இன்றைய சமையல்! - Page 4 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
Forum moderator: Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » அறுசுவை » அறுசுவை » இன்றைய சமையல்! ('இன்றைய சமையல்’ பகுதியில் செஃப் தாமு தரும் செய்முறைகள்)
இன்றைய சமையல்!
RAWALIKADate: Tuesday, 25 Feb 2014, 10:37 AM | Message # 31
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
இன்றைய சமையல்! - 10பீட்ரூட் உசிலி!செஃப் தாமு, படம் : எம்.உசேன்

''பெரும்பாலும் நம் வீடுகளைப் பொறுத்தவரை உசிலி என்பது வழக்கமான டிஷ்தான். ஆனால், பீட்ரூட் உசிலி... யாரும் முயற்சி செய்யாத ஒரு புது டிஷ். உங்களுக்காக இப்போது பீட்ரூட் உசிலி சொல்லித் தருகிறேன்'' என்று 'செஃப்' தாமு கொடுத்த ரெசிபியை, 'சூப்பர் சார்’ என்றபடியே சமைத்துக் காட்டினார் சென்னையைச் சேர்ந்த இல்லத்தரசி அஞ்சனா ராவ்.
தேவையானவை: துவரம்பருப்பு - அரை டம்ளர், கடலைப்பருப்பு - ஒரு டம்ளர், பீட்ரூட் - 300 கிராம், காய்ந்த மிளகாய் - 8, பெருங்காயத்தூள் - ஒரு  டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - 2 ஆர்க்கு, தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன் (விருப்பப் பட்டால்), எண்ணெய் - ஒன்றரை குழிக்கரண்டி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பீட்ரூட்டை தோல் சீவி நீள நீளமாக, மெல்லியதாக நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள். இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, இட்லி தட்டை வைத்து, நீளமாக நறுக்கிய பீட்ரூட் துண்டுகளை அதில் வைத்து, மூடி போட்டு, பத்து நிமிடம் வேக வைத்து எடுக்கவும். தண்ணீரை வடித்துவிட்டு வேகவைத்த பீட்ரூட்டை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.துவரம்பருப்பையும், கடலைப்பருப்பையும் நன்கு கழுவி, ஆறு காய்ந்த மிளகாயோடு சேர்த்து, தண்ணீர் சேர்த்து, முக்கால் மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளுங்கள். பின்னர் தண்ணீரை வடித்துவிட்டு, மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளுங் கள். இப்போது இட்லி சட்டியில் தண்ணீர் ஊற்றி, அரைத்த பருப்புகளை இட்லி தட்டில் போட்டு பத்து நிமிடம் மூடி போட்டு வேகவிடுங்கள்.


அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய் 2, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்துக்கொள்ளுங்கள். வேகவைத்த பருப்பை இதோடு சேர்த்து நன்கு உதிரியாக வரும் வரை வதக்கவும். அதனுடன் வேகவைத்த பீட்ரூட் சேர்த்து, உப்பு போட்டு நன்கு கிளறவும். இப்போது தண்ணீர் இல்லாமல் பீட்ரூட்டும், பருப்பும் சேர்ந்து உதிரியாக வரும். விருப்பப்பட்டால், கடைசியாக இரண்டு டீஸ்பூன் தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கினால்... அற்புதமான பீட்ரூட் உசிலி ரெடி.

கமகமக்கும்...
 
vetrijDate: Wednesday, 26 Feb 2014, 1:22 PM | Message # 32
Lieutenant colonel
Group: *Checked*
Messages: 148
Status: Offline
Thanks for the share Rawalika...
 
SSDate: Wednesday, 26 Feb 2014, 9:13 PM | Message # 33
Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
Thanks Rawalika for sharing this recipe
 
MeenatchiDate: Thursday, 27 Feb 2014, 10:17 AM | Message # 34
Colonel
Group: Checked
Messages: 249
Status: Offline
ரவளிகா உங்க ரெசிப்பி க்கு நன்றி பா............

Meenatchi .S
 
RAWALIKADate: Tuesday, 11 Mar 2014, 9:47 AM | Message # 35
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
இன்றைய சமையல்! - 11

ஐந்து வத்தல் குழம்பு

'செஃப்’ தாமு, படம் : ப.சரவணகுமார்

''வெயில் காலம் ஆரம்பமாகிவிட்டது. கொஞ்ச நேரம் நாம் வெயிலில் நின்றிருந்தால்... நாமே வடகம், வத்தல் போல காய்ந்துவிடும் அளவுக்கு வெயிலின் தாக்குதல் தீவிரமாகிவிட்டது. இதைப் பயன்படுத்திக்கொண்டு சுண்டைக்காய், கொத்தவரங்காய், கத்திரிக்காய் என்று வத்தல்களைப் போட்டு, காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்துக்கொண்டால், இங்கே நான் சொல்லியிருக்கும் சூப்பர் குழம்பை அடிக்கடி செய்து ருசிக்கலாம்'' என்றபடி 'செஃப்' தாமு தந்த குழம்பு ரெசிபியை, நமக்காக செய்துகாட்டுகிறார்... சென்னையைச் சேர்ந்த இல்லத்தரசி அஞ்சனா ராவ்.

தேவையானவை: சுண்டைக்காய் வத்தல் - 8, கொத்தவரங்காய் வத்தல் - 4, வெங்காய வத்தல் - 4, கத்திரிக்காய் வத்தல் - 4, மணத்தக்காளி வத்தல் - 10, கடுகு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை - 2 ஆர்க்கு, வெந்தயம் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - சிறிதளவு, புளி - எலுமிச்சை அளவு, சாம்பார் வெங்காயம், பூண்டு - தலா ஒரு கைப்பிடி அளவு, நல்லெண்ணெய் - ஒரு குழிக்கரண்டி, உப்பு - தேவையான அளவு.

வத்தல் குழம்புப் பொடி செய்ய: தனியா, கடலைப் பருப்பு - தலா ஒரு கைப்பிடி அளவு, காய்ந்த மிளகாய் - 4, வெந்தயம் - அரை டீஸ்பூன், மிளகு - 2 டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன்.



செய்முறை: முதலில் பொடியைத் தயாரிக்க வேண் டும். அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும் தனியா, காய்ந்த மிளகாய், வெந்தயம், கடலைப்பருப்பு, கறிவேப் பிலை, மிளகு, சீரகம் ஆகியவற்றை எண்ணெய் விடாமல், கருக்காமல் வதக்கி எடுக்கவும். இது ஆறியதும், மிக்ஸி யில் நைஸாக பொடித்துக்கொள்ளவும். இதுதான் குழம்புப் பொடி!

வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, வெந்தயம் தாளித்து... எல்லா வத்தல்களையும் சேர்த்து தீயாமல் வதக்குங்கள். உரித்த சாம்பார் வெங்காயத்தை நறுக்காமல் அப்படியே சேர்த்து வதக்குங்கள். பிறகு பூண்டு, சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்குங்கள். எலுமிச்சை அளவு புளியை இரண்டு கிளாஸ் தண்ணீர்விட்டு நன்கு கரைத்து வதங்கிக்கொண்டிருக்கும் வெங்காய கலவை யில் சேருங்கள். இது நன்கு கொதிக்கும்போது உப்பு, குழம்புப் பொடி சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். இந்தக் குழம்பு நன்கு கொதித்து பேஸ்ட் போல வரும்போது இறக்கிவிடுங்கள்.

சூடான சாதத்தில் நல்லெண்ணெய் ஊற்றி, இந்த பேஸ்ட் குழம்பைச் சேர்த்து சாப்பிட்டால்... அதன் ருசியே அலாதி!
 
RAWALIKADate: Tuesday, 25 Mar 2014, 2:35 PM | Message # 36
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
இன்றைய சமையல்! - 12
வெஜிடபிள் மசாலா பாத்

செஃப் தாமு, படம்: எம்.உசேன்



''நாம் செய்கிற சமையலில் சின்னச் சின்ன வித்தியாசங்களைப் புகுத்தினால்... சுவையிலும், புதுமையிலும் பெரிதாகப் பேசப்படும். அப்படி ஒரு கிரியேட்டி விட்டியான சமையல்தான் வெஜிடபிள் மசாலா பாத்'' என்று இன்ட்ரோ கொடுத்தார் செஃப் தாமு. அவருடைய கிரியேட்டிவிட்டியை அப்படியே சமையலில் புகுத்தி அசத்தினார், சென்னையைச் சேர்ந்த இல்லத்தரசி அஞ்சனா ராவ்.

தேவையானவை: 

அரிசி - ஒன்றரை டம்ளர், கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், பச்சைப் பட்டாணி, உருளைக்கிழங்கு (அனைத்தும் சேர்த்து) - அரை கிலோ, பெரிய வெங்காயம் - கால் கிலோ, தக்காளிப் பழம் - கால் கிலோ, பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை - தலா 2, துவரம் பருப்பு - 2 கைப்பிடி அளவு, மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், தனியாத்தூள் - 3 டீஸ்பூன், சீரகத்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி, உப்பு - தேவையான அளவு.



செய்முறை: 

காய்கறிகளை ஓரளவுக்கு பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். வெங்காயத்தை நீளமாக நறுக்கிக்கொள்ளுங்கள். துவரம்பருப்பை அரை வேக்காடாக வேகவைத்துக் கொள்ளுங்கள். குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும்... பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை, நீளமாக நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து, நிறம் மாறும் வரை நன்கு வதக்க வேண்டும். பிறகு, நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கி, நறுக்கிய காய்களையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இதில்... மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள், சீரகத்தூள் மற்றும் கழுவி, நீரை வடித்த அரிசியைச் சேர்த்து, ஒருமுறை கிளறுங்கள். துவரம்பருப்பு, உப்பு, இரண்டே கால் கப் தண்ணீர் சேர்த்துக் கலக்கி, குக்கரை மூடுங்கள். மூன்று விசில் வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள். எந்த வித சைட் டிஷ் இல்லாமல் அப்படியே சாப்பிடக் கூடிய வெஜிடபிள் மசாலா பாத் ரெடி!

குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் இந்த வெஜிடபிள் மசாலா பாத்.
கமகமக்கும்...
 
vetrijDate: Wednesday, 26 Mar 2014, 7:29 AM | Message # 37
Lieutenant colonel
Group: *Checked*
Messages: 148
Status: Offline
Thank you Rawalika.  Today I tried this and came nice.
 
RAWALIKADate: Tuesday, 08 Apr 2014, 11:48 AM | Message # 38
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
இன்றைய சமையல்! - 13

சித்திரை ஸ்பெஷல் ரெசிபிகள்!

'செஃப்’ தாமு, படங்கள் : ஆ.முத்துக்குமார்



''பண்டிகைகள் என்றாலே... இல்லத்தரசிகள் பம்பரமாக சுழல வேண்டியிருக்கும். ஸ்பெஷல் சாப்பாடு என்பதால், 'என்னென்ன செய்ய வேண்டும்’ என்று முதல் நாளே பட்டியலிட்டு தயாராகிக் கொண்டிருப்பார்கள். சித்திரை மாதம் முதல் நாளன்று, உங்கள் வீட்டில் சந்தோஷம் களைகட்ட, சில ரெசிபிகளை இங்கே தந்திருக்கிறேன். சமைத்து, சுவைத்து, பரிமாறி மகிழுங்கள்'' என்று 'செஃப்' தாமு சிரித்தபடி சொல்ல... அந்த ரெசிபிகளை நமக்கு அக்கறையுடன் செய்துகாட்டுகிறார், சென்னையைச் சேர்ந்த இல்லத்தரசி அஞ்சனா ராவ்.

தேங்காய் சாதம்



தேவையானவை: தேங்காய் - அரை மூடி, அரிசி - ஒரு டம்ளர், கடலைப்பருப்பு - ஒரு கைப்பிடி அளவு, வேர்க்கடலை - ஒரு கைப்பிடி அளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, கறிவேப்பிலை - 2 ஆர்க்கு, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அரிசியை நான்கரை டம்ளர் தண்ணீர் ஊற்றி, உப்பு போட்டு வேக வைத்து, வடித்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு, வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி... கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து, வேர்க்கடலை, கடலைப்பருப்பு, துருவிய தேங்காய் சேர்த்து சிவக்க வறுக்கவும். இந்தக் கலவையை சாதத்தில் சேர்த்துக் கலக்கவும்.

மோர்க்குழம்பு

தேவையானவை: வெண்டைக்காய் - கால் கிலோ, தயிர் - 3 டம்ளர், தேங்காய் - கால் மூடி, பச்சரிசி - 2 டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, கடுகு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, கறிவேப்பிலை - 2 ஆர்க்கு, மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி, உப்பு - தேவை யான அளவு.

செய்முறை: பச்சரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்பு, தண்ணீரை வடித்து, அதனுடன் தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளுங்கள்.

வாணலியில் எண்ணெய் விட்டு... கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து... ஓரளவு சின்ன துண்டுகளாக வெட்டிய வெண்டைக்காயைப் போட்டு சுருங்க வதக்க வேண்டும். பிறகு, அரைத்து வைத்திருக்கும் பச்சரி - தேங்காய் மசாலா, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு நன்கு கொதிக்கவிட வேண்டும். குழம்பில் பச்சை வாசனை போனதும் கீழே இறக்கி... தயிரை ஊற்றிக் கலக்கி விட்டுவிட்டால்... மோர்க்குழம்பு ரெடி!



அறுசுவை பச்சடி

தேவையானவை: மாங்காய் (சிறியது) - ஒன்று, பச்சை மிளகாய் - ஒன்று, வெல்லம் - சிறிய துண்டு, வேப்பம்பூ - ஒரு டீஸ்பூன், பாசிப்பருப்பு - இரண்டு டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.



செய்முறை: மாங்காய் மற்றும் பச்சை மிளகாயைக் கழுவி, சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும். பாசிப்பருப்பை வேகவைத்துக் கொள்ளவும். மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகக் கலந்துவிட்டால்... அறுசுவை பச்சடி தயார்.
 
vetrijDate: Tuesday, 08 Apr 2014, 9:18 PM | Message # 39
Lieutenant colonel
Group: *Checked*
Messages: 148
Status: Offline
Thank you Rawalika
 
NathasaaDate: Wednesday, 09 Apr 2014, 8:06 PM | Message # 40
Major general
Group: *Checked*
Messages: 360
Status: Offline
இன்றைய பகிர்வுக்கு நன்றி விஜி'கா
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » அறுசுவை » அறுசுவை » இன்றைய சமையல்! ('இன்றைய சமையல்’ பகுதியில் செஃப் தாமு தரும் செய்முறைகள்)
Search: