தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்! - Page 6 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்!
LayaDate: Sunday, 16 Feb 2014, 8:11 PM | Message # 1
Lieutenant
Group: Moderators
Messages: 72
Status: Offline
தர்பார் .... நையாண்டி தர்பார்!

 
மனம்விட்டு சிரிக்கவும், சிறிது சிந்திக்கவும் வைக்கும் தர்பார்...நையாண்டி தர்பார்!
 
கவனிக்க:
 
யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல
 
shanDate: Monday, 17 Feb 2014, 8:40 PM | Message # 51
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
தகவலுக்கு நன்றி சுதா.ஆனால் இப்போ வொர்க் ஆகுது ..
 
vaideeshDate: Monday, 17 Feb 2014, 8:47 PM | Message # 52
Lieutenant colonel
Group: *Checked*
Messages: 135
Status: Offline
what a updates from you all.You all are rocking with this story.thanks to all for the laughter.
 
srkDate: Monday, 17 Feb 2014, 8:56 PM | Message # 53
Major general
Group: *Checked*
Messages: 304
Status: Offline
Quote shan ()
தகவலுக்கு நன்றி சுதா.ஆனால் இப்போ வொர்க் ஆகுது ..

ok, Shanthi.


Life is God's Gift
 
shanDate: Monday, 17 Feb 2014, 9:09 PM | Message # 54
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
நீயின்றி நான் இல்லை
பாகம் -6
முன் இருக்கையில் இருந்து அவளையே வைத்த கண் சிமிட்டாமல் பார்த்தன் நந்தன் ......நந்தினி அவன் பார்வையில் தடுமாறி ஆட்டத்தை முடித்தாள்..........

கலை நிகழ்சி முடிந்ததும் தன ஆடி காரில் அவளை வீட்டில் விடுவதாக சொல்ல அந்நேரம் கௌதம் வந்து போகலாமா என கேட்க அவனுடன் நந்தினி பைக்கில் ஏற நந்தனின் ஆடி ஆடாமல் பறந்தது கோபத்துடன் .....
நந்தன் கோபத்துடன் பார்க்கு சென்று போதையுடன்
சொர்க்கம் மதுவிலே என ஆடி வந்து படுகையில் விழுகிறான் ......

நந்தனின் போன் அலற ,மாயா ஹலோ டார்லிங் .இன்று evening movie போலாமா என கேட்க மீட்டிங் இருக்கு என சொல்லி போன் கட் செய்கிறான்
அவன் தன்னை விட்டு விளகுகிறானோ என மாயா தன முளையை உபயோகித்து அடுத்த நாள் கல்லூரி வாசலில் நந்தினியை மடக்கி ,
நந்தனிடம் பழகினால் கேட்பதெல்லாம் கிடைக்கும் ,அவன் ஒரு தங்க சுரங்கம் என சொல்ல கோபமடைந்த நந்தினி உன் போல் பிழைக்கும் பழக்கம் எனக்கில்லை என கோபமாக கூறி உள்ளே செல்கிறாள் .....
மாயா
சந்தோசம் இன்று சந்தோசம்
இந்த பொன்வீணையில் பொங்கும் சங்கீதம் .............
 
srkDate: Monday, 17 Feb 2014, 9:18 PM | Message # 55
Major general
Group: *Checked*
Messages: 304
Status: Offline
சாந்தி.....சூப்பர்.......

இந்த கதைல ஆடி கார் படுற பாடு இருக்கே!!!!!
அய்யோ அய்யோ....

ஆடி கார் மதிப்பே போச்சு.........ஹி ....ஹி....


Life is God's Gift

Message edited by srk - Monday, 17 Feb 2014, 9:19 PM
 
RAWALIKADate: Monday, 17 Feb 2014, 9:42 PM | Message # 56
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
Quote shan ()
நந்தினி அவன் பார்வையில் தடுமாறி ஆட்டத்தை முடித்தாள்.......... கலை நிகழ்சி முடிந்ததும் தன ஆடி காரில் அவளை வீட்டில் விடுவதாக சொல்ல அந்நேரம் கௌதம் வந்து போகலாமா என கேட்க அவனுடன் நந்தினி பைக்கில் ஏற நந்தனின் ஆடி ஆடாமல் பறந்தது கோபத்துடன் .....
நந்தன் கோபத்துடன் பார்க்கு சென்று போதையுடன்
சொர்க்கம் மதுவிலே என ஆடி வந்து படுகையில் விழுகிறான் ......


தூள் கிளப்பிடீங்க...

ஆடி ஆடாமல் பறந்த அவனின் ஆடி கார் ....
 
SSDate: Monday, 17 Feb 2014, 9:50 PM | Message # 57
Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
Quote Jay ()
Anju kalakkareenga. Paarunga yellarkittayum yethanai thiramai irukku. Yellarume oru 100,150 books yezhuthara alavu capacity vachirukkaanga. Kalakkunga makkas
மக்காஸ் ...  பழைய எதிர்நீச்சல் படத்துல முத்துராமன் ஒரு டயலாக் சொல்லுவர்.... "உலகம் வளர கெட்டுபோயி.... எல்லோரும் ஒரே சமயத்துல நல்லவர்களாயி .." ( இப்படி.. தான் டயலாக் வரும்.. சரியாய் தெரியல..ஹி ஹி ஹி..)

அது போல நம்ம எல்லாரும் ஓவரா எல்லா கதைகளையும் படிச்சு.. இப்படி ஆகிட்டோம்....

இந்த திரி ஆரம்பிச்சதும் தான் தெரியுது.. ஒவ்வொருத்தருக்குள்ள இருக்கும் வெறி (கதை எழுதும் ஆர்வமுங்கோ:))


Message edited by SS - Monday, 17 Feb 2014, 9:51 PM
 
SSDate: Monday, 17 Feb 2014, 10:03 PM | Message # 58
Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
Quote shan ()
அவனுடன் நந்தினி பைக்கில் ஏற நந்தனின் ஆடி ஆடாமல் பறந்தது கோபத்துடன் .....நந்தன் கோபத்துடன் பார்க்கு சென்று போதையுடன்
சொர்க்கம் மதுவிலே என ஆடி வந்து படுகையில் விழுகிறான் ......

ஆடி என்கின்ற வார்த்தையை அதிகமா பயன்படுத்தியதற்காக ..உங்களுக்கு ஒரு snack ...
இனிமேல் ரோடுல ஆடி கார் பார்த்தாலே .. இந்த ஸ்டோரி தான் நியாபகம் வரும்..

ஆமா அப்படி என்ன பா உங்க எல்லாருக்கும் ஆடி கார் மேல கோவம்.. இப்படி போட்டு தள்ளிடீங்க........

பி.கு: இப்போ எல்லாம் hummer அப்படிங்கற வண்டி தான் பா சூப்பர் famous .. அடுத்த எபிசொட் ல..அது வர மாதிரி போடுங்க பா.. யாரனும் ......


Message edited by SS - Monday, 17 Feb 2014, 10:06 PM
 
SSDate: Monday, 17 Feb 2014, 10:31 PM | Message # 59
Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
நீயின்றி நானில்லை
பாகம் -7
மாயா தன்னிடம் பேசியதை தாங்க முடியவில்லை நந்தினியால்.. எப்படி அவள் தன்னை இப்படி கேவல படுத்தலாம் என்று ஒரு எரிமலையாய் குமுறிகொண்டிருந்தாள். அதே எண்ணத்திலேயே வீடு வந்து கொண்டிருக்கும் போது... ஒரு குறுக்கு சந்தில் அவளது வண்டியை ஒரு Hummar வழி மறித்து நின்றது(அப்பாடி... ஹம்மர் கார் கொண்டு வந்துட்டேன் கதைல ).... அதிலிருந்து ராஜ நடை நடந்து அவளருகே வந்தான் அர்ஜுன்.... அவனது கால்களை பார்த்த போது ஏனோ அவளுக்கு ஆடி ஆடி அவளருகே ஆடி காரிலிருந்து நடந்து வந்த நந்தனின் எண்ணமே தோன்றியது....

" என்னமா பகல் கனவா அதுவும் வண்டி  ஓட்டும் போதே வா..." என்று அவள் கண் முன்னே விரல்கள் சொடுக்கினான். "ஹலோ" என்று குலுக்குவதற்கு கையையும் நீட்டினான்.

"அர்ஜுன்..... நீயா? ஒ மை காட்...எப்படி இருக்கே?" என்று அவனது  விரிந்த கைகளில் தனது கையினை கொடுத்து ..அவனை பார்த்து அழகாக சிரித்தாள்(அழகான பொண்ணு சிரிச்சாலே அழகா இருக்கும்..அதென்ன அழகாக சிரித்தாள் னு போட்டு இருக்கு..கேக்க தோணும்... கதைனா இப்படி எல்லாம் தான் போடணுமே பா...). இதனை தூரத்தில் இருந்து நான்கு கண்கள்  பார்த்தன.......

அவனிடம் சிறிது நேரம் பேசி விட்டு.. வீட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்து.. வீட்டிற்கு வந்தாள்... என்ன சமாதானம் செய்தாலும் அவள் மனம் மாயா சொன்னதற்கு எரிந்து கொண்டிருந்தது.... மறுநாள் எப்படியும் நந்தனை பார்த்து நறுக்கென்று நாலு வார்த்தை கேட்டு அவனை எச்சரித்து விடவேண்டும் என்று தூங்கினாள்.. அதாவது தூங்க முயற்சி எடுத்தாள் .. தூக்கம் வந்தால் தானே...

" தூங்காத விழிகள் ரெண்டு.. உன் துணை சேரும் நெஞ்சம் ஒன்று ..."

என்று கண்களில் காதல் ரசம்(சாம்பாரா இருக்குமோ....)பொங்க ... பாடிக்கொண்டே.. அழகாக சிரித்தான் நந்தன்...


Message edited by SS - Monday, 17 Feb 2014, 10:46 PM
 
shanDate: Monday, 17 Feb 2014, 10:32 PM | Message # 60
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
Quote SS ()
ஆடி என்கின்ற வார்த்தையை அதிகமா பயன்படுத்தியதற்காக ..உங்களுக்கு ஒரு snack ...
இனிமேல் ரோடுல ஆடி கார் பார்த்தாலே .. இந்த ஸ்டோரி தான் நியாபகம் வரும்..

என்ன செய்வது ss இப்போ நாயகன்எல்லோரும் காரில் தான் அறிமுகம் ஆகிறார்கள் ........

நந்தினியை சப்புன்னு அறையனும்னா இன்னொரு வில்லன் என்ட்ரி வேண்டுமே
 
Search: