RAWALIKA | Date: Monday, 24 Nov 2014, 8:41 AM | Message # 1 |
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
| இன்ஷூரன்ஸ்: செய்யக்கூடாத தவறுகள்!
இன்றைய நிலையில் இன்ஷூரன்ஸ் என்பது மக்களுக்குத் தேவைப்படும் அத்தியாவசியங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. ஆனால், அதை நம்மில் பெரும்பாலானவர்கள் உணர மறுக்கிறோம். எதற்காக இன்ஷூரன்ஸ் எடுக்கிறோம், இன்ஷூரன்ஸ் திட்டங்களை தேர்ந்தெடுப்பது எப்படி என்பது குறித்த அனைத்திலும் நம்மில் பெரும்பாலானவர்கள் அக்கறை காட்டுவதில்லை. இதனாலேயே பெரும்பாலான சமயங்களில் இன்ஷூரன்ஸ் சார்ந்த பிரச்னைகளை சந்திக்க வேண்டி இருக்கிறது.
அதனால் இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது எதற்காக இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும், எவ்வளவு எடுக்க வேண்டும் என்றெல்லாம் கவனிக்க வேண்டியது அவசியம். இங்கே, இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது செய்யக்கூடாத தவறுகளைப் பார்க்கலாம்.
இன்ஷூரன்ஸ் பாதுகாப்புக்குத்தான்!
நம்மில் பெரும்பாலானவர்கள் தவறான முக்கியத்துவத்துக்காக லைஃப் மற்றும் ஹெல்த் இன்ஷூரன்ஸை எடுக்க முனைகிறோம். அதாவது, இன்ஷூரன்ஸ் எடுத்துக் கொள்வதால் வரிச் சலுகை கிடைக்கும் என்பதற்காகவும், குழந்தைகளின் கல்விச் செலவுக்காக இன்ஷூரன்ஸ் எடுத்து வைத்துக்கொள்ளலாம் என்பதும் நமக்கு இன்ஷூரன்ஸ் மீது இருக்கும் தவறான புரிதலைக் காட்டுகிறது. இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது இன்ஷூரன்ஸ் என்பது பாதுகாப்புக்குத்தான் என்பதை உணர்ந்து எடுக்க வேண்டும்.
முதலீடாக நினைக்க வேண்டாம்!
முதலீடு மற்றும் இன்ஷூரன்ஸ் ஆகிய இரண்டையும் நம்மில் பெரும்பாலானவர்கள் போட்டு குழப்பிக்கொள்கிறார்கள். எதற்காக இன்ஷூரன்ஸ் எடுத்திருக்கிறீர்கள் என்றால், கொஞ்சமும் யோசிக்காமல் எதிர்கால தேவைகளுக்காக என்று சொல்பவர்களும் இன்றுவரை இருக்கத்தான் செய்கிறார்கள். முதலில் இன்ஷூரன்ஸ் முதலீடு கிடையாது என்பதை இவர்கள் உணர வேண்டும். பாதுகாப்பான முதலீடுகளாக மியூச்சுவல் ஃபண்ட், வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் போன்றவை இருக்கும்போது, பாதுகாப்புக்காக எடுத்துக்கொள்ளும் இன்ஷூரன்ஸ் திட்டங்களை முதலீடு என்று நினைப்பது முற்றிலும் தவறானதாகும். அதுமட்டுமல்லாமல் எண்டோவ்மென்ட் பாலிசி, யூலிப் பாலிசி ஆகியவைக் கொடுக்கும் வருமானத்தைவிட பலமடங்கு வருமானத்தை மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் கொடுக்கும்.
குறைந்த பிரீமியம் இன்ஷூரன்ஸ் வேண்டாம்!
மக்கள் செய்யக்கூடாத மிக முக்கியமான தவறு, குறைந்த பிரீமியத்தில் கிடைக்கிறதே என்று இன்ஷூரன்ஸ் திட்டங்களைத் தேர்வு செய்வது. இன்ஷூரன்ஸ் திட்டங்களை தேர்வு செய்யும்போது அவரவர்களின் தேவையை உணர்ந்து எடுக்க வேண்டுமே தவிர, குறைந்த பிரீமியத்தில் கிடைக்கிறது என்பதற்காகவெல்லாம் எடுக்கக் கூடாது.
அதிக எண்ணிக்கையில் இன்ஷூரன்ஸ் வேண்டாம்!
அவரவர்களின் இன்ஷூரன்ஸ் தேவை பற்றி தெரியாததால்தான் தன் பெயரில் நான்கு இன்ஷூரன்ஸ், தனது மனைவி பெயரில் நான்கு இன்ஷூரன்ஸ் மற்றும் குழந்தைகள் பெயரில் சில இன்ஷூரன்ஸ் என எடுத்துக்கொள்வார்கள். தேவையில்லாத இன்ஷூரன்ஸ்களை எடுத்துக்கொள்வதால் பிரீமியத்துக்கான செலவுகள் அதிகரிக்கும். அதுமட்டுமில்லாமல் குறைந்த அளவு முதிர்வுதொகை உள்ள பாலிசிகளுக்கு அதிக பிரீமியம் கட்ட வேண்டி இருக்கும்.
கண்மூடித்தனமாக நம்பாதீர்கள்!
"பிரதிபலன் இல்லாமல் யாருமே யாருக்கும் செய்யவேண்டிய அவசியம் கிடையாது" என்பது நாம் எல்லோரும் அறிந்த விஷயம். அதேபோலத்தான் இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்டுகளும். அவர்களுக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் திட்டத்தை தவிர மற்ற பாலிசி வகைகளுக்கு கமிஷன் கிடைக்கும் என்பதால் அதைத்தான் அவர்கள் எல்லோருக்கும் பரிந்துரை செய்வார்கள். பாலிசிதாரர்களின் தேவை அவர்களுக்கு முக்கியமாக தெரியாது. அதனால் அவர்கள் பரிந்துரை செய்யும் பாலிசிகளை அப்படியே நம்பிவிட வேண்டாம்.
ஆக, இனியாவது இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது மேலே சொல்லப்பட்டுள்ள தவறுகளைத் தவிர்ப்பது நல்லது.
- செ.கார்த்திகேயன்.
|
|
| |
vaideesh4651 | Date: Tuesday, 16 Dec 2014, 5:01 PM | Message # 2 |
Lieutenant colonel
Group: *Checked*
Messages: 135
Status: Offline
| Dear Rawalika, thanks for the above link.
|
|
| |