விவசாயிகளின் நண்பன் - Page 2 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
  • Page 2 of 2
  • «
  • 1
  • 2
Forum moderator: Jeniliya, Laya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பசுமை - இயற்கையின் கொடை » விவசாயிகளின் நண்பன் » விவசாயிகளின் நண்பன் (விவசாயிகளின் நண்பன்)
விவசாயிகளின் நண்பன்
vaideeshDate: Friday, 14 Mar 2014, 1:12 AM | Message # 11
Lieutenant colonel
Group: *Checked*
Messages: 135
Status: Offline
Wonderful information shared!Some people does not understand the need for agriculture and it is our backbone in India.
Some government should come and develop agriculture sector whihc is very important!!!!!!
 
rajiiDate: Tuesday, 18 Mar 2014, 12:31 PM | Message # 12
Major
Group: *Checked*
Messages: 83
Status: Offline
ஆட்சி மாறினாலும் ஆட்சியாளா்கள் மனம் மாற வேண்டும்.

மக்கள் போராட்டங்கள் வெற்றி பெற வேண்டும்.:(  :unsure:
 
JanviDate: Saturday, 30 Aug 2014, 5:24 PM | Message # 13
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
இயற்கை முறையில் (ஆர்கானிக்) தயார் செய்யப்பட்ட பொருட்கள் சென்னையில் கிடைக்குமிடம்

ஆர்கானிக் பொருட்கள் கிடைக்குமிடம் - சென்னை
 
RAWALIKADate: Tuesday, 02 Sep 2014, 8:33 PM | Message # 14
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
முழு மானியத்தில் பண்ணைக்குட்டைகள்

www.dinamalar.com

வறட்சி காலங்களில், கிணறுகளின் நீர் மட்டத்தை உயர்த்தவும், கால்நடைகளின் குடிநீர் தேவைக்கும், இறுதிகட்ட விவசாய பணிகளுக்கும் பண்ணை குட்டைகள் அமைக்கப் படுகிறது. 
அனைத்து பகுதிகளிலும் விவசாயிகளின் தேவைக்கேற்ற அளவுகளில் ரூ.17 ஆயிரத்து 585 முதல் ரூ.1.47 லட்சம் வரையிலும் அமைத்து தரப்படும். 
இச்செலவை அரசே ஏற்கும். விரும்பும் விவசாயிகள், 0452 - 2485259 அல்லது வேளாண் உதவி அலுவலர் அழகேசன் 98658 92957, ரவியை 98420 75881ல் தொடர்பு கொள்ளலாம், என உதவி வேளாண்மை இயக்குநர் துரைக்கண்ணம்மாள் தெரிவித்தார்.
 
JanviDate: Wednesday, 03 Sep 2014, 5:07 PM | Message # 15
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
இதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இதைப் பற்றி உங்கள் எண்ணம் என்ன?
 
JanviDate: Wednesday, 03 Sep 2014, 5:08 PM | Message # 16
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
Quote RAWALIKA ()
முழு மானியத்தில் பண்ணைக்குட்டைகள் www.dinamalar.com

வறட்சி காலங்களில், கிணறுகளின் நீர் மட்டத்தை உயர்த்தவும், கால்நடைகளின் குடிநீர் தேவைக்கும், இறுதிகட்ட விவசாய பணிகளுக்கும் பண்ணை குட்டைகள் அமைக்கப் படுகிறது.
அனைத்து பகுதிகளிலும் விவசாயிகளின் தேவைக்கேற்ற அளவுகளில் ரூ.17 ஆயிரத்து 585 முதல் ரூ.1.47 லட்சம் வரையிலும் அமைத்து தரப்படும்.
இச்செலவை அரசே ஏற்கும். விரும்பும் விவசாயிகள், 0452 - 2485259 அல்லது வேளாண் உதவி அலுவலர் அழகேசன் 98658 92957, ரவியை 98420 75881ல் தொடர்பு கொள்ளலாம், என உதவி வேளாண்மை இயக்குநர் துரைக்கண்ணம்மாள் தெரிவித்தார்.

பயனுள்ள தகவல் நன்றி ரவாளிகா. அரசே செலவை ஏற்கும்ன்னு சொல்லிருக்கிங்க. சிறு விவசாயிகள் பயன்பெற்றால் நல்லது


Message edited by Janvi - Wednesday, 03 Sep 2014, 5:10 PM
 
JanviDate: Wednesday, 03 Sep 2014, 5:14 PM | Message # 17
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
போன்சாய் மரம் வளர்ப்பு 
 சென்னையில் முப்பது ஆண்டு காலமாக போன்சாய் செடிகளை உற்பத்தி செய்துவரும்
'சோனா' அன்னபூரணி இதற்கு பதில் அளிக்கிறார்.

‘‘சீனாவிலிருந்து ஜப்பான் நாட்டுக்கு சென்ற செடி வளர்ப்பு
முறைதான் இது. ஜப்பானில்தான் இந்த முறை மிகநுணுக்கமாக வளர்த்தெடுக்கப்பட்டது.
போன்சாய் என்பதே ஜப்பானிய வார்த்தைதான். 'போன்' என்றால்
ஆழமில்லாத தட்டு. 'சாய்' என்றால் செடி என்று பொருள்.
காடுகளில் வியப்புடன் நாம் பார்க்கிற பெரிய மரங்களைக் கூட
குட்டிச் செடிகளாக மாற்றி வீட்டுக்குள் வளர்க்க முடியும்.

'பெரியச் செடிகளை வளரவிடாமல் குறுக்கிவளர்ப்பது இயற்கைக்கு விரோதமான
செயல்தானே?' என்று சிலர் கேட்பதுண்டு. அப்படியெல்லாம் தவறான
கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது. பெரியமரத்தை அழகு ரசனையுடன்
சிறியதாக மாற்றுகிறோம் அவ்வளவுதான். மற்றபடி அதற்கு நீர்
கொடுப்பதிலோ, சத்துக்கள் கொடுப்பதிலோ கட்டுப்பாடுகள்
எல்லாம் கிடையாது. போன்சாய் வடிவில் உள்ள மா, கொய்யா
போன்ற செடிகளில் சீசனுக்கு சீசன் காய் காய்க்கும். பெரிய
மரத்தைக் காட்டிலும் விளைச்சல் குறைவாக இருக்கும். ஆனால்,
சுவை குன்றாது.

போன்சாய் செடியை அழகான குறுகிய மரமாக உருவாக்க குறைந்தபட்சம்
5 ஆண்டுகாலம் தேவைப்படும். பொறுமையுடன் காத்திருந்தால்
நல்ல மரம் கிடைக்கும். வீட்டில் உள்ள பெண்கள் இதை, பொழுதுபோக்காக
செய்து விற்பனை செய்யலாம். சாதாரணமாக போன்சாய் செடி
ரூ500 முதல் ரூ5 ஆயிரம் வரையில் விற்பனையாகிறது. ஓவியம்
வரைவது, சிலை வடிப்பது போல போன்சாய் மரம் வளப்பதும்
ஒரு நுண்கலைதான்.’’ தொலைபேசி: 044- 26580925.  

-- நன்றி பசுமை விகடன்
 
JanviDate: Monday, 15 Sep 2014, 8:47 PM | Message # 18
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
சிறு மற்றும் குறு தானியங்களில் அடங்கியுள்ள சத்துக்கள் மருத்துவ பயன்கள் மற்றும் அவற்றிலிருந்து தயாரிக்கப்படும் உணவு பதார்த்தங்கள்

1. சிறு மற்றும் குறு தானியங்கள்: கம்பு
அடங்கியுள்ள சத்துக்கள் : புரதம், கொழுப்புச்சத்து, தாது உப்புக்கள் நார்ச்சத்துக்கள் மற்றும் மாவுச்சத்து உள்ளது.
மருத்துவ பயன்கள்: உடல் உஷ்ணமடைய செய்வதை குறைக்கிறது. மற்றும் வயிற்றுப்புண் மலச்சிக்கலை தவிர்க்க வல்லது.
சிறு மற்றும் குறு தானியங்களிலிருந்து தயாரிக்கப்படும் உணவுப் பதார்த்தம்: கம்பு களி, கம்பு சோறு, கம்பு புட்டு கம்பு நூடுல்ஸ், கம்பு பிஸ்கட்

02. சிறு மற்றும் குறு தானியங்கள்: சோளம்
அடங்கியுள்ள சத்துக்கள்: புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், தயாமின், நயாசின், தாது உப்புக்கள் மற்றும் நார்ச்சத்து
மருத்துவ பயன்கள்: நீரிழிவு நோய் செரிமான குறைகள், ரத்தசோகை சர்க்கரை நோய் முதலியவற்றை குணப்படுத்துகிறது.
சிறு மற்றும் குறு தானியங்களிலிருந்து தயாரிக்கப்படும் உணவுப் பதார்த்தம்: சோள சோறு, சோள களி, சோள அடை, சோள வடை, சோள பாயசம், சோள மால்ட்,சோள பிஸ்கட், ரொட்டி முதலியன தயாரிக்கப்படுகிறது.

03. சிறு மற்றும் குறு தானியங்கள்: கேழ்வரகு
அடங்கியுள்ள சத்துக்கள்: புரதம், மாவுச்சத்து, சுண்ணாம்புச்சத்து பாஸ்பரஸ், இரும்புசத்து முதலியன உள்ளன.
மருத்துவ பயன்கள்: சர்க்கரை நோய் மற்றும் ரத்தசோகை முதலியவற்றை குணப்படுத்துகிறது.
சிறு மற்றும் குறு தானியங்களிலிருந்து தயாரிக்கப்படும் உணவுப் பதார்த்தம்: கேழ்வரகு களி, கேழ்வரகு மால்ட், கேழ்வரகு புட்டு, கேழ்வரகு ரொட்டி முதலியன தயாரிக்கப்படுகிறது.

04. சிறு மற்றும் குறு தானியங்கள்: சாமை
அடங்கியுள்ள சத்துக்கள்: புரதம், நார்ச்சத்து, லைசின், அமினோ அமிலம், இரும்புச்சத்து,
கொழுப்புச்சத்து, ஈரப்பதம், கொழுப்பு, தாது உப்புக்கள் மற்றும் மாவுச்சத்து
முதலியன உள்ளன.
மருத்துவ பயன்கள்: சர்க்கரை நோயை குணப்படுத்துகிறது. செரிமானத்தை எளிதாக்குகிறது. சிறு மற்றும் குறு தானியங்களிலிருந்து தயாரிக்கப்படும் உணவுப் பதார்த்தம்: பணியாரம், சாமை சோறு, சாமை மால்ட், சாமை பிரியாணி, இணை உணவு குளூக்கோஸ் முதலியன தயாரிக்கப்படுகிறது.

05. சிறு மற்றும் குறு தானியங்கள்: திணை
அடங்கியுள்ள சத்துக்கள்: ஈரப்பதம், புரதம், கொழுப்புச்சத்து, தாது உப்புக்கள், நார்ச்சத்துக்கள்,
மாவுச்சத்து மற்றும் வைட்டமின் "பி', பாஸ்பரஸ், சுண்ணாம்புச்சத்து உள்ளது.
மருத்துவ பயன்கள்: இதயத்தை பலப்படுத்துவதற்கு உதவுகிறது.
சிறு மற்றும் குறு தானியங்களிலிருந்து தயாரிக்கப்படும் உணவுப் பதார்த்தம்: முருக்கு, சீடை, ரொட்டி முதலியன தயாரிப்பதற்கு பயன்படுகிறது.

06. சிறு மற்றும் குறு தானியங்கள்: வரகு
அடங்கியுள்ள சத்துக்கள்: தாது உப்புக்கள் மற்றும் நார்ச்சத்து அடங்கியுள்ளது.
மருத்துவ பயன்கள்: சர்க்கரை அளவை குறைக்கிறது. மூட்டுவலியை குறைக்க உதவுகிறது. சிறு மற்றும் குறு தானியங்களிலிருந்து தயாரிக்கப்படும் உணவுப் பதார்த்தம்: முருக்கு, சீடை, வரகு சோறு, வரகு மால்ட் முதலியன தயாரிப்பதற்கு பயன்படுகிறது.

07. சிறு மற்றும் குறு தானியங்கள்: பனிவரகு
அடங்கியுள்ள சத்துக்கள்: ஈரப்பதம், புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, தாது உப்புக்கள் மற்றும் மாவுச்சத்து
மருத்துவ பயன்கள்: சர்க்கரை அளவினை குறைக்கிறது.
சிறு மற்றும் குறு தானியங்களிலிருந்து தயாரிக்கப்படும் உணவுப் பதார்த்தம்: முறுக்கு, சீடை, அதிரசம் முதலியன தயாரிக்க உதவுகிறது.

08. சிறு மற்றும் குறு தானியங்கள்: குதிரைவாலி
அடங்கியுள்ள சத்துக்கள்: நார்ச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து உள்ளது.
மருத்துவ பயன்கள்: உடலை சீராக வைக்க உதவுகிறது. சர்க்கரை அளவினை குறைக்க வல்லது ஆண்டி ஆக்ஸிடன்ட்ஆக வேலை செய்கிறது.
சிறு மற்றும் குறு தானியங்களிலிருந்து தயாரிக்கப்படும் உணவுப் பதார்த்தம்: இட்லி, தோசை, உப்புமா, கூழ் மற்றும் முருக்கு, சீடை, பக்கோடா முதலியன தயாரிக்கப்படுகிறது.

சிறு மற்றும் குறு தானியங்களை தொடர்ந்து பயன்படுத்துவதால் நாம் பல்வேறு வகையான
ஊட்டச்சத்து குறைபாடுகளிலிருந்து நமது உடலை பாதுகாக்கலாம்.
திருமதி ப.கோமதி, துறை வல்லுனர் (மனையியல்), மற்றும் த.ஜெயபிரகாஷ், தொழில்நுட்ப உதவியாளர்,
ஸ்ரீ அவினாசிலிங்கம் வேளாண்மை அறிவியல் நிலையம், விவேகானந்தபுரம்-641 113, காரமடை, கோயம்புத்தூர்.

--- Thanks to Dinamalar
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பசுமை - இயற்கையின் கொடை » விவசாயிகளின் நண்பன் » விவசாயிகளின் நண்பன் (விவசாயிகளின் நண்பன்)
  • Page 2 of 2
  • «
  • 1
  • 2
Search: