழல்... என, பெருந்துறை எனக்கு மிகவும் பிடித்துப்போய்விட்டது. கொஞ்சம் கொஞ்சமாக, தமிழ் கற்றுக்கொண்டேன்.
பெருந்துறை வந்த புதிதில், வீட்டுக்கு அருகில் உள்ள குழந்தைகளுக்கு இலவசமாக மருத்துவம் பார்த்தேன். பெரியவர்களும் சிகிச்சைக்கு வருவாங்க. அப்போதுதான், 'பே வாட் யு கேன்’ என்ற முறையைக் கொண்டுவந்தேன். இது நம்முடைய கோயில்களில் பின்பற்றப்படும் நடைமுறைதான். கோயிலுக்கு எப்படி, பணக்காரர்கள் முதல் நடுத்தர வர்க்கம், ஏழைகள் என, பலதரப்பட்ட மனிதர்கள் வருவார்களோ, அதுபோல்தான் இங்கேயும். கோயிலில் உள்ள உண்டியலில் இவ்வளவுதான் பணம் போட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அவரவர் வசதிக்கேற்ப முடிந்ததை உண்டியலில் போடுவார்கள். போடாமலேயும், சுவாமியைத் தரிசிக்கலாம். இங்கேயும் அப்படிதான், விருப்பப்பட்டதைப் போடலாம், இல்லை என்றாலும் பிரச்னை இல்லை. பெரும்பாலான இடங்களில், ஒரு மனிதனுக்குக் கிடைக்க வேண்டிய தரமான சிகிச்சையை, 'பணம்’தான் முடிவு செய்கிறது. பணத்துக்கு அப்பாற்பட்டதாக, நாம் அளிக்கும் மருத்துவ சிகிச்சை இருக்க வேண்டும் என்ற சிந்தனைதான் இந்த முறையைச் செயல்படுத்த என்னை ஊக்குவித்தது.



ஒரு மனிதன் வாழ்க்கையை நடத்திடத் தேவையான அளவு மட்டும் பணம் இருந்தால் போதும். அதுவே ஆத்ம திருப்தியை அளிக்கும் என்பதை, ஒவ்வொருவரும் உணர்ந்தாலே... ஒரே இடத்தில் பணம் தேங்காமல் இருக்கும். 'ஏழை’ என்ற பேச்சுக்கும் இடம் இருக்காது. கடந்த 40 வருடங்களாக, இந்த முறையைப் பின்பற்றி வருகிறேன். ஆனால், இதற்காகவே கிளினிக்கை ஆரம்பித்தது என்பது 1999-ல்தான். அன்று முதல் இன்று வரை, நோயாளிகளுக்கு ஆலோசனைக் கட்டணம் (கன்சல்ட்டிங் ஃபீஸ்) செலுத்த வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. விரும்புபவர்கள் உண்டியலில் பணம் செலுத்தலாம். இதைப் பெருமையான விஷயமாக நான் கருதவில்லை. இந்தப் பிறவியில் எனக்கு ஆண்டவன் கொடுத்த ஒரு வாய்ப்பாக, கடமையாக நினைக்கிறேன்'' என்று தன்னடக்கத்துடன் சொல்லும் டாக்டர் ராம்பிரசாத், நோயாளிகள் அனைவருக்கும் ஊசி போடுவது இல்லை. கனிவாகப் பேசி, கவலைகளைப் போக்கி, முதலில், அவர்களுக்குள் ஒருவித பாசிட்டிவ் எனர்ஜியை ஏற்படுத்துகிறார். அவர்களின் முகம் மலர்வதைப் பார்த்த பிறகே அனுப்புவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.


''பெரும்பாலானோருக்கு மனம்தான் நோய்க்கான அறிகுறியாக இருக்கும். பலருக்கு, பாசமாகப் பேசினாலே, பாதி நோய் போய்விடும். அதனால், தினமும் காலை முதல் இரவு வரை ஆலோசனை வழங்குகிறேன். ஒரு நாளைக்குக் குறைந்தது, 50 நபர்களையாவது சந்தித்துவிடுவேன். இதுதான் எனக்கு முழு மன நிறைவைக் கொடுக்கிறது'' என்றார்.'ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்’ என்னும் பழமொழி மீண்டும் மெய்யாகிறது. மருத்துவத்தைத் 'தொழில்’ ஆக்காமல், தன் தொழிலை மகத்துவமாக்கி இருக்கும் டாக்டர் ராம்பிரசாத்தை வாழ்த்தி விடைபெற்றோம்!- தி.ஜெயப்பிரகாஷ்
 
NathasaaDate: Wednesday, 19 Feb 2014, 9:19 PM | Message # 22
Major general
Group: *Checked*
Messages: 360
Status: Offline
Very Great of him
Thnx for the post viji sis
 
RAWALIKADate: Saturday, 08 Mar 2014, 2:56 PM | Message # 23
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
“இனி, உங்கள் கேலிகளால் அழப் போவதில்லை!”

Thanks - Vikatanதீர்க்கமாகப் பேசும் திருநங்கை சொப்னாகட்டுரை : பொன்.விமலா, படம் : பா:காளிமுத்துசமூகம் ''முடங்கிக் கிடந்தால்... முடிகூட சுமைதான்; எழுந்து நடந்தால் இமயமும் பக்கம்தான்! இதுதான் என் தாரக மந்திரம்...''

- நேர்படப் பேசும் சொப்னா, தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் நடத்திய 'குரூப் - 4' தேர்வில் வெற்றி பெற்றிருக்கும் முதல் திருநங்கை. இந்திய அளவிலும் முதல் நபரே!

''கூடப் படித்தவர்கள், பழகியவர்கள், சொந்தபந்தங்கள் அனைவரும் கேலிப் பொருளாகவும், வேற்றுகிரகவாசியாகவும் பார்த்தபோது, 'இவர்கள் முன்பாக சாதித்துக் காட்ட வேண்டும்' என்ற எண்ணமே எனக்குள் வளர்ந்தது. அதுதான் ஜெயிக்க வைத்திருக்கிறது. என் கனவு இன்னும் முடியவில்லை. சொப்னா ஐ.ஏ.எஸ் என்பதை நோக்கி தொடர்ந்து பயணிப்பேன்!'' என்று திடமாகப் பேசுகிறார் சொப்னா.

''ஒரு திருநங்கையாக நான் கடந்து வரும் பாதை, மிகக் கொடுமையானது. எனக்கு இப்போது 23 வயது. ப்ளஸ் டூ படிக்கும் வரை ஓர் ஆணாகத்தான் இருந்தேன். சிறு வயதிலிருந்தே ஆணாக இருப்பதில் விருப்பம் இல்லை. பெண் மாதிரி உடுத்த வேண்டும், அலங்காரம் பண்ண வேண்டும் என்ற எண்ணங்களே என்னை ஆக்கிரமித்திருந்தன. நடை, உடை, பாவனையைப் பலரும் கேலி செய்தாலும், படிப்பில் மட்டுமே நான் முழு கவனம் செலுத்த... பன்னிரண்டாம் வகுப்பு தமிழில், மாவட்டத்தில் மூன்றாவது இடம் பெற்றேன்!



இடையில் மும்பை சென்று, அறுவைசிகிச்சை மூலமாக பெண்ணாக மாறிய நான், 'சொப்னா’ என்று பெயர் சூட்டிக்கொண்டேன். இதையடுத்து... வீட்டில், சமுதாயத்தில் என்று திரும்பிய பக்கமெல்லாம் நான் சந்தித்த எதிர்ப்புகள் கடுமையானவை, கொடுமையானவை. அனைத்தையும் புறந்தள்ளி, படிப்பில் கவனத்தைத் திருப்பினேன். பி.ஏ., தமிழ் முதலாமாண்டு படிக்கும்போதே, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC), மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆகிவற்றுக்கும் விண்ணப்பித்தேன்... அனுமதிக்கவில்லை. ஓர் ஆண்,  முழுமையாக பெண்ணாக மாறிவிட்ட பின், பெண் பால் என்று ஏற்க வேண்டும் என்று முறையிட்டேன். ஏற்க மறுத்துவிட்டனர். சகதோழிகளுடன் கலெக்டர் ஆபீஸ் மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வணையம் முன்பாக முற்றுகை, சாலை மறியல் என்றெல்லாம் போராட்டங்களை நடத்தினோம்.

அடுத்து, சென்னை, உயர் நீதிமன்ற படியேறினேன். வழக்கறிஞர்கள் பவானி சுப்பராயன்,    சஞ்சீவ்குமார் இருவரும் எனக்காக வாதாடினார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.கே.அகர்வால், சத்தியநாராயணன் இருவரும்  சாதகமான தீர்ப்பு வழங்கினார்கள். இது, 'இந்தியாவில் உள்ள திருநங்கைகள் யார் வேண்டுமானாலும் அரசுப் பணியாளர் தேர்வெழுதலாம்' என்று பாதையை திறந்துவிட்டிருக்கிறது. இப்போது குரூப் 1 தேர்வுக்கும் விண்ணப்பித்துள்ளேன். நிச்சயம் ஜெயிப்பேன்!''

- உணர்ச்சிகளும் உண்மைகளும் நிறைந்திருந்தன சொப்னா பேச்சில்!

''திருநங்கைகளின் வாழ்க்கை நியாயங்கள், இந்த சமூகத்தின் பார்வைக்கே வரவில்லை. காரணம், இங்கே திருநங்கைகளாக சாதித்தவர்கள் மிகக் குறைவானவர்கள்தான். சிலர், தங்கள் வெற்றிக்குப் பின், தங்களை மட்டுமே முன்னிறுத்திக் கொள்கிறார்களே தவிர, ஆதரவுக்காக, அங்கீகாரத்துக்காக தவிக்கும் சகதிருநங்கைகளைக் கைதூக்கிவிடுவதில்லை. அந்தத் தவறை நான் நிச்சயமாகச் செய்யமாட்டேன். என்னைப் பற்றிப் பேசுவதைவிட, என் இனம் பற்றி பேசவே வாய்ப்புக் கேட்கிறேன்.

திருநங்கைகளும், திருநம்பிகளும் மனிதர்கள்தான். ஆண் பால், பெண் பால் போல, மூன்றாம் பால் என்று எங்களை அழைப்பதைக்கூட நான் விரும்பவில்லை. ஓர் ஆண் பெண்ணாக மாறிவிட்டால்... பெண்; ஒரு பெண் ஆணாக மாறிவிட்டால்... ஆண் அவ்வளவுதான். இதில் ஆச்சர்யப்படவோ, அதிசயப்படவோ, கேலி செய்யவோ என்ன இருக்கிறது? எங்களுக்கு ஊன்றுகோலாக இல்லாவிட்டால்கூட பரவாயில்லை, உற்றுப் பார்க்காதீர்கள்!ஒரு பெண்ணுக்கு என்னவெல்லாம் கொடுமைகள் நிகழ்கிறதோ, அந்தக் கொடுமைகளுக்கெல்லாம் மேலான கொடுமைகள் எங்களுக்கு நடக்கிறது. ஈவ் டீஸிங் புகார் கொடுக்கும் உரிமை பெண்ணுக்கு இருக்கிறது. அதே புகாரை நாங்கள் அளிக்கப் போனால், 'இது கண்ணடிச்சுச்சோ... இல்ல கையப் பிடிச்சி இழுத்துச்சோ...’ என்று எங்கள் மேலேயே கேஸை திருப்புகிறார்கள்.

ஆணுக்கும் பெண்ணுக்கும் வரும் காதல் உணர்வு, எங்களுக்கும் உண்டு. ஆனால், திருநங்கை, திருநம்பிகளுக்கு திருமணம் என்பது எண்ணிப் பார்க்கக்கூட மறுக்கப்படும் விஷயமாக நீடிப்பது... பெரும் துயரம்'' என்று நொந்துகொண்டவர்,

''அரசாங்கத்திடம் நாங்கள் கேட்பது சலுகையோ... யாசகமோ அல்ல. இந்த பூமியில் பிறந்துவிட்ட ஒவ்வொரு உயிரினத்துக்கும் பலவித உரிமைகள் இருக்கின்றன. அதேபோல மனிதர்களாக பிறந்துவிட்ட எங்களுக்கும் உரிமைகள் உண்டு. அவையெல்லாம் பறிக்கப்பட்டிருப்பதால், திருப்பித் தரக் கேட்கிறோம். இந்த சின்ன விஷயத்தைக் கூட புரிந்துகொள்ள முடியாதவர்களாகவே பெரும்பாலானவர்கள் இங்கே இருக்கிறார்கள்.

என் நண்பன் சொல்வான்... 'உலகில் யார் தந்த வலிக்காகவும் கண்ணீர் சிந்தாதே; உன் கண்ணீருக்கு தகுதியானவர்கள்... உன்னை அழவைக்க மாட்டார்கள்’ என்று. இனி, நாங்கள் உங்கள் கேலிகளால் அழப் போவதில்லை. சொப்னாவாகிய நான், என்னைப் போல் ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, வாய்ப்புகள் மறுக்கப்பட்ட ஒவ்வொரு திருநங்கை, திருநம்பிக்காகவும் நிச்சயமாக போராடிக்கொண்டே இருப்பேன்''- கண்களில் புது வெளிச்சம் தெரிகிறது சொப்னாவுக்கு!
 
NathasaaDate: Tuesday, 22 Apr 2014, 10:56 AM | Message # 24
Major general
Group: *Checked*
Messages: 360
Status: Offline
==> யாழில் நடைபெற்ற அழகி போட்டி



தமிழ் சிங்களப் புத்தாண்டு கோடைகாலத் திருவிழாவின் கலை நிகழ்வுகள் யாழ் தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டு நாட்களாகஅழகி போட்டி நடை பெற்றன

இதில் சுமார் 30 அழகிகள் பங்குபற்றினார்கள்.

யாழில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறுவது இப்பொழுது சகஜமாகி விட்டது எனினும் இவை மக்கள் மத்தியில் வேறுபட்ட இரு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

யாழின் கலாச்சாரங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகின்றதாக ஒரு தரப்பினரும் இப்படியான நிகழ்வுகளின் மூலம் எம் திறமைகள் வெளிக்கொண்டு வரப்படுவதாகவும் கூறிக் கொள்கின்றனர்.

எதுவாக இருப்பினும் நம் கலாச்சாரத்தில் கரிசனையுடன் இருப்பது முக்கியமானதொன்றாகும்.

அழகு போட்டி என்று மொடல் ஆடைகளில் இல்லாமல் எம் சமூக பண்பாட்டுடன் பட்டுப்புடவைகளில் பங்குபற்றியமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.

போட்டியின் போது கூச்சல் போட்ட கூட்டமும் தகாத வார்த்தைகளால் திட்டிய கூட்டமும் இங்கு நின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஆண்கள் பாட்டுக்கு ஆட்டம் போடுகின்றார்கள். பெண்கள் அழகி போட்டியில் பங்கு பற்றக் கூடாத என்று கேட்கிறவங்களும் இருகிறார்கள்.

இங்கு நாம் யாரையும் குறை கூற வரவில்லை. மக்களின் முணுமுணுப்பை தான் கூறியுள்ளோம்.





 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பயனுள்ள தகவல்கள் » நிகழ்வுகள் » நிகழ்வுகள் (நிகழ்வுகள்)
  • Page 3 of 3
  • «
  • 1
  • 2
  • 3
Search: