தொழில்நுட்பம் - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
  • Page 1 of 2
  • 1
  • 2
  • »
Forum moderator: Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பயனுள்ள தகவல்கள் » தகவல் தொழில்நுட்பம் » தொழில்நுட்பம் (தொழில்நுட்பம்)
தொழில்நுட்பம்
JeniliyaDate: Tuesday, 04 Feb 2014, 2:18 PM | Message # 1
Private
Group: Moderators
Messages: 19
Status: Offline
தொழில்நுட்பம் சம்பந்தமான தகவல்களை இங்கு பகிரவும்
 
NathasaaDate: Wednesday, 05 Feb 2014, 1:49 PM | Message # 2
Major general
Group: *Checked*
Messages: 360
Status: Offline
கண்ணீரை வரவழைக்காத வெங்காயம்.... 



வெங்காயம் என்றதும் முதலில் நினைவுக்கு வருவது கண்ணீர் தான். ஆனால் கண்ணீரை வரவழைக்காத புதிய வகை வெங்காயம் ஒன்றினை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த டியர்லெஸ் (கண்ணீரற்ற) வெங்காயம் கண் எரிவு மற்றும் கண்ணீர் வராமல் தடுப்பது மட்டுமல்லாம் இதயநோய் மற்றும் உடல் அதிகரிப்புக்கு எதிராகவும் செயற்படுகிறது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

வெங்காயத்திலுள்ள வேதியியல் பொருட்களே அதனை வெட்டும்போது அல்லது உரிக்கும் போது கண்ணீல் நீர் வரக் காரணம். இதனைத் தவிர்த்துவிட்டு வெள்ளைப் பூண்டிலுள்ளது போன்று ஸல்பரினைக்கொண்டு கண்ணீர் வரவழைக்காத வெங்காயம் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்புதிய வகை வெங்காயத்தினை அமெரிக்காவைச் சோந்த கொலின் சீ ஈடி விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



smile  ம்ம் எப்படி புதுசு புதுசா கண்டுபிடிக்கிறாங்கப்பா...


Message edited by Naths - Wednesday, 05 Feb 2014, 1:51 PM
 
NathasaaDate: Wednesday, 05 Feb 2014, 2:16 PM | Message # 3
Major general
Group: *Checked*
Messages: 360
Status: Offline
வியக்க வைக்கும் ஐ பேட் ஓவியம்



ஓவியக் கலைஞர்கள் தமது கைவண்ணத்தில் பல வியக்க வைக்கும் ஓவியங்களை வரைந்து அசத்துவது வழமை.

ஆனால் பிரித்தானியாவை சேர்ந்த 26 வயதான Cheshire என்பவர் வழமைக்கு மாறாக ஐ பேட்டினை பயன்படுத்தி ஹோலிவுட் ஸ்டார் மேர்கன் ப்ரிமானின் ஓவியத்தை மிகவும் தத்துரூபமாக வரைந்து அசத்தியுள்ளார்




Message edited by Naths - Wednesday, 05 Feb 2014, 2:18 PM
 
NathasaaDate: Wednesday, 05 Feb 2014, 2:25 PM | Message # 4
Major general
Group: *Checked*
Messages: 360
Status: Offline
அசத்தலான எதிர்கால தொழில்நுட்பம்...

 
NathasaaDate: Wednesday, 05 Feb 2014, 2:30 PM | Message # 5
Major general
Group: *Checked*
Messages: 360
Status: Offline
இப்படியொரு ஸ்மார்ட்போனை பார்த்திருக்கவே மாட்டீங்க....

 
NathasaaDate: Wednesday, 05 Feb 2014, 2:34 PM | Message # 6
Major general
Group: *Checked*
Messages: 360
Status: Offline
இரண்டே நிமிடங்களில் விமானத்திற்கு வர்ணம் பூசுவது எப்படி?...

 
NathasaaDate: Thursday, 06 Feb 2014, 11:21 AM | Message # 7
Major general
Group: *Checked*
Messages: 360
Status: Offline
இது எப்படிதான் சாத்தியமாகும்?..

 
NathasaaDate: Thursday, 06 Feb 2014, 11:23 AM | Message # 8
Major general
Group: *Checked*
Messages: 360
Status: Offline
ஆமா... இங்கேயிருந்த கார் கதவு எங்க போச்சு.... நீங்களே பாருங்க ஆச்சரியப்படுவீங்க..

 
NathasaaDate: Thursday, 06 Feb 2014, 11:25 AM | Message # 9
Major general
Group: *Checked*
Messages: 360
Status: Offline
மறுசுழற்சிக்காக சுக்குநூறாக நொறுக்கப்படும் விமானம்....

 
NathasaaDate: Thursday, 13 Feb 2014, 4:46 PM | Message # 10
Major general
Group: *Checked*
Messages: 360
Status: Offline
ஒரு லிற்றர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் கார்

ஒரு லிற்றர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் கார் ஒன்றை துபாய் மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஐக்கிய அரபு குடியரசு நாட்டின் துபாய் நகரத்தில் உள்ள உயர் தொழில்நுட்பக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இணைந்து புதிய கார் ஒன்றை வடிவமைத்துள்ளனர்.

இரண்டு வருட முயற்சிக்குப் பின் உருவாக்கப்பட்டுள்ள இந்த கார் ஒரு லிற்றர் பெட்ரோலில் 1000 கிலோ மீற்றர் தூரம் செல்லக் கூடியது என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

மிகக் குறைவான எடை கொண்ட இந்தக் காருக்கு இகோ துபாய்-1 என்று பெயரிட்டுள்ளனர். கோலாலம்பூரில் வரும் யூலை மாதம் 4ம் திகதி முதல் 7 திகதி வரை பள்ளி, கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய குறைந்த சக்தியில் இயங்கும் வாகனங்களுக்கான போட்டி நடைபெற உள்ளது. இந்தப் போட்டிகளில், இகோ துபாய்-1 காரை மாணவர்கள் அறிமுகப்படுத்துகிறார்கள்



Added (13 Feb 2014, 4:46 PM)
---------------------------------------------
மாணவிக்கு பதிலாக பள்ளிக்கு செல்லும் ரோபோ



அமெரிக்காவில் சவுத் கரோலினா அருகேயுள்ள சுமேடர் நகரை சேர்ந்த லெஸி (9) அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறாள்.
பிறப்பிலேயே இருதய கோளாறினால் பாதிக்கப்பட்ட இவளால் ஒழுங்காகப் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. இதனால் இவளது பாடங்கள் பாதிக்காமல் இருக்க அவரது பெற்றோர் புதுவிதமான ரோபோ (எந்திர மனிதன்) ஒன்றை வாங்கி கொடுத்துள்ளனர்.
தற்போது, அந்த ரோபோதான் லெஸிக்கு பதிலாக பள்ளிக்கு சென்று பாடங்களை படித்து வருகிறது. "வி.ஜி.ஓ." என அழைக்கப்படும் இந்த ரோபோ 4 அடி உயரமும், 18 பவுண்டு எடையும் கொண்டது.
இதனது முகத்தில் வீடியோ ஸ்கிரீன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோவில் கேமரா மற்றும் இண்டர்நெட் வசதியும் உள்ளது. பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருக்கும் லெஸி ரோபோவை வீட்டில் இருந்தபடியே கம்ப்யூட்டரில் மவுஸ் மூலம் இயக்குகிறாள்.
வகுப்பறைக்கு செல்லும் ரோபோவின் வீடியோ திரை வீட்டில் இருக்கும் கம்ப்யூட்டரில் தெரிகிறது. அதே வேளையில், வகுப்பறையில் ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை படம் பிடிக்கும் ரோபோ அதை வீடியோவில் பதிவு செய்து வீட்டில் இருக்கும் கம்ப்யூட்டரில் ஒளிபரப்பும்.
அதன் மூலம் லெஸி தனது வகுப்பில் ஆசிரியர்கள் நடத்தும் பாடங்கள் மற்றும் உடன் படிக்கும் மாணவர்களையும் பார்த்து தெரிந்து கொள்கிறாள்.
இதை வைத்து வீட்டில் இருந்தபடியே பாடம் படித்து தேர்வு எழுதி வருகிறாள். இந்த ரோபோவுக்கு ஆடை உடுத்தி லெஸி அழகு பார்க்கிறாள். அதை தன்னுடனேயே தூங்க வைக்கிறாள். அதற்கு "இளவரசி வி.ஜி.ஓ." என அன்புடன் பெயரிட்டும் இருக்கிறாள்



 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பயனுள்ள தகவல்கள் » தகவல் தொழில்நுட்பம் » தொழில்நுட்பம் (தொழில்நுட்பம்)
  • Page 1 of 2
  • 1
  • 2
  • »
Search: