தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்!
|
|
Laya | Date: Sunday, 16 Feb 2014, 8:11 PM | Message # 1 |
Lieutenant
Group: Moderators
Messages: 72
Status: Offline
| தர்பார் .... நையாண்டி தர்பார்! மனம்விட்டு சிரிக்கவும், சிறிது சிந்திக்கவும் வைக்கும் தர்பார்...நையாண்டி தர்பார்! கவனிக்க: யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல
|
|
| |
anju | Date: Wednesday, 26 Feb 2014, 6:42 PM | Message # 251 |
 Lieutenant
Group: Checked
Messages: 44
Status: Offline
| பாகம் -38 இப்போ நந்தனின் கோபம் கொஞ்சம் குறைந்தது .மறுபடியும் ஆகாஷை அழைத்தான் .சொல் நண்பா என ...அந்த சுரேஷ் என்ன செய்கிறான் ,அவனை பற்றிய தகவல்கள் வேண்டும் என .......விசாரிகிறேனு சொல்லி போனை வைத்தான் ஆகாஷ் ....... அர்ஜுன் என்ன நீ சொன்னாலும் ஒரு சிறு ஆட்டம் காட்டிட்டு தான் அந்த மாயாவை நான் விடுவேன் என்று சொல்ல ..... முதலில் அவனை பற்றிய தகவல் வரட்டும் ....என்று சொல்ல ...... நந்தன் கீழே பார்த்து அம்மா 2 காபி கொடுத்து விடுங்க (ஹப்பா இப்பவாது ஒரு காபி கொடுக்கணும்னு தோனுச்சே ) ஆகாஷிடம் இருந்து இப்போ சுரேஷ் பற்றிய சகல விவரமும் மெயிலில் .....சுரேஷ் இப்போ தொழிலில் கொஞ்சம் முன்னேறிட்டான் ....மாயா மேல் இன்னும் காதல் இருக்கிறது ......சாட்சி மாயாவுக்காக ஒரு வசந்த மாளிகை (அதான் பங்களா )கட்டுறான் ......... ஓகே அர்ஜுன் வா போகலாம் என எங்கே என்று அர்ஜுன் கேட்க மாயா வீட்டுக்கு நந்தனின் ஆடி காரில் பயணம் .......அர்ஜுன் நீ காரில் இரு .நான் உள்ளே போய் ஒரு ஆட்டம் காட்டிட்டு வரேன் .அப்புறம் நீ வா என்று உள்ளே செல்கிறான் ........ மாயா என கூவியபடி உள்ளே நுழைகிறான் ......என்ன நந்து உன் காதலுக்காக மன்றாட வந்துருக்கியா என்று ஸ்டைலாக சோபாவில் வந்து அமர்கிறாள் ..... . ஹ .ஹா நல்ல காமெடி போ........ஒரு வீடியோ பதிவு பார்குரியா ......ஜில்லுனு காதல் காட்சி ...........டிவி நிகழ்சிக்கு கொடுத்தால் சலாம் போட்டு வாங்குவாங்க என்று ஆன் பண்ணினான் .....ஹலோ ஆதி சார் நீங்களும் வாங்க கண்கொள்ளா காட்சி இது .என்று அவரையும் அமர வைத்தான் .......அதை பார்த்த இருவரும் அதிர்சியில் சிலையாய் நின்றனர்
|
|
| |
Meenatchi | Date: Thursday, 27 Feb 2014, 9:55 AM | Message # 252 |
 Colonel
Group: Checked
Messages: 249
Status: Offline
| hi anju,
super update...........
Meenatchi .S
|
|
| |
Meenatchi | Date: Thursday, 27 Feb 2014, 9:55 AM | Message # 253 |
 Colonel
Group: Checked
Messages: 249
Status: Offline
| ena pa story mudiyapodha..........
Meenatchi .S
|
|
| |
RAWALIKA | Date: Thursday, 27 Feb 2014, 10:01 AM | Message # 254 |
 Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
| Quote Meenatchi (  ) ena pa story mudiyapodha.......... அட அது எப்படி முடியும்?
சிந்துபாத் ஜிந்தாபாத்.... ஹிஹிஹி
|
|
| |
Meenatchi | Date: Thursday, 27 Feb 2014, 10:04 AM | Message # 255 |
 Colonel
Group: Checked
Messages: 249
Status: Offline
| Quote RAWALIKA (  ) அட அது எப்படி முடியும்? சிந்துபாத் ஜிந்தாபாத்.... ஹிஹிஹி நேற்று ஒரு நாள் வரல அதுக்குள்ள போட்ட எபிசொட் பாத்து சின்ன டவுட் அதான்?நன்றி ............
Meenatchi .S
|
|
| |
SS | Date: Thursday, 27 Feb 2014, 10:06 AM | Message # 256 |
 Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
| Quote Meenatchi (  ) ena pa story mudiyapodha.......... அது தான் முடிவு முதல்லேயே தெரிஞ்சு போச்சே பா... ஏன் வருத்த படறீங்க ? நமக்கு தான் தெரியுமே எப்படி இழுக்கறது கதையை ..இழுத்துடுவோம் ......
|
|
| |
Meenatchi | Date: Thursday, 27 Feb 2014, 10:13 AM | Message # 257 |
 Colonel
Group: Checked
Messages: 249
Status: Offline
| ss சொன்னா சரி தான்.ஜவ்வு மிட்டாய் மாதரி இழுத்தா போச்சு....என்ன உங்க அப்டேட் இன்னிக்கு காணும்.
Meenatchi .S
|
|
| |
SS | Date: Thursday, 27 Feb 2014, 10:27 AM | Message # 258 |
 Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
| பாகம் -39
அங்கே வந்த மாயாவின் தாய் அந்த வீடியோவை பார்த்து கோபமாக ஓங்கி மாயாவின் கன்னத்தில் அறைந்தார். " அடி பாவி.. என்னடி பண்ணி இருக்கே? பொண்ணாடி நீ? வெக்கம் மானம் இல்லை? ஒரு கல்யாணம் ஆகாத பொண்ணு ஒரு ஆணோட பழகறதுக்கு ஒரு வரைமுறை இல்லை. நான் உன்னை அப்படியா வளர்த்தேன்.. இப்படி அசிங்கப்படுத்திட்டியே .. சீ ..நீயெல்லாம் ஒரு பொண்ணா. எனக்கு பொண்ணே இல்லைன்னு நினைச்சிக்கறேன். போய்டு. இந்த வீட்டை விட்டு வெளியே போ... இதுல எவனோட இருந்தியோ அவன் கிட்டயே போ ..." என்று அவளை தர தர வென்று இழுத்து வீட்டின் வெளியே தள்ளினார். மாயாவின் தந்தையோ தான் மகளுக்கு செய்த துர்போதனை இப்படி திருப்பி தாக்கும் என்று எதிர் பார்கவில்லை. வீடியோ அதிர்ச்சியிலிருந்து அவர் மீளவே இல்லை.
பிறகு கணவனை பார்த்து, " இவ இப்படி கேட்டு போனதுக்கு நீங்க தான் காரணம். நான் படிச்சு படிச்சு சொன்னேனே கேக்கவே இல்லையே. இப்படி சீரழிஞ்சி போய் வந்திருக்காளே.. , இனிமேல் அவ இந்த வீட்ல இருந்தால் நான் உங்களோட இருக்க மாட்டேன்.. நீங்க அவளுக்கு பணமும் குடுக்க கூடாது.. " என்று கத்திவிட்டு அழுது கொண்டே நந்தனை பார்த்தார். அவனால் அவரை பரிதாபமாகவே பார்க்க முடிந்தது.
"தம்பி, இந்த கர்மத்தை யார் கிட்டேயும் காட்டாதீங்க. எங்க குடும்ப மானம் உங்க கைல இருக்கு.நான் உங்க காலில் விழுகிறேன்" என்று அவனது காலை பற்ற போக ... அவன் " ஐயோ என்னமா இது , நான் இதை எதுலேயும் போடா மாட்டேன். என்னோட வாழ்கையை அவள் சீரழித்து விட்டாள். அவளை பழி வாங்கணும்னு நினைத்தேன். அர்ஜுன் சொல்லி தான் நான் அதை நிறுத்தினேன். நீங்க நன்றி சொல்லுவதாக இருந்தால் அவனிடம் தான் சொல்லணும் " என்று கூறி வீட்டை விட்டு வெளியே வந்தான்.
மாயா மிகவும் அதிர்ச்சியில் இருந்தாள். அவளது தாய் அருவருப்பாக பேசியது அவளது மனதை வதைத்தது...தன்னை திட்ட கூட செய்யாத அம்மா இன்று தன்னை அடித்து வீட்டை விட்டு வெளியேற்றியது அவள் எதிர்பார்க்காமல் நடந்தேறியது... அதற்கு தந்தையும் ஆதரிப்பது போல அமைதியாக இருந்தது அவளை வருத்தியது...தான் செய்த தவறின் அளவு புரிந்தது. அழுது கொண்டே வெளியே வந்தவள்.. அங்கே அர்ஜுனை கான , அவனிடம் ஓடி " அண்ணா , என்னை மன்னிக்க சொல்லு அண்ணா... அம்மா கிட்ட சொல்லு " என்று அவனது மார்பில் சாய்ந்து அழ ஆரம்பித்தாள்.
என்ன சொல்லுவது என்று அர்ஜுன் யோசிக்க, அங்கே வந்த சம்யுக்தா (அர்ஜுனின் லவர்) இவர்கள் பேசுவது காதில் விழாமல், இவர்கள் இருக்கும் நிலையை பார்த்து.. காளியாக மாறினாள்..... அப்போது அவளை அர்ஜுனும் நந்தனும் பார்த்தனர்................ (எங்கேயோ பார்த்த மாதிரி இருக்க தோழிகளே... யோசியுங்கள்.. ஓவர் புலம்பல்ஸ் ஆகிடிச்சு பா.. கொஞ்சம் சிரிக்கற மாதிரி எபிசொட் போடுங்களேன்...... shan எனக்கு இதுக்கு என்ன situation பாட்டு போடறதுனே தெரியல.. கொஞ்சம் ஹெல்ப் ப்ளீஸ் )
Message edited by SS - Thursday, 27 Feb 2014, 10:29 AM |
|
| |
SS | Date: Thursday, 27 Feb 2014, 10:28 AM | Message # 259 |
 Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
| Quote Meenatchi (  ) ss சொன்னா சரி தான்.ஜவ்வு மிட்டாய் மாதரி இழுத்தா போச்சு....என்ன உங்க அப்டேட் இன்னிக்கு காணும். இப்போ தான் போட்டேன் பா .. நீங்க கேட்டேங்க உடனே போட்டுட்டேன்.
Message edited by SS - Thursday, 27 Feb 2014, 10:30 AM |
|
| |
Meenatchi | Date: Thursday, 27 Feb 2014, 10:33 AM | Message # 260 |
 Colonel
Group: Checked
Messages: 249
Status: Offline
| Quote SS (  ) என்ன சொல்லுவது என்று அர்ஜுன் யோசிக்க, அங்கே வந்த சம்யுக்தா (அர்ஜுனின் லவர்) இவர்கள் பேசுவது காதில் விழாமல், இவர்கள் இருக்கும் நிலையை பார்த்து.. காளியாக மாறினாள்..... அப்போது அவளை அர்ஜுனும் நந்தனும் பார்த்தனர்................ ss நன்றி உங்க episode ku ....அடுத்த சண்டை ரெடியா இருக்கு போல இப்ப தான் எனக்கு நம்பிக்கை வந்து இருக்கு கதை இப்போ முடியாதுனு .....
Meenatchi .S
|
|
| |